BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 23 October 2013

மன்மோகன் சிங் மிகவும் திறமைசாலி-சீன அதிபர் புகழாரம்........!!!!!

எல்லை பிரச்சனைகளை விவாதிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார்.இன்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் இணைந்து இந்தோ-சீன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.பின் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சீன அதிபர்,மன்மோகன் சிங் திறமை வாய்ந்த மூத்த அரசியல்வாதி என்றும்,இந்தியா இந்த அளவுக்கு முன்னேறியிருப்பதற்க்கு மன்மோகனும் ஒரு முக்கிய காரணம் என்றும் புகழாரம் சூட்டினார். 

# கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க ஏட்டய்யா......!

சீனாவுடன் எல்லைபிர‌ச்சினை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது..!

சீனாவுடன் எல்லைபிர‌ச்சினை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா-சீனா கை குலுக்குவதை உலகமே உற்று நோக்குகிறது - சீன பிரதமர் லீ கெகியாங் 

சீனாவுடன் எல்லைப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம், நதி நீர் பங்கீடு தொடர்பான பல ஒப்பந்தங்கள் இன்று இந்தியா சீனா இடையில் கையெழுத்தானது. அருணாச்சலபிரதேசம், மிஜோராம் போன்ற மாநிலங்களை தங்கள் பகுதி என்று உரிமை கோரும் சீனாவிற்கு இது தொடர்பான விசா பிரச்சினைகளில் மட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்தியா-சீனா கை குலுக்குவதை உலகமே உற்று நோக்குகிறது என்று சீன பிரதமர் லீ கெகியாங் குறிப்பிட்டுள்ளார்.

# எல்லைக்குள் வந்து டெண்ட் அடிப்பது, கேம்ப் ஃபயர் போட்டு குத்து சாங் போடுவதை போன்ற வேலைகளை நிறுத்துமா சீன ராணுவம்?

வேட்பாளரை அறிவித்த பி.ஜே.பி- முடிவுக்கு வந்த அக்கப்போர்.....!!!!!!!

வேட்பாளரை அறிவித்த பி.ஜே.பி- முடிவுக்கு வந்த அக்கப்போர்.....!!!!!!!

டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற
உள்ளது.இதற்கான வேலைகளில் மற்ற தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுப்பட்டிருந்த அதே வேளையில் பி.ஜே.பி யோ குழப்பத்தில் இருந்தது. முதல்வர் வேட்பாளர் ஆக ஆளாளுக்கு ஆசைப்பட்டது தான் இதற்கு காரணம்.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இறுதியாக இன்று தன் முதல்வர் வேட்பாளரை அறிவித்தது பி.ஜே.பி. டெல்லி மாநில பி.ஜே.பி தலைவரான விஜய் கோயலுக்கு கல்தா குடுத்த தலைமை, டெல்லியின் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜய் கோயல்,தனக்கு இந்த முடிவில் எந்த வருத்தமும் இல்லை என்றும் தலைமையின் முடிவை மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

#பதவிக்காக அடிச்சுக்க உங்களுக்கு எல்லாம் சொல்லியா தரணும்???????        

சத்யமேவ ஜெயதே- சீசன் 2..!

பாலிவுட் நடிகர் அமீர்கான் கடந்த ஆண்டு ஸ்டார் குழும சேனல்களுடன் இணைந்து நடத்திய "சத்யமேவ ஜெயதே" என்னும் நிகழ்ச்சி பல்வேறு சமூக பிரச்சனைகளை அலசி, அவற்றுக்கான தீர்வுகளையும் காண முயன்றது.மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக தொடங்கிவிட்டன.
அமீர்கான், தூம்-3 பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி நிகழ்ச்சி வடிவமைப்பில் பங்கெடுத்துக் கொள்கிறாராம்.
அடுத்து ஆண்டு ஜனவரி முதல் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#கமர்ஷியல் நிகழ்சிகளிடையே, சத்யமேவ ஜெயதே-சீசன் 2 ரீச் ஆகுமா..?!

->P

நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை, அரசியல் பேசவே இல்லை - விஜய் மறுப்பு

நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை, அரசியல் பேசவே இல்லை - விஜய் மறுப்பு

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியலில் இறங்குவது குறித்து நடிகர் விஜய் கருத்து கேட்டதாக சில நாட்களுக்கு முன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து மறுத்து தெரிவித்து அறிக்கை விடுத்த விஜய் அதில் குறிப்பிட்டதாவது

சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதை படித்து ரசிகர்களும், பொதுமக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

நான், கடந்த இரண்டு மாதமாக ஹைதராபாத்தில் ஜில்லா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். கேரளாவிற்கே நான் செல்லவில்லை. அப்படியிருக்க இப்படியொரு தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமின்றி நானும் குழப்பம் அடைந்தேன். நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருகிறேன்.

எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். ஆகவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

# ஏன் ப்ரோ, அரசியல் பேசித்தான் பாருங்களேன்!

பொறுமையை சோதிக்கும் பாகிஸ்தான்-பதிலடி தருமா இந்திய அரசு????

பொறுமையை சோதிக்கும் பாகிஸ்தான்-பதிலடி தருமா இந்திய அரசு?????

முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாகவே
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அடிக்கடி அத்துமீறி வருகிறது.இந்திய ராணுவம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் பதிலடி கொடுத்தாலும்கூட,ஒரு பலமான ராணுவ நடவடிக்கையை எடுக்க ஏனோ மத்திய அரசு தயங்கி வருகிறது.இந்நிலையில் எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்க ஒருநாள் பயணமாக உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே செவ்வாய் அன்று காஷ்மீர் சென்றார்.எல்லைபகுதிகளை அவர் பார்வையிட்டு திரும்பிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்திய நேரப்படி செவ்வாய் இரவு 7.40 மணிக்கு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய் அன்று நடந்துள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.முன்னதாக செவ்வாய் காலை 10.30 மணி அளவில் முதல் தாக்குதல் நிகழ்ந்தது.

#மன்மோகன் அய்யா,நீங்களும் உங்க கூட்டாளிங்களும் இன்னும் எத்தன நாளைக்குத்தான் இப்பிடி மிக்சர் சாப்பிட்டுக்கிட்டே இருக்கபோறீங்க?????

->N
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media