BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 19 October 2014

"கத்தி" படத்தின் ட்ரெயிலர் வெளிவந்தது !! ( வீடியோ இணைப்பு )



தீபாவளிக்கு ரீலிசாக உள்ள கத்தி படத்தின் ட்ரெயிலர் எப்போது வெளி வரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர் . இந்நிலையில் கத்தி படத்தின் ட்ரெயிலர் வெளிவந்துள்ளது .





மேற்கிந்திய தீவுகள் அணிக்கு என்ன தண்டனை வழங்கலாம் என தீவிரமாக யோசித்து வரும் பிசிசிஐ !!



இந்தியாவில் 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளும் ஆடுவதாக இருந்தது. ஆனால் தொடர் தொடங்கியதில் இருந்தே மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பிரச்சனை செய்து கொண்டு இருந்தார்கள். அந்த அணி வாரியத்துடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனை தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. அந்த அணி வாரியம் இவர்களுக்கு சரியான சம்பளம் தராததால் இவர்கள் ஆரம்பம் முதல் பிரச்சனை செய்து வந்தார்கள். இதனை அடுத்து 4 வது ஒருநாள் போட்டி நடைபெறுவதாக இருந்தது. அதில் பங்கேற்க மாட்டோம் என மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கடும் பிரச்சனை செய்தனர். பிசிசிஐ சமதானம் செய்த பிறகு ஆடுவதற்கு சம்மதம் செய்தது.


அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி வாரியம் வீரர்களை திரும்பி வர சொல்லிவிட்டது. இதனால் தொடர் பாதியிலையே நிறைவுற்றது. இதனால் பிசிசிஐக்கு கடும் நஷ்டம் ஆகிறது. இதனால் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். இது குறித்து முடிவெடுக்க 21 ஆம் தேதி செயற்குழு கூடுகிறது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் தொடர் வேண்டாம் என முடிவு எடுக்க போவதாக தெரிகிறது. அதோடு ஐபில் போட்டியில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு தடை விதிக்கலாம்  என்னும் முடிவிலும் உள்ளார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 

ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!


சொத்து குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. 2 முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதனையடுத்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அதில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது. இது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.

இதனையடுத்த நேற்று மாலை ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.  இந்நிலையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயல்லிதாவுக்கு தீபாவளி  வாழ்த்து கூறினார். ஜெயலலிதா கார்டனுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். அவர் உடல்நலத்துடனும், மன அமைதியுடனும் இருக்க வேண்டும் என்றார். இந்த வாழ்த்து செய்தியை அவர் கடிதம் மூலம் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.


தமிழக முதல்வர் யார் என்ற சந்தேகத்தில் தமிழக மக்கள் ??






சொத்து குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. 2 முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதனையடுத்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அதில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது.

இது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்த நேற்று மாலை ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது. அவர் வந்த இடம் எல்லாம் மக்கள் கூடி நின்று அவரை வரவேற்றனர். இதனை ஜெயா டிவியில் நேரலையாக காண்பித்தார்கள். அதில் வார்த்தைக்கு வார்த்தை மக்களின் முதல்வர் மக்களின் முதல்வர் என ஜெயலலிதாவை கூறினார்கள்.

ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்ததால் தான் பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று கொண்டார். ஆனால் யாரும் அவரை முதல்வராக மதிப்பது இல்லை. ஏன் அவரே கூட தன்னை முதல்வர் என்று நம்ப மாட்டேங்கிறார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்து அறிவுப்பு வெளியிடுவதற்கு கூட புரட்சி தலைவி அம்மாவின் ஆணைக்கு இணங்க என உத்தரவு பிறப்பிக்கிறார். ஜெயா நியூஸ்ஸில் எப்போது பார்த்தாலும் மக்களின் முதல்வர் என்று தான் செய்தி வருகிறது. இது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. 

தோனி சச்சின் மோதும் கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம் !!



இந்தியாவில் கால்பந்து விளையாட்டை உயிர்பிப்பதற்காக ஐஎஸ்எல் போட்டியை கொண்டு வந்தார்கள். இதில் 8 அணிகள் உள்ளன. அவைகளை சச்சின், கங்குலி, தோனி, கோலி, அபிஷக் பச்சன் போன்ற கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நட்சத்திரங்களும் அணிகளை வாங்கினார்கள். இதனால் பலரும் இதனை பார்க்க ஆரம்பித்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் முதல் போட்டி வரும் 21 ஆம் தேதி நடக்க உள்ளது. அதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டது. அதனை நாம் ஆன்லைனிலு வாங்கலாம். நேரு விற்பனை மையத்திலும் டிக்கெட் விற்பனை நடக்கிறது . டிக்கெட் விலை ரூ. 100, 150, 200, 350 என மலிவாக தான் கிடைக்கிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் தோனியின் சென்னை அணியும் சச்சினின் கேரளா அணியும் மோதவுள்ளன.  அதிக நபர்கள் வரவேண்டும் என்பதற்காக டிக்கெட் விலையை மலிவாக விற்கிறார்கள்.

சச்சின் திராவிடின் 16 ஆண்டு கால சாதனையை முறியடித்த தென் ஆப்ரிக்க வீரர்கள் !!



ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடியில் சச்சின் மற்றும் திராவிட் ஜோடி தான் முதல் இடத்தில் இருந்தது . இவர்கள் இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு நியு சிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 331 ரன்கள் சேர்த்தனர் . இது தான் சாதனையாக இருந்தது , இந்த சாதனையை தென் ஆப்ரிக்க வீரர்களான வான்விக் மற்றும் டெல்போர்ட் ஜோடி முறியடித்தது .

இந்தச் சாதனை தென் ஆப்ரிக்காவின் உள்நாட்டுப் போட்டிகளில் முறியடிக்கப்பட்டுள்ளது . டால்பின் மற்றும் நைட்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடந்தது . இந்தப் போட்டியில் டால்பின் அணியின் துவக்க வீரர்களாக  இறங்கிய வான்விக் மற்றும் டெல்போர்ட் 50 ஓவர்கள் முழுவதும் பேட் செய்து 367 ரன்கள் எடுத்தனர் . இதற்கு முன் முதல் விக்கெட்டுக்கு பாகிஸ்தானின் குலாம் அலி மற்றும் சொஹைல் ஜாபர் இணைந்து எடுத்த 326 ரன்களே சாதனையாக இருந்தது .


வான் விக்               -  175 (171) 4's-15,6's-5

டெல்போர்ட்           -  169 (130) 4's-12,6's-6


கமலின் கணிப்புகளும் சில சுவாரஸ்யமான தகவல்களும் !!



உலக நாயகன் கமல் எப்படி தனது தசாவதாரம் படத்தில் எபோலா நோய்  ( http://www.satrumun.net/2014/10/kamal-hasan-predicts-about-ebola-6-years-ago.html )குறித்து சொன்னாரோ அதேப் போன்று மேலும் சில சம்பவங்கள் நடைபெறும் முன்னரே தனது படத்தில் கூறி இருக்கிறார் . அவ்வாறு அவரது சில கணிப்புகளைக் கீழ்க் காணலாம் .


1) சுனாமி என்ற ஒரு வார்த்தை இருக்கிறது என்பது நமக்கு 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்படும் வரும் வரை நம்மில் பலருக்கு தெரியாது . ஆனால் சுனாமி என்ற வார்த்தையை கமல் தனது " அன்பே சிவம் " படத்தில் குறிப்பிட்டு இருந்தார் .

2 ) குஜராத்தில் நடந்த கலவரம் போன்றே ஹேராம் படத்தில் வைத்து இருந்தார் . ஹேராம் படம் வெளிவந்தது 2000 ஆம் ஆண்டு . குஜராத் கலவரம் நடந்தது 2002 ஆம் ஆண்டு .

3 ) தனது வேட்டையாடு விளையாடு படத்தில் இரு சைக்கோ கில்லர்கள் தொடர் கொலையில் ஈடுபட்டு இருப்பார்கள் . இந்த படம் வெளிவந்த பின் சில நாட்கள் கழித்து நொய்டா தொடர் கொலையில் மொஹிந்தர் , சதீஷ் என இருவர் மாட்டிக் கொண்டனர் .

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டை பழிவாங்குமா பி.சி.சி.ஐ ??



வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்ட் இந்திய தொடரில் இருந்து தீடிரென்று விலகியதால் பிசிசிஐ அமைப்பு கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது . முதலில் இந்த பிரச்சனை இருந்தாலும் பின்னர் வீரர்கள் விளையாட ஒத்துக் கொண்டனர் . ஆனால் வெள்ளிக்கிழமை தீடிரென மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் போர்ட் வீரர்களை உடனடியாக திரும்பி வரும்படி வலியுறுத்தியது .

இது குறித்து பிசிசிஐ அதிகாரி சஞ்சய் படேல் கூறுகையில் , " மேற்கிந்திய கிரிக்கெட் போர்ட் தங்கள்து அணி வீரர்களுடன் இருக்கும் பிரச்சனையைக் காரணம் காட்டி விலகியுள்ளது . ஆனால் பிசிசிஐ இதனை சர்வதேச கிரிக்கெட் அமைப்பிடம் எடுத்துச் செல்ல உள்ளது . நாங்கள் இதனை சாதரணமாக விட மாட்டோம் , நாங்கள் அவர்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்புக் கொடுத்தோம் " என்றார் .

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் 5 ஒரு நாள் போட்டிகளிலும் , ஒரு டி-20 போட்டியிலும் , மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட ஒத்துக் கொண்டது . ஆனால் இப்போது 4 ஒரு நாள் போட்டிகளுடன் விலகிக் கொண்டது . இந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக இழப்பீட்டுத் தொகையாக 400 கோடி வரை பிசிசிஐ கேட்க உள்ளதாக தெரிகிறது . மேலும் இந்த பிரச்சனை ஐ.பி.எல் அமைப்பிடமும் எழுப்பப்படும் என தெரிகிறது இதனால் இவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடை செய்யப்படலாம் என தெரிகிறது .

ஐ.எஸ்.ஸூக்கு எதிரான நடவடிக்கைகள் : ஒபாமா ஆய்வு



இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அதிபர் ஒபாமா நடத்திய சந்திப்பின்போது, இராக்கிலும், சிரியாவிலும் தற்போது நிலவும் அரசியல் சூழல்கள் குறித்து கேட்டறிந்தார்.

இராக்கிய வீர்ரகளுக்கு போர்ப் பயிற்சி, ஆலோசனை, ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விவாதித்தார். மேலும், அந்த நாடுகளில் ஐ.எஸ்.ஸூக்கு எதிரான நடவடிக்கைகளின் தாக்கம் குறித்தும் அவர் ஆலோசித்தார்.துணை அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸ் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை : போக்குவரத்து பாதிப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோல் கே.கே. நகர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் நிரம்பி வழிகிறது. மழையால் சாலைகள் சேதமடைந்து வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வண்டலூர், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழே 120 கோடி மக்கள்



உலகம் முழுவதும், 120 கோடி பேர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் (ரூ.77) குறைவாக வருவாய் ஈட்டுவதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் 1.25 டாலருக்கும் குறைவான வருவாய் உடையவர்கள் 120 கோடி பேர் உள்ளனர். 2 டாலருக்கும் (ரூ.123) குறைவாக 240 கோடி பேர் வருவாய் ஈட்டுகின்றனர்.கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆண் ஆண்டு வரை 70 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்.2008-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கிய பிறகு, ஏழை-பணக்காரர்களிடையேயான ஏற்றத்தாழ்வு எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிகமாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன என்றார் அவர்.

நேரு 125ஆவது ஆண்டு பிறந்ததின விழா குழு மாற்றியமைப்பு: சோனியா குடும்பத்தினருக்கு இடமில்லை



காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழா குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இக்குழுவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தினர் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:வரும் நவம்பர் மாதம், ஜவாஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தினமாகும். இதைக் கொண்டாடும் வகையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவராவார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், கலாசாரத் துறை அமைச்சர் ஸ்ரீபாத் யேசோ நாயக் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆவர்.மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், சிக்கிம் முன்னாள் ஆளுநர் பி.பி. சிங், வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் எம்.கே. ரஸ்கோத்ரா, மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் ஜெனரல் சுபாஷ் காஷ்யப், மூத்த பத்திரிகையாளர்கள் ரஜத் சர்மா, ஸ்வபன் தாஸ்குப்தா, எம்.ஜே. அக்பர், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங், மத்திய அமைச்சரவை முன்னாள் செயலர் நரேஷ் சந்திரா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அக்குழுவின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உறுப்பினர்கள் சோனியா காந்தி, பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே. அந்தோணி, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோருக்கு புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் இடமளிக்கப்படவில்லை.

6 வருடத்திற்கு முன்னரே எபோலாவை தனது படத்தில் சொன்ன கமல்ஹாசன் !!



இப்போது உலகையை உலுக்கி வரும் நோய்களான எபோலாவை ஆறு வருடங்களுக்கு முன்னரே தனது படத்தில் கமல் ஹாசன் கூறி இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ?? நம்பித்தான் ஆக வேண்டும் .

தமிழ் திரையுலகத்தில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தவர்  " உலக நாயகன் " கமல் ஹாசன் . இவர் படம் எடுப்பதற்கு முன் பல பயிற்சிகளிலும் , ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுவார் . அப்படி பல ஆராய்ச்சிகள் செய்த பின் எடுத்தப் படம் தான் தசாவதாரம் .

தசாவதாரம் படத்தில் அந்த பெட்டியை திரும்ப எடுக்க செல்லும் போது  ஒரு இடத்தில் " இது எபோலா - மாம்பெர்க் காம்பினேஷன் . இது மிகவும் பயங்கரமானது " என்று கூறுவார் . அந்த எபோலா நோய் தான் இப்போது உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது .

கமல் ஹாசன் உண்மையிலேயே உலக நாயகன் தான் !!


கடலில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடியின் உறுப்புகள் மாட்டிக் கொண்ட அவலம் !!





இத்தாலிய நாட்டின் ஜோடி ஒன்று போர்டோ சன் ஜியார்ஜியோ என்னும் பீச்சிற்கு சென்றனர் . வெயில் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் இவர்கள் அந்த கடலில் இறங்கி செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சித்தனர் . அப்படி அவர்கள் செக்ஸ் வைத்துக் கொண்ட பின் தங்கள் மர்ம உறுப்புகளை எடுக்க முயற்சித்தபோது முடியவில்லை . ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் மாட்டிக் கொண்டு விட்டது . இதனால் இவர்கள் நகர முடியாமல் அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டனர் . ஒரு பெண் இவர்களுக்கு டவல் ஒன்றை அளித்து மருத்துவரை வரவழைத்தார் .

அந்த மருத்துவர் எவ்வளவு முயற்சித்தும் முடியாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கே ஊசிப் போட்டு இருவரையும் பிரித்தனர் .

இந்த சம்பவம் தண்ணீரின் உறிஞ்சுன் திறனால் ஏற்பட்டு இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media