மல்டிபிளக்ஸ் கலாச்சாரத்தால் சென்னை மக்கள் பொழுது போக்க செல்லுமிடங்கள் குறைந்து வருங்கிறன. ஆயிரம் ருபாய் இருந்தால்தான் குடும்பத்துடன் சினிமா பார்க்க முடியும் என்ற நிலை.
மக்களுக்கு இன்னும் பொழுதுபோக்கிடமாக இருப்பது மெரினா பீச். அதனை அடுத்து அதிக மக்கள் செல்வது வண்டலூர் உயிரியல் பூங்கா. குறைவான கட்டணம் வசூலிக்கப் படுவதால் அனைத்து தரப்பு மக்களையும் இங்கே காணலாம்.
இங்கு வரும் மக்கள் பயன்பெறும் வண்ணம், சென்னை மாநகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘அம்மா உணவகம்’ விரைவில் வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் தொடங்கப்பட இருக்கிறது.
அம்மா உணவகம் அமைய வண்டலூர் பூங்கா அதிகாரிகள் இடம் ஒதுக்கி கொடுத்து விட்டனர். உணவகம் துவங்கும் வேலைகளை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செய்து வருகின்றனர்.