BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 22 November 2014

உணவே மருந்து : கீரையின் மருத்துவ குணங்கள்


வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்டது.

அரைக்கீரை: உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும்.

பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும்.

முருங்கைக்கீரை: உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம். ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்யும். மாத விலக்கு வரும் போது ஏற்படும் வலியை குறைக்கும்.

சிறுகீரை: மலச்சிக்கலை குறைக்கும். உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். உடல் தளர்ச்சியை போக்கும்.

மணத்தக்காளி கீரை: வயிற்று புண், குடல் புண்ணை குணப்படுத்தும்.

அகத்திக்கீரை: உடல் வெப்பத்தை குறைக்கும். குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம் தலை சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்

தமிழரின் கணிதம் : எண்ணியல்

1. சிந்து எழுத்து '௬' 
2. இதன் உச்சரிப்பு 'சே' இதன் வடிவம், மீனைக்குறிக்கும் வார்த்தை. மனித இனத்தின் முதல் தொழில் மீன் பிடித்தல். அதனால் வான் நட்சத்திரங்களையும் விண்மீன் என்றே அழைத்தனர். காண்க: மீன் பிடித்த தொழிலின் காரணமாய் இந்தியாவின் தொன்மையான பெயர் பரத நாடுதான். பிரிட்டனின் தொன்மையான பெயர் பரத்தான், பிரித்தன், பிரிட்டன், (Briton) பரத நாடுதான்.

3. தமிழில் சே, வட மொழியில்-சே (che), எபிரேயத்தில் - sesh, கிரேக்கத்தில்-seks, இலத்தீனில்-sex, ஜெர்மானியத்தில் - sechs, இத்தாலியில் - sei, ஆங்கிலத்தில்-six.

4. தமிழர் கடவுள்களில் ஒருவர் சேயோன் என அழைக்கப்படுகிறார். அவர் முருகன். காரணம் அவருக்கு இன்னொரு பெயர் அருகன், ஆறு படை கொண்டவன். இந்த சேயோன் தமிழர்களின் வானவியல் கண்டுபிடிப்பு. அதனால்தான் 6 முனை கொண்ட நட்சத்திரம் அடையாளமாய் கொள்ளப்படுகிறது. 

எபிரேயர்களின் 'சீயோன்' என்பதற்கும் அடையாளகுறியீடு இதேதான். இந்த ஒப்புமை பற்றி பிறகு பேசலாம். வானில் தெரியும் கார்திகைக்கூட்ட 6 நட்சத்திரங்களின் பெயரே சேயோன் (சேய் - ஆறு). சேயோன், முருகன், சன்முகன் (சேய் முகன்), கார்த்திகேயன் எல்லாம் ஒரே பொருளே. அது ஆறு நட்சத்திரங்கள் என்பதே. கிரேக்கத்தில் இந்த 6 நட்சத்திரங்களுக்குப்பதிலாக, 7 நட்சத்திரங்கள் கொண்டதாக Pleiades என இதே நட்சத்திரக்கூட்டம் அழைக்கப்படுகிறது. காண்க: அந்த நட்சத்திரக்கூட்டம் இது தான்.

இந்த ஆறு நட்ச்சத்திரக்கூட்டம் இருக்கும் நட்ச்சத்திரக்குடும்பத்தின் பெயர் இடபம் (taurus) காளை என்பதே இதன் பொருள். இது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ஒரு வாகன நிறுவனத்தின் பெயரே தமிழ் 'ஆறு' என்பதைக்கொண்டிருப்பதோடு இந்த ஆறு நட்சத்திரங்களை நிறுவன அடையாளமாகவும் வைத்திருக்கிறது. அந்தப்பெயர் சுபஆறு (Subaru)

குதிரை தோன்றிய இடம் இந்திய துணைக் கண்டம்

குதிரையும் காண்டாமிருகமும் இந்திய துணைக் கண்டத்தில் தோன்றின என்று அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் நடத்திய ஆய்வின்போது, "கேம்பேதீரியம் தெவிஸ்ஸி' என்கிற அதிகம் அறியப்படாத விலங்கினத்தின் 200-க்கும் மேற்பட்ட எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதன் காலம் 5.45 கோடி ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த விலங்கினத்தின் பற்கள், முதுகுத் தண்டு, கால்கள் ஆகியவை, காலத்தால் முற்பட்ட "பெரிúஸாடாக்டைலா' என்கிற விலங்கினத்தைப் போன்றதாக உள்ளது."பெரிúஸாடாக்டைலா' வகையைச் சேர்ந்ததுதான் குதிரை, காண்டாமிருகம் ஆகியவை. இவற்றின் செரிமான உறுப்புகள் தனித்துவம் மிக்கவை. மேலும், இந்த வகை விலங்குகளின் பின் கால்களில் நகங்களின் எண்ணிக்கை ஒரே போல் இல்லாமல், மாறுபட்டிருக்கும்.இந்த "பெரிúஸாடாக்டைலா' வகை விலங்குகளின் பரிணாமத்தில் உருவாகிய "கேம்பேதீரியம்' வகை விலங்குகளின் எலும்புகள், பற்களின் படிமங்கள் மகாராஷ்டிரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவற்றுக்கு குதிரை, காண்டாமிருகம் இனங்களிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது."பெரிúஸாடாக்டைலா' வகையைச் சேர்ந்த விலங்கோடு தொடர்புடைய மற்றொரு இனத்தின் எலும்புகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.1990-ஆம் ஆண்டு வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில், குதிரை, குரங்கு உள்ளிட்ட பல விலங்கினங்கள் இந்திய நிலப்பகுதியில் தோன்றியிருக்கக் கூடுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய நிலப்பகுதி ஒரு தீவாக இருந்திருக்கக் கூடும். அரபு தீபகற்பம் அல்லது ஆப்பிரிக்க நிலப்பகுதியின் தென் பகுதியையொட்டி இந்திய நிலப்பகுதி கடந்தபோது, சில விலங்கினங்கள் இடம் பெயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது."கேம்பேதீரியம்' இனமானது மிகவும் மாறுபட்டதாக இருப்பதிலிருந்தே, இந்திய நிலப்பகுதி, தனிமைப்பட்டு, ஒரு தீவாக இருந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.கேம்பேதீரியம் இன விலங்குகளின் படிமங்கள் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டதிலிருந்து, இந்திய நிலப்பகுதி முற்காலத்தில் தீவாக இருந்ததற்கும் சான்று கிடைத்துள்ளது என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கென் ரோஸ் எனும் பரிணாம இயல் விஞ்ஞானி தெரிவித்தார்.இந்த ஆராய்ச்சி விவரங்கள் "நேச்சர் கம்யூனிகேஷன்' ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.கேம்பேதீரியம்' இன விலங்கு } ஓவியரின் கற்பனை.

வசதி படைத்தவர்களுக்கு எரிவாயு மானியத்தை ரத்து செய்ய பரிசீலனை

வசதி படைத்தவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, தில்லியில் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:என்னைப் போன்றவர்கள் (வசதி படைத்தவர்கள்) எரிவாயு உருளைக்கான மானியம் பெறத் தகுதியுடையவர்களா? என்பதே இந்தியா அடுத்து எடுக்கவிருக்கும் முக்கியமான முடிவாக இருக்கும். இத்தகைய மானியங்களுக்கு யாரெல்லாம் தகுதி உடையவர்கள் என்று விரைவில் நாம் முடிவு எடுப்பது நமது அமைப்புக்கு நல்லது. இத்தகைய முடிவுகள், அரசின் செயல்திட்டத்தில் உள்ளன.அரசியல் தலைமையானது, குறிப்பாக பிரதமர், முடிவெடுக்கும் திறனைப் பெற்றிருந்தால் சிக்கலான முடிவுகளையும் எடுப்பது சுலபமாகிவிடும். நிலக்கரிச் சுரங்கங்கள் குறித்து முடிவெடுக்கவோ, அலைக்கற்றை அல்லது இயற்கை வளங்கள் அல்லது டீசல் விலை நிர்ணயம் போன்றவை குறித்து முடிவெடுக்கவோ இனி யாரும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை.இவற்றில் சில முடிவுகள் கடந்த சில ஆண்டுகளாக சிக்கல் நிறைந்தவையாக இருந்தன. ஆனால், தற்போதைய மத்திய அரசு நேரத்தை வீணாக்காமல், இந்த விவகாரங்கள் தொடர்பாக எளிதாக முடிவெடுத்து விட்டது. இதேபோன்ற செயல்திட்டத்தை தொடர்ந்து பின்பற்றுவோம்.

இந்தியா தற்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் நம் நாட்டை புதிய ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். சரக்கு, சேவை வரி தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பான அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பிசிசிஐ தலைவராக மீண்டும் நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் மனு



இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தன்னை மீண்டும் நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சீனிவாசனுக்குத் தொடர்பில்லை என்று முத்கல் ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவித்ததையடுத்து, அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக என் மீதான புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதும், தவறான உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்டவை என்பதும் ஆணையத்தின் அறிக்கை மூலம் நிரூபணமாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது, 3 வீரர்கள் விதிகளை மீறியது தெரிந்தும் அவர்கள் மீது நானும் பிசிசிஐ அமைப்பைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிசிசிஐயின் அப்போதைய தலைவர் பதவியில் சஷாங்க் மனோகர் இருந்ததால், என்னால் அந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனினும், அந்தச் சம்பவங்களுக்கு சஷாங்க் மனோகர் நடவடிக்கை எடுத்தார். மேலும், ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டது, முக்தல் ஆணையத்தின் விசாரணைக்குத் தடையாக இருந்தது உள்ளிட்ட புகார்களில் எனக்குத் தொடர்பு இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இந்நிலையில், தவறான, உள்நோக்கம் கொண்ட புகார்களால், ஏறத்தாழ எனது ஓராண்டு பதவிக்காலத்தை இழந்துவிட்டேன். எனவே, பிசிசிஐ தலைவராக என்னை மீண்டும் நியமித்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சிமென்ட்ஸ் கோரிக்கை : இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீனிவாசன் மேலும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு பாதகமான எந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தாலும், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்கே பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் மொழிப்பாட ரத்து விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்படுவதை ரத்து செய்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெர்மன் மொழிப் பாட ரத்தை எதிர்த்து, கேந்த்ரிய வித்யாலயப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரீனா சிங் முன் வைத்த வாதம்: ஒரு மொழிப் பாடத்தை திடீரென்று மாற்றுவதால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொள்ளாமலேயே பாடத்திட்டத்தில் இருந்து ஜெர்மன் மொழியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

மூன்றாவது மொழியைத் தேர்வு செய்யும் முடிவை, மாணவரிடமும், பெற்றோரிடமும் விட வேண்டும். அதற்கு மாறாக, மாணவர்கள் மீது எந்த முடிவையும் அரசு திணிக்கக் கூடாது. மேலும், ஒரு மொழிப் பாடத்தை மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், கல்வியாண்டின் இடையில் எந்தப் புதிய உத்தரவையும் அரசு பிறப்பிக்கக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள், அவர்களது பெற்றோரை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, அவசர கதியில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று ரீனா சிங் வாதிட்டார். "வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சர்ச்சை': இதனிடையே, "கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என்று வெளியான தகவல் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சர்ச்சை' என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகள் அமைப்பு, ஜெர்மன் மொழி கற்பிக்கும் கோதே இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு இடையே கடந்த 2011ஆம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை. மூன்றாவது மொழியாக, சம்ஸ்கிருதம்தான் கற்க வேண்டும் என்பதில்லை; வேறு எந்த இந்திய மொழியையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்கள் விரும்பினால் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்வு செய்தால், நிச்சயமாக, தமிழாசிரியர் ஒருவரை நியமிப்போம் என்று ஸ்மிருதி இரானி கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media