Tuesday, 4 February 2014
கலைஞர் டிவிக்கு கொடுத்த 200 கோடி ஊழல் பணம், ஆதாரங்கள் இருந்தால் கோர்ட்டுக்கு போகட்டும் - டிகேஎஸ் இளங்கோவன்
கலைஞர் டிவிக்கு 200 கோடி பணப்பரிமாற்றம்! இதில் ஊழல் எங்கே வந்துள்ளது?
ஆதாரங்கள் இருந்தால் கோர்ட்டுக்கு போகட்டும்
2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் மூலமாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட டேப் ஆதாரங்களும், ஆம் ஆத்மி கட்சியின் பூஷன் அவர்கள் கருணாநிதிக்கு தெரிந்தே 200கோடி ரூபாய் ஊழல் பணம் கலைஞர் டிவிக்கு வந்தது என்றும் குற்றச்சாட்டினார், இதை மறுத்து திமுகவின் திமுகவின் அமைப்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் எம்பி அவர்கள் 200 கோடி பணம் வங்கி பரிமாற்றம் மூலமாக வந்துள்ளது, இதில் ஊழல் எங்கே வந்துள்ளது என்று கேட்டார், மேலும் பேசிய இவர் கருணாநிதிக்கு தெரிந்தே ஊழல் நடந்தது என்பது அடிப்படை ஆதாரமற்றது என்றும் ஆதாரங்கள் இருந்தால் கோர்ட்டுக்கு போகட்டும் என்றார்.
# நீங்க எப்பவும் இப்படித்தானே சார் பேசுவிங்க!
2ஜி ஊழல் தொடர்பாக கனிமொழி, ஜாபர் சேட், ஷரத் ரெட்டி பேசிய டேப்புகள் ஆம் ஆத்மி கட்சியால் வெளியிடப்பட்டது
சவுக்கு இணையதளம் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்டும், கலைஞர் டிவி ஷரத்குமாரும் கலைஞர் டிவிக்கு கொடுத்த 200கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக கூறப்பட்ட சினியுக் நிறுவனம் குறித்தும் ஷரத் ரெட்டி முன் தேதியிட்டு கலைஞர் டிவி ஆவணங்களை திருத்தியதாகவும் அவர்கள் போனில் பேசியது வெளியிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு இணையதள வடிவமைப்பாளர் முருகைய்யா கைது செய்யப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரையும் தேடிக்கொண்டிருந்தார்கள், ஆனால் டேப் குறித்து எந்த மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களும் வாயை திறக்காமல் கோந்து போட்டு மூடிவைத்துக்கொண்டு இருந்தன, இந்நிலையில் இந்த டேப்புகளை சவுக்கு சங்கர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினரிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த டேப்புகளை இன்று மாபெரும் மீடியா கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு போட்டு காண்பித்தார்கள், மேலும் கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் பணம் வந்த வழி திமுக தலைவர் கருணாநிதிக்கும் தெரியும் என பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டினார்.
ஆடியோ -1 (கனிமொழி - ஜாபர் சேட்)
ஆடியோ -2 (சண்முகநாதன் - ஜாபர் சேட்)
ஆடியோ -3 (ஜாபர் சேட்-சரத்ரெட்டி)
ஆடியோ -4 (கனிமொழி - ஜாபர் சேட்)
Subscribe to:
Posts
(
Atom
)