இப்போது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் தெரியும் வார்த்தை, போட்டோ மற்றும் வீடியோ எது என்று பார்த்தால் அது ஏ.எல்.எஸ். ஐஸ் பக்கெட் சாலஞ் பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவுக்கு இது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இது இன்னும் தமிழகத்தில் பிரபலமாக இல்லை. அதற்கு முன் நாம் அதனை பற்றிய அனைத்து தகவல்களை தெரிந்து கொள்வோம். முதலில் ஐஸ் பக்கெட் சாலஞ் என்றால் என்னவென்று பார்ப்போம்.
ஐஸ் பக்கெட் சாலஞ் என்றால் ??
இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சாலஞ் ஆகும். இது ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஆகும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில் ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊத்தி கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள்.
இது எப்படி தொடங்கப்பட்டது ??
அமெரிக்காவை சேர்ந்த பீட் பிராட்ஸ் என்னும் பேஸ்பால் வீரர் தான் இதனை தொடங்கினார். அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு இந்த ஐடியாவை தந்தது அவரது நண்பர் ஆவார். சமூக வலைதளங்களின் உதவியுடன் இது இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதனால் நடந்தவை ??
இதன் மூலம் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு இதுவரை 23 மில்லியன் டாலர் பணம் வந்துள்ளது. ஜுன் 1 முதல் ஆகஸ்ட் 13 வரை பேஸ்புக்கில் இது தொடர்பாக 1.2 மில்லியன் வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு உள்ளன.
ஏ.எல்.எஸ். நோய் என்றால் என்ன ??
இது மூளைக்கு மற்றும் ஸ்பைனால் கார்டுக்கு செல்லும் நரம்புகளையும் செல்களையும் பாதிக்கும் நோய் ஆகும். இந்த நோயால் 2 லட்சம் பேரில் 2 பேர் பாதிக்கப்படுகிறார்கள் . ஏ.எல்.எஸ் நோய் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் 5 வருடங்களுக்கு மேலும், 10 சதவீதம் 10 வருடங்களுக்கு மேலும், 5 சதவீதம் பேர் 20 வருடங்களுக்கு மேலும் உயிர் வாழ்கிறார்கள்.
இதனை செய்த பிரபல நட்சத்திரங்கள் ??
இதனை பலர் செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர்கள் என்றால் எல்லாருமே தான். அதில் சிலர் யார் என்றால், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கு, பில் கேட்ஸ், லேடி காகா, ஜஸ்டின் பெய்பர், ரோனால்டோ, மெஸ்ஸி என இந்த லிஸ்டு நீண்டு கொண்டே இருக்கிறது. இது இப்போது கால்பந்து வீரர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இது இந்தியாவில் பிரபலமாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தமிழகத்தில் இந்த வாய்ப்பு முதன் முதலில் நடிகை ஹன்சிகாவுக்கு வந்து உள்ளது.