BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 26 August 2013

இலங்கை இறுதிப்போரில் இந்திய கொடி தாங்கிய கப்பல்.

இலங்கையில் நடந்த இறுதி புத்தத்தின் போது ராணுவத்தினரிடம் சரணடந்த கைதிகள் சிலர் காணாமல் போயுள்ளனர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டுமென இலங்கை நீதிமன்றத்தில் காணாமல் போனவர்களில் உறவினர்கள் ஐந்து ஆட்கொணர்வு மனு கொடுத்திருந்தனர், தற்பொழுது மேலும் ஏழு ஆட்கொணர்வு மனு புதிதாக கொடுக்கபட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மசோதா, எதிர்த்துக்கொண்டே ஆதரிக்கும் திமுக மற்றும் அதிமுக‌

உணவு பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஆரம்பம், "வேணாம் முடியாது, அய்யோ வேணாம், புடிக்கலைன்னு சொல்றேன்ல" என்று சொல்லிக்கொண்டே உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்கும் திமுக மற்றும் அதிமுக‌

மைனர் பெண்களுடன் செக்ஸ் உறவு குற்றமல்ல, சர்ச்சையை கிளப்பியிருக்கும் நீதிமன்ற தீர்ப்பு - மக்கள் அலசல்

சம்மதத்துடன் மைனர் பெண்களுடன் செக்ஸ் உறவு குற்றமல்ல, சர்ச்சையை கிளப்பியிருக்கும் நீதிமன்ற தீர்ப்பு - மக்கள் அலசல்


சமீபத்தில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் டெல்லி காவல்துறையும் சேர்ந்து ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது, அதில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் உறவு வைத்து கொள்வது சட்ட விரோதம் என சட்ட திருத்தம் வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்கள்.

சீருடையை கழட்டி கொடுத்த காவலர் - சாதி பெயர் சொல்லி திட்டுவதாக குற்றசாட்டு



விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார் ரமேஷ், அதே காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரமேஷ்பாபு, இவர் காவலர் ரமேஷை சாதிபெயர் சொல்லி திட்டுவதாகவும், உடன் பணிபுரிபவர்கள் மத்தியில் அவமானபடுத்துவதாகவும் புகார் செய்து விழுப்புரம் எஸ்.பியிடம் தனது சீருடையை கழட்டி கொடுக்க வந்திருந்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media