காடுவெட்டி குரு மற்றும் 19 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து. விரைவில் விடுதலை ஆவார்களா?
பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மற்றும் 19 பாமகவினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. குரு உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் அவர்கள் மீதான வழக்குகளில் ஜாமீன் கிடைத்தாலும் மேலும் வழக்குகள் போட்டு உள்ளேயே வைத்திருக்க அரசு முயலும் என்பதால் விரைவில் விடுதலை ஆவது சந்தேகமே.
# வெளியே வந்தாலும் அபராதம் போடுவாங்களோ?
தயாளு அம்மாள் மனு 2ஜி விசாரணையை முடக்கும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிபதி கருத்து
2ஜி வழக்கில் சாட்சி சொல்ல நேரில் ஆஜராக வேண்டும் என்பதிலிருந்து விலக்கு கோரிய தயாளு அம்மாள் மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது, இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி 2ஜி விசாரணையை முடக்கும் நோக்கத்துடன் தயாளு அம்மாள் மனு செய்துள்ளார் என்று கூறியுள்ளார்கள் மேலும் தயாளு அம்மாள் டெல்லி வந்தால் உடல்நிலை பற்றி நீதிபதிகள் முடிவு செய்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
# பாவம் அந்த அம்மா பெயரில் டிவியும் ஆரம்பித்து ஊழலையும் செய்துவிட்டவர்கள் சுகமாக இருக்க இப்போது இவர் அலைகழிக்கப்படுகிறார்.
பணியிடங்களில் பெண்கள் பாலியல் பிரச்சினைகளுக்கு உள்ளாவதை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழக அரசு அமைத்த 5 பேர் குழுவில் ஐபிஎஸ் அதிகாரிகள் சீமா அகர்வால், லலிதா லட்சுமி, நல்லசிவம் , வெங்கட்ராமன் ஐ.பி.எஸ்., வழக்கறிஞர் வைசாலக்குமாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
# இந்த குழு சன் செய்திகள் மன்மத ராசாவை விசாரிக்குமா?