BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 August 2013

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் அவர்களை அரசியலுக்கு அழைக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி

உபியில் மணல் மாஃபியாவை எதிர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் அவர்களை அரசியலுக்கு அழைக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி

உபியில் மணல் மாஃபியாவை எதிர்த்ததால் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாக இருந்து மத பிரச்சினையை தூண்டும் தீர்ப்பை வழங்கினார் என்று கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் அவர்களை அரசியலுக்கு வந்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவை எதிர்த்து போட்டியிட கோரியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான அர்விந்த் கெஜ்ரிவால். இவர்கள் கட்சி விரும்பி தொடப்பைகட்டை சின்னத்தை வாங்கியுள்ளார்கள்.

காதலனை கொல்ல முயல்கிறார் இயக்குனர் சேரன் என்று அவரது மகள் புகார்

எங்கள் காதலை மறுக்கிறார், காதலனை கொல்ல முயல்கிறார் இயக்குனர் சேரன் என்று அவரது மகள் புகார்.

இயக்குனர் சேரன் அவர்கள் காதலை புனிதப்படுத்தியும் சாதி மறுப்பு காதல் திருமணங்களை ஆதரித்தும் பல படங்களை எடுத்த ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள படங்கள் எடுப்பவர் மட்டுமல்ல, சமீபத்தில் தர்மபுரி கலவரத்தை மையமாக வைத்து எடுத்த கெளரவம் திரைப்படம் பற்றிய நீயா? நானா? நிகழ்ச்சியிலும் கடுமையாக சாதியை சாடியும் காதலை ஆதரித்தும் பேசியவர். ஆனால் அவரது இரண்டாவது மகள் காலையில் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் இயக்குனர் சேரன் அவரது மகளின் காதலரை கொலை செய்துவிடுவேன் என்று அடியாள்கள் வைத்து மிரட்டுவதாகவும் தனது காதலை பிரிக்க முயல்வதாகவும் புகார் அளித்தார்.

இயக்குனர் சேரன் சில வாரங்களுக்கு முன் கமிஷனர் அலுவலகம் சென்று கமிஷனரை சந்தித்து வந்தார், அப்போது கேட்டபோது சொந்த விசயமாக கமிஷனரிடம் பேச வந்தேன் என்றார், அப்போது தெரியவில்லை இவர் பேச வந்தது இந்த விசயமாகத்தான் என்று.

பாரதி கண்ணம்மாவை சாவில் சேர்த்து வைத்த இயக்குனர் சேரனோ தன் மகளின் காதலுக்கு மட்டும் சமாதி கட்ட முயல்கிறார், முற்போக்காக படம் எடுக்கலாம், முற்போக்காக டிவி ஷோக்களில் பேசலாம் ஆனால் தன் சொந்த மகள் வாழ்க்கை என்று எடுத்தால் பொறுந்தாத காதல், காதலனுக்கு வருமானம் இல்லை, காதலன் நல்லவன் இல்லை, சாதி வித்தியாசம் என்று எல்லாம் பேசுவார்கள் பொது விசயம் என்றால் முற்போக்கு என்று மூச்சை பிடித்துக்கொண்டு பேசுவார்கள், முற்போக்கு என்பது பேச்சில் மட்டும் அல்ல, நடந்தும் காட்ட வேண்டும்.

# சேரன் சார் அடுத்துவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தா ரத்தமா?

வைகோ கைது! பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி

வைகோ கைது! பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்து கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்திய வைகோ திருச்சி விமான நிலையம் நோக்கி செல்லும் போது. கைது செய்யப்பட்டார், அவருடன் ஏராளமான மதிமுகவினர்களும் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க கோரி வழக்கு

கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க கோரி வழக்கு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க கோரி சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார், தமிழகத்தில் புகழ்பெற்ற பல கல்லூரி நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு தானமாக அளித்த கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் அந்தந்த வள்ளள்களின் பெயரிலேயே வழங்கப்படுகிறது, அப்போதைய வழக்கப்படி அவர்களின் பெயர்களோடு சாதிப்பெயர்களும் இணைத்தே அந்த கல்லூரிகளின் பெயர்கள் உள்ளன இதை நீக்க கோரி வழக்கு போடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

# பள்ளி,கல்லூரி பெயர்களில் சாதி வேண்டாம் சரி தான், எப்போது வீடுகளில் ஒழிக்க போகிறோம் சாதியை?

தப்பான லேப் ரிப்போர்ட்டால் 50 நாள் ஜெயில் - 50 இலட்சம் நட்ட ஈடு கேட்டு டில்லி பிசினஸ்மேன் வழக்கு.

தப்பான லேப் ரிப்போர்ட்டால் 50 நாள் ஜெயில் - 50 இலட்சம் நட்ட ஈடு கேட்டு டில்லி பிசினஸ்மேன் வழக்கு.

டில்லியில் துணி பிசினஸ் செய்பவர் அபிஷேக் ராஜன், இவர் இறக்குமதி செய்த துணி மற்றும் அதன் மூலப்பொருட்கள் குறித்து சோதனை செய்த சென்னையில் உள்ள மத்திய அரசின் லேப் தவறான ரிப்போர்ட் அளித்ததால் அபிஷேக் ராஜன் கைது செய்யப்பட்டு 50 நாள் ஜெயிலில் இருந்துள்ளார், மேலும் கஸ்டம்ஸ் இவருக்கு பெரிய அளவில் அபராதமும் விதித்தது.

ஆறு மாதங்களுக்கு பின் லேப் தனது ரிப்போர்ட்டை தவறு என்று ஒத்துக்கொண்டுள்ளதால் 50 இலட்சம் நட்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

# தப்பா என்கவுண்டர் போட்டுட்டு சாரின்னு சொல்லிட்டு போற நாடு சார் இது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏவுக்கே கோஷ்டிபூசலால் போலிஸ் பாதுகாப்பு

ஆளுங்கட்சி எம்.எல்.ஏவுக்கே கோஷ்டிபூசலால் போலிஸ் பாதுகாப்பு 

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் எம்.எல்.ஏ முத்துசெல்வி தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்மன் முருகையா தலைமையில் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர், சமீபத்தில் நடந்த இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த கூட்டுறவு தேர்தலில் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் முற்றிய மோதல் சமீபத்தில் எம்.எல்.ஏ முத்து செல்வி அம்மா உதவிதிட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது அடிதடியாக முற்றியது

இதையடுத்து முத்துசெல்வி எம்.எல்.ஏவுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

# அம்மா ஆட்சியில் இதுவும் சாதனைதான்.

கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.,எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.,எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வர எம்பிகள் வலியுறுத்தல். சற்று குளறுபடியான இந்த தீர்ப்பை ஆளுங்கட்சிகள் எதிர்கட்சிகளை அடக்க பயன்படுத்த வாய்ப்பு உள்ளது மட்டுமின்றி எதிர்கட்சி எம்.எல்.ஏ எம்பிகள் மீது ஏதேனும் ஒரு கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை பெற்று தந்து அவர்கள் பதவியை பறிக்கவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் சிறந்த தூய்மையான அரசியல்வாதியாக கருதப்படும் வைகோ மீது கூட ஒரு கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media