BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 7 January 2014

"நீதிமன்றம்..விசித்திர‌ம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது..புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது..."

பீஹாரில் ஒரு வழக்கறிஞர், தன் மகன் வேறு ஜாதி பெண்ணை மணந்ததால், தன் மானம், மரியாதை சமூகத்தில் பறி போய் விட்டதாகவும், அதற்கு மான நஷ்ட ஈடாக, ஒரு கோடி ரூபாய் தன் மகன் தனக்கு தர வேண்டும் என்று, வழக்கு தொடுத்து இருக்கிறார்.

இந்த வழக்கு செல்லுமா என நீதிமன்றம் இம்மாதம் 18ம் தேதி ஒரு முடிவுக்கு வரும்.

கலப்பு திருமணங்கள் நாடெங்கிலும் அதிகரித்து வந்தாலும், பீஹாரில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அம்மாநில அரசு கலப்பு திருமணங்கள் அதிகரிக்க பட வேண்டும் என்பதற்காக, வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்ளும் மகளிர்க்கு அளிக்கப்படும் ஊக்கதொகையை 25,000ரூபாயில் இருந்து, 50,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், தன் மகன் சுஷாந்த் செய்த கலப்பு திருமணத்தால்,தன் குடும்பத்தின் கௌரவம் நிலை கொலைந்து விட்டதாகவும், அதற்காக தான் நீதிமன்றத்தை அணுகியிருப்பதும் சரியே என வாதாடுகிறார், பீஹார் வழக்கறிஞர் ஷர்மா. மேலும், தன் மகன் தன் சுஷாந்த் என்ற பெரயரை பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் அதற்காக 10,000 ரூபாய் காபி ரைட்ஸ் தொகையாக அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

"ஆண்டனி பிச்சை"யாக மாறினாரா ராமராஜன்? கிறித்துவ மதத்திற்கு மாறினாரா?



முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் விநாயகர் நினைவு வருகிறதோ இல்லையோ கரகாட்டக்காரன் ஹீரோ ராமராஜன் தான் நினைவுக்கு வருவார்.

மிகப்பெரிய ஹீரோவாக இருந்து பணம் புகழை எல்லாம் இழந்து இருந்த ராமராஜன் சிறிது காலம் அதிமுக சார்பில் எம்பி ஆக‌ இருந்தார், பின் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கார் விபத்தில் அடிபட்டு பலத்த காயமடைந்தார், விபத்தில் சிக்கி சிகிச்சை எடுத்த போது கிறித்துவ பாதிரியார் ஒருவர் கொடுத்த பைபிளை படித்த பின் வேகமாக குணமடைந்ததாக குறிப்பிட்ட ராமராஜன் தற்போது தன் பெயரை "ஆண்டனி பிச்சை" என்று மாற்றிக்கொண்டு கிறித்துவராக மதம் மாறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இன்று இதுகுறித்து பேசிய ராமராஜன் தான் மதம் மாறவில்லை என்றும் தான் விபத்தில் அடிபட்ட போது கிறித்துவ நண்பர்கள் ஜெபித்ததால் அவரகளுக்காக கிறித்துவ விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார், ஆனால் ராமராஜன் மதம் மாறிவிட்டதாகவும் அதிமுக தலைமைக்கு இது தெரிந்தால் பிடிக்காது என்பதால் மறைப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

# கஷ்டத்தில் இருப்பவர்களிடம் எதையாவது சொல்லி மதம் மாற்றுவது தவறு என்பவர்கள் லைக் போடவும்
# கஷ்டத்தில் இருப்பவர்களை ஆறுதலாக பேசி அவர்கள் விருப்பப்பட்டால் மதம் மாற்றுவதில் என்ன தவறு? என்று நினைப்பவர்கள் தங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லவும்

கூட்டணிக்காக விஜயகாந்த் காலடியில் திமுக தொபுக்கடீர்


விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழு  கூட்டத்தில் தான் திமுகவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். தே.மு.தி.க. வுக்கும், தி.மு.க. வுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி தான் என்று திமுக தலைவர் கருணாநிதி விஜயகாந்த் கூட்டணிக்கு சிக்னல் காட்டியிருந்த போதும் விஜயகாந்த் மனைவி திமுகவை விமர்சித்தார்.

ஒரு 'இத்துபோன'(வடிவேலு) நடிகரை வைத்து கொண்டு, தி.மு.க, விஜயகாந்தை மிக மோசமாக, கொச்சையாக‌ பேசியதாகவும், அப்படி பேசியதை தங்களது தொலைகாட்சியில் ஒளிபரப்பி மகிழ்ந்ததாகவும் பிரேமலதா குற்றம் சாட்டினார்,  மேலும், தி.மு.க தனது ஆட்சி காலத்தில், விஜயகாந்தின் மண்டபத்தை இடித்தது, வருமான வரி சோதனை நடத்தியது போன்று தே.மு.தி.க விற்கு பல நெருக்கடிகள் கொடுத்ததாகவும் நேற்று பேசினார்

விஜயகாந்த்தும் நேற்று கருணாநிதியின் சிக்னலை கண்டுகொள்ளாமல் திமுக பற்றி பேசவே இல்லை.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மு.க. அழகிரி, தி.மு.க லோக்சபா தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாமல் போகும் என்றும், விஜயகாந்த்தை ஒரு அரசியல் தலைவராகவே தான் மதிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறினார்.

இந்நிலையில் இன்று மு.க.அழகிரி பேட்டியை அவரது தந்தை கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று இது குறித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி "தே.மு.தி.க. வுக்கும், தி.மு.க. வுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி தான்"" என்று "கழகத்தின் தலைவர்" என்ற முறையில் நான் சொன்ன கருத்துக்கு மாறாக மு.க. அழகிரியின் பேட்டி அமைந்திருப்பது வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத் தக்கதுமாகும் என்று கூறியுள்ளார்.

அழகிரியின் எதிர்ப்பையும் மீறி, பிரேமலதா கடுமையாக திமுகவை விமர்சித்த போதும் கொஞ்சம் கூட இந்த விமர்சனங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க திமுக தலைவர் கருணாநிதி முனைவது அவமானமாக உள்ளது என திமுக தொண்டர்களே மனம் வருந்துகின்றனர்.

# சந்த்ரு சந்த்ருன்னு இங்க ஒரு மானஸ்தன் இருந்தானே, அவனை தேடுறேன்

ஜில்லா படம் வெளிவரும் தினம் கேரளாவில் ஓனம் பண்டிக்கை தான்: மோஹன் லால்


ஜில்லா படத்தில், விஜயின் தந்தையாக நடிக்கிறார், மலையாள நடிகர் மோஹன் லால். அவர் இப்படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்ட முதல் காரணம், நடிகர் விஜய் எனவும், அவருக்கு கேரளாவிலும் ரசிகர்கள் ஏராளம் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இளம் வயதிலேயே, மிக பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார். அதற்கு காரணங்கள், அவரிடம் இருக்கும், கடும் உழைப்பு, ஒழுக்கம், நேரம் தவறாமையே என மோஹன் லால், இளைய தளபதியை பாராட்டி தள்ளியுள்ளார்.

கேரளாவில் 300 திரைகளில் ஜில்லாவை தான் வெளியிடுவதாகவும், அப்படம் வெளிவரும் தினம், கேரளாவில் ஓனம் பண்டிகை தினம் போல் சிறப்பாக இருக்கும் எனவும் மலையாள சூப்பர் ஸ்டார் தெரிவித்து இருக்கிறார்.

உதய் கிரண் தற்கொலையின் பின்னணியில் சிரஞ்சீவியா??

கடந்த ஒரு வருடமாக எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால், மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறார் உதய் கிரண்.
அவர் இறந்த அன்று, அவர் மனைவியை மட்டும், ஒரு பிறந்த நாள் விழாவிற்கு அனுப்பி விட்டு, "ஐ லவ் யூ" என்ற எஸ்.எம்.எஸ் ஒன்றையும் இறுதியாக அனுப்பி விட்டு, தனது அறையிலேயே தூக்கிலிட்டு கொண்டுள்ளார்.

இதையடுத்து, ஆந்திராவில் உள்ள அருண் குமார் என்ற வழக்கறிஞர், மனித நேய ஆணைக்குழுவிடம், உதய் கிரண் தற்கொலை பற்றி விசாரணை நடத்தும் படி மனு அளித்துள்ளார்.

உதய் கிரணுக்கு படவாய்ப்புகள் வராமல் போனதற்கு, இரு சாதியை சேர்ந்த, நான்கு குடும்பங்களே காரணம் என்றும், மறைமுகமாக, உதய்கிரண் தற்கொலையையே அவர்கள் தான் தூண்டினர் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2003ம் ஆண்டு, சிரஞ்சீவி மகளுடன் உதய் கிரணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது, அந்நிலையில், சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணுக்கு, ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அச்செய்தியில், உதய் கிரணுக்கும் தனக்கும் உறவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து, சிரஞ்சீவி மகளுடன் நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் நடந்த பின்னர், உதய் கிரணுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புகளை, சீரஞ்சீவி, என்.டி.ஆர், தில் ராஜு மற்றும், தக்கு பாட்டி குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியாதகவும், அதுவே அவருக்கு மன அழுத்ததை அளித்து, அவரை இந்த தற்கொலை முடிவுக்கு தள்ளியதாகவும் கூறிகிறார் வழக்கறிஞர் அருண் குமார்.

அழகிரிக்கு கண்டனம்: தி.மு.க தலைவர் கருணாநிதி

தே.மு.தி.க. உடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாம போகும் என்று அழகிரி தெரிவித்த கருத்துக்கு, கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். "தே.மு.தி.க உடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே", என்று கழகத்தின் தலைவரான தான் தெரிவித்த கருத்து எதிர்மாறாக, அழகிரி கூறியிருப்பது, வருத்ததிற்கு உரியது மட்டும் அல்ல, கண்டனத்திற்கு உரியது என கருணாநிதி கூறியுள்ளார்.

இதுப்போன்று, கருத்து வேறுபாடுகளை தெரிவித்து, கழகத்தின் உள் இருக்கும் கட்டுப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், பாதகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவோர் எனவும் மிக கண்டிப்பாக தெரிவித்தார் கருணாநிதி. மேலும், இந்த முடிவு கட்சியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.

காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினரை தாக்கினர்

ராம்லீலா மைதானத்தில் ஒரு தொலைகாட்சி நிறுவனம் நடத்திய பொது விவாத கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டதினர் பங்கேற்றனர். அப்பொழுது, காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தோர் அணிந்திருந்த, தொப்பியை கழற்றி விட்டு, மேடைக்கு வந்து பேசும்படி நிபந்தனை விதித்தனர். இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் அடி பணியாததால், பேச்சு வார்த்தை அதிகம் ஆகி, ஒரு கட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மியினரை தாக்க ஆரம்பித்தனர். அங்கிருந்த பொது மக்கள் சிலர் அவர்களை காப்பாற்ற முன் வந்தனர்.

"காங்கிரஸ் தலைவர்கள், எந்த தவறும் செய்யாத எங்களை தாக்கியுள்ளனர். நாங்கள் தொப்பி அணிந்து கொண்டு தான் வருவோம் என்று சொல்லி விட்டோம், இருந்தும், ஆள் பலத்தை வைத்து கொண்டு எங்களை பயமுறுத்த முயற்சித்தனர்",  என்று ஆம் ஆத்மியை சேர்ந்த ஹரிகேஷ் ஸ்ரீவட்சவா கூறியுள்ளார்.

ராஜபக்சேவுக்கு "ஸ்டார் ஆப் பாலஸ்தீனம்" விருது:

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, பாலஸ்தீனத்திற்கு சென்றுள்ளார், இலங்கை அதிபர் ராஜபக்சே. அங்கு அவருக்கு, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததற்காக "ஸ்டார் ஆப் பாலஸ்தீனம்" என்ற விருது அந்நாட்டு அரசால் வழங்கப்பட்டு இருக்கிறது . இவ்விருது, அந்நாட்டில் அளிக்கபடும், மிகப்பெரிய, முதன்மையான விருதாகும்.

மேலும் தலைநகர் ரமல்லாவில் தெரு ஒன்றுக்கும் ராஜபக்சே பெயர் சூட்டப்பட இருக்கிறது.


குப்பைக்கழிவுகளில் குழந்தையை போட்ட அரசு மருத்துவமனை

ராஜேஷ்-நீது வர்மா என்போருக்கு டெல்லியில் உள்ள நர்சிங் ஹோமில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நிலை சரியில்லாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அதை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நர்சிங் ஹோமில் கூறி உள்ளன‌ர். இதை அடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தை உயிர் இழந்தது. இறந்த அக்குழந்தையின் உடலை கேட்டு, அதன் பெற்றோர் வந்த போது தான் தெரிந்தது, அரசு மருத்துவமனையில், எரிக்கபடுவதற்காக வைத்திருந்த குப்பை கழிவுகள் நிரம்பிய வண்டியில், அந்த குழந்தை தூக்கியெரியப்பட்டுள்ளது என்று.

இதையடுத்து, இச்சம்வத்திற்கு காரணமானவர்கள் மேல், கடும் நடவடிக்கை எடுக்க படும் என கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

காவல் துறையில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 297 கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கால் சென்டர் அலுவலக‌த்தில் கற்பழிப்பு

ஹரியானாவில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து கொண்டிருந்த 30 வயது பெண்ணை, அந்த அலுவகத்திலேயே, கடந்த ஞாயிற்று கிழமையன்று பணிபுரிபவர்கள் கற்பழித்துள்ளனர்.

தெற்கு டெல்லியில், ஒரு விடுதியில் தங்கியிருந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில், முதல் தகவல் அறிக்கை, எட்டு பேரின் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பெண்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்னும் யாரையும் காவல் துறை கைது செய்யவில்லை.

ஆம் ஆத்மியின் அதிரடி நடவடிக்கை


லஞ்சம் வாங்கியதற்காக டெல்லி குடிநீர் வாரிய அதிகார்கள் மூவர், கேஜ்ரிவால் அளித்த உத்தரவின் பேரில், வேலை நிறுத்தம் செய்யபட்டுள்ளனர்.

மேலும், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்த 800 அதிகாரிகள் வேலை இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.

விநோத் குமார், பட்வாரி சுனில் குமார், அதுல் பிரகாஷ் என்ற டெல்லி குடிநீர் வாரியத்தின் சேர்ந்த மூவர், லஞ்சம் வாங்கும் போது, கேமராவில் பிடிப்பட்டதை, தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பியதை அடுத்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கேஜ்ரிவால், பதவி ஏற்ற அன்றே, குடிநீர் வாரிய அதிகாரியை வேலை இடமாற்றம் செய்தார் என்பது குறிப்படத்தக்கது.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media