BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 17 October 2014

உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் ?





  • சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
  • கல்லீரல் - 18 மணி நேரம் வரை
  • இதயம் - 5 மணி நேரம் வரை
  • இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
  • கணையம் - 20 மணி நேரம் வரை
  • கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
  • எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
  • தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
  • எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
  • இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
  • பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.




கருத்து கதை : விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை



அழகான ஒரு ஏரியின் கரையில் , அதிசயமான ஒரு பறவை வாழ்ந்து வந்தது, அதற்கு ஒரு உடல், இரண்டு தலைகள். இரண்டு தலைகளும் , ஒற்றுமையாக நேசம் கொண்டு பல நாட்கள் வாழ்ந்து வந்ததன. ஒரு நாள் அமுதம் போன்ற ருசியான ஒரு பழத்தை ஒரு தலை கண்டது. எடுத்து ருசித்ததும், "ஆகா என்ன சுவை" என்றது மற்றொரு தலையிடம். இதைக் கெட்டு மற்றொரு தலை "எனக்கும் கனி தா" என்றது கனிவாய். பழத்தின் சுவையில் மயங்கிய அந்த தலையோ, "நம் இருவருக்கும் உடல் ஒன்று தானே, நான் தின்றால் என்ன? நீ தின்றால் என்ன?" என்றது. இது நாள் வரை எல்லாவற்றையும் பகிர்ந்து உண்டுவந்த அந்த தலைகளுக்குள் இப்படி பகை மூண்டது.

ஏமாந்த தலை பழி வாங்கும் தருணம் பார்த்து காத்து இருந்தது. ஒரு நாள் , விஷக் கனி ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை அந்த தலை உண்ணப் போவதைப் பார்த்ததும், பதறிப் போய் கத்தியது மற்றொரு தலை "உண்டு விடாதே , இருவருக்கும் ஆபத்து" என்றது. ஆனால் பழிவாங்கும் உணர்ச்சியில் அதைக் கேட்காமல் ஏமாந்த தலை உண்டு விட்டது. அந்த பறவை இரு தலைகளும் தொங்க இறந்து விழுந்தது.

இந்த கதையிலிருந்து பல கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்கள் புரிந்து கொள்ளல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்கு வேறு வேறு கோணங்களில் பொருத்தி பார்க்க முடியும்."அமுதமே ஆனாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும்" ,"துணை என்பது அவசியம் ஒருவருக்கு ஒருவர் பகை இல்லாமல் இருத்தலும் அவசியம்"என்பதே இக்கதையின் அடிப்படை கருத்து

உணவே மருந்து : பழைய சாதம்



                             


முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! 

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 
  
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 
  
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 
  
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார். 

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. 

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். 

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். 

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. 

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்". 



பழைய சாதத்தை எப்படி செய்வது: 


பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு .



SC grants bail with lots of conditions - ஜாமீனுக்காக ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகள்

Read this in Tamil
The Supreme Court while granting bail today, said the AIADMK chief must advise her party's workers to remain calm. Subramaniya Swamy must not be threated by jayalalitha's followers

Ms Jayalalithaa's lawyers to ready all documents within two months to facilitate an early disposal of her appeal in the Karnataka High Court against her sentence. Court will not accept even a single day delay for this.if the papers were not filed by then, bail would be canceled.

The bail is given on account of her age and health.

உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

ஜெயலலிதாவின் உடல்நிலையைக் காரணமாக கொண்டே இவர்களின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18 டிசம்பர் வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது.  18 டிசம்பருக்கு  பின் ஒருநாள் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மேல்முறையீட்டு வழக்குக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமை நீதிபதியிடம் சென்று வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வேண்டும்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் விசாரணையை கர்நாடகா உயர்நீதிமன்றம் மூன்றே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

நீதிபதி குன்ஹா மீதோ தன் மீதோ(தத்து) கன்னடர் என்பதால் தீர்ப்பளித்துவிட்டதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது.

தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. வன்முறை சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடவேண்டும்.

நீதிபதிகளை விமர்சிப்பது, சுப்பிரமணியன் சுவாமியை விமர்சிப்பது, மிரட்டுவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது அப்படி நடந்து உச்சநீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஜாமீன் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

பாலிநாரிமன் மூத்த வழக்கறிஞர் என்பதால் அவரது உறுதிமொழிகளை நம்பி தான் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் தலையிட உரிமையில்லை: சீனா திட்டவட்டம்


ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜனநாயகவாதிகளை சீனா கையாளும் விதம் குறித்து அமெரிக்காவும், பிரிட்டனும் விமர்சித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, ஹாங்காங் விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமையில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டனின் விமர்சனங்கள் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லேயிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேட்டனர்.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஹாங்காங் விவகாரத்தில் தலையிட எந்த அன்னிய நாட்டுக்கும் உரிமை கிடையாது. போராட்டக்காரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து, ஹாங்காங் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நடந்துகொண்ட விதம் முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. அவர்களது நடவடிக்கைகளை உலகின் எந்த சமுதாயத்தினராலும் சகித்துக் கொள்ள முடியாது."ஆக்குபை சென்ட்ரல்' இயக்கத்தினர் ஹாங்காங்கின் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.போலீஸார் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தனர். சட்ட, ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தினர் என்றார் அவர்.
சீனா திணறல்?: இதற்கிடையே, ஜனநாயக ஆதரவு போராட்டத்துக்கு எதிராக சீனா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதைப் போல் தோன்றினாலும், மூன்றாவது வாரத்தை நெருங்கும் இந்தப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை முடிவு செய்வதில் சீனா திணறி வருவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அமெரிக்கா கவலை: முன்னதாக, ஹாங்காங்கில் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் ஒரு போராட்டக்காரரை போலீஸார் அடித்து உதைத்ததாக வெளியான செய்தி குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து விரைவான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்நாடு வலியுறுத்தியது. பிரிட்டன் விமர்சனம்: ஹாங்காங் போராட்டங்கள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் புதன்கிழமை பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரிட்டன் ஹாங்காங்கை 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைப் பின்பற்றி சீனா நடந்துகொள்ள வேண்டும்.பிரிட்டனின் ஆளுகைக்குள் ஹாங்காங் மக்கள் அனுபவித்த பேச்சு, எழுத்து சுதந்திரத்தையும், கூட்டங்கள், இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கான உரிமைகளையும் சீனா தொடர்ந்து வழங்கவேண்டும்.இந்த உரிமைகள் குறித்து "பிரிட்டன்-சீன' ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கேமரூன் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் மீதான தடை ரத்து: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு


விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய யூனியன் விதித்த தடை வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது. தடையை ரத்து செய்து, லக்ஸம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது."பத்திரிகை செய்திகளையும், இணையதளத்தில் வெளிவந்த செய்திகளையும் அடிப்படையாக வைத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தரப்பட்ட தகவல்களை நம்பகமானவையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஒருதலைபட்சமான அணுகுமுறையை அவர்கள் கொண்டிருந்தனர்' என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனினும், "விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தேவைப்பட்டால் இரண்டு மாதங்களுக்குள் ஐரோப்பிய யூனியன் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.தற்போதைக்கு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கம் நீக்கப்படாது. அந்த இயக்கத்துக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் சேர்த்தது.

தீபாவளி பண்டிகை : முதுமலை வனப்பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுகோள்


தீபாவளி பண்டிகையையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இம்மாதம் 22ம்தேதி நடைபெறவுள்ள தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்குமென எதிர்பார்ப்பதால் வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வனத்துறையினரின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும்.
அதன்படி வனப்பகுதியை சுற்றியுள்ள ஓய்வு விடுதிகள், சாலையோரங்கள் மற்றும் வனங்களையொட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வனப்பகுதிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மேலும், சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வன உயிரினங்களை பார்வையிடும் செயலினையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்கவும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமலிருக்கவும் இத்தகைய கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை பொருளாதார ஆலோசகராக பதவியேற்றார் அரவிந்த் சுப்ரமணியன்


இந்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில் அரவிந்த் சுப்ரமணியன் நேற்று பதவியேற்றார்.மத்திய நிதித்துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், கடந்த செப்டம்பரில், ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, அந்த முக்கிய பணியிடம் காலியாக இருந்து வந்தது. அந்த இடத்திற்கு, அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். நேற்று பதவியேற்றுக் கொண்ட அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். மாற்றங்களை கொண்டு வர செயல்பட்டு வரும் அரசுடன் இணைந்து செயலாற்ற எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media