BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 August 2013

தலைவா படத்திற்கு தடை கோரி புதிய வழக்கு - நாயகன் வரதராஜ முதலியார் பையன் வழக்கு

தலைவா படத்திற்கு தடை கோரி புதிய வழக்கு - நாயகன் வரதராஜ முதலியார் பையன் வழக்கு


தலைவா படத்திற்கு தடை விதிக்கும்படி ராமசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.அப்படத்தில் வரும் 'வரதராஜ முதலியார்' என்ற கதாபாத்திரம் தன் தந்தையின் புகழை கெடுக்கும் வகையில் உள்ளதாக கர்ணன் என்பவர் குற்றம்சாற்றியுள்ளார்

இது வரை கிடைத்துள்ள தகவல்கள் படி விஜய் நடிக்கும் தலைவா படம் ரிலீஸ் ஆக மேலிட கிளியரன்ஸ் கிடைக்கவில்லை, எனவே நாளை தலைவா படம் ரிலீஸ் ஆவது சந்தேகமே.

ஆனால் எப்படியும் மேலிட அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து விஜய் தரப்பு முயற்சி செய்கிறார்கள்

இராணுவத்தில் வீரர்கள் சேருவதே சாவதற்காகத்தான், இதில் என்ன ஸ்பெசல் - உளறிய பீகார் அமைச்சர்

இராணுவத்தில் வீரர்கள் சேருவதே சாவதற்காகத்தான், இதில் என்ன ஸ்பெசல்  - உளறிய பீகார் அமைச்சர் பீம் சிங், மன்னிப்பு கேட்டார் முதல்வர் நித்திஷ்குமார்.

பீகார் அமைச்சரவையில் ஒரு கேபினட் அமைச்சராக உள்ளார் பீம் சிங், பாக்கிஸ்தானால் கொல்லப்பட்ட பீகார் ரெஜிமண்ட்டை சேர்ந்த 5 வீரர்களில் நால்வரின் இறுதி சடங்கு பீகாரில் நடந்தது, பாட்னாவில் வீரர்களின் உடல் தனி விமானத்தில் வந்த போது ஒரு அமைச்சர் கூட அங்கே இல்லை, மேலும் அமைச்சர்கள் வீரர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது, இதற்கு பதில் அளிக்கிறேன் என்று உளறிய அமைச்சர் போம் சிங் இராணுவத்தில் வீரர்கள் சேருவதே சாவதற்காகத்தானே, அவர்களின் இறுதி சடங்கில் என்ன ஸ்பெசல் இருக்கிறது என்றார்.

தற்போது எதிர் கூடாரமாகிய பாஜக இதை கடுமையாக விமர்சித்துள்ளது, மேலும் பலரும் விமர்சித்த நிலையில் அமைச்சர் பீம் சிங்கின் கருத்துக்கு மன்னிப்பு கோரினார் முதல்வர் நிதிஷ்குமார்.

# அரசியல்வாதியாகனும்னா 2 வருசம் பார்டரில் காவலுக்கு நிற்க வேண்டும் என ரூல்ஸ் போடனும், அப்பொழுது தான் இவர்களின் திமிர் பேச்சு அடங்கும்.

எஸ்.ஏ.சி மற்றும் விஜய்க்கு முதல்வரை பார்க்க அனுமதி மறுப்பு!

தலைவா படம் திரையிடப்படும் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் அப்படத்தை திரையிட முடியாது என அறிவித்தது.

தமிழக சி.ஐ.டி போலீஸாரும் தங்கள் பங்குக்கு தலைவா படம் வெளியிட்டு திரையரங்கில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு திரையரங்கு உரிமையாளர்களே பொறுப்பு என தனிதனியாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தலைவா படத்தை வெளியிட தமிழக அரசின் ஆதரவு கோரி நடிகர் விஜயும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் முதல்வரை சந்திக்க விரும்பி அனுமதி கேட்டிருந்தனர், சற்றுமுன் வந்த தகவலின் படி அவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதாக தெரிகிறது.

சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்ற கொடா நாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா வருவார் என்று எதிர்பார்த்தே இந்த அனுமதி கோரியிருந்தனர், ஆனால் அரசியல் வட்டாரத்தில் இம்முறை எத்தனை அமைச்சர்கள் மாற்ற படபோகிறார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறோம் இவர்கள் சினிமா ரிலீஸ் பண்ண அனுமதி கேட்டு காமெடி பண்றாங்கன்னு என பேசி கொண்டதாக தகவல்!

# அணிலுக்கே ஆப்பா!

இங்கே இருக்கும் படம் மிக பழமையானது என சொல்ல கடமைபட்டுள்ளோம்


மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - ராமதாஸ்

ஜான் ஆபிரஹாம் தயாரித்து நடித்துள்ள இந்திப்படம், இது இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்போரட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் வரும் 23 ஆம் தேதி தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடபடும் என அறிக்கை வெளியாகியிருந்தது, உங்கள் படத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான காட்சிகள் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதே என்ற கேள்விக்கு நாங்கள் விடுதலை புலிகளை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என்ற மழுப்பலான பதிலே படக்குழுவினரிடம் இருந்து வந்துள்ளது.

இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் இலங்கையில் எடுக்கபட்டும்,  இப்படம் எடுப்பதற்கான நிதி உதவி இலங்கை அரசால் மறைமுகமாக கொடுக்கப்படுள்ளது எனவும், இப்படம் இலங்கை அரசை நல்லவர்களாக காட்டும் ஆவண படம் போல் இருப்பதால் இதற்கு இலங்கை அதிபர் ராஜ பக்‌ஷே ஆதரவு அளித்திருப்பாதகவும் தெரிகிறது.

வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் காமென்வெல்த் மாநாடு இம்முறை இலங்கையில் நடக்க இருக்கிறது, அவ்வாறு நடக்கும் பட்சத்தில் காமென் வெல்த் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு இலங்கை இரண்டு வருடங்களுக்கு தலைமை தாங்கும் எனவும் தெரிகிறது. இது இலங்கை அரசின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் குற்றசாட்டை மறைக்க உதவலாம் என்பதால் தமிழர் தலைவர்கள் பலர் இம்மாநாடு இலங்கையில் நடக்கக்கூடாது எனவும், இலங்கையும் புறக்கணிக்க வேண்டும் எனவும் தெவித்து வருகின்றனர்.

கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாலும் ஒரு நாட்டின் விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் எடுக்கபட்ட படமான மெட்ராஸ் கஃபே படத்தை தடை விதிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸும் வேண்டுகோள் விடுத்துள்ளார்!


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சதிவேலையா?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட பல பிரிவுகள் செயல் பட்டு வருகின்றன, அவற்றில் ஒன்றாக 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி திட்டமும் ஒன்று.

பணியில் இருப்பவர் வேலை முடித்து திரும்பும் பொழுது ஒவ்வொரு பணியாளரும் வாயிற்காவலர்களால் பரிசோதிக்கபடுவது அங்கே இயல்பு, சில தினங்களுக்கு முன் சபீர் அலி என்பரிடம் நான் 5 பென் ட்ரைவ்களும், ஒரு டேடா கார்டும் இருப்பதை கண்டு அதை பறிமுதல் செய்து வைத்தனர்.

சில நாட்கள் கழித்து சபீர் அலி அதை திரும்ப கேட்க செல்லும் வரை அதை அவர்கள் பரிசோதிக்கவில்லை என தெரிகிறது, திரும்ப கேட்கும் பொழுது தான் பென் ட்ரைவை சோதித்திருக்கிறார்கள், அதில் பாவிணி திட்டம் முழுக்க படமெடுக்க பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த காவலாளிகள் அதை பாவிணி திட்ட குழு தலைவரிடம் தெரிவித்தனர், அது காவல்துறைக்கு அற்விக்கபட்டு சபீர் அலி கைது செய்யப்பட்டார், அவர் அந்த போட்டோக்களை எடுத்தது எதேனும் சதி வேலைக்காக இருக்குமோ, இதில் வேறெதும் அந்நிய சக்திகள் தொடர்புள்ளனவா என காவல் துறை விசாரித்து வருகிறது.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media