BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 29 June 2013

குமரி அனந்தன், வைகோ, ஸ்டாலின், பரிதி இன்றைய கலக்கல் அரசியல் கமெண்ட்டுகள்

1) நதிகளை தேசியமயமாக்க நடைபயணம் செல்ல தயார்: குமரி அனந்தன்

# நீங்க மட்டும் ஒத்தையில போனால் எப்படி? வைகோவையும் கூப்பிடுங்க வருவாரு, உங்களுக்கும் ஒரு பேச்சு துணைக்கு ஆகும்

2)இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதது; திமுக இயக்கம்தான் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது : ஸ்டாலின்

# குஷ்பு இடுப்ப கில்லுனத சொல்லுறாரோ

3)கோபாலபுரத்து கொள்ளையர்களின் பேச்சைக் கேட்டுத்தான் அம்மா அவர்களுக்கு எதிராக பேசினேன்..- அ.தி.மு.க.வில் இணைந்த பரிதி இளம் வழுதி.

# போலி என்கவுண்டர் ல ஈடுபடற பொலீஸ் சொல்ற கதையைவிட இது ரொம்ப வீக் கா இருக்கு
by Manushya Puthiran in FB

4) திமுக வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை - பரிதி இளம்வழுதி

# ஓ அதை தேடித்தான் அம்மா கட்சிக்கு போனிங்களா? 

திருநங்கைகளை அரசாங்கமே நம்பர் 9 என்று குறிப்பிடுவதா? கருணாநிதி கண்டனம்.

இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டு விட்டு ஆண் பெண் அல்லாத பாலின பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே திருநங்கைகளை 9 என்ற எண்ணைக் குறிப்பிட்டு தான் கிண்டல் செய்கிறார்கள், இப்போது அரசே எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக அறிக்கை அளித்த திமுக தலைவர் கருணாநிதி திருநங்கைகளை 9 என்ற குறியீட்டு எண்ணை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார், மேலும் அவரது ஆட்சி காலத்தில் ஆண் என்று குறிப்பிட M , பெண் என்று குறிப்பிட F , திருநங்கை என குறிப்பிட  T (Transgender) என்றும் பயன்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.

# கலக்கிட்டிங்க தலைவரே

# தலைவரே உங்க கட்சியில் சீட்டு கேட்ட கல்கி என்கிற திருநங்கைக்கு அடுத்த முறையாவது சீட்டு தருவிங்களா?

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்தார் விஜயகாந்த்

தேமுதிக எம்.எல்.ஏக்கள் 7 பேர் தொகுதி பிரச்சினைகளுக்காக முதல்வரை சந்தித்தோம் என்று கூறி ஜெயலலிதாவை சந்தித்
தனர், இதில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர்களான அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன் போன்றோரும் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு கட்சி கட்சியாக சீட்டுக்கு அலைந்த மாஃபா பாண்டியராஜனும்  அடக்கம்.  பின் இவர்கள் அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்க தொடங்கினர். ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு வாக்களிக்க வேண்டிய இவர்கள் வாக்குகள் அதிமுகவுக்கு முக்கியமே இல்லையென்றாலும் அதிமுகவுக்கே வாக்களித்தனர். இந்நிலையில் இவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் விஜயகாந்த்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.  - சுந்தர்ராஜன்,
பேராவூரணி  - எம்.எல்.ஏ. அருண்பாண்டியன்,
திட்டக்குடி எம்.எல்.ஏ.  - தமிழழகன்,
ராதாபுரம் எம்.எல்.ஏ.  - மைக்கேல் ராயப்பன்,
செங்கம் தொகுதி எம்.எல்.ஏ.  - சுரேஷ்குமார்
சேர்ந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.  - சாந்தி ராஜமாணிக்கம்,
விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ - மாஃபா பாண்டியராஜன்

இனி வயசுக்கு வந்தா என்ன? வரலைன்னா என்ன?

தர்மபுரி கலெக்டர் ஆர்.லில்லி மாற்றம், மதுரை கலெக்டரும் மாற்றம் சாதித்ததா கிரானைட் கிங்கர்கள்

தர்மபுரி கலெக்டர் ஆர்.லில்லி மாற்றம், மதுரை கலெக்டரும் மாற்றம் சாதித்ததா கிரானைட் கிங்கர்கள்

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டிற்கு செல்லும் முன் தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை, திருவண்ணாமலை மற்றும் தர்மபுரிக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

தர்மபுரியில் ஒரு சாதிக்கு பக்க சார்பாக செயல்படுகிறார் என்று பாமகவினரால் குற்றம் சாட்டப்பட்ட தர்மபுரி கலெக்டர் ஆர்.லில்லி தர்மபுரியிலிருந்து மாற்றப்பட்டது பாமகவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆர்.லில்லி தற்போது வணிகவரிகள் துறை இணை ஆணையராக பதவியேற்க உள்ளார். தர்மபுரி கலெக்டராக கே.விவேகானந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று மதுரையின் கலெக்டராக இருந்து கிரானைட் திருடர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய அன்சுல் மிஸ்ரா வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி ஏற்கிறார்கள், இவரை மாற்ற கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரானைட் கிங்கரர்கள் கடும் முயற்சி எடுத்தனர்.

Dharmapuri collector R.Lilli and Madurai collector Ansul mishra transferred from  their posts. PMK party cadres are happy about Lilli's transfer as PMK cadres criticise Collector lilli is supporting one caste for many occasions.

Ansul mishra had taken action against illegal Granite cutting.

தந்தி டிவியின் அச்சம் தவிர் நிகழ்ச்சியை தொகுக்கும் சர்ச்சை நாயகி குஷ்பு

தந்தி டிவியின் அச்சம் தவிர் நிகழ்ச்சியை தொகுக்கும் சர்ச்சை நாயகி குஷ்பு

மாறன்களின் ஆதிக்கம் மத்திய அரசில் தொலைத்தொடர்பு துறையில் இருந்து ஓய்ந்த பின் தென்னிந்தியாவெங்கும் சன் குழுமம் தவிர்த்த வேறு பல டிவிகள் பலம் பெற ஆரம்பித்தன. தமிழகத்தில் புதியதலைமுறை வெளிவந்தது தற்போது தந்தி டிவி கலக்கிக்கொண்டுள்ளது.

தந்தி டிவியில் ஏற்கனவே சீமான் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி பிரபலமடைந்துள்ள நிலையில் அச்சம் தவிர் என்றொரு நிகழ்ச்சியை சர்ச்சையின் நாயகி குஷ்பு நடத்துகிறார். ஜூலை 7ம் தேதியிலிருந்து ஞாயிறு காலை 11மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.

நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இது zee தமிழின் புகழ்பெற்ற சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போலவே இருக்கும் என தெரிகிறது.

தம்மை சுற்றி நிகழும் அநியாயங்களை பற்றி பேசப்போவதாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் குஷ்புவாகவும் இருக்கும் நிலையில் சும்மாவே கர்ப்பு மேட்டரில் ஆரம்பித்து பாலுறவு என சர்ச்சையை கிளப்பும் குஷ்புவுக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த சர்ச்சையையும் அதே சமயம் பெரிய விளம்பரத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஷ்பு பெரிய முற்போக்களாராகவும் தைரியசாலியாகவும் காண்பிக்கப்படும் அதே நேரத்தில் திமுக தலைவர் பதவி குறித்த கருத்துக்காக ஸ்டாலின் ஆதரவாளார்கள் செருப்பை கொண்டு எறிந்த போதும் அவர் வீட்டை தாக்கிய போதும் அச்சத்தை தவிர்க்காமல் பம்மினார்.

# அச்சம் தவிர், மு.க.ஸ்டாலின் தவிர்த்து மற்றவர்களிடம்

Acham thavir program in Thanthi TV host by Actress Kushboo

அடுத்த முறை அபு சலீமை விட மாட்டோம், சோட்டா ஷகீல் சவால்

இந்த முறை தப்பிவிட்டான், அடுத்த முறை அபு சலீமை விட மாட்டோம், சோட்டா ஷகீல் சவால்

இரு நாட்களுக்கு முன் தாதா அபுசலீம் மும்பை சிறையில் சுடப்பட்ட போதும் உயிர் பிழைத்துவிட்டான், இது தொடர்பாக ஒரு பத்திரிக்கைக்கு பேசிய சோட்டா ஷகீல் குறிப்பிட்டதாவது இம்முறை அபு சலீம் தப்பிவிட்டான், ஆனால் அடுத்த முறை விடமாட்டோம் என்றும் தாவூத் இப்ராஹிமுக்கு துரோகம் இழைத்துவிட்டு எதிரி கேங்கான சோட்டா ராஜனுடன் சேர்ந்துவிட்டான் அபுசலீம் என்றும் எதிரியின் நண்பனும் எங்களுக்கு எதிரியே என்றும் குறிப்பிட்டுள்ளான், இவன் மலேசியாவிலிருந்து செயல்படுவதாகவும் அங்கிருந்தே மும்பையை கண்ட்ரோல் செய்வதாகவும் கூறப்படுகிறது.

# இவனுங்களை மட்டும் புடிக்கவே முடியாதா இந்திய அரசால்?

Abu saleem can not escape from us said by chotta shakeel

இலங்கைக்கு ராணுவப்பயிற்சி அளிக்க பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது.

கொழும்புக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள பாக்கிஸ்தான் இராணுவ தலைவர் அறிவித்துள்ளார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் பயிற்சி அளிக்க கூடாது என்று பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் பாக்கிஸ்தானின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி சில ஊடகங்கள் பாருங்கள் நாம் பயிற்சி அளிக்கவில்லை என்றால் நம் எதிரி பாக்கிஸ்தான் அளிக்கிறது என்று மக்களை குழப்பி வருகின்றன. இந்த ஊடகங்களுக்கு எதிரி எப்படியும் நம் வீட்டை கொளுத்திவிடுவான், அதனால் நாமே நம் வீட்டை கொளுத்திவிடலாம் என்று கூட இவர்கள் ஆலோசனை தந்தாலும் தருவார்கள்.

# இவர்களுக்கு பாக்கிஸ்தான் எதிரி நாடு, தமிழ் உணர்வாளர்களுக்கோ இலங்கை எதிரி நாடு.

Pakistan ready to provide military training for srilankan army

அன்னக்கொடி - FIR

அன்னக்கொடி - FIR

லேட்டஸ்டாக அரசியல் உலகில் எரிந்து கொண்டிருக்கும் அதே கதைதான், காதலுக்கு சாதியில்லை, செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆடு மேய்க்கும் கதாநாயகன் நாயகியை காதலிக்கிறார், இது தெரிந்து வில்லன் சதி செய்து ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நாயகியை திருமணம் செய்து கொள்கிறார், பிறகு தான் தெரியவருகிறது சேடிஸ்ட் வில்லன் ஒரு "கூவாத சேவல்" என்று, வில்லனை விட்டு வெளியேறிய ஹீரோவை சேர்ந்தாரா என்பது தான் கதை.

இந்த படத்தை எடுத்தது பாரதிராஜா தானா?  இயக்கம், திரைக்கதை, எடிட்டிங் என அத்தனையும் சொதப்பல். இந்த படத்தை எடுத்ததற்கு எடுக்காமலே இருந்திருக்கலாம்.

மதிப்பெண்கள் 2.5/5.0

# இது சூது கவ்வும் காலம், உங்களுக்கு கலைஞர் டிவி சீரியல் ஸ்லாட் எதுவும் கிடைக்குதா பாருங்க பாரதிராஜா சார்.

அதிமுகவில் திமுகவின் பரிதி இளம்வழுதி மற்றும் பாமக பொன்னுசாமி

திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார்

சில நாட்களுக்கு முன்பு தான் மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்திருந்தார், தற்பொழுது தமிழகத்தின் மூத்த கட்சியான திமுகவில் இருந்து ஒருவர் அதிமுகவில் இணைந்தது திமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

திமுகவின் குடும்ப அரசியலே காரணம் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

திமுக வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்ற பரிதி இளம்வழுதி அதைத்தேடி அதிமுகவுக்கு சென்றிருப்பது உச்சகட்ட நகைச்சுவை.

இது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி கருணாநிதி கடந்த காலத்தில் பருதி அவர்கள் சட்ட மன்றத்தில் தனியாக நின்று எதிர் கட்சிகளை எதிர்கொண்டதை நினைப்போம்; இதை மறப்போம் என்றார்.

இதே போன்று இன்று பாமகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுசாமியும் அதிமுகவில் இணைந்தார், இவர் சமீபகாலமாக பாமகவில் இருந்து ஒதுங்கி இருந்தார். மேலும் இவர் தாழ்த்தபட்ட மக்களிடம் விரோதபோக்கு காட்டுவதால் பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

# கடைசியில் திமுகவுக்கும் குடும்பம் மட்டும் தான் மிஞ்சும் போலயே

அணுஉலை ஆதரவு அரசியல் கட்சிகள் ஊருக்குள் வராதீர் - இடிந்தகரை மக்கள்

"அணுஉலை ஆதரவு அரசியல் கட்சிகள் ஊருக்குள் வராதீர் - இடிந்தகரை கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை"

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கோ, அல்லது அவர்களின் ஆதரவோடு போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ நாங்கள் வாக்களிக்க மாட்டோம்; தயவுசெய்து ஆதரவு கேட்டு ஊருக்குள் வராதீர்.

- இடிந்தகரை மக்கள்

# நீண்ட நெடிய அறவழிப்போராட்டத்தை மேற்கொள்ளும் இம்மக்களை வாழ்த்துவோம்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media