BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 9 September 2014

காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை அபூர்வா போஸ்

திருவனந்தபுரம்: காஷ்மீர் மாநில மழை வெள்ளத்தில் மலையாள நடிகை அபூர்வா போஸ் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பேய் மழையால் அங்கு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இந்நிலையில் நடிகை அபூர்வா போஸ் உட்பட 150 மலையாளிகள் காஷ்மீர் சுற்றுலா சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அபூர்வா போஸ். இவர் 5 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் உள்பட 11 பேர் காஷ்மீரில் மலை ஏறும் பயி்ற்சிக்காக காஷ்மீர் சென்றனர்.
இந்த பயிற்சியை முடித்து விட்டு திரும்பிய இவர்கள் ஸ்ரீநகரில் உள்ள காம்ரேடுஇன் என்ற ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த ஓட்டலை வெள்ளம் சூழ்ந்தது. மாடி வரை வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் மேல் தளத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை வரை அபூர்வா போஸ் கொச்சியில் உள்ள தனது குடும்பத்திருடன் போனில் பேசியுள்ளார். அதற்கு பின்னர் அவர் உள்பட யாரும் வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையை காஷ்மீரில் சுற்றுலா சென்ற மலையாளிகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உம்மன்சாண்டி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 150க்கும் மேற்பட்ட மலையாளிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது 5 ஓட்டல்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் உடனடியாக அவர்கள் அங்கிருந்து வர முடியாத நிலை உள்ளது. மலையாளிகளை மீட்க சிறப்பு விமானங்களை அனுப்புமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


போர் அடித்தால் செக்ஸ், பெண்கள் வேறு எதற்காகவெல்லாம் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள்?
http://www.satrumun.net/2014/09/boredom-and-pity-leads-to-girls-to-have.html

40 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டார் என காஜல் அகர்வால் மீது உதயநிதி ஸ்டாலின் புகார்
http://www.satrumun.net/2014/09/why-kajal-agarwal-did-not-return.html

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக‌ பிரபல நடிகை திவ்யஸ்ரீ கைது. மீண்டும் பரபரப்பு
http://www.satrumun.net/2014/09/actress-divya-sri-arrested-in.html

தோனியின் சுயநலத்தால் கடைசி ஓவரில் தோற்ற இந்தியா - 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி
http://www.satrumun.net/2014/09/india-lost-t20-match-against-england-by.html

6 பவுன் நகைகளை திருட திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஏமாற்றிய மாப்பிள்ளை மற்றும் குடும்பம் கைது
http://www.satrumun.net/2014/09/man-skips-own-wedding-held-for-cheating.html

வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார் மோடி - அமெரிக்கா அறிவிப்பு
http://www.satrumun.net/2014/09/pm-narendra-modi-to-meet-obama-on-sept.html

சீனாவுக்கு(one-China policy) எதிரான கடின நிலைப்பாடு - சுஷ்மா சுவராஜ்
http://www.satrumun.net/2014/09/india-talks-tough-on-one-china-policy.html

தினமலர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மானநட்ட வழக்கு தொடர்ந்தார்
http://www.satrumun.net/2014/09/jayalalithaa-files-defamation-case.html

மேயர் வேட்பாளர் உட்பட பல பாஜக வேட்பாளர்கள் பலர் அதிமுகவுக்கு தாவல், தமிழிசை செளந்தர்ராஜன் கண்டனம்
http://www.satrumun.net/2014/09/many-bjp-local-body-election-candidates.html

மயில் ஆர்ப்பரிக்கும் ஊர், போர்கள் நடத்த ஊர், சென்னை பற்றி சில செய்திகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_52.html

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கண்டறிந்த மின்சாரம்
http://www.satrumun.net/2014/09/3500.html

சுனாமியால் வெளிவந்த பழங்கால‌ தமிழரின் ரகசியம், மாமல்லபுர‌ம் அருகில் உள்ள இந்த இடத்தை தெரிந்து கொள்ளுங்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_53.html

குழந்தைகளின் அறிவு வளர பகுதி -2

வளைகாப்பு ஏன் அவசியம்? வளைகாப்பினால் ஏற்படும் நன்மைகள், உளவியல் சிந்தனைகள்

கூகுள் நிறுவனம் தற்போது அதன் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம்

போர் அடித்தால் செக்ஸ், பெண்கள் வேறு எதற்காகவெல்லாம் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு முடிவுகள்


ஆண்கள் செக்ஸ் உறவு கொள்வது ஒரே ஒரு காரணத்திற்காகதான், செக்ஸ்க்காக தான் செக்ஸ் உறவு கொள்கிறார்கள், ஆனால் பெண்கள் செக்ஸ், ரொமான்ஸ் தாண்டி வேறு பல காரணங்களுக்காகவும் செக்ஸ் உறவு கொள்கிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

செக்ஸ் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரும் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, பெண்கள் செக்ஸ் உறவுகொள்வதற்கு 200க்கும் மேற்பட்ட காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றில் சில மிகவும் ஆச்சரியமளிப்பது

 ரொம்ப போர் அடிக்கின்றது என்ற காரணத்திற்காக பெண்கள் செக்ஸ் உறவு கொள்கிறார்களாம்.

ஒற்றைத் தலைவலி, மைக்ரேன் தலைவலிகளை போக்கிக் கொள்ள செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்களாம்

சுமார் 84 சதவீத பெண்கள் வீட்டு வேலகள், மனதை அழுத்தும் ஸ்ட்ரெஸ்சில் இருந்து விடுபட செக்ஸ் உறவுகொள்கிறார்களாம்.

கவர்ச்சி மற்றும் உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக குறைவானவர்களே என்றும் கண்டுபிடித்துள்ளது இந்த ஆய்வு.

ஆண்கள் மீது இரக்கப்பட்டு அந்த ஆண்களுடன் பெண்கள் செக்ஸ் உறவு கொள்கிறார்கள்.

ஆண்களுக்கு பெண்கள் தர விரும்பும் முதல் பரிசு செக்ஸ் தானாம், தனக்காக ஒரு ஆண் அதிக சிரமப்பட்டால், அதிக செலவு செய்தால், ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால் அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதன்மையான  பரிசு செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

சுப்பிரமணியசாமி மீது மேலும் ஒரு வழக்கு

சுப்பிரமணிய சாமி தமிழ் நாளிதழ் ஒன்றில் அளித்த பேட்டி தொடர்பாக அவர் மீது முதல்– அமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கை ஜெயலலிதா தொடர்ந்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர தலைமை குற்றவியல் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது:–

ஆங்கில பத்திரிகை ஒன்றில் கடந்த 4–ந்தேதி சுப்பிரமணிய சாமி பேட்டி வெளியாகியுள்ளது. அதில், தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ராணுவம் பிடித்து செல்வது தொடர்பாக பேசிய சுப்பிரமணிய சாமி, தமிழக அரசுக்கும், முதல்– அமைச்சருக்கும் பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் விதமாக சில கருத்துக்களை கூறியுள்ளார். எனவே, அவதூறு கருத்துக்களை கூறிய சுப்பிரமணிய சாமி, இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

40 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டார் என காஜல் அகர்வால் மீது உதயநிதி ஸ்டாலின் புகார்


உதயநிதி ஸ்டாலி தற்போது நண்பேன்டா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்து வருகிறார், அதில் முதலில் நடிப்பதாக நடிகை காஜல் அகர்வால் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது, பிறகு அந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நயன்தாரா நடித்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு அட்வான்ஸ் ஆக கொடுத்த ரூபாய் 40 இலட்சத்தை திரும்ப கேட்டுள்ளார் என்றும் அதை அடுத்த படங்களில் நடித்து கொடுக்கும் போது கழித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார், ஆனால் இதற்கு ஒத்துக்கொள்ளாத உதயநிதி ஸ்டாலின் காஜல் அகர்வாலிடமிருந்து ரூபாய் 40 இலட்சத்தை திரும்ப பெற்றுத்தருமாறு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களில் புகார் கூறியுள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்.

குழந்தைகளின் அறிவு வளர பகுதி -2

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின், ஊடகம் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் துணை ஆய்வாளர் Marie Evans Schmidt அம்மையார் இந்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது 800 இளைஞர்களை பற்றி அவர் ஆராய்ந்தார். முதல் மூன்று ஆண்டுகால மழலைப்பருவத்தில் அவர்களின் நேரம் செலவிடப்பட்ட விபரங்களை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். குறிப்பாக தொலைக்காட்சியை பார்ப்பதில் அல்லது குறுந்தகடு மூலம் படங்கள் பார்ப்பதில் அவர்கள் செலவிட்ட நேர அளவையும், அவர்களின் மொழி மற்றும் உடலளவில் இயங்கி செயல்படும் திறன்களை பற்றியும் பதிவு செய்தார். குழந்தைகள் ஓடியாடுவது, மண்ணில் விளையாடி வடிவங்கள் செய்து மகிழ்வது போன்றவற்றை தான் உடலளவில் இயங்கி செய்யும் திறன்கள் என்கிறோம்.

Marie Evans அம்மையார் மேற்கொண்ட ஆய்வுபடி, பொதுவாக அந்த இளைஞர்கள் இரண்டு வயது வரையான, மழலைப்பருவத்தில் நாளுக்கு 1.2 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிட்டிருந்தனர். இந்த தகவல்களை ஆராய்ந்தபோது, தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டவர்கள் மூன்று வயதாகியபோது, மொழி மற்றும் உடலளவில் இயங்கி செயல்படும் இதர திறன்களில் மோசமாக இருந்ததை Marie Evans அறியவந்தார். இந்த கட்டத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்ததால் எதிர்மறை பாதிப்பு அடைந்த குழந்தைகள் மொழி மற்றும் இதர திறன்களில் மோசமாக இருந்தனர் என்று எண்ணினர்.

பின்னர், குழந்தைகளை பாதிக்கும் பிற காரணிகளை பற்றி Marie Evans சும் அவரது குழுவினரும் ஆய்வு செய்தனர். பெற்றோரின் கல்வி நிலை மற்றும் வீட்டு வருமானம் ஆகிய பல காரணிகளை ஆராயந்தனர். அப்போது தான் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அறிவு வளர்ச்சிக்கும் இடையில் தொடர்பில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் செல்வாக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் பெற்றோரின் கல்வி நிலை மற்றும் பொருளாதாரா நிலைகள் தான் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது. ஆய்வின் தொடக்கத்தில் தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியோடு தொடர்புடையதாக தோன்றியது. ஆனால் வீட்டிலுள்ள பிற சுற்றுச்சூழல்களால் ஏற்பட்ட விளைவே அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்க செய்துள்ளது என்பதை பிந்தைய ஆய்வின் போது தெரிந்து கொண்டனர். 
                                                           தொடரும் .......

வளைகாப்பில் உளவியல் சிந்தனை

பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக  இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கினர் .

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்கள் ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு நம் முனோர்கள் வளைகாப்பு  மூலம் கர்ப்பிணிகளின் உளவியலை நன்கு அறிந்து இந்த நிகழ்வை நடத்தினர் .

இந்த இடத்தை யாருக்கு தெரியும் ?

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன் குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். 


தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. 

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது." சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது .

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம், என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்

கூகுள் நிறுவனம் தற்போது அதன் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம்

Google நிறுவனம் தற்போது அதன் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள விபரங்கள் பின்வருமாறு.
● Senior Software Engineers ===> $140,000 (INR 84,53,200)
● Research Scientists ===> $130,000 (INR 78,49,400)
● Product Managers ===> $120,000 (INR 72,45,600)
● Hardware Research Engineers ===> $118,000 (INR 71,24,840)
● Software Research Engineers ===> $117,000 (INR 70,64,460)
● Product Marketing Managers ===> $107,000 (INR 64,60,660)
● Financial Analysts ===> $105,000 (INR 63,39,900)
● Database Administrator ===> $95,000 (INR 57,36,100)
● Accounts Manager ===> $90,000 (INR 54,34,200)
● Software Engineer Interns ===> $82,000 (INR 49,51,160)
INR = Indian Rupees 

சற்றுமுன் செய்திகள் - Satrumun News Morning

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக‌ பிரபல நடிகை திவ்யஸ்ரீ கைது. மீண்டும் பரபரப்பு
http://www.satrumun.net/2014/09/actress-divya-sri-arrested-in.html

தோனியின் சுயநலத்தால் கடைசி ஓவரில் தோற்ற இந்தியா - 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி
http://www.satrumun.net/2014/09/india-lost-t20-match-against-england-by.html

6 பவுன் நகைகளை திருட திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஏமாற்றிய மாப்பிள்ளை மற்றும் குடும்பம் கைது
http://www.satrumun.net/2014/09/man-skips-own-wedding-held-for-cheating.html

வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார் மோடி - அமெரிக்கா அறிவிப்பு
http://www.satrumun.net/2014/09/pm-narendra-modi-to-meet-obama-on-sept.html

சீனாவுக்கு(one-China policy) எதிரான கடின நிலைப்பாடு - சுஷ்மா சுவராஜ்
http://www.satrumun.net/2014/09/india-talks-tough-on-one-china-policy.html

தினமலர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மானநட்ட வழக்கு தொடர்ந்தார்
http://www.satrumun.net/2014/09/jayalalithaa-files-defamation-case.html

மேயர் வேட்பாளர் உட்பட பல பாஜக வேட்பாளர்கள் பலர் அதிமுகவுக்கு தாவல், தமிழிசை செளந்தர்ராஜன் கண்டனம்
http://www.satrumun.net/2014/09/many-bjp-local-body-election-candidates.html

மயில் ஆர்ப்பரிக்கும் ஊர், போர்கள் நடத்த ஊர், சென்னை பற்றி சில செய்திகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_52.html

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கண்டறிந்த மின்சாரம்
http://www.satrumun.net/2014/09/3500.html

கடைசி ஓவரில் தோனியின் சுயநலத்தால் தோற்ற இந்தியா - 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி


இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையான நிலையில் இந்தியா 13 ரன்கள் மட்டுமே எடுக்க எடுத்தது. எளிதாக கிடைக்க வேண்டிய இரண்டு ரன்களை தோனி எடுக்காமல் தானே ஆடி வெற்றி பெற நினைத்ததே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி ஆடியதில் கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராயுடும், தோனியும் மட்டையடித்துக்கொண்டிருந்தனர்,
19 வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது, கடைசி ஓவரில் 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி 20 வது ஓவரை சந்தித்தார். முதல் பந்திலேயே தோனி சிக்சர் அடித்தார், 5 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்த இரண்டு ரன்கள் எடுத்தார் தோனி,  இதை அடுத்து 4 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது, அடுத்த பந்தில் தோனி அடித்ததில் ஒரு ரன் வந்திருக்க வேண்டியது, ராயுடு அடுத்த முனையில் இருந்து ஓடிவர முயன்ற போது தோனி ராயுடுவை ரன் ஓட வேண்டாம் என நிறுத்தினார்.

4வது பந்தை பவுண்டரிக்கு அடித்தார் தோனி, கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை அடித்தார் தோனி, இந்த பந்திலும் எளிதாக ஒரு ரன் எடுக்கலாம், இதிலும் பாதி தூரம் ஓடி வந்த ராயுடுவை தடுத்து வேண்டாம் என்று அனுப்பினார் தோனி. கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தோனியால் 1 ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த ஒருநாள் தொடரில் ராயுடு, சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார், கடைசி ஓவரில் அவரை ஆட விடாமல் தோனியே அனைத்து பந்துகளையும் எதிர்கொண்டு இரண்டு ரன்கள் எடுக்கும் வாய்ப்பையும் இழந்து மேட்சையும் தோற்றது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது

6 பவுன் நகைகளை திருட திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஏமாற்றிய மாப்பிள்ளை மற்றும் குடும்பம் கைது

பத்திரிக்கை அடிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு திருமண மண்டபத்திற்கு திருமணம் செய்துகொள்ள பெண் குடும்பத்தினருடன் வந்த போது அவர்கள் திருமணத்திற்கு பதில் வேறொரு திருமணம் அங்கே நடந்தால் எப்படி இருக்கும்?

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ்(25) விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கலியன் என்பவரது மகளை திருமணம் செய்து கொள்வதாக தெரிந்தவர்கள் மூலம் அணுகியுள்ளார்கள், விக்னேஷ் 10வது பெயிலானவர், மணப்பெண் நர்சாக பணிபுரிபவர், வியாசர் பாடியில் ஏதோ ஒருவரின் வீட்டை தன் வீடு என்று காண்பித்த விக்னேஷ் குடும்பத்தினர் மண்டபம் ஏற்பாடு செய்ததாக கூறினர், பத்திரிக்கை எல்லாம் அடிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்காக மண்டபம் சென்ற பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி, அங்கே வேறொரு திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

மாப்பிள்ளை விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டால் மொபைல் போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது, காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து விக்னேஷ் மற்றும் அவரது தாய் காவேரி கைது செய்யப்பட்டனர், அவரது தந்தையை காவல்துறை தேடிவருகிறது.

விசாரணையில் பெண்வீட்டார் வரதட்சணையாக தருவதாக கூறியிருந்த 6 பவுன் நகைகளை திருமணத்திற்கு முன்பே வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் தெரியாமல் ஓடிவிட குடும்பமே திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக‌ பிரபல நடிகை திவ்யஸ்ரீ கைது. மீண்டும் பரபரப்பு


ஆந்திராவில் கடந்த வாரம் பாலியல் தொழில் ஈடுபட்ட தேசிய விருது வாங்கியபிரபல தெலுங்கு நடிகை  ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டார், அப்போதே அந்த நடிகை இந்த தொழிலில் மேலும் பல நடிகைகள் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின, இந்நிலையில்  மற்றொரு பிரபல நடிகையும்  இரண்டு துணை நடிகர்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சென்ற வாரம் கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசுவிடம் கிடைத்த தகவல்களை வைத்து போலீஸார் கைது செய்வதாக தகவல்கள் வெளிவருகின்றன.

கைது செய்யப்பட்ட தெலுங்கு நடிகை திவ்யஸ்ரீ "பிடெக் பாபு" ( B.Tech Babu) என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அந்த வீட்டை முற்றுகையிட்ட போலீஸார் அந்த வீட்டின் உள்ளே அரைகுறை உடையுடன் இருந்த நடிகை திவ்யஸ்ரீ மற்றும் அவருடன் இருந்த இரண்டு துணை நடிகர்களை கைது செய்தனர்.

ஆந்திராவில் விபசாரம் செய்யும் நடிகைகள், நடிகர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், இதில் ஈடுபடும் நட்சத்திரங்கள் எவ்வளவு பெரிய நடிகையாகவும் இருந்தாலும் கைது செய்யும்படியும் அரசின் மேல்மட்டத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கைதுகளை எதிர்பார்க்கலாமோ?

நடிகைகளை கைது செய்தால் மட்டும் போதுமா? கூட இருக்கும் தொழில் அதிபர்களின் முகத்தையும் காட்டுங்களேன்

வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார் மோடி - அமெரிக்கா அறிவிப்பு


இந்திய பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 29,30 தேதிகளில் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஒபாமாவை சந்திக்கிறார் என அமெரிக்கா அறிவித்துள்ளது, பல ஆண்டுகளாக அமெரிக்கா செல்ல மோடிக்கு விசா வழங்கப்படாத நிலையில் இந்திய பிரதமராக மோடி ஆனவுடன் வேறு வழியில்லாமல் அமெரிக்கா விசா வழங்குகிறது.

ஒபாமா மோடி சந்திப்பில் இந்திய அமெரிக்க நல்லுறவு மேம்பட திட்டங்கள் வகுக்கப்படும் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு(one-China policy) எதிரான கடின நிலைப்பாடு - சுஷ்மா சுவராஜ்

இந்த மாத இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்(Xi Jinping) இந்தியா வருகிறார், இந்நிலையில் இந்தியா சீனாவின் ஒற்றை சீன கொள்கையை ஏற்க வேண்டுமானால் சீனா இந்தியாவின் ஒற்றை இந்தியா கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.

தைவான் மற்றும் திபெத் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கவலை தெரிவிக்கும் சீனா அருணாச்சலபிரதேசம் குறித்த நமது உணர்வுகளை ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார், ஒற்றை சீன கொள்கை("one-China")யை இந்தியா கடந்த 2010ல் இருந்து ஏற்க மறுத்து வருகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media