BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 February 2014

ஜெயலலிதா பிரதமராவது என்ற கேள்விக்கே இடம் இருக்காது!- சோ

தற்போதைய அரசியல் நிலவரங்களை பற்றி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சோ,  ஒருவேளை, பா.ஜ.க-வால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலோ, மற்ற கட்சிகள் பா.ஜ.க-வை ஆதரிக்க முன்வராவிட்டாலோ அந்தக் கட்சி வேறு யாரையாவது ஆதரிப்பதைவிட, முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என்று கூறினார். இதுப்பற்றி மேலும் பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கே தேவை இருக்காது என்றே நினைக்கிறேன். பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மை பலத்தை நெருங்கிவிடும். சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியும்." என்று அவர் கருத்து தெரிவித்தார்.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான கட்சியாக இல்லை என்ற போதிலும், மோடி அலையைத் தமிழகத்தில் உணர முடிகிறது என்று சோ கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி குறித்து பேசுகையில், டெல்லியைத் தவிர்த்து, ஏனைய இடங்களில் அக்கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியை மக்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை என்றும் சோ தெரிவித்தார்.

கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குக: முத்கல் கமிஷன்


கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐபிஎல் அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டது. இது குறித்து, உச்ச நீதிமன்றம் நியமித்த, முத்கல் தலைமையிலான‌ விசாரணை குழு, பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையே என்று தெரிவித்தது.

மேலும், கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்திடம் முத்கல் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

#  கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 'லைக்' போடுங்கள்!
#  கிரிக்கெட் சூதாட்டம் தவறு என்று நினைப்பவர்கள், உங்கள் கருத்தை, கமென்ட் செய்யுங்கள்!

மதுரை அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது

மதுரை புறநகர் பகுதியான உத்தங்குடியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில்,  சற்று நேரத்திற்கு முன் டைம்பாம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.  உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு,  வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

பின்னர் அந்த வெடிகுண்டை புறநகர் பகுதிக்கு கொண்டு சென்று செயலிழக்கச் செய்வதற்கு நிபுணர்கள் குழு முடிவு செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூரில் மாதா சிலை கண் திறந்ததா?!

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள‌ லூர்துமாதா தேவாலயத்தில் 114–ம் ஆண்டு பெருவிழா மற்றும் 67–வது ஆண்டு தேசிய திருப்பயண விழா கடந்த 6–ந்தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற‌ 5–ம் நாள் திருவிழாவில்,  கோவிலின் இடதுபுறம் கண்ணாடி பேழையில் உள்ள மாதா சிலை, காலையில் கண் திறந்து சிமிட்டியதாக சிலர் கூறினார்கள். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியவுடன், இந்த அதிசயத்தை காண அப்பகுதி மக்கள் தேவாலயத்தில் திரண்டனர்.

மாதா கண் திறந்து பார்த்ததை கண்டு சிலிர்த்து போனதாக சிலர் கூறினார்கள். திருவிழாவையொட்டி சிலையும், பேழையின் கண்ணாடியும் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மாதா சிலை புதியதுபோல் பளிச்சென்று தெரிந்தது. இதனை திடீர் என பார்த்தவர்கள் மாதா கண் திறந்தது போன்று உணர்ந்திருப்பார்கள் என்று சிலர் கூறினர்.

பங்கு சந்தையில் ரிலையன்ஸ் சரிவு, முகேஷ் அம்பானி மீது அர்விந்த் கெஜ்ரிவால் அரசின் வழக்கு எதிரொலி

பங்கு சந்தையில் ரிலையன்ஸ் சரிவு, ரிலையன்ஸ் கோட்டையின் முதல் செங்கல்லை உருவிய அர்விந்த் கெஜ்ரிவால்.

தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் நேற்று ரூ.4.7 கோடி மதிப்பில் 13 கிலோ தங்கத்தால் ஆன கவசங்களை முதல்வர் ஜெயலலிதா அணிவித்தார். இதனை பொதுமக்கள் பார்வைக்காக 10 தினங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தேவரின் தங்கக் கவசமிடப்பட்ட சிலைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தேவர் தங்கக் கவசமிட்ட சிலை அருகிலும், மற்ற இரண்டு போலீசார் நினைவிட அறைக்கு வெளி வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

10 நாள்கள் கழித்து கமுதியில் உள்ள வங்கி ஒன்றில் சிறப்பு பாதுகாப்பு பெட்டகம் அமைத்து, அதில் தங்க கவசங்கள் வைத்து பாதுகாக்கப்படும் என தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

48 வயது பெண் கற்பழிக்கப்பட்டு, கற்களால் அடிக்கப்பட்டு கொலை

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது ஷுகர்தல் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்தன. அவரை அடித்து கொலை செய்வதற்கு முன்பு, யாரோ பாலியல் பலாத்காரம் செய்து அதன் பிறகு கல்லால் அடித்துக் கொன்றிருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகின்றனர்.

போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்று: அமெரிக்க விசா மோடிக்கு மறுப்பு, இன்று: மோடியை சந்திக்க அமெரிக்க தூதர் விருப்பம்

குஜராத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை காரணம் காட்டி, நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வருகிறது. மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்ட பிறகும், தனது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

சமீப காலமாக, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  வருகிறார். அவர் பேசும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவரது பேச்சை ஆங்கில டி.வி. சேனல்கள் தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் மோடியின் செல்வாக்கு அதிகரித்து வருவது போல் இருக்கும் நிலையில், அவர் இந்தியாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவே பலரும் நம்புகின்றனர்.

இந்நிலையில், மோடியை நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து, அதற்கான அனுமதியை எதிர்பார்த்து இந்தியாவுக்கான அமெரிக்க உயர் தூதர் நான்சி பொவெல் தூது அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர், ‘கடந்த நவம்பர் மாதம் முதல் இந்திய-அமெரிக்க நல்லுறவை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோருடனான தொடர்புகளை பெருக்கிக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு கட்டமாக மோடி-பொவெல் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’ என்று தெரிவித்தார்.

தனது 90 வயது கணவருக்கும், 50வயது நர்சுக்கும் தொடர்பு, விவாகரத்து கேட்கும் 84 வயது மனைவி



                                             

தனது 90 வயது கணவர் அவருடைய 50 வயது நர்சுடன் தவறான தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறி விவாகரத்து கோரியுள்ளார் போலந்து நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான வோஜ்சீக்கின் மனைவி பார்பரா.

போலந்தின் ராணுவ சர்வாதிகாரியான வோஜ்சீக் என்பவருக்கு தற்போது 90 வயதாகிறது. வோஜ்சீக்கைக் கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப் பட்டுள்ள நர்ஸ் டோராடா (வயது 50). இவர்கள் இருவரும், போர்வைக்குள் செக்ஸ் வைத்து கொண்டதை, தான் பார்த்ததாக கூறி, விவாகரத்து கேட்டுள்ளார், வோஜ்சீக்கின் மனைவி பார்பரா.

நர்ஸ் டோராடா செய்தது மிகவும் அருவெறுப்பானது. அவர் தனது வறுமையை மிகைப்படுத்தி எனது கணவரின் ஓய்வு ஊதியத்தை அபகரித்து உள்ளார், எனவும் பார்பரா குற்றம் சாட்டியுள்ளார்.

சிங்கப்பூர் கலவரம்: தமிழருக்கு 15 வார சிறை

சிங்கப்பூரில், லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் சின்னப்பா விஜயரகுநாத பூபதி என்ற 32 வயது நபருக்கு 15 வார சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் மீது முன்னதாக, வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குப் போடப்பட்டிருந்தது. அந்த பிரிவில் விசாரணை நடந்திருந்தால் அவருக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், சவுக்கடியும் கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கும், கலவரத்திற்கும் மிகப் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்பதால் சட்டப் பிரிவு சாதாரணமானதாக மாற்றப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லிட்டில் இந்தியா பகுதியில் டிசம்பர் 8ம் தேதி பெரும் மோதல் வெடித்தது. ஒரு விபத்தைத் தொடர்ந்து நடந்த மோதலால் பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து இந்தியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 25 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் தற்போது முதல் தீர்ப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media