BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 11 August 2013

திருப்பதிக்கு 2 நாட்கள் வராதீர்கள் - திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் 2 நாள் வராதீர்கள் - திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு, தெலுங்கானா பந்த், ராமதாஸ் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பெரும் பக்தர்கள் கூட்டம் கூடியிருப்பதாலும், அவர்கள் நீண்டநேரம் வரிசையில்  காத்திருப்பதாலும் அடுத்த 2 நாட்களுக்கு திருப்பதி வருவதை தவிர்க்கலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை தனி தெலங்கானாவுக்கு எதிராக போராட்டம் நடப்பதாலும் எச்சரிக்கையாக திருப்பதி பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து பிரித்து ஆந்திராவில் இணைக்கப்பட்ட சித்தூர், நகரி, காளஹஸ்தி, திருப்பதி போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்குமாறு டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். இந்த கோரிக்கை வலுவாகும் சீமந்திரா, தெலுங்கானா பிரச்சினையில் தற்போது அமுங்கி கிடக்கும் இந்த கோரிக்கை பெரிதானால் அது மாநில உறவுகளிடையே சிக்கல் ஏற்படுத்தும். அதே சமயம் ஆந்திராவிடம் தமிழகம் இழந்த பகுதிகளை மீட்க கிடைத்த ஒரு வாய்ப்பு தான் இது என்பதையும் மறுப்பதற்கில்லை.

மானாட மயிலாட பார்த்தார் கருணாநிதி - ஜெயலலிதா கடும் தாக்கு

முதல்வர் ஜெயலலிதா தலைநகரில் இல்லாமல் கொடநாட்டில் முகாமிட்டிருப்பது குறித்து கேள்வி-பதில் பகுதியில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதே என்று விமர்சித்திருந்தார் கருணாநிதி, இதற்கு நீண்ட  அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா அதில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது, தனக்குத் தானே பாராட்டு விழாக்களை நடத்திக் கொள்வது, திரைப்படங்களை பார்த்து ரசிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, சினிமா கலைஞர்களை வைத்து தனக்குப் பாராட்டு விழா நடத்திக் கொள்வது, திரைப்படங்களுக்கு கதை எழுதுகிறேன் என்று சொல்லி பணம் சம்பாதிப்பது, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவது, மானாட, மயிலாட நிகழ்ச்சியை கண்டு களிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கினார். அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது. இது நாடறிந்த உண்மை என்று கூறியுள்ளார்.

மேலும் ஒக்கனேக்கலில் வெள்ளத்தில் சிக்கிய நால்வர் மீட்கப்பட்டது, தர்மபுரி இளவரசன் தற்கொலைக்கு பிறகு சாதி மோதல் ஏற்படாத வகையில் தடுத்தது என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டு இதெல்லாம் கொடநாட்டில் இருக்கும் போது செய்தது தான் என்றும் தலைநகரிலேயே எப்பொழுதும் முதல்வர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல. தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்தாலும், மக்கள் நலனுக்கான துரித நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியம்

தற்போது ஈமெயில், ஃபேக்ஸ், மொபைல் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், வீடியோ கான்ஃபிரன்சிங் மூலமாகவே உரையாடுகின்ற வசதி இருக்கின்ற சூழ்நிலையில், கற்கால மனிதரைப் போல் கருணாநிதி அறிக்கை விடுவது அறியாமையின் வெளிப்பாடு என்றும் விமர்சித்தார்.

# தலைவா படம் ரிலீஸ் ஆகாமல் ஆப்பு வைத்ததை லிஸ்ட்டில் சொல்லாமல் விட்டுட்டிங்களே மேடம்

5 வீரர்களை கொன்ற பின் கடந்த 48 மணி நேரத்தில் மூன்று முறை போர்நிறுத்தத்தை மீறிய பாக்கிஸ்தான்.

5 வீரர்களை கொன்ற பின் கடந்த 48 மணி நேரத்தில் மூன்று முறை போர்நிறுத்தத்தை மீறிய பாக்கிஸ்தான்.

கடந்த வாரம் அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்திய பாக்கிஸ்தான் ராணுவம் 5 இந்திய வீரர்களை கொன்றது, இதை தொடர்ந்து பதட்டமான நிலை எல்லையில் நிலவுகிறது இந்நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் 3 முறை பாக்கிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது,

காஷ்மீரின் மேந்தார் மாவட்டத்தில் இன்று 5 இந்திய காவல் போஸ்ட்டுகளை தாக்கியுள்ளது பாக்கிஸ்தான், ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் இன்று அதிகாலையில் பாக்கிஸ்தான் துப்பாக்கி சூட்டால் கான்சக் பகுதியில் காயமடைந்தார்.

இந்திய அரசு பாக்கிஸ்தானுடன் அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்த வேண்டும் என பாஜக கோரியுள்ளது, மேலும் இந்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்திர்ந்தால் பாக்கிஸ்தானின் அத்துமீறல்கள் நடந்திருக்காது என்று தெரிவித்தது பாஜக.


After killing five Indian jawans, Pakistan violates ceasefire for the third time in 48 hours
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media