BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 6 October 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் குறித்து நினைக்கிறாங்களாம்?
http://www.satrumun.net/2014/07/how-many-times-think-about.html

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி ஃப்ளாப் ஆன ப்ளிப்கார்ட் - கலாய்த்த ட்ரோல்கள்
http://www.satrumun.net/2014/10/flipkart-trolls-big-billion-day-sale.html

பிக் சேல் ஆர்டரை கேன்சல் செய்த பிளிப்கார்ட், பிளிப்கார்ட்டின் மோசடி வேலை
http://www.satrumun.net/2014/10/flipkart-cancels-the-order-by-itself.html

பிளிப்கார்ட்டின் அதிரடி தள்ளுபடி விற்பனை மக்களை ஏமாற்றும் வேலையா ?? - அதிர்ச்சி ரிப்போர்ட் ( படங்களுடன் ) !!
http://www.satrumun.net/2014/10/flipkart-cheating-people-with-big-billion-sale.html

நாளை பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும், ஸ்ட்ரைக் இல்லை - பாமக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் எதிரொலி
http://www.satrumun.net/2014/10/pmk-writ-high-court-about-schools-and.html

பாலியல் வன்முறை, இந்திய பெண்களின் நிலை என்ன ?
http://www.satrumun.net/2014/10/blog-post_97.html

டைட்டில் செண்டிமெண்ட் : ‘தல’ அஜித்துக்கு வந்த தலைவலி!
http://goo.gl/skVqH7

அடுத்த வருஷம் ஸ்டார்ட்… : நடிகர் சங்க கட்டிடத்துக்காக முன்னணி ஹீரோக்கள் இணையும் பிரம்மாண்டப் படம்!
http://goo.gl/Ao9egq

நாவல் பழத்தின் மருத்துவ குணம்
http://www.satrumun.net/2014/10/blog-post_58.html

வெங்காயம் என்றால் சும்மாவா ...
http://www.satrumun.net/2014/10/blog-post_52.html

ஆளில்லா ஆயுதப் படகு: அமெரிக்கா உருவாக்கியது
http://www.satrumun.net/2014/10/blog-post_24.html

மோடியின் அழைப்பை ஏற்றார் சச்சின் !!
http://www.satrumun.net/2014/10/sachin-accepts-modi-invitation.html

முதியோரின் வீடுகளுக்கு சென்று சத்தான உணவு வழங்கும் திட்டம்
http://www.satrumun.net/2014/10/blog-post_81.html

சென்னை அணியின் துணை உரிமையாளர் ஆகிறார் கேப்டன் தோனி !!
http://www.satrumun.net/2014/10/dhoni-to-co-owner-chennaiyin-fc.html

மூளையின் ஜி.பி.எஸ்ஸை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபள் பரிசு !!
http://www.satrumun.net/2014/10/noble-prize-for-medicine-awarded-for-3-scientists.html

மூன்று நாட்களில் 70 கோடி வசூல் செய்த பேங் பேங் திரைப்படம் !!
http://www.satrumun.net/2014/10/bang-bang-crosses-70-cr-mark.html

குடும்பத்துடன் கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியை சந்திக்கவில்லை
http://www.satrumun.net/2014/10/mkalagiri-did-not-meet-karunanithi-in.html

மோசமான முன்னுதாரனமாகும் பள்ளியடைப்பு போராட்டம் - ஊழல் தப்பில்லை என்பதை மாணவர்களிடம் விதைக்கிறோமா?
http://www.satrumun.net/2014/10/private-schools-strike-to-protest.html

இன்று எல்லையில் அத்துமீறல், பாக்கிஸ்தான் திடீர் தாக்குதலால் 4 பேர் சுட்டுக்கொலை, 26 பேர் காயம்
http://www.satrumun.net/2014/10/four-killed-26-injured-in-major.html

தனது காதலியை பேஸ்புக்கில் போக் செய்ததால் நண்பனைக் கொன்ற காதலன் !!
http://www.satrumun.net/2014/10/man-kills-his-friend-for-poking-his-girlfriend.html

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி ஃப்ளாப் ஆன ப்ளிப்கார்ட் - கலாய்த்த ட்ரோல்கள்

இன்று தனது மொத்த வித்தையையும் இறக்கிய ப்ளிப்கார்ட்

ஓவர் பில்டப்பினால் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ரசிகர்களால் அஞ்சான் படம் கலாய்க்கப்பட்டது போன்ற நிலைமை இன்று ப்ளிகார்ட் தளத்திற்கு ஏற்பட்டு உள்ளது. சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று ப்ளிப்கார்ட்டை கேலிக்குரிய தளமாக மாற்றி உள்ளது.


 








பிக் சேல் ஆர்டரை கேன்சல் செய்த பிளிப்கார்ட், பிளிப்கார்ட்டின் மோசடி வேலை



இன்று பிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேல் என்ற பெயரில் அதிரடி தள்ளுபடி விற்பனை செய்தது . ஆனால் இந்த தள்ளுபடியில் பொருளை வாங்க முயற்சித்தவர்களுக்கு தோல்வி தான் கிடைத்தது . பல நேரங்களில் பொருட்கள் " ஆவுட் ஆப் ஸ்டாக் " என்று தான் வந்தது . பலர் இதனால் வெறுங்கையுடன் தான் திரும்பினர் . அதை அப்படியே உணர்த்திய ஒரு ட்ரோல் இதோ :



இது ஒரு புறம் இருக்க , ஆர்டர் முடிந்து காசு வாங்கிய பின் ஸ்டாக் இல்லை என்று அவர்களுக்கு மீண்டும் காசினை திரும்ப கொடுத்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம் . ஒருவர் ஆசையாக டிவி ஒன்றை பிக் சேலில் குறைந்த விலையில் ஆர்டர் செய்துள்ளார் . ஆனால் அவருக்கு பலத்த ஏமாற்றமாக அவருக்கு மீண்டும் அந்த பணத்தை திரும்பி அனுப்பியது , மேலும் அவரின் ஆர்டரை கேன்சல் செய்தது . இது அவர் ஸ்டாக் இருக்கிறது என காண்பிக்கப்பட்ட பின் அவருக்கு நடந்த சோகமான கதை .



இது போன்று பலருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ஆர்டரை கேன்சல் செய்துள்ளதாக தெரிகிறது . இவ்வாறு பிக் சேல் என்ற பெயரில் பிளிப்கார்ட் நம்மை ஏமாற்றி உள்ளது . 



பிளிப்கார்ட்டின் அதிரடி தள்ளுபடி விற்பனை மக்களை ஏமாற்றும் வேலையா ?? - அதிர்ச்சி ரிப்போர்ட் ( படங்களுடன் ) !!



பிளிப்கார்ட் தளம் அக்டோபர் 6 ஆம் தேதி தனது பயனாளர்கள் அனைவருக்கும் பிக் பில்லியன் சேல் என்ற பெயரில் அதிரடி தள்ளுபடி விற்பனை செய்தது . பலர் இந்த செய்தியைக் கேட்டு பிளிப்கார்ட் தளத்தை முற்றுகையிட்டனர் . அவர்கள் தங்களின் பொருட்களுக்கு 30 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சலுகை தருவதாக அறிவித்தனர் . இது இன்னும் கொஞ்சம் அதிகமாகி சில பொருட்களை ஒரு ரூபாய்க்கு விற்பதாக கூறினர் .

பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு இந்த விற்பனை மக்களிடம் நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் என்று நினைத்தனர் . ஆனால் இது அவர்கள் பெயரைக் கெடுத்துள்ளது என்று தான கூற வேண்டும் . ஆம் , டிவிட்டர் , பேஸ்புக்  போன்ற தளங்களில் மக்கள் இதைக் குறை கூறிக் கொண்டு தான் இருக்கின்றனர் . அதாவது பிளிப்கார்ட் தள்ளுபடி தரும் பொருட்களை விலையை சில நாட்களுக்கு முன் கூட்டி விட்டு பின்னர் தள்ளுபடி என்ற பெயரில் அதன் உண்மையான விலையில் விற்பதாக சிலர் குறை கூறுகின்றனர் .

இந்த விற்பனை உண்மையா ?? இதை உறுதிப்படுத்த கூகுள் குரோமின் எஸ்டென்சனான கம்பெர் ஹேட்கே மூலம் பரிசோதனை செய்ய முடியும் . இந்த எஸ்டென்சன் மூலம் ஒரு பொருளின் தற்போதைய விலையை அதற்கு முந்தைய மாதத்தின் விலையுடன் ஒப்பிட முடியும் .

அவர்கள் ஏமாற்றுவது இந்த படங்களைப் பார்த்தால் நன்றாகப் புரியும் !!



குறைவான விலையில் சில மாதங்களாக இருந்த அந்த பொருட்கள் திடீரென இன்று விலை உயர்ந்து இருப்பதை நீங்கள் பார்க்கலாம் . 

மேலும் பிளிப்கார்ட்டில் இருக்கும் ஒரு புடவை அதை விட குறைவாக பாதி விலையில் சோச் தளத்தில் இருப்பதை இந்த படம் மூலம் காணலாம் . 






மேலும் பொருட்களை வாங்க முயன்ற பலருக்கு " அவுட் ஆப் ஸ்டாக் " என்ற தகவல் தான் பலமுறை கிடைத்துள்ளது . பலருக்கு தளம் கிராஷ் ஆகி உள்ளது .

நாளை பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும், ஸ்ட்ரைக் இல்லை - பாமக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் எதிரொலி

7ம் தேதி நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர், இது பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை உருவாக்கியது, பாட்டாளி மக்கள் கட்சி இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர் க. பாலு அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அறிவித்த நாளைய வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் பா.ம.க வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவுகளை தமிழக அரசுக்கு பிறப்பித்தது

பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நீதிபதி குன்ஹாவை விமர்சித்து வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பெண்களின் நிலை என்ன ?


இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 24,923 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013ஆம் ஆண்டில் 33,707ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களில் 15,556 பேர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்முறைக் குற்றத்தில் டில்லி முதல் இடத்தில் உள்ளது. டில்லியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். 2012இல் 706 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013இல் 1,636ஆக உயர்ந்துள்ளது. மும்பை, ஜெய்ப்பூர், புனே நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

தமிழரின் நிலவியல் வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழமைக் கனி வகைகளில் ஒன்றாகவும், சித்தர்கள் போற்றிய மூலிகையாகவும் விளங்குகிறது நாவல் பழம். தமிழ் இலக்கியகளில் பேசப்பட்டிருப்பதிலிருந்தே இதன் தமிழ்த் தொடர்பை அறியலாம்.  நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் சர்க்கரை நோயாளிக்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு வரும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம். காய்ச்சலோ, சளியோ, ஆஸ்துமாவோ கண்டவர்கள் நாவல் பழம் அருகிலேயே செல்ல வேண்டாம்.

வெங்காயம் என்றால் சும்மாவா ...

 
நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுண்கிருமியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பாரம்பரிய இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பல பதார்த்தங்கள் உணவுக்கு சுவையை தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன. ஒரு உணவு பதார்த்தமானது உணவாக பயன்படுவது மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்பட்டால் அதைப் போல் சிறந்தது வேறு எதுவுமில்லை.
 
இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் குழாய்கள் தடிமன் அடைகின்றன. இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதய தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இதய தசைகள் பாதிக்கின்றன. அதே போல் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இதனால் சோர்வும், நரம்புத்தளர்ச்சியும் உண்டாகிறது. உடம்பில் ஏற்படும் நுண்கிருமிகளின் தொற்று, வி­க்கடிகள் போன்றவற்றால் புரோஸ்டோகிளாண்டின் என்னும் பொருள் அதிகரித்து உணர்வு நரம்புகளை பாதிக்கின்றன. மேலும் உடலில் சேர்ந்த நுண்கிருமிகள் சிறுநீர்பாதை மற்றும் மலப்பாதையில் தங்கி மலம் கழிக்கும் போது வலியையும், சிறுநீர் செல்லும் போது எரிச்சலையும் உண்டாக்கின்றன. அது போல் இரத்தத்தில் அதிகரித்த யுரிக் அமிலம் எலும்பு இணைப்புகளை பாதிப்பதுடன் சிறுநீர்ப் பாதையில் யுரிக் அமிலக் கற்களையும் உற்பத்தி செய்கின்றன.

உடலின் அத்தியாவசிய செயல்பாடு மற்றும் மனநலனின் பாதுகாப்பிற்கு தேவையான துத்தநாகம், கந்தகம், செலினியம் போன்றவை உடலில் நுண்கிருமிகள் தாக்குவதை தடுப்பதுடன், உடலுக்கு ஊட்டச்சத்தையும் ஏற்படுத்தி மன இறுக்கத்தை போக்குகின்றன. சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவை சீரான முறையில் உற்பத்தியாகவும், தோலில் தங்கவும் அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு நமக்கு தேவைப்படுகிறது.
 
இவ்வாறு குறிப்படப்பட்ட பலவிதமான சத்துக்கள் இரத்தத்தில் குறைவதால் நமது அன்றாட  உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்களும் உண்டாகின்றன. ஆகவே நாம் உண்ணும் உணவில் மேற்கண்ட சத்துக்கள் தவறாமல் இடம்பெற வேண்டுமா?  கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவில் அன்றாடம் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டாலே போதுமானது. இந்திய உணவில் முக்கியப் பங்கை வகிப்பது வெங்காயமே. வெங்காயம் உணவின் ருசியை கூட்டுவதுடன், பலவிதமான சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆண் மற்றும் பெண்களுக்கான ஹார்மோன்களின் வளர்ச்சியை தூண்டுவதுடன், இனப்பெருக்க உறுப்புகளில் நுண்ணிய குழாய்களில் ஏற்படும் இரத்த தடையையும் நீக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வெங்காயம். சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம் என்று சொல்லப்படும் மூன்று குற்றங்களையும் தணிக்கும் திரிதோட சமனிப் பொருளாக வெங்காயம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலியம் சீபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த வெங்காயத்தில் சிறிதாக காணப்படும் சற்று காரம் மிகுந்த சின்ன வெங்காயமே ஏராளமான மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. வெங்காயத்தில் ஏராளமான நீர்ச்சத்து அடங்கியுள்ளதாலும், குறைந்த அளவு கலோரிகளே சேமிக்கப்படுவதாலும் உடல் பருமனானவர்களும், சர்க்கரை நோயாளிகளும் வெங்காயம் மிகச் சிறந்த உணவாகும். 100கிராம் வெங்காயம் உட்கொள்ளும் பொழுது 51 கலோரிகள் மட்டுமே சத்து கிடைக்கின்றது. ஆகவே கலோரி சத்து அதிகம் நிறைந்த அசைவ உணவுகளுடன் வெங்காயமும், பூண்டும் சேர்க்கப்படுகிறது.

வெங்காயத்திலுள்ள சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, ஏ, பி, சி வைட்டமின்கள் இரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்குகின்றன. இவை உடலில் சேரும் பொழுது பைபிரினோலைசின் என்னும் பொருளை உற்பத்தி செய்து இரத்தக் கட்டிகளை கரைக்கின்றன. ஆகவே இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வெங்காயம். வெங்காயத்திலுள்ள அலினின் மற்றும் அலிசின் என்ற பொருள் செல்களுக்கு இன்சுலினின் தேவையை குறைக்கிறது. அது போல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறிய வெங்காயத்தை அடிக்கடி உட்கொள்ள அதிலுள்ள தையோசல்பனேட்டுகள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றன.

ஆளில்லா ஆயுதப் படகு: அமெரிக்கா உருவாக்கியது


ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறனுள்ள ஆளில்லாப் படகை அமெரிக்கக் கடற்படை உருவாக்கியுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் ரியர் அட்மிரல் மாத்யூ கிளண்டர் இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரம்: நேற்றைய தொழில்நுட்பங்களைக் கொண்டு நமது வீரர்கள் நாளைய போர்களில் சண்டையிட முடியாது. அமெரிக்க கடற்படையின் போர்த்திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை தொடர்ந்து உருவாக்குகிறோம். நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, ஆளில்லா ஆயுதப் படகுத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க குறைந்த செலவே ஆகும்.

இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கிய ஓர் இயந்திரத்தை எந்தப் படகிலும் பொருத்தி அதனை ஆளில்லாப் படகாக ஈடுபடுத்தலாம். அதில் கப்பல்களை அழிக்கும் ஏவுகணை ஆயுதங்கள், அல்லது விமானங்களை அழிக்கும் ஆயுதங்களைப் பொருத்தலாம். அந்தப் படகில் பொருத்தியுள்ள ரேடாரிலிருந்து வெளிப்படும் சமிக்ஞைகளைப் பிற ஆளில்லாப் படகுகள் பின்பற்றி, இவை ஒரு குழாமாகச் செயல்பட முடியும். தனித்து அல்லது ஒன்றிணைந்து, தமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் இவற்றுக்கு உள்ளது. இதற்கான ஆணையை தொலைவிலிருந்து ஒரு கடற்படை அதிகாரி கொடுக்க முடியும். இந்த வகையில் ஆளில்லா ஆயுதப் படகுகள் குழாமானது எதிரிக் கப்பலைத் தாக்கி அழிக்க வல்லது.

அதே சமயம், அமெரிக்க போர்க்கப்பலுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும் இந்த ஆளில்லா ஆயுதப் படகுக் குழாமைச் செலுத்தலாம் என்றார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா, செவ்வாய் கிரகத்தில் ஈடுபடுத்தியுள்ள "ரோவர்' ஆய்வுக்கலனில் பயன்படுத்திய தொழில்நுட்ப அடிப்படையில் இந்த ஆளில்லா ஆயுதப் படகு உருவாக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் முழுமையான சோதனை, 13 படகுகளைக் கொண்டு, விர்ஜினியா மாகாணப் பகுதியில் ஜேம்ஸ் நதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மோடியின் அழைப்பை ஏற்றார் சச்சின் !!



மோடி தனது துய்மையான இந்தியான திட்டத்திற்கு இந்தியாவில் பிரபலமான ஒன்பது பேருக்கு அழைப்பு விடுத்திருந்தார் . அந்த 9 பேரின் மூலம் மக்களிடம் இந்த அமைப்பை விரிவடைய செய்ய வேண்டும் என்பதே அவரின் விருப்பம் . மேலும் இந்த 9 பேர் ஒவ்வொருவரும் இன்னொரு 9 பேரை தேர்ந்தெடுக்க் வேண்டும் .

மோடி தேர்ந்தெடுத்த 9 நபர்களில் கிரிக்கெட் வீரர் சச்சினும் ஒருவர் . இவர் இந்த அழைப்பை ஏற்பாரா மாட்டாரா என்னும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது . ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் இவர் நிறைவேற்றினார் .

இந்த அழைப்பை ஏற்றதன் அடையாளமாக தனது நண்பர்களுடன் தெருவை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார் .

இது குறித்து அவர் கூறுகையில் , " இந்த துய்மையான திட்டத்திற்கு தலைமை தாங்கும் விதமாக மோடி என்னை அழைத்தார் . எனவே நான் எனது அணியுடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன் . எனக்கு இந்த பணி கொடுக்கப்பட்டுள்ளது என அறிந்தவுடன் பல நண்பர்கள் தாங்கள் உதவுவதாக முன்வந்தனர் . எனவே நாங்கள் இணைந்து இந்தியாவை சுத்தப்படுத்த  முழுமனதுடன்
முயற்சிப்போம் " என்றார் .


முதியோரின் வீடுகளுக்கு சென்று சத்தான உணவு வழங்கும் திட்டம்

 சென்னை அண்ணாநகரில் முதியோர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குறைந்த விலையில் சத்தான உணவு வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதுகுறித்து, இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.குளஞ்சியப்பன், தொழில் ஆலோசகர் யு.விஜயலட்சுமி ஆகியோர் கூறியது:
முதியோர் தினத்தையொட்டி, சென்னை அண்ணாநகரில் உள்ள திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் முதியோர்களுக்கு உணவு வழங்கும் சேவை மையம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதியோர் நல மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராசன் தொடங்கி வைத்தார்.

தற்போதைய சூழலில் வீட்டில் சமையல் செய்ய இயலாத முதியோர்கள் கடைகளுக்குச் சென்று உணவருந்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல், அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, அவர்களுக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவை குறைந்த விலையில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக அண்ணாநகரில் இருந்து 2 கி.மீ. சுற்றளவுக்கு உள்பட்ட முதியோருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். உணவு தேவைப்படும் முதியோர் 94444 22890, 94449 83296 ஆகிய தொலைபேசி எண்களில் எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று உணவு வழங்கப்படும்.
காலை, இரவு உணவாக இட்லி, சப்பாத்தி, உப்புமாவும், மதிய உணவாக சத்தான காய்கறிகளுடன் கூடிய அரிசி சாதமும் வழங்கப்படும் என்றனர்.

சென்னை அணியின் துணை உரிமையாளர் ஆகிறார் கேப்டன் தோனி !!



ஐ.எஸ்.எல் அமைப்பில் இருக்கும் ஒரு அணியான சென்னையின் எப்.சி என்னும் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி துணை உரிமையாளராகப் போகிறார் . இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்த இந்தியன் சுப்பர் லீக்கில் சேரும் 4 வது கிரிக்கெட் வீரராக தோனி உள்ளார் . இதற்கு முன் சச்சின் , கோலி , கங்குலி ஆகியோர் இருந்தனர் .

சென்னை அணியின் உரிமையாளரான அபிஷேக் பச்சனுடன் இணைந்து இவர் துணை உரிமையாளராக இருப்பார் . இவர் தான் சென்னை சுப்பர் கிங்கிஸின் கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

சென்னையின் எப்.சி  அணி வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி தனது முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சந்திக்கிறது . இந்த ஐ.எஸ்.எல் அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்குகிறது . முதல் போட்டியில் அத்லெடிகோ டி கொல்கத்தா அணி மும்பை சிட்டி எப்.சி அணியை சந்திக்கிறது .

மூளையின் ஜி.பி.எஸ்ஸை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபள் பரிசு !!



இன்று மருத்துவத்திற்கான நோபள் பரிசு வழங்கப்பட்டது . இந்த பரிசு அமெரிக்க விஞ்ஞானியான ஜான்-ஓ-கிப் மற்றும் நார்வேயைச் சேர்ந்த கனவன் மனைவியான எட்வர்ட் மோசர் மற்றும் மே பிரிட் மோசருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது . மூளையில் இடத்தினை கண்டுபிடிக்கும் செல்களை கண்டு அறிந்ததால் இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது .

இது குறித்து நோபள் பரிசு வழங்கும் அமைப்பு கூறுகையில் , " இவர்களின் இந்த கண்டுபிடிப்பு மூலம் நமது மூளை எப்படி நம்மை சுற்றி உள்ள இடத்தை வைத்து ஒரு மேப் உருவாக்கி நாம் பயணிக்க வழிகளை கண்டறிகிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது " என்றது .

இதனால் இந்த மூவருக்கும் 2014 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபள் பரிசு வழங்கப்படுகிறது .

தனது காதலியை பேஸ்புக்கில் போக் செய்ததால் நண்பனைக் கொன்ற காதலன் !!



பிரிட்டிஷில் தனது நண்பனை கொன்றுவிட்டு ஒருவர் ஜெயிலுக்கு சென்றுள்ளார் . தனது நண்பனை கொல்வதற்கு அவர் சொன்ன காரணம் , தனது காதலியை பேஸ்புக்கில் நண்பன் போக் செய்ததனால் கொன்றாரம்

ஸ்லாட் ஹம்ப்ரி , 27 வயதானவர் தனது நண்பனான 28 வயது ரிக்கார்ட் ரொவிட்டோவை அடித்துக் கொன்றுள்ளான் . ஹம்ப்ரி அடித்த வேகத்தில் ரிக்கார்டின் தலை தரையில் அடித்து இறந்துள்ளார் .

இதனை பார்த்த டிரைவர் ஒருவர் கூறுகையில் , " ஹம்ப்ரி தொடர்ந்து ரிக்கார்டை தனது காதலியைப் போக் செய்ததால் திட்டிக் கொண்டே வந்தார் " என்றார் . அதற்கு ரிக்கார்ட் எனக்கு அந்த பெண் ஹம்ப்ரிக்கு காதலி என்று எனக்கு தெரியாது என்றார் .

இப்போது ஹம்ப்ரி 4 வருடம் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் .

மூன்று நாட்களில் 70 கோடி வசூல் செய்த பேங் பேங் திரைப்படம் !!



ஹிருத்திக் ரோஷன் மற்றும் கத்ரினா கைப் இணைந்து நடித்த அக்ஷன் திரில்லர் திரைப்படமான பேங் பேங் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 71.72 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது . இந்த படம் காந்தி ஜெயந்தி அன்று வெளியானது .

பிரம்மாண்டமான அளவில் 150 கோடி ரூபாய் செலவில் வெளிவந்த இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் 50 கோடி என்ற இலக்கை தாண்டியது .

இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார் . இந்த படத்திற்கு விஷால் தால்தானி மற்றும் ஹேகர் ராவ்ஜியானி இசை அமைத்துள்ளனர் .


அதிரடி தள்ளுபடியில் பொருட்களை விற்கும் பிளிப்கார்ட்டின் பில்லியன் டே சேல் !! கிராஷ் ஆனது தளம் ..



அக்டோபர் 6 ஆம் தேதி பிளிப்கார்ட் " பில்லியன் சேல் டே " என்று தனது தளத்தில் பொருட்களை பிரம்மாண்ட தள்ளுபடியில் பொருட்களை விற்று வருகிறது . இவ்வாறு அதிரடி தள்ளுபடியில் பொருட்களை விற்றதால் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் தளத்திற்குள் வந்தனர் . இதனால் இணையதளம் கிராஷ் ஆனது .

இந்த அதிரடி விற்பனை காலை 8 மணி முதல் தொடங்கியது . இந்த தளம் 30 முதல் 90 சதவீதம் வரை பொருட்களின் விலையை குறைப்பதாக தெரிவித்தது . சில பொருட்களுக்கு 99 சதவீதம் தள்ளுபடி செய்து 1 ரூபாய்க்கு பொருட்களை விற்றது . ஹுவாய் ஹானர் 6 , அல்காடெல் ஒன்டச் பையர் சி , லெனோவா வைப் ஃஸ் - 2 ஆகிய பொருட்கள் 1 ரூபாய்க்கு விற்கப்பட்டது .

சில ராசியானவர்களால் மட்டுமே இது போன்ற பொருட்களை வாங்க முடிந்தது . பலரின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது . பலர் இந்த சேலின் போது கிராஷ் ஆனதால் பிளிப்கார்ட்டை டிவிட்டரில் குறை கூறினர் .

பிளிப்கார்ட் மட்டும் இல்லாமல் ஸ்னாப்டில் தளமும் இந்த விற்பனையை தொடங்கியுள்ளது . ஆனால் ஸ்னாப்டிலின் விற்பனை மக்களை அவ்வளவாக கவரவில்லை .

பிளிப்கார்டிற்கு போட்டியான அமேசான் தளம் அடுத்த வாரம் தன்னுடைய அதிரடி விற்பனையை தொடங்கி உள்ளது .

குடும்பத்துடன் கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியை சந்திக்கவில்லை

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சில மாதங்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், அதிலிருந்து சென்னைக்கும் மதுரைக்கும் போக்குவரத்து நின்று விட்டது, அவரது தாய் தயாளு அவர்கள் உடல்நிலை சரியில்லாமல்  இருந்து வரும் நிலையில் நேற்று மு.க.அழகிரி தனது மனைவி மற்றும் மகளுடன், கோபாலபுரம் வந்து, தனது தாய் தயாளுவை சந்தித்து நலம் விசாரித்தார்.

அவர் வந்த நேரத்தில் கருணாநிதி தனது மற்றொரு மகன் மு.க.ஸ்டாலின் உடன் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் கருணாநிதியை சந்திக்காமல் தனது தாயை பார்த்து விட்டு மு.க.அழகிரி உடனடியாகப் புறப்பட்டு விட்டார்.

மோசமான முன்னுதாரனமாகும் பள்ளியடைப்பு போராட்டம் - ஊழல் தப்பில்லை என்பதை மாணவர்களிடம் விதைக்கிறோமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனைபெற்றுள்ளார், இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய அதிமுகவினர் பஸ்சை கொளுத்துதல், கடையடைப்பு என்று ஆரம்பித்த போதும் கூட பொதுமக்கள் இது ஏதோ ஒன்றிரண்டு நாட்கள் நடைபெறும் என்று நினைத்தனர், ஆனால் கட்சிகாரர்கள் மட்டும் நடத்திய போராட்டம் திரைப்படத்துறையினர், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் என்று மாறியது, அனைத்துக்கும் மேலாக நாளை தனியார் பள்ளிகள் இந்த தண்டனை விதிப்பை எதிர்த்து விடுமுறை அளித்துள்ளார்கள், இது குறித்து தற்போது நார்வேயில் வசித்து வரும் இல கோபால்சாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதை இங்கே பதிவிடுகிறோம்.

நான் அப்போது நார்வே நாட்டிற்க்கு வந்த புதிது. உடன் பணிபுரியும் நண்பர்களிடம் ஆர்வ மிகுதியில் உள்நாட்டு சங்கதிகளை அளவுக்கதிகமாகவே கேட்டு தெரிந்து கொண்டிருந்த தருணம். கல்வி, பள்ளி குறித்த பேச்சு எழுந்தது. நான் சொன்னேன், பல்வேறு மதம், மொழி, கலாசாரம் நிலவும் நாடு என்னது. நான் பயின்ற பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும், அதில் கீதை, பைபிள், குரான் மூன்றில் இருந்தும் ஒரு பத்தி வாசிப்பார்கள். அது போல அல்லது மாரல் ஸ்டடிஸ் போன்ற ஏதேனும் இங்கே உண்டா என்றேன்.

அவர் சொன்னார்.. அப்படி எதுவும் கிடையாது. குறிப்பாக கடவுள் என்பது குறித்தே பள்ளிகளில் ஆசிரியர்கள் பேசுவதில்லை. அதில் மிகக் கவனம் தேவை என்றார். எனக்கு மிகுந்த வியப்பாகப் போயிற்று. நார்வே ஒரு கிருத்தவ நாடுதானே? பிறகு ஏன் இந்தக் கட்டுப்பாடு? என்றேன். அதற்கு அவர் சொன்னார். இது கட்டுப்பாடு என்பதைக் காட்டிலும் நாகரீகம் எனலாம். கடவுள் நம்பிக்கை அற்ற , வேற்று மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும் இருப்பார்கள். அவர்களது உணர்வை எவ்வகையிலும் காயப் படுத்திவிடக் கூடாது. மேலும் குழந்தைகள் அவர்கள். அவர்கள் முன்னிலையில் கடவுள் குறித்தோ, சமயம் குறித்தோ ஏதேனும் பேசினால் பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள், அது பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிடும் என்றார். அதே விவாதத்தின் போக்கில் வேறொரு கட்டத்தில், இங்குள்ள முறை என்னவென்றால் பிள்ளைகளுக்கு பெற்றோரும் சரி, பள்ளியும் சரி, சின்ன வயதிலேயே நாட்டின் சட்டங்கள் குறித்துப் பயிற்றுவித்து அதன் படி நடக்க வலியுறுத்துவார். அதனால் தான் விதிகளைக் கடைபிடிப்பதில் அதிக ஆர்வமும், பெருமிதமும் எங்களுக்கு உண்டு என்றார்.

இந்தப் பின்னணியில் தமிழகத்தில் நாளை நடைபெற இருக்கும் நூதன போராட்டம் குறித்து எண்ணிப் பார்க்கிறேன். நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட ஒரு அரசியல்வாதிக்கு ஆதரவாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப் படுகின்றன. எழுதப் படாத பதாகைகளான ஏதுமறியா அந்தக் குழந்தைகளின் எண்ணத்தில் எதை எழுதும் இந்தப் போராட்டம்? அடைக்கப்படும் பள்ளிகள் எல்லாம் தாமாகவே முன்வந்து இம்முடிவை அறிவித்தார்களா ? அல்லது மிரட்டப்பட்டார்களா என்பது வேறு கேள்வி...

நாட்டில் இத்தனை பிரச்சனைகள் இருந்தும் நாடு நாசமாகாமல் இருப்பதற்கு ஒரு காரணம் சுயாதீனமாக இயங்கும் நீதித்துறை என்பது மக்களாகிய நமக்கெல்லாம் ஆறுதல் தரும் விடையம். அந்தத் நீதித்துறையே தவறு அல்லது முறையாக இயங்கவில்லை அல்லது அதை மதிக்க வேண்டியதில்லை என்கிற கருத்தை பிஞ்சு மனதில் விதைக்கவா? அல்லது, உள்ளே சென்றவர் தியாகி என்றா? அல்லது ஊழல் செய்வது தவறு அல்ல என்றா? இந்தப் பாடத்தைப் பெற்று வளரும் வருங்கால தலைமுறையினரின் சிந்தனை ஓட்டம் எவ்வாறு அமையப் பெறும் ? அவர்கள் உருவாக்கும் வருங்கால தமிழகம் எவ்வாறு இருக்கும்? அதில் உங்கள் சந்ததிகள் எவ்வாறு பிழைக்கும்? என்பதெல்லாம் அரசியல் கடந்து இயல்பாக எழ வேண்டிய கேள்விகள்.

அய்யா.. நீங்கள் உத்தமாரோ, ஊழல்வாதியோ... உங்கள் அரசியலை கட்சி, வட்டம், மாவட்டம் , வீதி என்கிற அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் குப்பைப் படைப்புகளை பாடத்திட்டத்தில் வைப்பது, ஊழல் கைதுகளைக் கண்டித்து பள்ளிக் குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது போன்ற பிஞ்சு மனதில் நஞ்சைக் கலக்கும் தேச துரோகத்தை செய்யாதீர்கள். தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும், அவர்கள் வாழப்போகும் நாட்டின் வருங்காலம் குறித்தும் அக்கறை கொண்ட எவனும் இதைச் செய்ய மாட்டான்.

இன்று எல்லையில் அத்துமீறல், பாக்கிஸ்தான் திடீர் தாக்குதலால் 4 பேர் சுட்டுக்கொலை, 26 பேர் காயம்

இன்று காலை எல்லையில் அத்துமீறல், பாக்கிஸ்தான்  திடீர் தாக்குதலால் 4 பேர் சுட்டுக்கொலை, 26 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏரினா பகுதியில் உள்ள எல்லைக்கோட்டின் அருகே இன்று காலை பாக்கிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர். நான்கு பேருமே பொதுமக்கள் ஆவார்கள்.

பாக்கிஸ்தான் இந்த பகுதியில் இன்று காலை 1:30 மணியளவில் பீரங்கி தாக்குதல் நடத்தினர், மேலும் இடையே இடையே பீரங்கி தாக்குதல் நடைபெறுவதாகவும் இந்திய படையினர் பதில் தாக்குதல்கள் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media