Friday, 27 September 2013
ஈழப்போரில் 40,000 கொல்லப்பட்டுள்ளனர், ஐ.நா.மனித உரிமை ஆணையம் அறிவிப்பு
இலங்கையில் 2009-ம் ஆண்டு ஈழப் போரின்போது 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதா க ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி உள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளை இலங்கை அரசு தானாக முன்வந்து போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த அறிவுறுத்தலை இலங்கை அரசு நிராகரித்து உள்ளது.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - FIR - பட விமர்சனம்
மிஷ்கினின் தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பின் வந்திருக்கும் மிஷ்கின் படம், திரில்லர் ரக பாணியில் மெல்லிய நகைச்சுவை கூடவே இழையோடும் படம், எதார்த்தத்துக்கு மிக அருகில் எடுக்கப்பட்டுள்ளது, துப்பாக்கியால் சுடப்பட்டு குண்டடிபட்டு ரோட்டில் கிடக்கும் மிஷ்கினை அனைவரும் கை விட மருத்துவ கல்லூரி மாணவன் ஸ்ரீ காப்பாற்றுகிறார். அதன் பின் மிஷ்கின் காணாமல் போய்விட மிஷ்கினை தேடிப்பிடித்து சுடும் பொறுப்பு ஸ்ரீ தலையில் விழுகிறது, மிச்சம் என்ன ஆனது என்பது தான் படம்.
தற்போதைய ட்ரெண்ட் காமெடியன்கள் இல்லை, குத்துப்பாட்டு இல்லை, அபத்தங்கள் இல்லாமல் சமரசங்கள் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள படம், படத்தை சரியாக கவனித்து பிந்தொடடவில்லையென்றால் படம் புரியாமல் போக வாய்ப்புண்டு. உலக சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல நல்ல திரைப்படங்களை விரும்புபவர்களுக்கும் படம் பிடிக்கும்.
கொஞ்சநாள் கழித்து இது இந்த உலகப்படத்தின் காப்பி என்று யாரும் சொல்லவில்லையென்றால் நல்ல படத்தை தந்ததற்கு மிஷ்கினுக்கு ஒரு பாராட்டு.
மதிப்பெண்கள் 3.5 / 5
Subscribe to:
Posts
(
Atom
)