BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 10 October 2014

நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க .. ஓபாமாவை புகழ்ந்து தள்ளிய நடிகை !!



பிரபல ஹாலிவுட் நடிகை க்வைனத் பாலிட்ரோ நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை நீங்கள் மிகவும் அழகாக இருக்கீங்க , அதனால் எனக்கு பேச்சு வரவில்லை என புகழ்ந்துள்ளார் .

அவர் அளித்த பேட்டியின் போது , " நான் உங்களின் பெரிய ரசிகை . இல்லை உங்களின் மிகப் பெரிய ரசிகை . மேலும் நீங்கள் மிகவும் அழகாக இருக்குறீர்கள் அதனால் என்னால் பேச முடியவில்லை " என்றார் . மேலும் அவரின் நடவடிக்கைகளை புகழ்ந்தார் .

இது பாலிட்ரோ ஒபாமாவுக்காக இரண்டாவது முறை நிதி திரட்டும் நிகழ்ச்சி . நிதி அளித்தவர்களுக்கு ஒபாமா நன்றி தெரிவித்தார் .

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தற்கொலைக்கு முயற்சி செய்த தமிழ் நடிகை !!


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என செப்டம்பர் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் அவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அதிமுக வினர் போராட்டம் என பொது மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

அவருக்கு தொடர்ந்து 2 முறை ஜாமீன் வழங்கப்படவில்லை . இந்நிலையில் தமிழ் நடிகை மாயா என்பவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு தனது மகளுடன் வந்துள்ளார். அங்கு அவர் மண்ணெண்ணெய்யும் கொண்டு வந்துள்ளார். அதனை அவர்கள் இருவரும் ஊத்தி கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி உள்ளார்கள். அவர்களை போலீஸார் தடுத்து விட்டார்கள். அவர்களிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என விசாரித்த போது, ஜெயலலிதாவுக்காக தங்களது உயிரையும் கொடுக்க தயார் என கூறி உள்ளார்கள்.


மாயா கர்ஜனை , அமரக்காவியம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றி முதல்வர் பதவி தருமாறு மனு தாக்கல் செய்தது உண்மையா - பொய்யா ??


ஜெயலலிதாவை பெங்களூர் அக்ரஹார சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்றி அவரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு செய்ய வேண்டும் என ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அந்த மனு ஜெயலலிதா தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவல்ல. இது ஜெயலலிதாவின் வளர்ச்சி பிடிக்காதவர்களின் இன்னொரு மோசடி செயல் என அதிமுக தரப்பில் கூறியுள்ளார்கள்.


உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயலலிதா மனு செய்துள்ள நிலையில், அவர் மீது நீதிபதிகள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதற்காக யாரோ செய்த சதிச் செயல் இது. ஜெயலலிதாவின் வழக்கு குறித்து அனைத்து வேலைகளையும் அவரது வழக்கறிஞர்கள் பார்த்து கொள்கிறார்கள். எனவே யாரும் அவருக்காக நீதிமன்றத்தில் மனு கொடுக்க வேண்டாம் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மோகித் ஷர்மா பதில் இஷாந்த் ஷர்மா உள்ளே வருகிறார் !!



இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இது 5 போட்டிகள் கொண்ட தொடர் ஆகும். முதல் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது தான் .


இந்நிலையில் இந்திய வீரர் மோகித ஷர்மா காயமாகி உள்ளார். இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவருக்கு பதில் இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான அடுத்த ஒருநாள் போட்டி டெல்லியில் சனிக்கிழமை நடக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலக கோப்பை நடைபெற உள்ளது. அதற்குள் நல்ல அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.


தினமும் இலவசமாக 750 எம்பி இன்டெர்னெட் கொடுக்கிறார்கள் !!



தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் தினமும் இலவசமாக 750 எம்பி இன்டெர்னெட் தருகிறார்கள். அந்த நகரத்தில் உள்ள 17 இடங்களில் இலவச வைஃபை வசதியை இப்போது ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த சேவையின் வேகம் 40 எம்பிபிஎஸ் ஆக இருக்கும். இது எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை குறித்து மாறும்.

இந்த சேவையை இப்போது ஏர்டெல் நிறுவனம் அளித்து வருகிறது. இந்த சேவைக்கு பல நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்டெர்னெட்டின் பயன்களை எல்லா மக்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சேவையை கொண்டு வந்துள்ளதாக தெலுங்கானா அரசு கூறியுள்ளது.

இந்திய மொபைல் நம்பர் வைத்து இருக்கும் எவரும் இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். தங்களது மொபைலில் வைஃபை ஆன் செய்தால் இது வரும் . அதனை செலக்ட் செய்தால் நமது மொபைலுக்கு ஒரு பாஸ்வேர்ட் வரும் . அதனை இதில் டைப் செய்து இலவச இன்டெர்னெட் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இன்னும் 4 மாதங்களில் ஹைதரபாத் நகரம் முழுவதும் இந்த சேவை இருக்கும். 

ரூ. 300 கோடி வசூலை தொட போகிறது பேங் பேங் படம் !!



ஹிருத்திக் ரோஷன் , கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். பேங் பேங் ஆகும். இதனை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இது நைட் அண்ட் டே என்னும் ஆங்கில படத்தின் ரீமேக் ஆகும்.


அக்டோபர் 2 ஆம் தேதி அன்று வெளிவந்த இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்போது வரை 250 கோடி ரூபாய் கலெக்ஷன் பெற்றுள்ளது. இந்தியாவில் ரூ.135 கோடியும், வெளிநாடுகளில் ரூ.57.25 கோடியும் வசூல் செய்து உள்ளது. இன்னும் சில நாட்களில் 300 கோடி ரூபாய் வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது பாலிவுட்டில் எந்த முன்னணி ஹீரோவின் படம் வந்தாலும் அசால்ட்டாக 250 கோடி ரூபாய் வசூலை பெற்று விடுகிறது. தூம் 3 படத்தின் வசூலை முறியடிக்குமா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆப்கானிஸ்தானில் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது !!



ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு 4 பெண்களை கற்பழித்த 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றினர் .

ஆகஸ்டு மாதம் இந்த சம்பவம் நடந்தது . போலிஸ் போன்று வேடமணிந்த 8 பேர் ஒரு குடும்பம் பயணித்து கொண்டு இருந்த வண்டியை நிறுத்தி அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் . அவர்கள் அந்த பெண்களை அடித்து அவர்களிடம் கொள்ளையும் அடித்தனர் . அந்த 4 பெண்களில் ஒருவர் கற்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த ஐந்து பேரையும் காபுலில் உள்ள புலி சர்க்கி சிறையில் வைத்து தூக்கு தண்டனையை நிறைவேற்றினர் . இந்த தூக்கு தண்டனைக்கு முன்னாள் ஜனாதிபதி ஹமிது கர்சாய் தனது பதவியின் இறுதி நாளில் ஒப்புதல் அளித்தார் .

இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்காக மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

மறைக்கப்பட்ட வரலாறு : நிலவை தகர்க்க முயற்சித்த அமெரிக்கா



வாஷிங்டன்: 1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெக்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.

இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், “சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேரதிச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஹைட்ரஜன் குண்டை விண்கலத்தில் அனுப்பினால் அது மிகவும் கனமாக இருக்கும் என்பதால் அணு குண்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 238,000 மைல் கடந்து நிலவின் ஒரு பகுதியில் இந்த அணுகுண்டை வெடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தால் பூமியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களை கருத்தில் கொண்டு ராணுவ அதிகாரிகள் இம்முயற்சியைக் கைவிட்டனர்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியன் ஸ்புட்னிக்கை அனுப்பியதால் ஆத்திரமடைந்தே இந்தத் திட்டத்தைத் தீட்டியது அமெரிக்கா மேலும் சோவியத் யூனியனை விட தானே வலிமையானவன் என்பதை நிரூபிக்கவும் இந்த திட்டத்தை தீட்டியது அமெரிக்கா.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவிலிருந்து கோப்புகளை மீட்க எளிய வழி


வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து கோப்புகளை (பைல்களை) மீட்க எளிய  வழி, தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் கோப்புகளை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ளகோப்புகள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த கோப்புகளும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் கோப்புகள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த கோப்புகளை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
 
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த கோப்புகளை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4)உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s / d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாக கொடுக்கவு ம்.
நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள். சில வினாடிகள் பொறுத்திருங்கள் . இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய கோப்புகள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

ஒரே கேபிள் வயரில் மின் கடத்தும் புதிய வயர்


நேர், எதிர் என இருவகை மின்சாரங்களையும் ஒரே கேபிள் வயரில் கடத்தும் புதிய வயரை, கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவி கண்டுபிடித்து சாதித்துள்ளார். அவரது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவி ராக்கி ஷெனாய். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார். மின் உற்பத்தி பிரிவில் புதிதாக சாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் புராஜக்ட் செய்து வந்தார். அதன்படி, மின்சாரத்தைக் கடத்தும் நேர் (+) எதிர் (&) என்ற இரு கேபிள்களுக்கு பதிலாக ஒரே கேபிளை உருவாக்கினார்.அதில் அனைத்து மின் கம்பிகளையும் உள்ளடக்கி, ஒன்றோடு ஒன்று உராய்வு செய்யும் போது தீப்பற்றி விடாமல் தடுக்க மின்தடை கம்பி ஒன்றையும் நடுவில் உண்டாக்கினார். பின்னர், இந்த கேபிளை ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் சென்று, அங்கு வெல்டிங் மூலம் முறையாக பொருத்தும் பணியை செய்து முடித்தார். இந்த புதிய கேபிள் வயர் மூலம் 25% அளவுக்கு மின் இழப்பு, செலவு குறைகிறது. பேட்டரி கேபிள்ஸ், பஸ்கள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வகையில் இந்த கேபிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்பு குறித்து மாணவி ராக்கி ஷெனாய் கூறுகையில், ‘‘இந்த கேபிள் வயரை பயன்படுத்தும் போது மின்சாரம் அதிகமாக, அதாவது 14, 15 ஆம்பியர் அதிகமாக கிடைக்கும். இவ்வாறு அதிகமாக வருவதால் எந்த ஆபத்தும் இல்லை. இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமைக்காக டெல்லியில் உள்ள கன்ட்ரோலர் காப்புரிமை வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பித்தேன். அதற்கு, மத்திய காப்புரிமை கழகம் சார்பில் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய காப்புரிமைக் கழக மலரில் வெளியாக உள்ளது‘‘ என்றார்.ஒரே வயரில் மின்சாரம் செல்லும் கேபிள் வயரை கண்டுபிடித்த மாணவி ராக்கி ஷெனாயை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், துணைவேந்தர் சரவணசங்கர், பதிவாளர் வாசுதேவன், துணை பதிவாளர் குருசாமி பாண்டியன், துறைத் தலைவர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

பூமி வெப்பமடைவதால் மீன்வளம் பாதிக்கும் அபாயம்

பூமி வெப்பமடைந்து வருவதன் காரணமாக உலகக் கடல்களில் மீன்வளம் கிட்டத்தட்ட 24 சதவீதம் குறைந்துவிடும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள்  எச்சரித்துள்ளனர். கடல் நீர் வெப்பமடைவதால் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்கள் பாதிக்கப்படும் என்பதை கணினி மென்பொருள் துணைகொண்டு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள ஆக்சிஜனின் அளவு குறைந்துவிடுகிறது. இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்து போய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கருதப்பட்டதைவிட மிகவும் அதிகம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால், ஒரு பகுதியில் வாழ்ந்த குறிப்பிட்ட வகை மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது, பல மீன் இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது என மு

நீரின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைக் அனுமானிக்கும் கணினி மென்பொருளை தற்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். உலகில் வெப்பவாயு வெளியீட்டு விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தரவுகளை உள்ளீடு செய்து, அதனால் மீன்வளத்துக்கு எந்த வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என இவர்கள் கணித்துள்ளனர்.

கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால், பாலூட்டி விலங்குகள் போல மீன்கள் சீரான உடல்வெப்பம் கொண்டவையல்ல மீன்கள். கடல் நீரோட்டத்தின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும். மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அவற்றுக்கு கூடுதலான ஆக்சிஜன் தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாகக் குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் துருவப் பகுதிகளை நோக்கி மீன்கள் தங்களது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வின் முடிவுகள்  நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கின்றன.
ந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.

பப்பாளியின் பயன்கள்


கனிகளின் சிகரம் பப்பாளி. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மரம் இது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்களை வாரிவழங்கும் பழம் இது. கருவை காக்கும் பழமாக இருப்பதைப் போலவே கருவை அழிக்கும் பழமாகவும் இது இருக்கிறது. பப்பாளிப்பழத்தில் இருபதுக்கும் அதிகமான சத்துக்கள் உள்ளன. இதன் பழம், காய், பால், விதை அனைத்தும் மருத்துவப் பண்புகளைக்கொண்டது. வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த பழம் இது. மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு. பப்பாளிக்காய்களை சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

பப்பாளியை பயிர்செய்வதற்கு தனியாக கவனம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. பப்பாளி மரங்களை கழிவுநீரில் வளர்த்தால் அதன் குணங்கள் குறையக்கூடும். கன்று வளர்ந்து ஒரு வருடத்தில் பழங்களைத்தரத்தொடங்கும். கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை பலன் கொடுக்கும்.

பப்பாளியில் மூன்று வகைகள் உண்டு. ஆண் மரம், பெண் மரம், அலிமரம். ஆண் மற்றும் அலிமரத்தின் பூக்கள் சிறிதாய் இருக்கும். ஆண் மரத்தின் பூக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன. அலிமரத்தின் பூக்களால் எந்தப்பயனும் இல்லை. பெண்மரத்தின் மலர்கள் பெரியதாக இருக்கும்; காய்களும் பெரியதாக சுவை கூடியும் இருக்கும். செம்மண் பூமியில் நன்றாக வளரும் மரம் இது. பப்பாளி மரத்தின் தண்டுகள் வலிமை குறைந்தவை. பப்பாளிப் பழங்களை சேதமில்லாமல் பறிக்க சற்று நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்



கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும்.

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன. கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

பண்டைய தமிழரின் அறிவியல் : மழை

 மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது.

பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்துமலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது.

இதேபோல,
‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகப் பொழிகிறது. இப்படியாக மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. அகநானூறு, ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி …………….. பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்று கூறுகிறது. இதுவும் கடலில் இருந்த நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது.

ஆனால் அந்தக் கால மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிஸ்டாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் இப்படிக் கடல் நீரை உறிஞ்சும்போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர் (Hydraulics and hydraulic research – a Historical Review ) இதுதான் கி.பி 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து.

நாளை கத்தி டிரெய்லர் வெளிவருகிறது

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கத்தி. இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளிவந்தது. இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இதற்கு போட்டியாக விஷாலின் பூஜை படமும் ஜெயம் ரவியின் பூலோகம் படமும் வர உள்ளது. இந்த படங்கள் உடனான தேவையில்லாத போட்டியை தவிர்க்க இந்த படத்தை 4 நாட்கள் முன்னதாக 17 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம என நினைக்கிறார்கள். இது குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் வரவில்லை.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது என எல்லாரும் ஆர்வத்துடன் உள்ளார்கள். படத்தின் டிரெய்லர் நாளை வெளிவரலாம் என தகவல்கள் கூறுகின்றன. பொறுத்து இருந்து பார்ப்போம் துப்பாக்கியை போல கத்தி மிக பெரிய வெற்றியை பெறுமா என்று.


பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் வருகிறதா ??





ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருந்த பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்தை கைவிட்டுவிட்டார்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா சந்தானம் , நயன்தாரா நடிப்பில் உருவாகி மெகா ஹிட்டானது. இது சந்தானத்துக்கும் ஆர்யாவுக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டத்தை இழுத்தது. எல்லா தரப்பினரையும் கவரும் விதமாக இந்த படம் இருந்தது. இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் எடுத்த ஆல் இன் ஆல் அழகு ராஜா திரைப்படம் சரியாக ஒடவில்லை.

அதனால் இழந்த பெயரை மீண்டும் எடுப்பதற்காக பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கும் முடிவில் ராஜேஷ் இறங்கினார். அதே ஆர்யா சந்தானம் கூட்டணியில் உருவாக இருந்தது. இப்போது அந்த முடிவை கைவிட்டு விட்டார். அதற்கு பதிலாக ஆர்யா சந்தானம் தமன்னா கூட்டணியில் ஒரு புது படத்தை இயக்க உள்ளார். 

காணாமல் போன வாட்ஸ் அப் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது

கடந்த இரு வாரங்களாக வின்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனை காணவில்லை. இது டெக்னிக்கல் பிராப்ளம் காரணமாக காணவில்லை என கூறப்பட்டு வந்தது. ஏற்கனவே வாட்ஸ் ஆப் வைத்து  இருந்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அது எப்போதும் போல் நன்றாக தான் வேலை செய்து கொண்டு இருந்தது. ஆனால் புதிதாக வாட்ஸ் ஆப் டவுன்லோட் செய்ய நினைத்தவர்களால் தான் முடியவில்லை.

டவுன்லோட் செய்வதற்காக ஸ்டோரில் சென்று வாட்ஸ் ஆப் என டைப் செய்தால் , அந்த ஆப்பே இல்லையென்று வருகிறது. இதனால் இது பெரிய பிரச்சனையாக இருந்தது. வாட்ஸ் ஆப் இல்லாமல் எப்படி இருக்க முடியும். இப்போது 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வந்து விட்டது. அந்த பிரச்சனையை சரி செய்து விட்டார்கள். வாட்ஸ் ஆப் இப்போது வேகமாக பரவி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.


ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்று புதிதாக உருவாகியுள்ள வேக் அப் கால் சேலஞ்ச் !!



உலகையை நனைய வைத்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் முடிந்த பின் , இப்போது இணையத்தில் புதிதாக ஒரு சேலஞ்ச் உருவாகி வருகிறது . இதுவும் ஒரு நிதி திரட்டும் சேலஞ்சாக தான் இருக்கிறது . இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேலஞ்சின் பெயர் வேக்அப்கால் . இந்த சேலஞ்சில் நாம் தூங்கி எழுந்தவுடன் நமது போட்டோ எடுத்து இணையத்தில் போட வேண்டும் .

இந்த சேலஞ்ச் மூலம் யுனிசெப் சிரியாவில் ஆபத்தில் இருக்கும் மக்களுக்காக நிதி திரட்டி வருகிறது . ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்று இதிலும் அவர்கள் சேலஞ்சை செய்து நண்பர்களை நாமினேட் செய்ய வேண்டும் . இந்த சேலஞ்ச் இதற்கு முந்தைய சேலஞ்சுகளான ஐஸ் பக்கெட் மற்றும் நோமேக்கப் செல்பி என இரண்டையும் சேர்த்து இதை உருவாக்கியுள்ளனர் .

சில பிரபலங்கள் இந்த சேலஞ்சை செய்துள்ளதால் , இதற்கு மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

தீபாவளி எப்போது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் மக்கள் - People are in confusion with Deepavali date

People are in confusion with when is the actual date of Deepavali for this year. Deepavali is an important festivals for Hindus, All the calendars mentioned that October 22 is deepavali, but in the internet it is mentioned as Octorber 23, so the people are confused with which is the actual date of Deepavali.

இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடபடும் பண்டிகை எது வென்று பார்த்தால் அது தீபாவளியாக தான் இருக்கும். தீபாவளிக்கு மட்டும் எப்போதும் அதிக நாட்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். காலை எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புது ஆடை அணிந்து கொண்டு, பக்கத்து வீட்டுகாரர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு கொடுத்து வருவது. அதன் பின்பு காலையில் இருந்து இரவு வரை வெடி வெடித்து கொண்டு இருப்பது. இடையே தீபாவளி அன்று வந்து இருக்கும் ஒரு புது படத்துக்கு சென்று வருவது.



எல்லாரும் தீபாவளி எப்போது வரும் என காத்து கொண்டு இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு புதுமையாக தீபாவளி எப்போது என்றே தெரியாமல் இருக்கிறோம். நமது காலண்டரிலும் மற்றும் எல்லா விடுமுறை அறிவுப்புகளிலும் தீபாவளி அக்டோபர் 22 ஆம் தேதி என குறிபிடப்பட்டுள்ளது. ஆனால் இன்டெர்னெட்டில் தீபாவளி என்று என பார்த்தால் அக்டோபர் 23 ஆம் தேதி என வருகிறது. இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளார்கள். ஊருக்கு பயணம் செய்ய வேண்டியவர்கள் டிக்கெட் எப்போது புக் செய்வது என தெரியாமல் குழம்பி போய் உள்ளார்கள்.

உங்கள் பெயரை செவ்வாய் கிரகத்தில் பொறிக்க வேண்டுமா ?? நாசா கொடுக்கும் அருமையான வாய்ப்பு ..



உங்கள் பெயரை செவ்வாய் கிரகத்தில் பொறிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?? அதற்காக நாசா விண்வெளி மையம் அருமையான வாய்ப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது . செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ஓரியான் விண்கலத்தில் , உங்கள் பெயரையும் சேர்த்து அனுப்பிவிடலாம் . இந்த விண்கலம் டிசம்பர் 4 ஆம் தேதி கிளம்ப இருக்கிறது .

உங்கள் பெயரையும் பொறிக்கப்பட வேண்டுமானால் அவர்கள் இணையதளத்திற்கு சென்று , சில அடிப்படை தகவல்களை நிரப்பிய பின் சப்மிட் கொடுத்தால் , உங்கள் பெயரையும் பட்டியலில் சேர்த்துவிடுவர் . இதுவரை 95,000 மக்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர் .

இதனை பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 31 .


மீண்டும் ஹேக்கர் அட்டூழியம் !! முன்னாள் காதலர்களின் நிர்வாண படங்களை வெளியிட்டார் ..



ஹேக்கர்கள் தொடர்ந்து நடிகர் மற்றும் நடிகைகளின் நிர்வாண படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார் . இன்னும் ஹேக்கரை பிடிக்காத்தால் தொடர்ந்து அது போன்ற படங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார் . இப்போது நடிகர் மேட் ஸ்மித் மற்றும் அவரது முன்னாள் காதலி டைசி லோவ் ஆகிய இருவரும் நிர்வாணமாக இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார் .



இந்த படம் குறித்து இதுவரை இருவரும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை . இவர்கள் சென்ற வருடம் தான் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

பிளிப்கார்டை தொடர்ந்து அமேசான் கொடுக்கும் தீபாவளி டமாகா வாரம் !!



ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனம் தனது தீபாவளி டமாகா வாரத்தை இன்று தொடங்கஉள்ளது . இந்த தீபாவளி டமாகா வாரம் 7 மணி முதல் தொடங்க உள்ளது . ஒரு வாரம் நடக்க உள்ள இந்த அதிரடி தள்ள்படி 16 ஆம் தேதி வரை நடக்க உள்ளது . வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய மற்றும் சிறந்த அனுபவமாக இருக்கும் என உறுதியளித்துள்ளனர் .

இவர்கள் பிளிப்கார்டின் தவறுகள் மூலம் பாடம் கற்று இருப்பார்கள் என தெரிகிறது . இதில் இவர்கள் வெற்றி பெறுவார்களா அல்லது சொதப்புவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media