Monday, 10 February 2014
லாபம் அனைத்தையும் சம்பளமாக கொடுக்க முடியாது: ப.சிதம்பரம்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வங்கிகளில் பெறப்படும் சேவைகளை பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 78வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், லாபம் அனைத்தையும் பங்குகளுக்கான ஆதாயம் வழங்கவும், வங்கி ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தி வழங்கவும் பயன்படுத்த முடியாது. லாபத்தின் குறிப்பிட்ட தொகை, வங்கிகளுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தேவைப்படும் மூலதனத்தை அதிகரிப்பதற்கும், வங்கிகளை நடத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
குருநாத் மெய்யப்பன் குற்றவாளி- விசாரணைக் குழு
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் மிகப் பெரிய அளவில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் உள்ளிட்டவை நடந்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் காப்பாளருமான குருநாத் மெய்யப்பன், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையே என்று உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டி தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தவிர சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்தராவுக்கு உள்ள தொடர்பு குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனிவாசன், பிசிசிஐ தலைவராகவும், ஐபிஎல் அணி உரிமையாளராகவும் இரு பதவிகளையும் தக்க வைத்துக் கொள்வது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயட்சை எம்.எல்.ஏ வாபஸ், கவிழும் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு?
ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ. ராம்பீர் ஷோகீன் வாபஸ் பெற்றதனால், டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.
தேர்தல் சமயத்தில் ஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்த பின் அவற்றை நிறைவேற்ற மறந்து பின்வாங்குகிறது என குற்றம்சாட்டிய ராம்பீர் ஷோகீன், இன்று மாலை டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து, தனது ஆதரவை வாபஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க. அழகிரிக்கு ஆதரவு அளித்த எம்.பிக்களுக்கு திமுக நோட்டீஸ்
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலர் மு.க. அழகிரிக்கு, திமுக எம்.பிக்கள் நெப்போலியன், ராமலிங்கம், ரித்தீஷ் ஆகியோர் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
அழகிரி பிறந்தநாளான ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று, அவர்கள் மூவரும் மதுரைக்கு சென்று, நேரில் வாழ்த்து தெரிவித்தனர். ரித்தீஷ் எம்.பி. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அழகிரியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்ததற்காக வரப்போகும் பிரச்னைகளை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் கூறியிருந்தார். இதனால், அதிருப்தி அடைந்த திமுக தலைமை, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை ஆதரித்ததற்காக, மூன்று எம்.பிக்களுக்கும் அல்லது ரித்தீஷ் எம்.பிக்கு மட்டும் முதலில் விளக்க நோட்டீஸ் அனுப்புவது என முடிவு செய்துள்ளது.

39 மனைவி, 94 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகளுடன் வாழும் மிசோராம் மனிதர்

ஜியானோ சன்னா என்ற இந்த மனிதம் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் கிராமத்தில் வசிக்கிறார். இவருக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 14 மருமகள்கள் மற்றும் 33 பேரக்குழந்தைகளுடன் மொத்தம் 181 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
இவரது முதல் மனைவியின் வயது 71, கடைசி மனைவியின் வயதோ 31, நான்கு மாடி கட்டடத்தில் 100 அறைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் இரவு உணவுக்கு 30 கோழிகள், 50 கிலோ உருளைக்கிழங்கும், 100 கிலோ அரிசியையும் சமைக்கிறார்கள்
இவரது குடும்பத்தினர் கட்டுமான வேலைகள் மற்றும் தோட்ட வேலைகள் செய்கிறார்கள். இவரது தந்தையும் பல பெண்களை திருமணம் செய்தவராம். இது குறித்து அவர் கூறியதாவது தனது தந்தை பல ஏழைப்பெண்களை திருமணம் செய்துகொண்டார், இதன் மூலம் அப்பெண்களுக்கு உணவு, உறைவிடம் அளித்து உதவிசெய்துள்ளார் என்றும் கூறினார்.
இந்த குடும்பம் விம் டிஷ்வாஷ் பார் விளம்பரத்தில் நடித்துள்ளார்கள்
# நல்ல வேளை இவர் அரசியலுக்கு வரவில்லை

சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 15 லட்சம் காசோலைகள் முடக்கம்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வங்கிகளில் பெறப்படும் சேவைகளை பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 15 லட்சம் காசோலைகள் முடங்கும் என்று தகவல்கள் கூறுகிறது.
புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் போட வேண்டும், சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும், சுமார் 2 லட்சம் கோடி வரையுள்ள திரும்ப பெறப்படாத கடனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இரு நாள் போராட்டம் நடைபெறுகிறது. சுமார் 8 லட்சம் பேர் இந்த நாடு முழுவதுமான வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். 25 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் துறை வங்கிகள், 6 அயல்நாட்டு வங்கிகள், 40 கிராமிய வங்கிகளின் ஊழியர்களும் இதில் அடங்குவர்.

தேவர் சிலைக்கு 13கிலோ தங்ககவசம் வழங்கிய ஜெயலலிதா
ராமநாதபுர மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனி விமானம் ஒன்றில் மதுரை வரை சென்று விட்டு, பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் ஒன்றில் ஏறி பசும்பொன் கிராமத்திற்கு சென்றார்.
பதிமூன்று கிலோ தங்கத்தால் செய்யப் பட்டுள்ள கவசத்தை, தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாளிடம் ஜெய லலிதா வழங்கினார். பின்னர், நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து, தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி தான் அடைந்ததாக கூறினார்.
"ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி என்பது போன்ற தேவருடைய கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது. அந்த லட்சியத்தை அடைய நீங்கள் எங்களுக்கு என்றென்றும் துணை நிற்க வேண்டும்.", என்று ஆயிரகணக்கில் திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் தேவர் சமுதாய மக்களை பார்த்து முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மோடி அலை என்பது ஒரு மாயை. அது ஒரு கற்பனை- தொல். திருமாவளவன்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஊடகத்திற்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், "மோடி அலை என்பது ஒரு மாயை. அது ஒரு கற்பனை. அது தமிழகத்தில் எடுபடாது." என்றும், "பா.ஜ.க-வுடன் கூட்டணி சேரும் கட்சிகள் பெரும்பாலும் முட்டுச்சந்தில் போய் முட்டும் கட்சிகளே. அவர்கள் இடது புறமும் வண்டியைத் திருப்ப முடியாது; வலது புறமும் திருப்ப முடியாது. அப்படியே வண்டியைத் திருப்பிக்கொண்டு பின்னாலும் செல்ல முடியாது. அந்தக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் பா.ஜ.க-வுடன் செல்கின்றன என்பதே உண்மை." என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை பற்றி கூறிய திருமாவளவன், அவர் பா.ஜ.க., பா.ம.க. போன்ற பிற்போக்குச் சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், ஊழலை ஒழிப்பதை விட, சாதி, மத வெறியை ஒழிப்பது மிக முக்கியம் என்றும் தெரிவித்தார். மேலும், தான் விஜயகாந்தை சந்தித்து பேசிய போது, சாதி மத சக்திகளோடு அவர் சேர்ந்து விட கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும் அவர் அறிவித்தார்.

மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்
பெண்ணுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலத்தில் நடந்த திருமணத்தில் மணமகள் வசந்தி என்பவர், மணமகன் சதீஷ் என்பவர்க்கு தாலி கட்டினார்.
மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டியதால் மண்டபத்தில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ஆணுக்கு, பெண் சமம் என்பதை வலியுறுத்துவதற்காக மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டியதாக மணமக்களின் பெற்றோர் தெரிவித்தனர். இந்த புதுமை திருமண நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நேதாஜி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீரசேனன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts
(
Atom
)