BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 April 2014

"என் மகனின் வாழ்க்கைப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்"-கருணாநிதியிடம் அற்புதம்மாளின் வேண்டுகோள்

நேற்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,"ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கோவையில் வெள்ளிக்கிழமை நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ம் தேதிக்குள் முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று ராஜீவ் கொலை வழக்கினை பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். அது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்தது.

வரும் 24 ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நீதிபதி சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதையும், அது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்து கூறுயது:

"எந்தத் தவறும் செய்யாத என் மகன் 23 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவிக்கிறார். அவர் இந்த வாரத்தில் விடுதலையாகி விடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதி இப்படியொரு கருத்தை கூறியிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஓட்டு அரசியல் எப்போதும் வரும். அதற்காக என் மகனின் வாழ்க்கைப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்.

என் மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நம்பிக்கையை முதல்வர் அளித்தபோது, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவரைச் சந்தித்தேன். அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறவில்லை. அந்த சங்கடத்தை முதல்வர் ஜெயலலிதா எனக்கு தரவில்லை.

நல்ல தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிபதி சதாசிவம் கூறியதில் எந்த அரசியலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்குள் இப்படியொரு கருத்தை கருணாநிதி வெளியிடப்பட்டிருப்பது, என் மகனின் விடுதலையை தாமதமாக்குமோ என்று பயமாக உள்ளது. மறுக்கப்பட்ட நீதி கிடைக்கும்வரை அதை பாதிக்கும் எந்தவித அரசியல் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அற்புதம்மாள் கூறியிருந்தார்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை 3 நாள் மூட உத்தரவு

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி அன்று தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக கூடுதலாக ஒரு நாள் மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு தேர்தல் துறையினர் கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சி.சவுண்டையா வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையிலும் நடத்துவதற்காக டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 22-ம் தேதி காலை 10 மணியிலிருந்து வாக்குப்பதிவு நடக்கும் நாளான 24-ம் தேதி நள்ளிரவு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 16-ம் தேதியும் மதுக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடும் முதுகு வலியில் அவதிப்பட்டு கொண்டு 90 வயதில் பிரச்சாரம் செய்கிறேன்- தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்


தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய உருக்கமான கடிதம் கீழ்வருமாறு:

முதல்வர் ஜெயலலிதா 40 இடங்களிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி தோழமைக் கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கொடுக்காமல் அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்டு ஹெலிகாப்டரில் சென்று சிரமம் இல்லாமல் வாக்கு கேட்டு வருகிறார்.

நானோ இந்த 90 வயதில், பயணம் செய்ய வசதியற்ற ஒரு வேனில் தூக்கிக் தூக்கிப் போடுகின்ற நிலையில் சாலை வழியாக பல நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து மக்களைச் சந்திக்கிறேன். வேன் ஒவ்வொரு பள்ளத்திலும் விழும்போது, முதுகு வலியால் அவஸ்தைப்படுகிறேன்.

ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் பேசிவிட்டு தங்குமிடத்துக்குச் செல்லும்போது உடம்பு முழுவதும் வலி. இரவு முழுவதும் தூக்கமில்லை. நான் எந்த அளவுக்கு சிரமப்படுகிறேன் என்பதை என்னுடன் பயணம் செய்த 2 மருத்துவர்களிடம் கேட்டால் கூறுவார்கள். என்னால் முடிந்தவரை உழைக்கிறேன். முடிவினை நல்ல விதமாக நீ எடுப்பாய் என்பதை நன்கறிவேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

எலும்புத் துண்டுக்காக ஓடுவதுபோல அலைபாய்ந்தவர் விஜயகாந்த் - சீமான் பேச்சு

நாம் தமிழர்' கட்சி தலைவர் பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வைகோவை பற்றி...

வைகோ மாபெரும் வரலாற்றுத் தவறை செய்துவிட்டார். மதிமுக இப்போது போட்டியிடும் ஏழு தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டிருந்தால் நாங்கள் ஏன் அதிமுக-வுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறோம்? வைகோவுக்காக சூறாவளிப் பிரச்சாரம் செய்திருப்போமே. தனது தவறுக்கான விளைவை விரைவிலேயே உணர்வார் வைகோ.

விஜயகாந்த் பற்றி...

மோடி வந்தால் ஊழலை ஒழிப்பார் என்கிறார் விஜயகாந்த். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எத்தனை மாதங்கள் ஆயிற்று? அப்போதே விஜயகாந்த் இதைச் சொல்லியிருந்தால் அவர் யோக்கியர். என்னைப் பொறுத்தவரை அவர் ஓர் அரசியல் வியாபாரி; சந்தர்ப்பவாதி. எலும்புத் துண்டுக்காக ஓடுவதுபோல அங்கும் இங்கும் அலைபாய்ந்தவர், சீட்டும் நோட்டும் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜக அணியில் சேர்ந்துள்ளார். தனது மைத்துனரை மந்திரியாக்க மோடியை ஆதரிக்கிறார். 

இவ்வாறு சீமான் கூறியிருந்தார். இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!

மோடியின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொள்ளாதீர்கள் - வாரணாசியில் கெஜ்ரிவால் !!

வாரணாசியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் , நாங்கள் ஒரு கிராமத்திற்கு சென்றோம் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் என்னைக் கண்டவுடன் மோடி மோடி என கோஷமிட்டனர் . பிறகு அவர்களை பார்த்து மோடி ஏன் பிரதமர் ஆக வேண்டும் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை . அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி எரிவாயு விலை உயர்வு தொடர்பான பதிவுகளை காண்பித்தோம் . பிறகு அவர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்தனர் . இந்த ஊடகங்கள் காட்டுவது வெறும் போதை . நீங்கள் உங்கள் சுயத்தை இழந்து விடாதீர்கள் . இப்போது மோடிக்கு ஆதரவை தெரிவித்து பின்னர் வருத்தப்படாதீர்கள் என்றார் .

 மேலும் நாங்கள் லால் பகதூர் சாஸ்திரி போன்று கொள்கைக்காக பதவியை ராஜினாமா செய்தோம் . கொள்கைக்காக நாங்கள் நூறு முறைக்கூட பதவி இழப்போம் . தேர்தல் முடிந்த பின்னர் எரிவாயு விலை உயர உள்ளது . நீங்கள் எங்களை பாராளுமன்றம் அனுப்பினால் நாங்கள் அதை தடுத்து நிறுத்தவோம் என்றார் .

வாரணாசி மக்கள் மோடியை தோற்கடித்தால் இந்த வரலாற்று சிறப்புமிக்க நகரம் மீண்டும் ஒருமுறை வரலாற்றில் இடம்பெறும் என்று கூறினார் .

"மக்களை ஏமாற்றும் கலையில் திமுகவை வென்ற அதிமுக" என பேசிய குஷ்பூ!!

வேலூர் தொகுதியில் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக இருந்த குஷ்பூ திடீரென, உடல் நிலை சரியில்லை என்று கூறி அப்பிரச்சாரத்தில் ஈடுபடாமல், சென்னைக்கு திரும்பினார். 

நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட குஷ்பூவிற்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது போல் அவருக்கு கிடைக்கவில்லை. கட்சி தலைமை கேட்டு கொண்டதன் பேரில், திமுகவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார் குஷ்பூ. இந்நிலையில், ஒரு பொதுக் கூட்டத்தில், அ.இ.அ.தி.மு.க கட்சி, மக்களை ஏமாற்றும் கலையில் தி.மு.க.வையே வென்று விட்டது என்று குஷ்பூ கூறியதாகவும், இதனால் அவருடன் பிரச்சாரத்தில் அங்கிருந்த திமுகவினர் கோபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. குஷ்பூ அவ்வாறு பேசியதை அறிந்த கட்சி தலைமை அவர் மீது அதிருப்தியும், கோபமும் அடைந்ததால், அவர் வேலூர் பிரச்சாரத்தில் ஈடுபடாமல், சென்னைக்கு திரும்ப வேண்டியதாயிற்று.

# குஷ்பூ மேடம் நீங்க பேசினது தப்பு.. மக்களை ஏமாற்றும் கலையில் திமுகவை யாரும் வெல்ல முடியாதுனு பேசியிருக்கனும்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு தமிழர்கள் விடுதலையாவதில் குரூர அரசியல் செய்யும் திமுக தலைவர் கருணாநிதி




 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media