மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 28,050.87 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 8,389.90 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது
Monday, 17 November 2014
மும்பை பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 28,050.87 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 8,389.90 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவு
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் கிஸ்போர்ன் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கம் கிழக்கு மற்றும் வட தீவு நகரின் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.
கருப்புப் பணம் மீட்பு விவகாரம் : மோடியின் நிலைப்பாட்டுக்கு ஜி-20 நாடுகள் ஆதரவு
கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டுக்கு ஜி-20 அமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மோடியின் கருத்தை ஏற்று, ஜி-20 நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் மோடி ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த தகவல்களை இந்தியாவுக்கு அளிக்க வேண்டும் என ஜி-20 நாடுகளை கேட்டுக் கொள்கிறேன். கருப்புப் பணத்தால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு, ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளும் தங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். வரி குறித்த தகவல்களைத் தானாக முன்வந்து பரிமாறிக் கொள்வது தொடர்பான உலகளாவிய புதிய திட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கணக்கில் வராத பணம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிவதுடன், அந்தப் பணத்தை மீட்டு அவரவர் நாட்டுக்கு திருப்பிக் கொண்டுவர முடியும். ஜி-20 நாடுகள் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம், கருப்புப் பணத்தால் எழுந்துள்ள சவால்களுக்கு மட்டுமன்றி, பயங்கரவாதம், போதை மருந்துக் கடத்தல், ஆயுதக் கடத்தல், இணையவழிக் குற்றங்களைத் தடுத்தல் ஆகிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்கும் தீர்வு காண முடியும் என்றார் மோடி.
ஜி-20 மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட 3 பக்க கூட்டறிக்கையில், கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் மோடியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலியா சென்றுள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் ஆகியோர் தெரிவித்ததாவது: ஜி-20 நாடுகள் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிப்படையான வரி விதிப்பு, வரி தொடர்பான தகவல்களை வெளியிடுவது ஆகிய அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தலை அடுத்து, பிரேசில், தென்னாப்பிரிக்க அரசுகளும், வெளிப்படைத்தன்மை என்ற வார்த்தையை அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தின. அதைத் தொடர்ந்து, கூட்டறிக்கையில் வெளிப்படைத்தன்மை என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது என்று தெரிவித்தனர். இதேபோல், உணவு தானிய சேமிப்பு விவகாரத்தில், இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதற்கும் ஜி-20 நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மோடி புதிய யோசனை: ஜி-20 மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணப் பிரதமர் கேம்பெல் நியூமென் ஞாயிற்றுக்கிழமை விருந்தளித்தார். இந்த நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது: நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால், அந்த நாடுகளின் மாநிலங்கள், பிற நாடுகளிலுள்ள மாகாணங்களோடும், நகரங்கள், பிற நாடுகளிலுள்ள நகரங்களோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதை இந்தியா வரவேற்கிறது. அதற்கு நானும் எனது ஆதரவை அளித்து வருகிறேன். நவீன தொழில்நுட்பத்தின் மையமாக பிரிஸ்பேன் நகரம் உருவெடுத்துள்ளது. இதேபோல், சைபராபாத் (தகவல் தொழில்நுட்ப நகரம்) என ஹைதராபாத் நகரம் அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே அந்த இரு நகரங்களுக்கும் இடையே சகோதரத்துவ தொடர்பு உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான உறவானது, சிறப்பு வாய்ந்தது ஆகும். குறிப்பாக, ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உறவில், குயின்ஸ்லாந்து மாகாணம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியா, குயின்ஸ்லாந்து மாகாணத்துக்கு இடையே தொழில்நுட்பம், ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பு நிலவுகிறது. குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஏராளமான வர்த்தகப் பிரமுகர்கள், இந்தியாவுக்கு இந்த ஆண்டு வருகை புரிந்தனர். இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான ஆதாரங்களை அளிக்கும் முக்கிய மையமாக குயின்ஸ்லாந்து உருவெடுத்துள்ளது. இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு சிறந்த இடமாகவும் குயின்ஸ்லாந்து திகழ்கிறது. கல்வி, திறன்கள் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கு இந்த மாகாணம் ஆதரவு அளிக்கிறது. இந்தியாவுடன் குயின்ஸ்லாந்து மாகாண ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார் மோடி.
370ஆவது பிரிவு விவகாரம்: ஜம்மு-காஷ்மீர் மக்கள் விருப்பப்படி செயல்படுவோம் : பாஜக
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு விவகாரத்தில், அந்த மாநில மக்கள் விருப்பப்படி செயல்படுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக பொறுப்பாளர் அவிநாஷ் ராய் கன்னாவிடம், 370ஆவது பிரிவை பாஜக நீக்கத் திட்டமிட்டுள்ளதா? என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: இந்த விவகாரத்தில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் விருப்பம் எதுவோ, அதையே பாஜக செய்யும். பிரதமர் நரேந்திர மோடியை காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சஜ்ஜத் லோனே அண்மையில் சந்தித்ததை சுட்டிக்காட்டி, பாஜக கூட்டணியில் அவரை சேர்க்கும் முயற்சி நடைபெறுவதாக தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். அதுபோன்ற சிந்தனை கொண்டவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால், பாஜக மகிழ்ச்சியடையும் என்றார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக ஃபரூக் அப்துல்லா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts
(
Atom
)