BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 16 August 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news


அஞ்சானை தூக்கிவிட்டு சினேகாவின் காதலர்கள், தியேட்டர்களில் திங்கள் முதல் - சூர்யா, லிங்குசாமி அதிர்ச்சி

காதலனின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலி, தான் கேட்டதை வாங்கி தராததால் செய்த விபரீதம்

உலகை அழிக்க , உலகத்தை நோக்கி வரும் விண்கல் !!

மாணவர்களை தாக்கிய சீமான் மற்றும் எஸ்.ஆர்.எம் பச்சைமுத்து ஆட்கள்! ’புலிப்பார்வை’ இசைவிழாவில் ரவுடியிசம்!

செல்போனில் பேசிக்கொண்டே தேசியக்கொடி ஏற்றிய அதிமுக சேர்மன் பதவி  காலியானது

ஊற்றிக்கொண்ட அஞ்சான், ஆனாலும் முதல் நாள் வசூல் பதினொன்றரை கோடியாம்

போட்டியில் வெல்லுவதற்கு முன்னரே ஓவராக ஆட்டம் போட்டதால் , போட்டியில் வென்றும் தங்கத்தை இழந்த வீரர் !!

புதிதாக வர உள்ள ஏ.டி.எம் விதிகள் !! நீங்கள் ஏடிஎம் மில் பணம் எடுக்கும் போது , அதிக பணம் செலுத்த வேண்டியதிருக்கும்

கூகுளின் இப்போதைய எதிரி ஆப்பிள் இல்லையாம் , சுறாவாம் !!

திருடிய மொபைலில் , திருடப்பட்டவரின் பேஸ்புக் அக்கௌண்டில் இருந்து செல்பி போட்டு மாட்டிக் கொண்ட முட்டாள் திருடன் !!

தனது நண்பனைக் கொலை செய்த பின் , எங்கே ஒழித்து வைக்க வேண்டும் என மொபைலிடம் யோசனை கேட்ட மாணவன் !!

செல்பி எடுக்கும் போது தன் கை நன்றாக தெரிவதற்காக 2 லட்சம் ரூபாய் செலவு செய்த பெண் !!

நமக்கு அடிக்கடி எரிச்சலைக் கொடுக்கும் பாப் அப் விண்டோவை கண்டுபிடித்தவர் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார் !!

சுதந்திர தினத்தின் போது தியாகிகளின் ஓய்வுதியத்தை உயர்த்திய தமிழக முதல்வர் !!

குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன், மனைவியிடம் பேசுங்கள்! மனைவியை இழந்து வாடும் பிரபல தமிழக அரசியல்வாதியின் வேண்டுகோள்

டாப் 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனம் !!

செல்போனில் பேசிக்கொண்டே தேசியக்கொடி ஏற்றிய அதிமுக சேர்மன் பதவி நீக்கம்?


நேற்று நடந்த சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியில் பம்மல் நகராட்சி தலைவர் இளங்கோவன் (அதிமுக) இன்று செல்போனில் பேசியபடி தேசியக்கொடியை ஏற்றினார், இது குறித்த ஆதாரப்படங்கள் வெளியாகின, இந்த படங்கள் சற்றுமுன் செய்திகள் பக்கத்தில் வெளியிடப்பட்டது, அதையடுத்து ஃபேஸ்புக்கில் வேகமாக பரவியது, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து போன் பேசிக் கொண்டே தேசியக்கொடியை ஏற்றிய பம்மல் நகர்மன்றத் தலைவர் இளங்கோவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

#ஒரு போன்ல பதவியை இழந்துவிட்டிங்களே சேர்மன் சார்

செல்பி எடுக்கும் போது தன் கை நன்றாக தெரிவதற்காக 2 லட்சம் ரூபாய் செலவு செய்த பெண் !!



இப்போது அனைத்து மக்களிடமும் செல்பி மோகம் ஏற்பட்டுள்ளது . ஒவ்வொருவரும் வித்தியாசமான செல்பி எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வித விதமாக யோசித்து எடுத்து வருகின்றனர் . செல்பி எடுப்பதற்காக எவ்வளவு அளவுக்கு வேண்டுமானாலும் போக வேண்டும் என்றும் , எவ்வளவு ரூபாய் செலவு செய்ய வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்றும் சிலர் துணிந்து விட்டனர் . ஆனால் 33 வயதான ஒரு பெண் தன் கை செல்பியில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக 2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் .

தனது கையில் மோதிரத்துடன் பார்க்க நன்றாக இல்லை என்றதும் , மருத்துவரிடம் சென்று தன் கையை அழகாக மாற்ற சிகிச்சை எடுத்துள்ளார் . அதன்படியே அவரது கையும் அழகானதாக மாற்றப்பட்டுள்ளது .

இந்த சிகிச்சை செய்த பிளாஸ்டிக் சர்ஜன் மருத்துவர் கூறுகையில் , " என்னிடம் வரும் பல பேர் தங்களின் உடம்பு பகுதிகள் செல்பியில் நன்றாக இல்லை , அதை மாற்றி அமைப்பதற்காகவே வருகின்றனர் " என்றார் .

புதிதாக வர உள்ள ஏ.டி.எம் விதிகள் !! நீங்கள் ஏடிஎம் மில் பணம் எடுக்கும் போது , அதிக பணம் செலுத்த வேண்டியதிருக்கும் .


இந்திய ரிசர்வ் வங்கி , வருகிற நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு முறை நீங்கள் பணம் எடுக்கும் போது கட்டணமாக அதிகம் செலுத்த வேண்டியதிருக்கும் . என்ன மாற்றம் , என்ன விதிகள் என்பதைக் கீழ்க் காண்போம் :

  1. மற்ற வங்கி ஏ.டி.எம் பயன்படுத்தும் போது : இதற்கு முன்னால் நீங்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம் பயன்படுத்தி  இலவசமாக மாதத்திற்கு ஐந்து முறை பணம் எடுத்துக் கொள்ளலாம் . ஆனால் நவம்பர் மாதம் முதல் , சென்னை , மும்பை , கொல்கத்தா , பெங்களூரு , ஹைதராபாத் , நியு டில்லி ஆகிய இடங்களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக எடுக்க முடியும் . அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் .  ஆனால் வங்கிகள் ஆசைப்பட்டால் இந்த 3 முறையை உயர்த்திக் கொள்ளலாம் .                                                                                                                                                                                                       
  2. விதிவிலக்குகள் : ஆனால் இந்த புதிய விதிகள் சிறிய மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள் வைத்து இருப்பவர்களுக்கு பொருந்தாது .                                                                                                                                                                                   
  3. சொந்த வங்கி ஏ.டி.எம் பயன்படுத்தும் போது : இனிமேல் சொந்த வங்கி ஏ.டி.எம் பயன்படுத்தி பணம் எடுக்கும் போதும் ஐந்து முறைகளுக்கு மேல் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு . இது அனைத்து இடங்களில் உள்ள ஏ.டி.எம் களுக்கும் பொருந்தும் .                                                                                                                                                                                                                     
  4. எவ்வளவு வசூலிக்கப்படும் :  எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதை வங்கிகள் தான் தீர்மாணிக்க வேண்டும் . ரிசர்வ் வங்கி அதிகபட்சமாக 20 ரூபாய் வரை வசூலிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது .                                                                                                                                                                                                                                                                 
  5. எதுக்கு இந்த புதிய விதி :  ஏ.டி.எம் களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் , அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்புக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது . 

திருடிய மொபைலில் , திருடப்பட்டவரின் பேஸ்புக் அக்கௌண்டில் இருந்து செல்பி போட்டு மாட்டிக் கொண்ட முட்டாள் திருடன் !!



ஸ்மார்ட் போன் ஒன்றை திருடி அதை பயன்படுத்த தெரியாமல் உரிமையாளரின் பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய செல்பியை வெளியிட்டு மாட்டிக் கொண்டார் முட்டாள் திருடன் .



நியுயார்க்கில் கோர்ட்னி ஜில்ஸ் என்பவரின் ஸ்மார்ட்போன் திருடு போனது . இவர் மொபைலை தேடிக் கொண்டு இருக்கும் போது , இவருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது . இவரது பேஸ்புக்கில் யாரோ ஒருவர் செல்பி ஒன்றை வெளியிட்டு இருந்தார் . அப்போது தான் இவருக்கு தெரிந்தது , மொபைலில் இவர் பேஸ்புக்கில் லாக்-அவுட் செய்யாமல் இருந்தது . எனவே அந்த மொபைலை திருடியவர் தான் இந்த செல்பி எடுத்து தெரியாமல் பேஸ்புக்கில் வெளியிட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டு போலிஸிடம் தகவலை தெரிவித்தார் ஜில்ஸ் .

இது குறித்து ஜில்ஸ் கூறுகையில் , " அவருடைய முட்டாள்தனம் எனக்கு சாதகமாக பயன்படுகிறது " என்றார் .

அஞ்சானை தூக்கிவிட்டு சினேகாவின் காதலர்கள், திங்கள் முதல் - சூர்யா, லிங்குசாமி அதிர்ச்சி


ஆயிரம் தியேட்டரில் ரிலீஸ், நூறு கோடி பிசினஸ் என்றெல்லாம் ஒத்தை பட்டன் சட்டை போட்டுக்கொண்டு ஆட்டம் ஆடிய சமந்தா, நான்கு நாட்களாக எந்த சேனலை வைத்தாலும்  அஞ்சான் அஞ்சான் என்று ப்ரோமோ கொடுத்து கிளப்பிய பரபரப்பை அஞ்சான் "சூர்யாவின் சுறா", அஞ்சான் படம் பார்த்துவிட்டு வர்றவன் தான் டா நிஜமா அஞ்சான் என்று யாருக்கும் பயப்படாமல் சமூகவலைதளங்களில் வெளியான விமர்சனங்கள் படத்தை பப்படமாக்கின.

அதே சமயம் எந்த பெரிய நட்சத்திரங்களும் இல்லாமல், புதிய இயக்குனர், புதிய ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் என களம் இறங்கியது சினேகாவின் காதலர்கள். அஞ்சான் அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்தாலும் கிடைத்த தியேட்டர்களின் வெளியானது சினேகாவின் காதலர்கள், ஒரே நாளில் சமூக ஊடகங்கள், பத்திரிக்கை தரப்பில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க தற்போது பிக்கப் ஆகியுள்ளது சினேகாவின் காதலர்கள்

நேற்று 180 பேர் பார்த்த சந்திரன் தியேட்டரில் இன்று ஹவுஸ்புல்லாக 600 பேர்.சென்னையின் எல்லா தியேட்டர்களும் ஹவுஸ் ஃபுல் மதுரையிலும் இப்படத்திற்கான‌ தியேட்டர்கள் அதிகரிப்பு..

திங்கள் கிழமையிலிருந்து உதயம் காம்ப்ளெக்ஸ் சூரியன் திரை அரங்கில் தற்போது ஒரு காட்சி மட்டுமே ஓடும் சினேகாவின் காதலர்கள் படம் 3 காட்சிகளாக‌ உயர்த்த இருக்கிறார்கள்,சினிமாவில் எதுவும் நடக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் வெல்லுவதற்கு முன்னரே ஓவராக ஆட்டம் போட்டதால் , போட்டியில் வென்றும் தங்கத்தை இழந்த வீரர் !!



பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் மகேடியின் மேகிஷி பென்னபத் . இவர் யுரோப்பியன்ஷிப் போட்டியில் 3,000 மீட்டர் ஸ்டிபிள்சேஸ் போட்டியில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டார் . இவர் தன்னுடைய மற்ற வீரர்களை தன்னுடைய வேகத்தால் முந்தினார் . கடைசி தடங்களுக்கு போகும் போது , இவர் தான் கண்டிப்பாக வென்று விடுவோம் என்ற மகிழ்ச்சியில் , தனது பனியனை கழற்றி வாயில் வைத்துக் கொண்டு கரகோஷத்துடன் சந்தோஷமாக முடிவுக் கோட்டை தாண்டினார் .

ஆனால் இவர் சந்தோஷம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை . இவரின் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க போட்டியின் நடுவர் இவருக்கு வந்து மஞ்சள் நிற கார்டை காட்டினார் . போட்டியின் விதிமுறைகளை மீறீயதற்காக இவரின் தங்கப் பதக்கமும் பறிக்கப்பட்டது . இரண்டாவதாக வந்தவருக்கு தங்கப் பதக்கம் என்று அறிவிக்கப்பட்டது .



இது குறித்து அவர் தெரிவிக்கையில் , நான் சந்தோஷத்தில் எனது சட்டையைக் கழற்றி விட்டேன் . பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் தான் அவ்வாறு செய்தேன் . இதற்கு எனக்கு மஞ்சல் கார்டு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை . " என்றார் .

தனது நண்பனைக் கொலை செய்த பின் , எங்கே ஒழித்து வைக்க வேண்டும் என மொபைலிடம் யோசனை கேட்ட மாணவன் !!


மொபைலில் இப்போது எக்கச்சக்க ஆப்ஷங்கள் வந்துள்ளது . இப்போது மொபைலில் நமக்கு உதவ உதவியாளர் ஒன்றும் இருக்கிறது . இவரிடம் நாம் பேசுவது போன்று இவரிடம் பேசி நமக்கு வேண்டிய தகவ்லகளை பெற்றுக் கொள்ளலாம் . இந்த உதவியாளருக்கு ஆப்பிளில் சிரி என்றும் , விண்டோஸில் கோர்டனா என்றும் பெயரிட்டுள்ளனர் . இதை வைத்து ஒரு மாணவன் கொலை செய்து ஒழித்து வைக்க முயன்றுள்ளான் .



அமெரிக்காவில் ப்ளோரிடா மகாணத்தைச் சேர்ந்தவர் பெட்ரோ பிராவோ . இவருடன் இவர் அறையில் தங்கி இருந்தவர் கிரிஸ்டியன் அக்யுலர் . அக்யுலர் பிராவோவின் காதலியுடன் டேட்டிங் சென்றதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது .

இதனால் கோவத்தில் இருந்த பிராவோ அக்யுலரை கொன்றுள்ளார் . கொன்ற அவருக்கு எங்கே ஒழித்து வைக்க வேண்டும் என்று தெரியவில்லை . இந்த நேரத்தில் ஆப்பிள் மொபைலில் உள்ள சிரி என்னும் அப்ளிகேஷனிடம் கேட்டுள்ளார் . அந்த அப்ளிகேஷனும் நான்கு இடங்களுக்கு யோசனை கொடுத்தது .

இந்த விவரங்கள் எல்லாம் , மொபைலில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது . மேலும் 11.31 முதல் 12.01 மணி வரை அவரது மொபைலில் 9 முறை பிளாஷ் லைட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கண்டு பிடித்துள்ளனர் .

இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது .

நமக்கு அடிக்கடி எரிச்சலைக் கொடுக்கும் பாப் அப் விண்டோவை கண்டுபிடித்தவர் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார் !!



நாம் இணையத்தில் உலவிக் கொண்டு இருக்கும் போது திடீரென்று நாம் தேடிக் கொண்டு இருப்பதற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று இன்னொரு விண்டோவில் பாப் அப் ஆக தோன்றும் . ஏதாவது உபயோகமாக இருந்தால் பராவாயில்லை , சம்பந்தமே இல்லாமல் போக்கர் , ஆபாச இணையதளங்களுக்கு செல்லும் லிங்குடன் அந்த பாப் அப் அட் வரும் .

இந்த பாப் அப் விண்டோவினை 1990களில் கண்டுபிடித்தவர் இத்தன் ஜுக்கர்மன் . இவர் இப்போது தன்னுடைய கண்டுபிடிப்பு இவ்வளவு விளைவுகள் ஏற்படுத்தி விட்டது என எண்ணி தன் கண்டுபிடிப்பிற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோரினார் .

இதேப் போன்று தான் அணுகுண்டை கண்டுபிடித்த ஓப்பஹெய்மரும் தன்னுடைய கண்டுபிடிப்பை எண்ணி மிகவும் வருந்தினார் .

இனிமே வயசுக்கு வந்தா என்ன ??? வராட்டி என்ன ??

கூகுளின் இப்போதைய எதிரி ஆப்பிள் இல்லையாம் , சுறாவாம் !!



முன்னனி நிறுவனங்களான கூகுள் நிறுவனத்திற்கும் , ஆப்பிள் நிறுவனத்திற்கும் அடிக்கடி சண்டைகள் வந்து கொண்டே இருக்கும் . இருவரும் தொழில்நுட்ப உலகில் எதிரிகளாகவே இருந்து கொண்டு இருக்கின்றனர் . ஆனால் கூகுள் நிறுவனத்திற்கு இப்போது ஆப்பிள் நிறுவனத்தால் தலைவலி இல்லை , சுறா மீன்களினால் தான் அவர்களுக்கு தலைவலியாம் .

கூகுள் தன்னுடைய கேபில் வயர்கள் அனைத்தையும் கடல் வழியாக கொண்டு செல்கிறது . இந்த வயர்களில் இருந்து ஏற்படும் காந்தப் புலம் , ஆபத்தான மீன்கள் ஏற்படுத்துவதை ஒத்து இருப்பதால் சுறா மீன்கள் தங்களுக்கு உணவு கிடைத்துவிட்டது என எண்ணி இந்த வயர்களை உண்ணுகின்றனர் .

எனவே இந்த சுறாக்களிடம் இருந்து கேபிள்களை காப்பாற்ற கெவ்லான் என்னும் அதிக வலிமை உடைய கவச செயற்கை இழையில் இருந்து இந்த கேபிள்களுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

சுதந்திர தினத்தின் போது தியாகிகளின் ஓய்வுதியத்தை உயர்த்திய தமிழக முதல்வர் !!



இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தையோட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி , சுதந்திர தின உரையாற்றினார் . அந்த உரையில் தியாகிகளின் ஓய்வுதியத்தை உயர்த்தும் அறிவிப்பு உட்ப்பட சில திட்டங்களை அறிவித்தார் . முதல்வர் அறிவித்த திட்டங்கள் கீழ் வருமாறு :

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வுதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் . அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் 4,500 இல் இருந்து 5,000 ஆக உயர்த்தப்படும் . இதன் மூலம் 1,955 பேர் பயனடைவர் .

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறப்பு பணியாற்றி நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊதியமான 2,000 ரூபாய் 4,500 ஆக உயர்த்தப்படும் . இதன் மூலம் 195 பேர் பயனடைவர் .

தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்களில் இனிமேல் கலவை சாதத்துடன் மசால் சேர்ந்த முட்டை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார் .

மேலும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் , டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டங்கள் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார் . 

குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன், மனைவியிடம் பேசுங்கள்! மனைவியை இழந்து வாடும் பிரபல தமிழக அரசியல்வாதியின் வேண்டுகோள்



தமிழக அரசியல்வாதிகளில் நாகரிகமான அரசியலுக்கு சொந்தக்காரராகவும் நேர்மையானவராக, அரசியல்வாதிகளுக்கே உரிய பந்தா இல்லாத வெகுசில அபூர்வமான இன்றைய பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவர் திரு திருச்சி சிவா. சில நாட்களுக்கு முன் அவரது 49 வயதான மனைவி நோயினால் இறந்துவிட்டார், தன் மனைவியோடு நேரம் செலவழிக்காமல் இருந்ததை எண்ணி வருந்தி இந்த நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்று எழுதியுள்ளார்.

காசு பணம் அதிகாரம் வந்தால் காமக்கிழத்திகளை தேடும் மனிதர்கள் வாழும் உலகில் காசு பணம் அதிகாரம் கிடைத்தும் மனைவியை நேசிக்கும் அவர் மரணத்திற்கு வருந்தும் திருச்சி சிவா உயர்ந்த மனிதர்.

மனைவியிடம் பேசுங்கள் !திரு திருச்சி சிவா,MP

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.
அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.

பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.
எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.

மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், எண்ணைக்கான வருவோர் அதனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி;
பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.
பண்டிகைகளும், திருநால்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.

இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தன ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. நேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.
காலம் கடந்து பயன்படுத்தினால் பயனத்துப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.

இத்தனை கற்றும் கடமை தவரியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசகினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருபாயே.

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததைஎல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிரவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........

இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருதப்படதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார்.

நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என சொன்னேன்.
ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோj ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.

தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.
என் மனைவிக்கு என்னை உணர்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன் உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!
நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.
என் வேதனை,
நான்படும் துயரம்
வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம்
அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின்
நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............

இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை எனபது..

உலகை அழிக்க , உலகத்தை நோக்கி வரும் விண்கல் !!



1950 டிஏ என்னும் விண்கல் நம் உலகத்தை 2880 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி உலகை தாக்கும் என கணக்கிட்டுள்ளனர் . ஆனால் அதற்குள் அந்த விண்கல் உலகை தாக்காமல் இருக்கும் வழிமுறைகளை கண்டுபிடித்து விடலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர் . இந்த 1950 டிஏ விண்கள் 2880 ஆம் ஆண்டு உலகை தாக்க 0.3 சதவீத வாய்ப்புகள் தான் இருக்கிறது .


இந்த விண்கல் 1 கிமீ அளவு விட்டம் கொண்டது . ஒரு நொடிக்கு 9 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது . இந்த வேகத்தில் இந்த விண்கல் துகள் துகள்களாக பிரிந்து விட வேண்டும் . ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை .

இந்த விண்கல் ஒரு வேளை பூமியை தாக்கினால் 44,580 மெகா டன் அளவு குண்டு வெடித்தால் என்ன தாக்கம் இருக்குமோ அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் . மேலும் சுனாமியை ஏற்படுத்தும் . உயிர்களுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் .

ஆனால் அதற்குள் இந்த விண்கல்லின் பாதிப்பை தடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் .




தான் கேட்டதை வாங்கி தராததால் , காதலனின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலி !!



தன்னைக் கண்டுக் கொள்ளாததாலும் , தான் கேட்டதை வாங்கிக் கொடுக்காததாலும் , பேஸ்புக்கில் ஒரு பேக் அக்கௌண்ட் உருவாக்கி அதில் தன் காதலனின் நிர்வாண போட்டோக்களை வெளியிட்ட சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது .

வழர்ந்து வரும் தொழிலதிபரான தேவேஷ் ஷர்மாவிற்கு , 20 வயது பெண்ணுடன் கடந்த மாதம் நட்பு ஏற்பட்டது . ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததில்லை . ஆகஸ்ட் 3 ஆம் தேதி நண்பர்கள் தினம் அன்று , தனக்கு 4, 500 ரூபாய்க்கு ஒரு ஹெண்ட் பேக்கும் , விலை உயர்ந்த ஆடையும் வாங்கி தர கேட்டுள்ளார் . ஆனால் ஷர்மா மறுத்து விட்டார் . இருவரும் மொபைல் மற்றும் இணையம் வழி மட்டுமே பேசி வந்தனர் .

ஷர்மா மறுத்த போதும் , அந்த பெண் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்துள்ளார் . அந்த பெண் இவரிடம் 2,00,000 வேண்டும் என்றும் , தொடர்ந்து 20,000 பணத்தை பேங்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என அக்கௌண்ட் நம்பர் கொடுத்தார் . ஆனால் இவை அனைத்தையும் ஷர்மா மறுத்துக் கொண்டே வந்தார் .

இதனால் கோவமடைந்த அந்த பெண் , பேஸ்புக்கில் ஷர்மாவின் போட்டோவினை மார்ப் செய்து அவரது பெயரில் அக்கௌண்ட் ஒன்றை உருவாக்கி , அவரது மார்ப் செய்த நிர்வாண படங்களை பதிந்தார் . சில ஆபாச இணையதளங்களிலும் அவரது எண்ணை பதிந்தார் .

இது குறித்து ஷர்மா சைபர் கிரைமில் பூகார் செய்துள்ளார் .

டாப் 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனம் !!



இந்திய அறிவியல் நிறுவனம் என்று அழைக்கப்படும் இந்தியன் இன்ஸ்டிடுயுட் ஆப் சைன்ஸ் என்ற ஒரே ஒரு பல்கலைக்கழகம்  தான் உலகின் டாப் பல்கலைக்கழக பட்டியலில் இடம் பெற்று இருக்கும் ஒரே கல்வி நிறுவனம் . இந்த பட்டியலில் அமெரிக்க பல்கலைக்கழகங்களே அதிக அளவில் இருக்கிறது .

பெங்களூரில் உள்ள இந்த பல்கலைக்கழக ஜாம்ஷெஜி டாட்டா அவர்களின் உதவியால் தொடங்கப்பட்டது . இது ஒரு ஆய்வு நிறுவனமாக இருக்கிறது . இதனை டாட்டா பல்கலைக்கழகம் என்றும் அழைப்பர் . இந்த நிறுவனம் டாப் பல்கலைக்கழக பட்டியலில் 301-401 ரேங்கிங்க் பிரிவில் இடம் பெற்றுள்ளது . தனிப் பிரிவில் என்று பார்த்தால் இயற்கை மற்றும் கணிதம் பிரிவில் இந்த பல்கலைக்கழகம் 151-201 ரேங்கிங்க் பிரிவில் இடம் பெற்றுள்ளது .

பாடப் பிரிவுகள் என்று தனியேப் பார்த்தால் , கணினி அறிவியல் பாடப் பிரிவில் , இந்திய புள்ளியியல் நிறுவனம் 101-150 ரேங்கிங்க் பிரிவில் இடம் பிடித்தது .

டாப் 3 பல்கலைக்கழகம் :


  1. ஹார்வர்ட் யுனிவர்சிட்டி
  2. ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி
  3. எம்.ஐ.டி 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media