BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 10 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் ரகசியங்கள் பற்றி பெண்கள் யாரிடம் அதிகம் பேசுகிறார்கள்? ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/09/women-talk-to-whom-more-about-personal.html

ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ், இந்தியாவில் செப் 26, சிங்கப்பூரில் செப்19 வெளியீடு, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்
http://www.satrumun.net/2014/09/apple-unveils-bigger-iphone-6-6-plus.html

'கத்தி' விவகாரத்தில் திடீர் திருப்பம் : விஜய், ஏ.ஆர்.முருகதாஸுக்கு தமிழ் அமைப்புகள் முழு ஆதரவு!
http://goo.gl/2ihLKJ

உலகில் ஒரே செம்மொழி தமிழ் மொழி ஒன்றே ஏன்?
http://www.satrumun.net/2014/09/blog-post_27.html

எது உலக அதிசயம், சாய்ந்த பைசா கோபுரமா? பூகம்பத்தை தாங்கும் டெக்னாலஜி கொண்ட‌ தஞ்சை பெரிய கோவிலா?
http://www.satrumun.net/2014/09/blog-post_96.html

கந்து வட்டித் தொழில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வழிமுறைகளை மேற்கொள்ள நீதிமன்றம் ஆணை
http://www.satrumun.net/2014/09/blog-post_10.html

விஜய் படத்தை இயக்கும் அட்லி
http://www.satrumun.net/2014/09/blog-post_70.html

தமிழில் பேசக்கூடாது... : தடை போட்ட கில்டு அமைப்புக்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்!
http://goo.gl/aNxyJ8

பாஜக ஆட்சியில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: வெள்ளையன் பேச்சு
http://www.satrumun.net/2014/09/blog-post_45.html

ரூ.30,000 கோடி பயங்கரவாத எதிர்ப்பு நிதி: அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலைக் கோருகிறார் ஒபாமா
http://www.satrumun.net/2014/09/30000.html

சீன அதிபரின் இந்தியப் பயணம்: முன்னேற்பாடுகள் நிறைவு
http://www.satrumun.net/2014/09/blog-post_17.html

ஜம்மு- காஷ்மீர்: இன்னமும் 4 லட்சம் பேர் தவிப்பு
http://www.satrumun.net/2014/09/4.html

காஷ்மீர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு
http://www.satrumun.net/2014/09/10_10.html

புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் கறிவேப்பிலை !
http://www.satrumun.net/2014/09/blog-post_0.html

45 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க…. : தல 55 படத்தில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
http://goo.gl/ORRtDs

செக்ஸ் ரகசியங்கள் பற்றி பெண்கள் யாரிடம் அதிகம் பேசுகிறார்கள்? ஆய்வு முடிவுகள்


செக்ஸ் குறித்த சிந்தனை இல்லாத மனிதர்களே இல்லை, நித்யானந்தா போன்ற சாமிகள் முதல் ஆசாமிகள் வரை செக்ஸ் நினைப்பு அனைவருக்கும் ஆண் பெண் பேதமின்றி வருகிறது. செக்ஸ் குறித்த சிந்தனைகள் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம். ஒரு நாளைக்கு 19 முறையாவது ஆண்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை வந்து போகும் எனவும் அதுவே பெண்களுக்கு தினமும் 10 முறை வருகிறது என்கிறது ஒரு ஆய்வு.

பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த ஆர்வங்களை, ரகசியங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வில் பெண்கள் மற்ற பெண்களுடன் இருக்கும்போது பல செக்ஸ் விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும் பெண்கள் அவர்களிடம் பல விஷயங்களை பேசிக்கொண்டாலும் பெரும்பாலும் செக்ஸ் குறித்தே ஆர்வமுடன் பேசுகின்றனர். 34 சதவீத பெண்கள் இது போன்று தோழிகளுடன் ஆர்வமாக செக்ஸ் குறித்து பேசுகிறார்கள்.

ஆனால் 16 சதவீத பெண்களே தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது செக்ஸ் தொடர்பான பேச்சை பேசுகிறார்கள். ஆனால் இரவு பார்ட்டிகள் கொண்டாட்டத்தில் இருக்கும் பெண்களில் 57 சதவீதத்தினர் தங்கள் குடும்பம் குறித்த விவரங்களை அலசி ஆராய்கின்றனர் என்றும் 54 சதவீதத்தினர் தங்களது விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து பேசுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே பெண்கள் கும்பலாக ஒன்று சேர்ந்து விட்டால் அவர்கள் பல விஷயங்களையும் பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த வரிசையில் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதானாம் அவர்களில் 64 சதவீதத்தினர் தங்களது கணவர்கள் குறித்தே பேசுகின்றனர், மேலும், பாதிபேர் மற்றவர்களின் உறவுமுறைகள் குறித்த விஷயங்களை ஆர்வமுடன் பேசுவதாக கூறியுள்ளனர்.

12 சதவீதம் பேர் மட்டுமே பொதுவான விஷயங்கள் குறித்து அலசுவதாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி பெண்கள் கணவர்களுடன் இரவில் சுற்றுவதை விட தங்கள் தோழிகளுடன் இரவில் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை எடுக்கின்றனர். 3ல் ஒருவர் தோழிகளுடன் வெளியே சென்று புது ஆடைகளை வாங்கி உடுத்துகின்றனர். 5ல் ஒருவர் தங்கள் கணவருடன் மாலை நேரத்தில் வெளியே செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக 50 நிமிடங்களை அவர்கள் செலவிடுகின்றனர். 9 சதவீதத்தினர் மெல்லிய உள்ளாடைகளை அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

பெண்களுக்கு இரவு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது, இரவில் கணவருடன், தோழிகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புவதால் ஆண்கள் தங்கள் மனைவியை காதலியை இரவில் வெளியே அழைத்து செல்ல அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

உலகில் ஒரே செம்மொழி


செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி ஒன்றே.

தொன்மை,முன்மை , நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, 
தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை  

என பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!

1) தொன்மை (Antiquity)

2) தனித்தன்மை (Individuality)

3) பொதுமைப் பண்பு (Common Characters)

4) நடுவு நிலைமை (Neutrality)

5) தாய்மைத் தன்மை (Parental Kinship)

6) பண்பாடு,கலை,பட்டறவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)

7) பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)

8) இலக்கிய வளம் (Literary Powers)

9) உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)

10) கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)

11) மொழிக் கோட்பாடு (Linguistic Principles)


எது உலக அதிசயம்


உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல்  கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! 

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , தஞ்சையை சுற்றி 100 கிலோமீட்டரில் இவ்வளவு பாறைகளை கொண்ட மலையே கிடையாது..பிறகு இவ்வளவு பாறைகள் எங்கிருந்து வந்தது ? அதை எப்படி கொண்டுவந்தனர் ?உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ? அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ? சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

விஜய் படத்தை இயக்கும் அட்லி


கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனைப் படைத்த படம் ‘துப்பாக்கி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்தப் படத்திற்கு விஜய் கால்ஷீட் தரவுள்ளதாக தகவல் வந்தது. தற்போது விஜய், கலைப்புலி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை இயக்குபவர் அட்லி. இவர் ஏற்கனவே ஆர்யா-நயன்தாரா நடிப்பில் உருவான ‘ராஜா ராணி’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர். சமீபத்தில் இவருக்கும் நடிகை பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அட்லி இயக்கும் அடுத்த படத்தை பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. தற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது ‘கத்தி’ படத்தின் இறுதிக்கட்ட வேலை நடந்து வருகிறது. இப்படத்தையடுத்து சிம்பு தேவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்பிறகு அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

பாஜக ஆட்சியில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: வெள்ளையன் பேச்சு


பாஜக ஆட்சியில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது என்றார்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த. வெள்ளையன். தஞ்சாவூரில் இந்தப் பேரவையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்களுக்கான கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
1991 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் நாட்டில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இது காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமல்லாது, பாஜக ஆட்சியிலும் தொடர்கிறது. தற்போதைய பாஜக ஆட்சியில் ரயில்வே, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் நூறு சத அன்னிய முதலீட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு தொழிலிலும் அன்னியர் ஆதிக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு பாதுகாப்புத் தர நிர்ணய சட்டம், ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் போன்றவற்றுக்கு உலக வர்த்தக ஒப்பந்தம்தான் காரணம். உணவு பாதுகாப்புத் தர நிர்ணய சட்டத்தைக் கொண்டு வருமாறு அன்னிய நிறுவனங்கள் வற்புறுத்துவதால் இங்குள்ளவர்கள் அதைச் செயல்படுத்த முனைகின்றனர்.
அன்னியர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்க நம்பிக்கையோடு முயற்சி எடுப்போம் என்றார் வெள்ளையன்.பின்னர், உணவு பாதுகாப்புத் தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.   காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கனிம வளங்களைச் சுரண்ட முயலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.  மீத்தேன் திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் எம். கணேசன் தலைமை வகித்தார்.
மாநிலப் பொதுச் செயலர் த. தேவராஜ், துணைத் தலைவர்கள் எஸ். ராமானுஜம், என். புண்ணியமூர்த்தி, அவைத் தலைவர் எஸ். ஜயபால், மாவட்டச் செயலர் பி. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.30,000 கோடி பயங்கரவாத எதிர்ப்பு நிதி: அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலைக் கோருகிறார் ஒபாமா


பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, 500 கோடி டாலர் (சுமார் ரூ.30,300 கோடி) ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அதற்கான நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரியுள்ளார். அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒபாமா கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். இதனிடையே, இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. இரு அமெரிக்க செய்தியாளர்களை அந்த அமைப்பினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இதையடுத்து, பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதி குறித்த நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான அதிபர் ஒபாமாவின் செயல்திட்டத்துக்கு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி முக்கிய ஆதாரமாகத் திகழும். பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போராடும் நாடுகளின் கரங்களை வலுப்படுத்த இந்த நிதி உதவும். அமெரிக்கா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வல்லமை மிக்க, பயற்சியும், ஆயுதங்களையும் கொண்ட கூட்டாளிகளை இந்த நிதியின் மூலம் உருவாக்க முடியும். அமெரிக்காவை விட, அமெரிக்காவுக்கு நெருக்கமான அரசுகளே தங்கள் நாட்டின் அரசியல் சூழலையும், நில அமைப்பையும் நன்கு அறிந்து வைத்துள்ளன. அந்தப் பகுதிகளிலிருந்து அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் எழும்போது, அது மிகவும் தீவிரம் அடையாமல் அந்த அரசுகளால் மட்டுமே திறம்படத் தடுக்க முடியும். இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு கோர நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதனையும் ஒரு காரணமாக அதிபர் கூறியுள்ளார். தனக்குப் பிறகு பதவியேற்கவிருக்கும் அதிபருக்கு, இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் பலம் வாய்ந்த கூட்டாளிகளை அமைத்துத் தர ஒபாமா விரும்புகிறார் என்றார் ஜோஷ் எர்னஸ்ட். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை எதிர்கொள்வதற்கான செயல்திட்டத்தை புதன்கிழமை (செப். 10) வெளியிடுகிறார் அதிபர் ஒபாமா.
ஐ.எஸ். அச்சுறுத்தல்:
இராக் புதிய பிரதமருடன் ஆலோசனை இராக்கின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹைதர் அல்-அபாதிக்கு தொலைபேசி மூலம் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இராக்கில் புதிய அரசை அமைப்பதற்கு பிரதமர் அல்-அபாதியும், பிற இராக் தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிக்கு அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்தார். 

இராக் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உறுதியான நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அதிபரின் இந்தியப் பயணம்: முன்னேற்பாடுகள் நிறைவு


சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் முதல் இந்திய அரசுமுறைப் பயணம் தொடர்பாக இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பெய்ஜிங்கில் செய்து வந்த முன்னேற்பாடுகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன. இந்தியாவில் அதிபர் ஜீ ஜின்பிங்கின் நிகழ்ச்சி நிரல், அவர் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையில் இடம்பெறவிருக்கும் பிரச்னைகள் ஆகியவையும் இறுதி செய்யப்பட்டுள்ளன. பெய்ஜிங் வந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் ஜீ ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அதிபரின் இந்தியப் பயண நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் அவரிடம் அளிக்கப்பட்டது.
அத்துடன், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்குமாறு ஒரு கடிதத்தையும் ஜீ ஜின்பிங் தோவலிடம் அளித்தார். அப்போது ஜீ ஜின்பிங் பேசுகையில், ""எனது பயணத்துக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக தோவலை அனுப்பியுள்ளதன் மூலம், சீனாவுடனான நல்லுறவு தங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்திய அரசும், பிரதமர் மோடியும் உலகத்துக்குத் உணர்த்தியுள்ளனர்'' என்று பாராட்டினார். அண்மையில், பிரேசிலில் நடைபெற்ற "பிரிக்ஸ்' நாடுகள் மாநாட்டின்போது மோடியுடனான தனது சந்திப்பை நினைவுகூர்ந்த அவர், ""மோடியுடன் நடத்திய உரையாடல் மிகவும் திருப்திகரமாக இருந்தது.
இந்திய - சீன நல்லுறவு மிகவும் முக்கியமானது என்பதிலும், கருத்தொற்றுமையை நிலைபொறச் செய்வது, ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் இரு நாட்டு மக்களும் நன்மையடைவர் என்பதிலும் எங்களிடையே ஒருமித்த கருத்து நிலவியது. எனது இந்தியப் பயணத்தின் மூலம், அந்நாட்டின் வளர்ச்சி குறித்தும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது குறித்தும் எனக்கு நல்ல புரிதல் ஏற்படும் என நம்புகிறேன்'' என்றார். முன்னதாக, சீனாவின் தேசிய கவுன்சில் உறுப்பினர் யாங் ஜீச்சியையும், வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யையும் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அடுத்த செவ்வாய்க்கிழமை (செப். 16) ஜீ ஜின்பிங் தனது இந்திய சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை (செப். 19) அவர் சீனா திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.எ னினும், ஜீ ஜின்பிங்கின் இந்திய நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை வெளியிட இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் அதிகாரிகளும் மறுத்துவிட்டனர்.

ஜம்மு- காஷ்மீர்: இன்னமும் 4 லட்சம் பேர் தவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் 4 லட்சம் பேர் சிக்கித் தவிப்பதால், அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் முப்படை வீரர்களும் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகளில், இதுவரை 47,000-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த 61 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சம் வீரர்களும் மீட்புப் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். ராணுவத்துக்குச் சொந்தமான 135 படகுகளும், தேசிய பேரிடர் மீட்புப் படைக்குச் சொந்தமான 148 படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறைந்த அளவு படகுகளே இருப்பதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, தில்லியில் இருந்து கூடுதலாக படகுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 47,227 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோருக்கு, 7,200 போர்வைகள், 210 கூடாரங்கள், 42,000 லிட்டர் குடிநீர், 600 கிலோ பிஸ்கெட், குழந்தைகளுக்கான 7 டன் உணவு வகைகள், 1,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 563 டன் நிவாரணப் பொருள்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் போடப்பட்டுள்ளன. தில்லி, சண்டீகரில் இருந்து கூடுதலாக குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடி மருத்துவ உதவிகள் வழங்கும் பணியில், 80 ராணுவ மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன என்றார் அவர். வெள்ள நிலவரம் குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவிக்கையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சுமார் 4 லட்சம் பேர் வரை சிக்கியிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது' என்றனர்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு படப்பிடிப்புக்காகச் சென்ற மலையாள நடிகை அபூர்வா போஸ் உள்பட கேரள மாநிலத்தவர் 300 பேர், வெள்ளப் பகுதிகளில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரில் வெள்ளத்தின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. அதேசமயம், அங்குள்ள "டால்' ஏரியில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அந்த ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ள நீர், அருகிலுள்ள ஹஸ்ரத்பால் மசூதிக்குள் புகுந்துள்ளது. தொடர்மழை, நிலச்சரிவுகள் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை உள்பட மாநிலத்தில் உள்ள பல்வேறு சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, அந்தச் சாலைகளைச் சீர்செய்யும் பணியில் ராணுவப் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்மழை காரணமாக கடந்த 7 நாள்களாக மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர்-லே இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
வைஷ்ணவி கோவிலில் 25,000 பேர் வழிபாடு: ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் திங்கள்கிழமை முதல் பக்தர்கள் மீண்டும் வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்தக் கோவிலில் இதுவரை 25,000 பேர் வழிபாடு நடத்தியுள்ளனர். இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டோர் குறித்த தகவல்களை, அரசு இணையதளத்தில் வெளியிடுமாறு ஜம்மு-காஷ்மீர் அரசை மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

கந்து வட்டித் தொழில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வழிமுறைகளை மேற்கொள்ள நீதிமன்றம் ஆணை

கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி பிரச்னையால் மக்கள்படும் சிரமம் குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யக் கோரி நீதிபதி என்.கிருபாகரன் கடந்த ஆண்டு, தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அந்தக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தானாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்தது. அதில், கந்து வட்டி தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவற்றைத் தடுப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? கந்து வட்டித் தடுப்புச் சட்டம் 2003-ஐ கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குôமரசாமியை நியமித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, இல்லையா என்பதை கண்காணிக்க மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். மேலும், கந்து வட்டி சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற இரண்டு ஆலோசனைகளைப் பரிந்துரை செய்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கந்து வட்டி பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் நியமித்த உதவியாளரும் இரண்டு பரிந்துரைகள் நீதிமன்றத்துக்கு அளித்துள்ளார். அதன்படி, கந்து வட்டியால் பாதிக்கப்படும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்ய வேண்டும். திரையரங்கங்களிலும் இந்தச் சட்டம் குறித்து காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும்.
தவிர, கந்து வட்டி புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கண்காணிக்க மாவட்ட, தாலுகா அளவில் குழு அமைக்க வேண்டும். இதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். போலீஸாருக்கும் கந்து வட்டி கொடுப்பவர்களுக்கும் இடையே உள்ள உறவுகளை முறியடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை போலீஸ் ஆணையர், எஸ்.பி. ஆகியோர் கண்காணிக்க வேண்டும். இது குறித்து தொடர்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்றியதற்கான அறிக்கையை நவம்பர் 15-ஆம் தேதி தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

காஷ்மீர் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக உத்தரகண்ட் முதல்வர்  ஹரீஷ் ராவத் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களோடு உத்தரகண்ட் மக்கள் துணை நிற்பார்கள், இதே போன்று ஒரு துயரமான தருணத்தை நாங்களும் சந்தித்திருக்கிறோம். எனவே அந்த மக்களுக்கு நிவாரண நிதியாக 10 கோடி ரூபாய் உத்தரகண்ட் மாநிலத்தின் சார்பில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ், இந்தியாவில் செப் 26, சிங்கப்பூரில் செப்19 வெளியீடு, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்


சாம்சங் நோட் போன்ற போன்கள் பெரிய ஸ்க்ரீன் ஸ்மார்ட் போன்களில் கோலோச்சிக்கொண்டுள்ளன, இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் என்ற பெரிய ஸ்க்ரீன் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, Bigger than bigger என்ற டேக் லைனோடு அறிமுகப்படுத்த உள்ள இந்த போன்கள் இந்தியாவில் செப்டம்பர் 26ம் தேதியும் சிங்கப்பூரில் செப்டம்பர் 19ம் தேதியும் கிடைக்கும்.

ஐபோன் 6ன் ஸ்க்ரீன் 4.7 இஞ்ச் ஆக இருக்கும், ஐபோன் 6 ப்ளஸ்ன் ஸ்க்ரீன் 5,5 இஞ்ச் ஆக இருக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்துகிறது, 2015 தொடக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு ஃபிட்னஸ் டிராக்கர் ஆகவும் செயல்படும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media