பிஹார் மாநிலத்தில், பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர் போல, பிறர் மீது குற்றம்சாட்டி பேசி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்து வரும் ஊழல், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த பிரச்சினைகளைப் பற்றியும் பதில் அளிக்க இளவரசர் (ராகுல்) தயாராக இல்லை.
பிஹாரில் 2 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் வசதி உள்ளது. அதேபோன்று ஹரியாணாவில் 40 சதவீதம் பள்ளிகளிலும், அசாமில் 7, ஹரியாணாவில் 40, மகாராஷ்டிரத்தில் 45, ராஜஸ்தானில் 22 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் உள்ளது. குஜராத்தில் 71 சதவீத பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. தன்னை அறிவுஜீவி என்று கருதிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் (கபில் சிபல்), ஆகாஷ் டேப்லட் கணினி வழங்கும் திட்டம் என்னவானது என்பது பற்றி உடனடியாக பதில் அளிக்க வேண்டும். அந்த திட்டத்துக்கு செலவிட்ட பணம் எங்கே போனது?
தான் பிரதமர் ஆகி விடுவோம் என்ற கனவில் மிதக்கும் (பிஹார் முதல்வர்) நிதிஷ்குமார், இப்போதெல்லாம் சரியான தூக்கமின்றி தவித்து வருகிறார். அவரின் ஆணவம் எவரெஸ்ட் சிகரத்தை விட மிகவும் பெரியது. உலகில் தன்னைவிட சிறந்தவர் யாருமில்லை என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.
இவ்வாறு மோடி பேசியது மிகவும் சரி என்று நினைப்பவர்கள், லைக் போடுங்கள், இல்லையெனில், உங்கள் கருத்தை கமென்டி செய்யுங்கள்!