BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 10 May 2014

இந்த சூழலிலும் இவ்வளவு மதிப்பெண்களா? சாதனை புரிந்த மாநகராட்சி பள்ளி மாணவி

கண் தெரியாத தந்தை, அம்மா இல்லை, சொற்ப வருமானம் இந்த சூழலில் இவ்வளவு மதிப்பெண்களா? சாதனை புரிந்த மாநகராட்சி பள்ளி மாணவி சவுஜன்யா

சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1168, மதிப்பெண் பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கும் சவுஜன்யாவின் அம்மா ரத்தபுற்றுநோயால் இறந்து போய் விட்டார்.

அப்பாவுக்கு கண் தெரியாது, தம்பி தங்கைகளுடன் சொற்பமாக வரும் வீட்டு வாடகையில் படித்து வெற்றி பெற்று இருக்கின்றார்.

தேர்வு முடிவுகளை பார்த்து விட்டு பார்வையற்ற தகப்பனை அழைத்துக்கொண்டு நடந்து வந்த இந்த சவுஜன்யாவில் கண்களில் ஓராயிரம் சாதனை மகிழ்ச்சி.

செய்த சாதனைக்கும் இன்னும் செய்யப்போகும் சாதனைக்கும் வாழ்த்துகள் சவுஜன்யா

இன்று மாலை பிரச்சாரம் முடிந்த பின், கேஜ்ரிவால், அமித் ஷா, ஜேட்லி வாரணாசியில் இருந்து வெளியேற உத்தரவு


உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரச்சாரம் செய்யும் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலின் குடும்பத்தினர், பாஜக தலைவர்கள் அமித்ஷா, அருண் ஜேட்லி ஆகியோர் இன்று மாலை பிரச்சாரம் முடிந்ததும் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாரணாசி கூடுதல் ஆட்சியர் (நகர்ப்புறம்) எம்.பி.சிங் கூறியதாவது: எந்த கட்சிக்கோ அல்லது வேட்பா ளருக்காகவோ பிரச்சாரம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளராக இல்லா மல் இருந்தால் அவர்கள் பிரச்சார கெடுகாலம் முடிந்ததும் வெளியேற்றப்படுவார்கள். இதற்கான நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ளும். இதில் கட்சி பாரபட்சம் காட்டுவதில்லை.

வாக்காளராக இல்லாத ஒருவர், பிரச்சார கெடு காலம் முடிந்த தும் அவர் தொகுதியில் இருப் பதை அனுமதிக்கமாட்டோம். பிரச்சாரம் முடிந்ததும் அவரை வெளியேற்றுவோம். கேஜ்ரிவால் குடும்பத்தி னராக இருக்கட்டும் அல்லது பாஜக தலைவர்கள் அமித் ஷா போன்றவர்களாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் அவர்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று சிங் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையை நிறைவேற்ற தயாராக இல்லை: ராஜபக்சே


ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முன்வைத்த பரிந்துரைகளில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்சே தெரிவித்துள்ளார்.

ஜப்பான் வெளியுறவு துணை அமைச்சர் செய்கி கிஹாரா, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, "இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கிறது. இந்த உண்மையை பிற நாடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்" என ஜப்பான் பிரதமரிடம் ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஜப்பான் அமைச்சர் கூறுகையில்: "இத்தீர்மாணம் இலங்கைக்கு எந்தவிதத்திலும் உதவாது. மேலும், இலங்கை அதன் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தானே தீர்வு காணும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனாலேயே தீர்மானத்தை புறக்கணித்தோம்" என்று கூறினார்.

மோடிக்கு இந்தியாவைப் பற்றிய தெரியவில்லை - ராகுல் காந்தி

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வாரணாசியில் இன்று கடைசிக் கட்ட பிரச்சாரம் நடந்தது . இன்றைய தினத்தில் காங்கிரசின் ராகுல் காந்தி வாரணாசியில் வீதிப் பிரச்சாரம் மேற்கொண்டார் . இதனை பலர் மோடி ராகுலின் அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டதற்கு போட்டியாகக் கருதினர் .

அப்போது ராகுல் அளித்த பேட்டியில் , காங்கிரசு மக்களின் கனவை நிறைவேற்றும் ஆனால் மோடி அதானியின் கனவை தான் நிறைவேற்றுவார் . பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளது , ஆனால் இந்தியா அன்பால் இயங்குகிறது . இந்தியா ஹிந்து , முஸ்லிம் , கிருத்துவம் என அனைவருக்கும் ஆனது . அனைத்து சமய , அனைத்து சாதி மக்களுக்குமானது . மோடிக்கு இந்தியாவைப் பற்றிய புரிதல் தெரியவில்லை . இந்தியாவிடம் சக்தி இருக்கிறது , அதை தனியாக கொடுக்க தேவையில்லை . இந்தியாவின் பெண்களுக்கு சக்தி கொடுக்கும் நீங்கள் முதலில் அவர்களுக்கு மரியாதை கொடுங்கள் என்றார் .


தொடர்ந்து மற்றவர்களுடன் வாதங்களில் ஈடுபடுபவரா நீங்கள்? அவசியம் நீங்கள் படிக்க வேண்டிய செய்தி..


வாழ்க்கைத்துணை, நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்யும் இடத்தில் உடனிருப்போர் போன்றோருடன் தொடர்ந்து வாதங்களில் ஈடுபடுவது நடுத்தர வயதிலேயே மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும் என்று டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆண்கள் மற்றும் வேலையில்லாதோர் இத்தகைய பாதிப்புகளை விரைவில் அடைவார்கள் என்று தொற்றுநோய் மற்றும் சமூக சுகாதார இதழில் வெளியிட்டுள்ள தங்களின் கட்டுரையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெருங்கிய குடும்ப உறவுகளினால் பெறும் கவலைகள், கோரிக்கைகள் போன்றவையும் அதிகளவு மரண ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு தனி நபரின் ஆளுமை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன் போன்றவையும் இந்தக் கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கை வகிக்கின்றன. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் குழு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வாதங்கள் ஆண் அல்லது பெண்ணின் அகால மரண வாய்ப்பை சாதாரணமானதை விட இரண்டு அல்லது மூன்று முறை அதிகரிக்கின்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும் இதற்கான காரணங்களை அவர்களால் தெளிவாக விளக்க முடியவில்லை.

இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இத்தகைய வாதங்களை மேற்கொள்வோர் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்துக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த சமூக சூழ்நிலைகளும், நண்பர்களின் பரந்த வலைப்பின்னலும் ஒருவரின் சுகாதாரத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஒருவரின் ஆளுமைத்தன்மையும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதுவும் ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டன.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அழுத்தம் குறித்த உடலியல் விளைவுகளான உயர் ரத்த அழுத்தம், அதிகரிக்கும் இதய நோய் ஆபத்து போன்றவை மரண ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: ஜெ.விற்கு கருணாநிதி வலியுறுத்தல்


முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், நிர்வாக ரீதியான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 "முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டபோது, 'முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது' என்று சுருக்கமாகப் பதில் அளித்தேன்.

ஆனால், ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி வெளியிட்ட அறிக்கையில் வேண்டுமென்றே வழக்கம்போல என்மீது அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.

அதற்குப் பதிலளித்திடும் வகையிலேதான் கடந்த 8-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

தற்போது (10-5-2014) ஜெயலலிதா “முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்” என்று எனக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஜெயலலிதா தன்னுடைய அறிக்கைகளில் அடிக்கடி “சாத்தான் வேதம் ஓதுகிறது” என்று குறிப்பிடுவது வழக்கம். முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை, என்னுடைய அறிக்கையையும், ஜெயலலிதாவினுடைய அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து கொள்வார்கள்.

ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு மாற்றல் மனு ஒன்றை 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று ஜெயலலிதா முல்லைப் பெரியாறு

பிரச்சினையை மீண்டும் அரசியலாக்கி ஆதாயம் தேட எத்தனித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு தாக்கல் செடீநுததற்குப் பிறகு தி.மு.க அரசு தொடர்ந்து எப்போதும் போல முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

எனினும் எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்க நினைக்கும் ஜெயலலிதா, இனியாவது குறைந்தபட்சம் முல்லைப் பெரியாறு பிரச்சினையையாவது அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், அது

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை - பொதுமக்களின் குடிதண்ணீர்ப் பிரச்சினை என்பதால், அரசு நிர்வாக ரீதியான தொடர் நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்வதே நல்லது".

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

பொல்லார்ட் , ஸ்டார்க் மோதல் !!! நடந்தது என்ன ??

.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஆறாம் தேதி  இரவு நடந்தது . அப்போது 17ஆம் ஓவர் வீச ஸ்டார்க் வந்தார் . அப்போது பொல்லார்ட் ஏதோ காரணத்திறகாக பந்து பிடிக்க நிற்கவில்லை . ஆனால் ஸ்டார்க் தொடர்ந்து ஓடி வந்து பந்தை பொல்லார்ட் நோக்கி வீசினார் . இதனால் ஆத்திரமடைந்த பொல்லார்ட் பேட்டை ஸ்டார்க் மீது ஓங்கி வீசினார் . அதிர்ஷ்டவசமாக அது கை தவறி பொல்லார்ட் அருகினில் விழுந்தது . களத்தில் இருந்த நடுவர்கள் சண்டையை பேசி முடித்தனர் . பின்னர் பொல்லார்டின் சக நாட்டு வீரரான கெயில் பொல்லார்டை
சமாதானம் செய்தார் .

போட்டி முடிந்த பின்னர் ஸ்டார்க் , பொல்லர்ட் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது . ஸ்டார்க் 50சதவீதம் அபராதமும் , பொல்லார்டுக்கு 75 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது .


இதன் பின்னர் கெயில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எவ்வாறு பொல்லர்டை சமாதானம் செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் , நான் பொல்லார்ட் தலையில் குட்டு விடுவேன் என்று சொல்லி சமாதானம் செய்த்தாக கூறினார் .   

பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவார்கள் எனக் கூறிய ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டது குறித்து விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், மறுபடியும் பிரச்சனையில் சிக்கியுள்ளார் ராகுல் காந்தி.  பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவார்கள் என்று ராகுல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூறியதற்காக அவர் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன்னில் மே 1ந் தேதி நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே ராகுல் இவ்வாறு பேசியிருந்தார். இது குறித்து பா.ஜ.க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. பா.ஜ.க.வின் புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் மீறியதற்கான முகாந்திரம் உள்ளதாக கூறியுள்ளது. மற்ற கட்சிகளின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக ஆதாரமற்ற கருத்துகளை கூறுவது தவறு என ஆணையம் கருதுகிறது. வரும் 12ந் தேதிக்குள் இது குறித்து விளக்கமளிக்குமாறு ராகுலுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

39 மக்களவை தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 58 மத்திய வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமனம்


தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

வாக்குஎண்ணும் பணிக்காக 39 மக்களவை தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 58 மத்திய வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு மேசையிலும் மத் திய அரசு ஊழியர் ஒருவர் நுண் பார்வையாளராக நியமிக்கப்பட் டிருப்பார். வேட்பாளர்கள், ஒரு மேசைக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்ளலாம். உரிய ஆவணம் மற்றும் முறையான அனுமதி பெற்ற நபர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் நடவடிக்கை வீடியோ படம் எடுக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தினுள் செல்போன், ரெக்கார்டர் போன்ற மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும், வேட் பாளர்கள் பெற்ற வாக்குகள் விவ ரம் வெளியிடப்படும். அதன் நகல், முகவர்கள், வேட்பாளர்கள் மற் றும் தேர்தல் நடத்தும் அதிகாரிக் குத் தரப்படும். தேர்தல் முடிவினை அறிவிக்கும் முன்பாக, பார்வையா ளரின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

தேர்தலில் பிரணாப் முகர்ஜி வாக்களிக்க போவதில்லை


மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதியில் கடைசி கட்டமாக மே 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தொகுதியின் வாக்காளரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அன்றைய தினம் கொல்கத்தா சென்று வாக்களிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் வேணு ராஜ்மோனி டெல்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியபோது, தனது நடுநிலைத்தன்மையை வெளிப் படுத்தும் வகையில் மக்களவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாக்களிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துவோர் உலகம் முழுவதும் 100 கோடி பேர், இதில் 60 கோடி பேருடன் இந்தியா முன்னிலை!


காலரா, வயிற்றுப்போக்கு, டையாரியா, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு போன்ற நோய்கள் தோன்றவும் பரவவும் காரண மாக இருக்கும் திறந்தவெளி மலம் கழித்தல் பழக்கத்தை உலகம் முழுவதும் இன்றும் மக்கள் பின்பற்றுகிறார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் மரணமடைவதற்கு இப்பழக்கம் முக்கிய காரணியாகும்.

“சுகாதாரத்தைப் பேண வறுமை மிகுந்த நாடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் முயற்சிகள் அதற்காகச் செலவழிக்கப்பட்ட பணம் எல்லாமும் வீண். மனப்பாங்கு மாற வேண்டுமே தவிர, கட்டமைப்பைக் குறை சொல்லி பயனில்லை. பல இடங்களில் கழிப்பறைகள், தேவையற்றப் பொருட்களை வைத்திருக்கும் கிடங்குகளாகத்தான் பயன் படுகின்றன” என ஐ.நா. புள்ளியியலாளர் ரோல்ப் லூயென்டிக் தெரிவித்துள்ளார்.

திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த பல நாடுகள் இன்று அப்பழக்கத்தை கைவிட்டிருக் கின்றன.

1990களில் வியட்நாமிலும், வங்காள தேசத்திலும் மூன்றில் ஒருவர் இப்பழக் கத்தைப் பின்பற்றினர். எனினும், தொடர்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளால் 2012-ல் இப்பழக்கத்தை இந்நாடுகள் முற்றிலும் கைவிட்டிருக்கின்றன. 1990-ல் இருந்ததைவிட தற்போது திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியாகக் குறைந்திருக்கிறது. அந்த நூறு கோடியில் 90 சதவீதம்பேர் கிராமங்களில் வாழ்கிறார்கள்.

ஐ.நா.வின் இந்த அறிக்கையில் இப் பழக்கத்தைப் பின்பற்றும் 60 கோடி பேருடன் முன்னிலை வகிக்கிறது இந்தியா.
இந்திய அரசு ஏழைகளுக்குக் கழிப்பறை கட்டிக்கொடுக்க பல கோடிகளை செலவழித்துள்ளது. மத்தியில் இருந்து பகிரப்பட்ட இந்தப் பணம் மாநிலங்களுக்குச் சென்றது. இதைச் செயல்படுத்த மாநிலங்கள் தங்களுக்கென தனி பாதையைப் பின்பற்றின. ஆனால் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்த்தால், அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடையவில்லை என்று தெரிகிறது” என்கிறார் லூயென்டிக்.

“இந்தியாவில் மிகவும் அதிர்ச்சியளித்த விஷயம், திறந்தவெளியில் மலம் கழிப் பதைப் பின்பற்றும் பெரும்பாலானவர் களிடம் கைப்பேசியும் இருக்கிறது என்பதுதான்” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மீரா நீரா.

2025-க்குள் இப்பழக்கத்தை ஒழிப்பது என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

+2 தேர்வில் ஃபெயில் என பொய் கூறி விளையாடியதை நம்பி மாணவி தற்கொலை


கர்நாடகாவில் இட்டமாடு கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரப்பா-குமாரி தம்பதிய‌ரின் மகள் தேஜஷ்வினி (18)  பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கர்நாடக மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இட்டமாடு கிராமத்தில் தேர்வு முடிவுகளை பார்க்க இணையதள வசதி இல்லை.எனவே பிடதியில் உள்ள உறவினர் அனுமந்தப்பாவிடம் தேஜஷ்வினியின் முடிவுகளை இணையதளத்தில் பார்க்குமாறு கூறிவிட்டு குமாரியும் ராமசந்திரப்பாவும் வேலைக்குச் சென்றுவிட்டனர். தேஜஷ்வினியின் தேர்வு முடிவுகளை பார்த்த அனுமந்தப்பா அவரை செல்போனில் தொடர்புகொண்டு, 'நீ தேர்வில் தோல்வியடைந்து விட்டாய். ஒழுங்காக படிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தாய்' என விளையாட்டாகத் திட்டியிருக்கிறார். அதே நேரத்தில் தேஜஷ்வினியின் தந்தை ராமசந்திரப்பாவிடம் செல்போனில் பேசிய அவர், 'நான் தேஜஷ்வினியிடம் விளையாட்டுக்கு பரீட்சையில் ஃபெயில் என சொல்லி இருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் கோபமாக பேசுங்கள்' என சொல்லி இருக்கிறார்.

மதியம் 12.30 மணிக்கு இனிப்புகளுடன் வீட்டுக்கு வந்த ராமசந்திரப்பா, மகள் தேஜஷ்வினியை தேடினார். வீடு முழுக்க தேடியும் அவரை காணவில்லை. மதியம் 2 மணியளவில் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றை பார்த்தபோது தேஜஸ்வினி சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் மாரடைப் பால் தேஜஸ்வினி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. “கிணற்றில் குதிக்கும்போதே அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது” என உறவினர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு தேஜஷ்வினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அவரின் கண்களை பெற்றோர் தானம் செய்தனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media