BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 17 August 2013

மெட்ராஸ் கஃபே படத்தை வெளியிட தடைவிதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

மெட்ராஸ் கஃபே  படத்தை வெளியிட தடைவிதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கும் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஈழத்தமிழர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கிறது என்றும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக தமிழர்கள் செயல்பட்டது போன்றும் எடுக்கப்பட்டுள்ளது, இப்படத்திற்கு ராஜபக்சே நிதி உதவி செய்துள்ளார் என்றும் இப்படம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்றும் இதனால் இப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், அது வரை இப்படத்தை வெளியிடக்கூடாது என்று தடைவிதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் வழக்கறிஞர் எழிலரசு, இந்த  மனுவை தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்று  கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

# இந்திகாரர்கள் தமிழர்களை, அதுவும் ஈழத்தமிழர்களை பற்றி நல்லபடியாக படம் எடுத்திருந்தால் தான் ஆச்சரியப்படனும்.

ஆபத்தில் உதவாத கல்லூரி நிர்வாகம்

வேலூர் அருகே சித்தூர், காட்பாடி சாலையில் கிங்ஸ்டன் என்ற பொறியியல் கல்லூரி தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களது மகன் கதிர்ஆனந்த் துரௌமுருகனால் நடத்தபட்டு வருகிறது, இக்கல்லூரியில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அதிகம் படிக்கிறார்கள்.

தெலுங்கானா பிரிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்ததை தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் தமிழ்நாடு, ஆந்திராவுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தபட்டு இருக்கிறது, கல்லூரி நிர்வாகமும் தமது பேருந்து சேவையை நிறுத்தி வைத்தது. ஆதலால் மாணவர்கள் தங்களது மோட்டார்சைக்கிள் அல்லது ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.

கடந்த செவ்வாய் அன்று இந்த கல்லூரியில் படித்து வரும் ஷர்வான்குமார் மற்றும் சாய் சந்துரு கல்லூரி முடித்து வீரு திரும்பும் நேரத்தில் சித்தூர் சாலையில் விபத்து நடந்தது, இதுல் மாணவர் ஷ்ர்வான்குமார் படுகாயமைந்தார். உடனடியாக கல்லூரிக்கு அழைத்த சாய் சந்துரு கல்லூரியில் இருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்திருக்கிறது.

தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்ட மாணவர் ஷர்வான் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார், இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வேலூர்-திருப்பதி சாலையில் மறியல் செய்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

விரைந்த வந்த காவல்துறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது, பேருந்து சேவை மீண்டும் தொடங்கும் வரை ஆந்திரா மாணவர்கள் தங்க கலூரி நிர்வாகம் விடுதி சேவை தர வேண்டும், விபத்தில் உயிரிழந்த மாணவன் ஷிர்வான் குமார் குடும்பத்தார்க்கு உதவி தொகையாக 25 லட்சம் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

கல்லூரி நிர்வாகத்திடம் பேசி ஆவண செய்வதாக காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததின் பெயரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் தலைவா படத்தை வெளியிட தயார் என அன்பு பிக்சர்ஸ் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் தலைவா படத்தை வெளியிட தயார் என அன்பு பிக்சர்ஸ் அறிவிப்பு

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் அவர்களின் அன்பு பிக்சர்ஸ் சார்பில் தங்களிடம் உள்ள 300 தியேட்டர்கள் மூலம்  தமிழகம் முழுவதும் தலைவா படத்தை வெளியிட தாங்கள் தயாராக உள்ளதாகவும், தலைவா திரைப்படத்தை தடையில்லாமல் வெளியிட எங்களுக்கு தெரியும், என்றும் தற்போது தமிழகத்தில் அனைவருக்கும் தலைவா படம் வெளிவருவதை எதிர்பார்க்கிறார்கள் என்றும் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே தலைவா படம் வெளியாக வேண்டி விஜய் இருக்கவிருந்த உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டதும், அதே திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏவின் இந்த அறிக்கையும் தலைவா பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூச முடிவெடுத்துள்ளது தெரிகிறது.

திமுக ஆட்சியில் விஜய்யின் காவலன் படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டபோது அதிமுக தரப்பு தனது 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களை கொடுத்து உதவ முன்வந்தது, தற்போது அதே போன்று திமுக தரப்பு முன்வந்துள்ள நிலையில் இது தலைவா வெளியீட்டுக்கு எதிராக அரசின் வேகத்தை அதிகப்படுத்தும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

# ரைட்டு தலைவா படத்துக்கு சைத்தான் சைக்கிள்ள வருது

தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி..

நடிகர் விஜய், அமலாபால் நடித்து இயக்குனர் விஜய் இயக்கி மிஸ்ரி ப்ளீம்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்த தலைவா படம் தமிழகத்தை தவிர உலகமெங்கும் கடந்த ஒன்பதாம் தேதி வெளியானது.

தமிழகத்தில் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருந்ததால் திரையரங்க உரிமையாளர்கள் தலைவா படத்தை திரையிட மறுத்தனர், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரியது, ஆனால் காவல்துறை இது உங்களுக்கும் திரையரங்குக்கும் உள்ள பிரச்சனை அதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் நடக்கும் உங்கள் உண்ணாவிரததிற்கு அனுமது தரமாட்டோம் என மறுத்தது.

விஜய் தரப்பில் சட்ட ரீதியாக இப்பிரச்சனையை சந்திக்க தமிழக அரசு மீது வழக்கு தொடர ஆலோசனைகள் நடந்து வரும் வேளையில் தீடிரென தலைவா பட தயாரிப்பாளர் நெஞ்சுவலியால் அவதிபட்டு வடபழனி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலைவா படம் வெளியாகவில்லை என்றால் கோடிக்கணக்கில் கடனாளி ஆகிவிடுவேன் என சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார், அதை தொடர்ந்து அவருக்கு இருந்த மன உளைச்சலே நெஞ்சுவலிக்கு காரணம் என கூறப்படுகிறது.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 50வது பிறந்த நாள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 50வது பிறந்த நாள்

தலித் மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்காகவும் அம்மக்கள் மீதான சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் தமிழகத்தில் அமைப்பை கட்டி எழுப்பி தொடக்கத்தில் தேர்தல் பங்கெடுப்பில் நம்பிக்கையின்றி பின் மூப்பனார் அவர்கள் விருப்பத்தில் தேர்தல் களம் இறங்கி இன்று எம்பி யாகி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 50வது பிறந்தநாள் பொன் விழா பிறந்த நாள் அவர்கள் தொண்டர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது,

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தும், தமிழ்தேசிய அரசியலை கொண்டு இயங்கும் அமைப்பு கட்டியும் தலித் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தையும் நோக்கமாக கொண்டு போராடும் திருமா அவர்களின் நேற்று  பொன்விழா பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடைபெற்றது.

# திருமா சார் உங்களுக்கு மனமார்ந்த பொன்விழா பிறந்தநாள் வாழ்த்துகள் 

கல்லா கட்டுமா விஜயின் ஜில்லா........?

தலைவா படம் வெளியாவதில் தொடர்ந்து இருந்து வரும் தடைகள் காரணமாக படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நேரத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தின் தயாரிப்பு குழுமத்திற்கு படத்தை நிறுத்த சொல்லி சில ரகசிய ஆலோசனைகள் சில நண்பர்கள் மூலம் வந்துள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் மோகன்லால், பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள்

துப்பாக்கிக்கு பிறகு காஜல் அகர்வால் ஜோடி சேரும் ஜில்லா படம் 30% முடிவடைந்த நிலையில் உள்ளது, இப்படத்தில் நடிக்க வேண்டாம் என காஜல் அகர்வாலுக்கும் மிரட்டல்கள் தருவதாக தகவல் வந்துள்ளது. தயாரிப்பாளர்கள் தரப்பு படத்தை இத்துடன் முடித்து கொள்ளலாமா அல்லது வேறு நடிகரை நாயகனாக வைத்து புதிதாக தொடங்கலாமா என யோசித்து வருகிறது.

# அடுத்த வடிவேலு ஆக்கிருவாங்க போலயே



எலிக்கு வலை வச்சா ஏரோபிளேனா மாட்டும்.

கீரமங்கலம் பகுதி மக்கள் தான் உண்டு, தன் வேலை உண்டு என வாழ்பவர்கள், அந்த கிராமத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளியே வராது. அப்படி அமைதியே உருவான கீரமங்கலம் கிராமத்தில் சில நாட்களாக புது சிக்கல் உருவாகியது, அவ்வபோது ஆடு, சைக்கிள் என வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டவை காணமல் போயின.

வேறு வழியின்று பொதுமக்கள் காவல்துறையில் புகார் அழித்தனர், காவல்துறை செல்வநாயகம் என்பவரை அங்கே இரவு ரோந்து பணிக்கு அனுப்பியது, ஆகினும் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை, எப்படியும் திருடனை பிடிக்க வேண்டும் என மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்ட காவலர் செல்வநாயகம் திருடனை பிடிக்க பொறி வைக்க நினைத்தார்.

கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடை வாசலில் தனது சைக்கிளை நிறுத்தினார், அந்த கடை வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அவரது சைக்கிள் முழுவதுமாக வருமாறு பார்த்துக்கொண்டார், பின் எதிரில் இருக்கும் கடை மறைவில் அமர்ந்து திருடனுக்காக காத்திருந்தார்.

வெகுநேரம் ஆகியும் திருடன் வரவில்லை, ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் லேசாக கண்ணசந்தார் செல்வநாயகம், சட்டென்று முழித்த அவருக்கு அதிர்ச்சி, எதிரியில் சைக்கிளை காணோம், சுற்றியிருந்த தெருக்களிலும் காணோம். கண்காணிப்பு கேமராவில் சோதித்த பொழுது அதிகாலை 4.30 மணியளவில் தலையில் முண்டாசு அணிந்த ஒருவர் சைக்கிளை எடுத்து சென்றது தெரிகிறது. தற்பொழுது பல திருட்டு புகார்களுக்கு மத்தியில் செல்வநாயகம் சைக்கிளை காணோம் புகாரும் இருக்கிறது.

# காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா............. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media