இந்தியாவில் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்படும் தொகை ஒரு ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய்கள், அதில் 46% அச்சு ஊடகங்களுக்கும், 47% தொலைகாட்சி ஊடகங்களுக்கும் செலவழிக்கப்படுகின்றது. 7% மட்டுமே இணையத்தில் செலவழிக்கப்படுகிறது, 7% என்பது 1,050 கோடி ரூபாய்களாகும்.
இணையத்தில் விளம்பரங்களுக்கு செலவழிப்பதில் முதலிடத்தில் வங்கிகளும், கடன் தரும் நிறுவனங்களும் உள்ளன, இதை அடுத்த இடத்தில் வேலை வாய்ப்பு விளம்பரங்கள், அதற்கடுத்து படிப்பு மற்றும் ட்ரெயினிங் விளம்பரங்கள் உள்ளன.
ஆன் லைன் விளம்பரங்களை பற்றி பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் இது வரை கண்டு கொள்ளவில்லை, அதுவும் குறிப்பாக தமிழில் இது குறித்து விழிப்புணர்வே வணிக நிறுவனங்களிடம் இல்லாமல் உள்ளது. பேப்பர், டிவி ஊடகங்களை விட ஆன் லைன் விளம்பரங்கள் துல்லியமானது. மிகச்சரியாக எந்த கஸ்டமரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களிடம் சேர்க்க இயலும்.
இணையத்தின் அபார வளர்ச்சியும், ஸ்மார்ட் போன்களின் மாபெரும் வளர்ச்சியும் ஆன் லைன் விளம்பரங்களை முக்கியமான இடத்தில் கொண்டு வந்துள்ளது, ஆன் லைன் விளம்பரங்களை வணிக நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அந்நிறுவனங்களுக்கு தான் தான் இழப்பாகும்.
இணைய விளம்பரங்களின் சிறப்பம்சங்களாக கீழ் கண்டவைகளை குறிப்பிடலாம்
1) துல்லியமாக அளவிடும் வசதி, உங்கள் விளம்பரங்கள் எத்தனை பேரின் பார்வைக்கு சென்றுள்ளது, எவ்வளவு பேர் உங்கள் விளம்பரத்தை அழுத்தி உங்கள் தளத்திற்கு வந்துள்ளார்கள், என்கிற கணக்கு ஆன் லைன் விளம்பரங்களில் துல்லியமாக அளக்கலாம், இதையே டிவி அல்லது பேப்பர் விளம்பரங்களில் செய்ய இயலாது.
2) டிவி, பேப்பர் விளம்பரங்களின் விலை மிக அதிகமானது, சிறு, குறு தொழில் வணிக நிறுவனங்கள் செலவு செய்ய இயலாது, ஆனால் ஆன் லைன் விளம்பரங்கள் ஒரு டாலருக்கு கூட செய்ய இயலும்.
3) டிவி, ப்ரின்ட் விளம்பரங்களை விட ஆன்லைன் விளம்பரங்கள் விலை மலிவானது
4) உங்களுடைய துல்லியமான கஸ்டமர்களிடம் கொண்டு சேர்க்க இயலும், உதாரணத்திற்கு மதுரையில் உள்ள குறிப்பிட்ட கடை விளம்பரம் மதுரை கஸ்டமர்களுக்கு மட்டும் கொண்டு சேர்க்க வேண்டுமெனில் இணையத்தில் அதை செய்ய இயலும், ஆனால் டிவி விளம்பரங்களிலோ பேப்பர் விளம்பரங்களிலே அதை செய்ய இயலாது. குறிப்பிட்ட டார்கெட் ஆடியன்சிற்கு விளம்பரம் செய்ய இயலும்
Cost per mille (CPM)
ஆயிரம் முறை உங்கள் விளம்பரங்கள் காண்பிப்பதற்கு எவ்வளவு விலை என்பது தான் CPM ஆகும், உதாரணத்துக்கு ஒரு CPM(1000) க்கு 30 ரூபாய் என்றால் உங்கள் விளம்பரங்களை ஒரு இலட்சம் முறை காண்பிப்பதற்கு 30X100 = 3000 ரூபாய் ஆகும்.
Click-through rate (CTR)
நூறுமுறை உங்கள் விளம்பரம் காண்பிக்கப்படும் போது எத்தனை முறை அந்த விளம்பரம் கிளிக் செய்யப்படுகிறது என்பதை Click-through rate (CTR) என்பார்கள். எடுத்துக்காட்டாக நூறுமுறை உங்கள் விளம்பரம் காண்பிக்கப்படும் போது அதை இரண்டு பேர் கிளிக் செய்திருந்தால் Click-through rate இரண்டு ஆகும்.
Cost Per Click (CPC)
Cost Per Click என்பது ஒவ்வொரு முறை உங்கள் விளம்பரம் கிளிக் செய்யப்படும் போதும் அதற்கான கட்டணம் எவ்வளவு என்பது.
பெரும்பாலும் ஆன்லைன் விளம்பர கட்டணங்கள் Cost Per Click (CPC) அல்லது Cost per mille (CPM) முறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன.
என்னென்ன மாதிரியான விளம்பரங்கள் ஆன் லைனில் செய்யலாம்.
அனைத்து விளம்பரங்களையும் ஆன்லைனில் செய்யலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மாதிரியான விளம்பர யுக்திகளை கையாள வேண்டும்.
ஆன்லைன் ஸ்டோர்ஸ், ஆன்லைன் புத்தகங்கள் விற்பனை, திரைப்படங்கள், ப்ராப்பர்ட்டி மற்றும் பில்டர்ஸ், துணிக்கடைகள், நகைக்கடைகள் என அத்தனையையும் நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம்.
ஆன் லைன் விளம்பரங்களில் செய்யப்படும் தவறுகள் என்ன?
ஒரு பிரிண்ட் மீடியாவிலோ, டிவி மீடியாவிலோ விளம்பரம் செய்பவர்கள் நேரடியாக போய் செய்வதில்லை, அதற்கென உள்ள ஏஜென்சிகளிடம் சென்று ஆலோசித்து செய்கின்றார்கள், ஆனால் ஆன் லைன் விளம்பரங்கள் செய்யும் போது அது குறித்த புரிதல்கள், எந்த மாதிரியான விளம்பரங்களுக்கு எப்படிபட்ட ஆன்லைன் விளம்பர உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் தமிழில் உள்ள சில பிரபல பத்திரிக்கை இணையதளங்களிலோ கூகிள் ஆட்வேர்ட்சிலோ விளம்பரங்களை கொடுத்து விட்டு பணம் போய்விட்டது, ரிட்டன்ஸ் வரவில்லை, ஆன்லைன் விளம்பரமே வேஸ்ட் என்று தெனாலிராமன் பூனை சூடுபாலை குடித்த கதையாக ஆன்லைன் விளம்பரம் பக்கமே வராமல் போய்விடுவார்கள்.
கூகிள் ஆட்வேர்ட்ஸ் விளம்பரம் தருவதிலும் பல நுணுக்கங்கள் உள்ளன, எவ்வளவு பணம் எந்த அளவு விளம்பரங்களுக்கு, எத்தனை கிளிக்குகளுக்கு செட்டிங் செய்வது என்று உள்ளது, இவைகள் தெரியாமல் பலரும் கூகிள் ஆட்வேர்ட்சில் தவறான செட்டிங் செய்து பணத்தை இழந்து விட்டு ஆன்லைன் விளம்பரமே வேஸ்ட் என்று கூறிவிடுகிறார்கள்.
பிராண்டிங் விளம்பரம் Branding
ஒரே ஒரு முறை டிவியில் ஒரு விளம்பரம் காட்டினால் அந்த ப்ராண்ட் பெயர் மனதில் நின்றுவிடுமா? அல்லது ஒரே ஒரு முறை பேப்பரில் விளம்பரம் செய்துவிட்டால் அந்த பிராண்ட் பெயர் மனதில் நிற்குமா? தொடர்ந்து செய்ய வேண்டும் அல்லவா அது போலத்தான் ஆனால் ஆன்லைனில் தொடர்ந்து விளம்பரம் செய்யவேண்டும், இதற்கு பேனர் விளம்பரங்கள் மற்றும் சிபிஎம் முறை சரியானதாகும், மேலும் ப்ராண்டிங் விளம்பரங்களில் கிளிக்கிற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது, அது எப்படி படிப்பவர்களின் பார்வையில் படுகிறது என்பதற்கான முக்கியத்துவத்தை தர வேண்டும்.
டிரைவ் டிராபிக் Drive Traffic
ஒரு குறிப்பிட்ட நிகழ்வு, அல்லது தள்ளுபடி குறித்து மக்களுக்கு அதிகமாக சென்று சேர வேண்டும், அது ப்ராண்டிங்காக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை குறிவைத்து விளம்பரம் செய்வதென்றால் டிரைவ் டிராபிக் என்று சொல்லப்படும் முறையை கையாள வேண்டும், இது அதிக அளவில் டெக்ஸ்ட் விளம்பரங்களை பயன்படுத்தலாம், இதற்கு Cost Per Click முறையை கையாள வேண்டும்.
உங்களுக்கு ஆன்லைன் விளம்பரங்கள் செய்ய வேண்டுமா? தினமும் இலட்சக்கணக்கான தமிழர்களை உங்கள் விளம்பரங்கள் சென்று சேர வேண்டுமா?
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில் முன் அனுபவமுள்ள தமிழின் மிகப்பெரிய ஆன்லைன் விளம்பர நெட்வொர்க்கான எங்கள் நெட்வொர்க்கில் விளம்பரம் செய்யுங்கள். அனைத்து தளங்களிலும், பேஸ்புக் மூலமாகவோ, கூகிள் ஆட்வேர்ட்ஸ் மூலமாகவோ விளம்பரம் செய்ய எங்களை அணுகுங்கள்