BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 16 June 2014

வெற்றிகரமாக இருதயத்தை கொண்டு வந்தனர் !!

"சென்னையில் ஒரு நாள் " படத்தை நாம் பார்த்து இருப்போம் . அதில் வருவதைப் போன்று இன்று மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இருதயத்தை ஒரு மருத்துவமனையில் இருந்து வெற்றிகரமாக கொண்டு சேர்த்தனர் .

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் லோகநாதன்,  இந்த மாதம் 11 ஆம் தேதி நடந்த விபத்தில் பலத்த காயமடைந்தார் . அடுத்த நாள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது . இவர் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இவரது பெற்றோர்கள் லோகநாதனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர் . 

இவரது இருதயத்தை அடையாறு மலர் மருத்துவமனையில் உள்ள பெண்ணுக்கு பொறுத்த முடிவு செய்யப்பட்டது .  இருதயத்தை வெளியே எடுத்தவுடன் சீக்கிரம் மாற்றியாக வேண்டும் . எனவே இருதயத்தை சீக்கிரமாக மாற்ற் முடிவு செய்தனர் . 

பலர் போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்தனர் . ஆம்புலன்ஸ் செல்லும் வாழியில் இடையூறு ஏற்படாமல் இருக்க அனைத்து முயறசிகளையும் செய்தனர் . ஆம்புலன்ஸ் முன் ஒரு பைலட் வாகனம் சென்றது . ஒவ்வொரு சிக்னலிலும் போக்குவரத்து காவலர்கள் தங்கள் நிலைமையை வயர்லெஸ் மூலம் தெரிவித்து கொண்டே இருந்தனர் . சிக்னல்களை சரியாக உபயோகப் படுத்தினர் ..

இதனால் ஆம்புலன்ஸ் 9 நிமிடத்தில் மலர் மருத்துவமனையை அடைந்தது . மும்பையச் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு அந்த இருதயத்தை பொறுத்த முடிவு செய்துள்ளனர் .

சாதரணமாக பேருந்தில் பயணம் செய்தால் ஒரு மணி நேரம் ஆகும் . ஆனால் பல காவலர்களின் உதவியாலும் , பொது மக்களின் ஒத்துழைப்பாலும் 9 நிமிடத்தில் கடந்து சாதித்தனர் . 

மனிதன் இருக்கும் வரை மனித நேயம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் !!


கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டியைக் காண மோடிக்கு அழைப்பு !!!

கால்பந்து உலக கோப்பை ஜூன் 12 தொடங்கி நடைபெற்று வருகிறது .இதற்கான இறுதி போட்டி ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது .இதில் இந்தியா பங்கேற்க வாய்ப்பு கிடைத்து உள்ளது .யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் !! நமக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை ,போட்டியை பார்க்க தான் வாய்ப்பு கிடைத்து உள்ளது. பிரேசில் நாட்டு  அதிபர் இறுதி போட்டியை காண்பதிற்கு நமது நாட்டு  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து உள்ளார் .மோடி இந்த அழைப்பை ஏற்று கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கலாம் .ஆனால் இதில் எந்த பெருமையும் இல்லை .என்று அந்த உலக கோப்பையில் பங்கேற்கிறோமோ அன்று தான் நாம் பெருமைப்பட வேண்டும் .அதற்கு  மோடி ஆட்சியில் அடிக்கல் நாட்டப்படும் என்று எதிர்பார்ப்போம்.

இணைய பயன்பாடு - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !!


12 முதல் 18 வயதினரிடையே இணைய பயன்பாடு தொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது .இதில்  பேஸ்புக் பயன்படுதுவர் எண்ணிக்கை குறிப்பாக சேகரிக்கப்பட்டது .இந்த முடிவு நம்மிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

நம்மிடம் மாணவர்கள்  பேஸ்புக்கை   எந்த நகரில் அதிகம் பயன்படுத்துவார்கள்  என்றால் நம்மிடம் இருந்து வரும் பதில் சென்னை,மும்பை,டெல்லி அல்லது பெங்களூராக இருக்கும் .ஆனால் உண்மை அதுவல்ல .குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தில் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று தெரியவந்து உள்ளது. அங்கு 95.12 சதவீதத்தினர் மொபைல் வைத்து உள்ளனர் .94 சதவீதமானோர் பேஸ்புக் கணக்கு வைத்து உள்ளனர் .இதற்கு அடுத்து மும்பையில் 85.97 சதவீதத்தினர்  பயன்படுத்துகிறார்கள் .ஆனால் அவர்கள் அந்த அளவிற்கு டிவிட்டரை பயன்படுத்துவது இல்லை .அது அவர்களுக்கு குழப்பம் தருவதாக உள்ளது .அவர்கள் அதனை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

திமுகவை உயிர்ப்பிக்க புதிய திட்டம்

திமுக 2014 தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது .இதற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்கு 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது .அதன் பரிந்துரை படி இன்று முதல் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் .திமுக கட்சி அமைப்பு 65 மாவட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது .இதனை அந்த கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார் .இந்த அறிவுப்புக்கு இப்போது உள்ள மாவட்ட செயலாலர்களிடையே எதிர்ப்பு இருக்கலாம் .ஏனென்றால் இது அவர்களின் அதிகாரத்தை பிரித்து கொடுக்கும் செயல் ஆகும் .இதற்கு ஸ்டாலினே எதிர்ப்பு தெரிவிக்கலாம் ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் .ஆனால் கட்சியை உயிர்பிக்க வேண்டுமானால் இந்த நடவடிக்கை தேவை என்பதை புரிந்து கொள்வார் .ஆனால் புது மாவட்ட செயலாளராக வருபவர் பழையவரின் ஆதரவாளராக  இருந்தால் கட்சி உருப்படாது என்றே கூறலாம் .கட்சிக்காக உழைத்தவர்களும் இளைஞர்களும் இந்த பதவிக்கு வர வேண்டும் .

திமுக தலைவர் கருணாநிதியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதினார் பிரதமர் மோடி !!

காவிரி மேலான்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் .

அந்த கடிதத்திற்கு பதிl கடிதம் எழுதினார் மோடி . அந்த கடிதத்தில் " நீங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி . மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் . மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு செயல்படும் " என்று கடிதத்தில் எழுதி இருந்தார் .


மைக்ரோமக்ஸ் விண்டோஸ் வகை மொபைல்களை வெளியிட்டது !!

இதுவரை நோக்கியா மட்டுமே விண்டோஸ் வகை மொபைல்களை வெளியிட்டது . இப்போது இந்த வரிசையில் மைக்ரோமக்ஸ் கன்வாஸ் வின் டபுள்யு - 121 ( W-121 ) மற்றும் மைக்ரோமக்ஸ் கன்வாஸ் வின் டபுள்யு - 092  (W-092) என இரண்டு மொபைல்களை வெளியிட்டது . இந்த மொபைல்கள் முறையே 9,500 மற்றும் 6,500 என விலையிடப்பட்டுள்ளது .

இந்த இரண்டு மொபைல்களும் டுயல் சிம் அமைப்பு கொண்டவை . 1 ஜிபி ராம் இரண்டு மொபைல்களிலும் உள்ளது .


நான் ஷர்மிளா அவர்களை பார்த்ததும் இல்லை , சந்தித்ததும் இல்லை - நடிகர் பிரபாசு

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா . 39 வயதான இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளார் . இந்த நிலையில் இவரை தெலுங்கு நடிகர் பிரபாசுடன் இணைத்து சில இணையதளங்கள் ஆபாச செய்தி வெளியிட்டனர் . இதனால் அவர் ஆபாசமாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி ஷர்மிளா போலிஸாரிடம் பூகார் கொடுத்தார் . இதனையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர் .

ஷர்மிளா அளித்த பேட்டியில் ,"என்னை அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள் இப்படி துஷ்பிரயோக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதை ஒரு இந்திய கலாச்சார பெண்ணுக்கு, ஒரு கணவரின் நல்ல மனைவிக்கு, ஒரு தாய்க்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதுகிறேன். நான் பிரபாசை சந்தித்ததும் இல்லை பேசியதும் இல்லை " என்றார் . 


பிரபாசு அளித்த பேட்டியில் , " நான் ஷர்மிளா அவர்களை பார்த்ததும் இல்லை , சந்தித்ததும் இல்லை . இதற்கு முன்னால் என் உடல் நிலையைப் பற்றிய வதந்திகளை பரப்பினர் . ஆனால் இந்த வதந்திகள் குறித்து நான் பதில் அளிக்கவில்லை . ஏனென்றால் வதந்தியை ஒழிக்க அமைதியாக இருப்பதே சிறந்த வழியாக கருதினேன் . ஆனால் இந்த வதந்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . இது மரியாதைத் தனமற்றது . ஒரு திருமணமான தாயை புண்படுத்தும் படியாக இருக்கிறது " என்றார் .


வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எவ்வளவு செலவு செய்தார் ??

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மோடி குஜராத வததோரா மற்றும் உத்தர பிரதேஷம் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்டார் . அந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் . பின்னர் வதோதரா தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் .

இந்த தொகுதியில் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவு செய்த கணக்குகளை சமர்பித்துள்ளார் . அந்த கணக்கில் தேர்தல் பிரச்சாரத்திற்கு 50 லட்சத்தி 3 ஆயிரத்தி 598 ரூபாய் செலவு ஆனதாக கணக்கு சமர்பித்துள்ளனர் ..

உண்ணாவிரதம் இருப்பது டையாபட்டிஸ் நோயை விரட்டும் !!!

ஒரு குறிப்பிட்ட காலமாக உண்ணாமல் விரதம் இருப்பது நீரிழிவு நோய் வருவது போன்று இருப்பவர்களிடத்தில் கொழுப்பைக் குறைக்கும் என விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் .

அந்த ஆய்வின்படி இடைவெளிவிட்டு இருக்கும் உண்ணாவிரதத்தால் உடம்பில் ஏற்படும் உயிரியல் காரண்ங்களால் கெட்ட கொழுப்புகள் சக்தியாக மாறுகின்றன . இதன் மூலம் நீரிழிவு ஏற்படுவதற்கான காரணிகள் தடுக்கப் படுகின்றன .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media