BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 18 October 2014

பழங்கள் உடல் எடையைக் குறைக்குமா ?



பழங்கள் உடல் கொழுப்பை கரைக்கவும்,உடல் எடை குறைக்கவும் உதவுகின்றது. காலை உணவு சிட்ரிக் அமிலம் நிறைந்த பழத்துடன் அல்லது வைட்டமின் C நிறைந்த பழத்துடன் துவங்குவது நல்லது . இப்படி செய்வது கொழுப்பை கரைப்பதர்க்கு சிறந்த வழியாக அமையும்.

1. திராட்சைப்பழம்
2. ஆப்பிள்கள் 
3. ஆரஞ்சு
4. வாழைப்பழங்கள்
5. ஸ்ட்ராபெர்ரிகள் 
6. அன்னாசிபழம் 
7. எலுமிச்சை பழம் 
8. தக்காளி 
9. பிளம்ஸ்
10.பப்பாளி
11. மாதுளை
12. மாம்பழம்
13. சப்போட்டா 

மேல்கூறிய பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் கெட்ட கொழுப்பைகுறைக்கவும் பயன்படுகிறது.

கிரீன் டீ : மருத்துவ பயன்கள்



1.கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதைமாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .

4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .


கிரீன் டீ-யின் பயன்கள் : 
  • கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
  • சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
  • இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும்சுருக்கங்களை தடுக்கிறது.
  • எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
  • முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
  • சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
  • குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
  • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
  • எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
  • சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

பத்து வயதில் கமிஷ்னரான சிறுவன் !! சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய போலிஸ் துறை !!



ஹைதராபாத்தைச் சேர்ந்த சாதிக் என்னும் சிறுவன் பத்து வயதில் போலிஸ் கமிஷ்னராக பணியேற்று நாட்டில் மிக இளம் வயதில் போலிஸ் கமிஷ்னர் என்ற சாதனையைப் படைத்துள்ளான் . இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார் . இவரின் சிறுவயது ஆசை போலிஸ் கமிஷ்னர் ஆவது . இவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக மேக் எ விஷ் என்னும் தொண்டு நிறுவனமும் காவல் துறை அதிகாரிகளும் எடுத்த முயற்சி தான் இது . போலிஸ் கமிஷ்னர் மகேந்தர் ரெட்டி இந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்ற முன் வந்தார் .



சாதிக் தனது குரலில் நான் ரவுடிகளை பிடிக்க வேண்டும் என்று கூறிய பின் அவருக்கு மற்ற போலிஸ் அதிகாரிகள் சல்யுட் அடித்தனர் . இவர் பதவியேற்கும் போது மற்ற  அதிகாரிகளுக்கு என்ன முறை பின்பற்றப் படுமோ அதேப் போன்று இவருக்கும் செய்தனர் .






சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு ஒரு ராயல் சல்யுட் !! 

இனி இயற்கை பேரிடர்கள் காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பேஸ்புக் மூலம் நான் நலமாக இருக்கிறேன் என தெரிவிக்கலாம் : பேஸ்புக்கின் புதிய வசதி !!

Facebook is launching a new too that will allow users to notify their friends and family that they are safe during the time of natural disasters and emergency condition .



பேஸ்புக் ஒரு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது . இந்த வசதி மூலம் சுனாமி , நிலநடுக்கம் , வெள்ளம் போன்றவை ஏற்படும் போது நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாம் நலமாக இருப்பதை அறிவித்துக் கொள்ளலாம் . இதனை " சேப்டி செக் டுல் " ("Safety Check Tool ") என்று பெயரிட்டுள்ளனர் . ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது பேஸ்புக் பொறியாளர்கள் இது போன்று ஒன்றை உருவாக்கினர் . அந்த வசதியன் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக தான் இது இருக்கிறது .

இந்த வசதியை நாம் ஆக்டிவேட் செய்து விட்டால் ,  பேஸ்புக் நாம் இருக்கும் இடத்தை நமது ப்ரொபைல் மூலம் அறிந்து கொண்டு , நமது இடத்தில் ஏதாவது இயற்கை சீற்றம்  ஏற்பட்டால் , நம்மிடம் " நீங்கள் நலமாக இருக்கீறீர்களா ? என கேட்கும் . இதற்கு நாம் ஆம் என்று பதில் அனுப்பினால் நமது பேஸ்புக் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாம் நலமாக இருக்கும் செய்தி சென்றுவிடும் . இதற்கு இல்லை என்று பதில் அனுப்ப முடியாது . 

மோடியுடன் இணைந்தார் சானியா மிர்சா !!



Being nominated by Anil Ambani , Tennis star Sania Mirza joined PM Modi's "Swachch Bharath" campaign with her volunteers . She was spotted cleaning Hyderabad roads .


பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் இயக்கத்தில் இப்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இணைந்துள்ளார் . இவரை ரிலையன்ஸ் குழுமத்தின் அணில் அம்பானி நாமினேட் செய்து இருந்தார் . இதனால் இவர் ஹைதரபாத்தின் சில சாலைகளை சேவையாளர்களுடன் சுத்தம் செய்தார் . அணில் அம்பானி இவருடன் குத்துச் சண்டை வீரர் மேரி கோம் , மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன்  ஆகியோரை நாமினேட் செய்தார் .

அக்டோபர் 2 ஆம் தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் அவர் முதலி ஒரு 9 பேரை நாமினேட் செய்து இருந்தார் . அவர் அந்த 9 பேரை மற்றுமொரு 9 பேரை நாமினேட் செய்து இந்த இயக்கத்தை வலுப்படுத்தச் சொன்னார் . 

4-வது சாதனையை படைத்தது புர்ஜ் கலிபா : மிக உயரமான பார்வையாளர் தளம் திறப்பு



துபாயில் கட்டப்பட்டுள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா என்ற 160 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 148வது மாடியில் பார்வையாளர் தளம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயரமான பார்வையாளர் தளம் என்ற 4வது கின்னஸ் சாதனையை புர்ஜ் கலிபா படைத்துள்ளது. தரையில் இருந்து 2,722 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலிபா, மிக உயர்ந்த கட்டடம், மனிதனால் கட்டப்பட்ட மிக உயர்ந்த கட்டடம், மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதி என ஏற்கனவே 3 கின்னஸ் சாதனைகளை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் போராட்டம்: போலீஸாரால் சாலைத் தடுப்புகள் தொடர்ந்து அகற்றம்



ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகம் கோரி சாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும், சாலைத் தடுப்புகளையும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வந்த போலீஸார், மாங்காக் மாவட்டத்தின் போராட்டப் பகுதியில் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து சாலைத் தடுப்புகளை அகற்றினர். எனினும், போராட்டக்காரர்களை பலவந்தமாக வெளியேற்றப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர். ஹாங்காங்கின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மாங்காக் மாவட்டப் பகுதியிலிருந்து விலகி, சிறிய அளவில் போராட்டம் நடைபெறும் விக்டோரியா துறைமுகப் பகுதியில் சுமார் 30 போராட்டக்காரர்கள் இருந்தனர்.

போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து, அங்கிருந்து கலைந்து செல்லும்படி அவர்களிடம் ஒலிப்பெருக்கியில் வலியுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் அமைதியாக இருந்தனர்.
 கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால், ஜனநாயகவாதிகளுக்கும், அரசுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கும் மேல் முக்கிய சாலைகளில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை அப்புறப்படுத்த, கலவரத் தடுப்புக் கவசங்களுடனும், லத்திகள், மிளகாய்ப்பொடித் தூவிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடனும் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. பதற்றத்தைத் தணிக்கும் வகையில், பேச்சு வார்த்தை நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுக்களின் தலைவர்களுக்கு ஹாங்காங் ஆட்சித் தலைவர் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார்

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது இரண்டு திரைகளைக் கொண்ட மொபைல் !!



Russian-based company Yotta released their dual screen mobile Yotaphone in India . The sale of this phone will start from today in online with the help of Flipkart .The handset has a LCD screen which is used to use this handset as a smart phone and a screen with e-ink display which is used to use this as a e-book reader .



ரஷ்ய நிறுவனமான யோட்டா நிறுவனத்தி இரண்டு திரைகளைக் கொண்ட யோட்டா மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது . அந்த மொபைல் மற்ற நாடுகளில் சென்ற வருடம் டிசம்பர் மாதமே வெளிவந்தாலும் , இந்தியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தான் விற்பனைக்கு வருகிறது .

4.3இன்ச் கொண்ட இந்த மொபைலில் இரண்டு திரைகள் உள்ளது . ஒன்று எல்.சி.டி திரை மற்றொன்று இ-ஈங்க் திரை . இந்த எல்.சி.டி திரை இந்த மொபைலை மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்று பயன்படுத்த உதவுகிறது . இ-ஈங்க் திரை மூலம் இதனை இ-புக் ரீடராக பயன்படுத்தலாம் . பிரபல இ-புக் ரீடர்களான கிண்டல் , கொபொ ஆகியவற்றில் இந்த இ-ஈங்க் திரை தான் பயன்படுத்தப்படுகிறது . இந்த இ-ஈங்க் திரையில் எப்போதும் நோட்டிபிகேஷன் காட்டிய வண்ணம் இருக்கும் . இந்த திரையை மட்டும் பயன்படுத்தினால் இதில் எளிதாக சார்ஜ் குறையாது . மேலும் கண்களிற்கு அதிகமாக அழுத்தத்தைக் கொடுக்காது .

மற்ற ஸ்மார்ட்போன்களைப் போன்று இதிலும் 2 ஜிபி ராம் , 32 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரெஜ் , மற்றும் 13 எம்.பி கேமரா இருக்கிறது இந்த மொபைலின் விலை 23,499 

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: 5,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; 100 ஏக்கரில் வாழைகள் சேதம்



திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் நெல், வாழைப்பயிர்கள் சேதமடைந்தன. சுமார் 5,000 ஏக்கரில் அறுவடை செய்யும் பருவத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மிதக்கின்றன. குலை வரும் பருவத்தில் சுமார் 100 ஏக்கரில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்திருப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கன்னடியன் அணைக்கட்டு பகுதி மற்றும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணைகள் மற்றும் பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் பலத்த மழை பதிவாகியுள்ளது.

தாமிரவருணி பாசனத்தில் அறுவடை செய்யும் பருவத்தில் மழை நீடித்து வருவதால் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் பாசனத்தில் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், மன்னார்கோவில், நதியுன்னி கால்வாய் பாசனத்தில் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, கோவில்குளம், பிரம்மதேசம், கெளதமபுரி உள்ளிட்ட பகுதியில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி மிதக்கின்றன. மூன்று கால்வாய் நீர்பாசன சங்கத் தலைவர் ஆர். சிவகுருநாதன் கூறியதாவது: கார் பருவ சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். நிகழ் பருவத்தில் பாசனத்திற்கு ஜூலை மாதம் 4 ஆம் தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சாகுபடி பருவம் தாமதம் ஏற்பட்டு தற்போது பெய்து வரும் மழையில் அறுவடை பருவத்தில் நதியுன்னி, வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் பாசனத்தில் சுமார் 2,200 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. முறையான நீர் பங்கீடு இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

இதேபோல் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, வீரவநல்லூர், அரிகேசவநல்லூர், காருக்குறிச்சி, கூனியூர், சக்திகுளம், தெற்கு அரியநாயகிபுரம், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், கொத்தன்குளம் பகுதியில் அறுவடை பருவத்தில் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ஆர். கசமுத்து கூறியதாவது: கடனாநதி அணைப் பாசனத்தில் ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர், சிவசைலம் உள்ளிட்ட பகுதியில் 2,500 ஏக்கரில் அறுவடை செய்யும் பருவத்தில் நெற்பயிர்கள் மழைக்கு சாய்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிரை கரை சேர்க்க முடியாத சூழல் உள்ளது. தாமதமாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அறுவடை பருவத்தில் இயற்கை பாதிப்பினால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பவன் கல்யாண்



ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளைக் காய்ச்சல் பாதித்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் 12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நடிகர் பவன் கல்யாண் நிறைவேற்றினார். 7-ம் வகுப்பு மாணவியான ஸ்ரீஜாவுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் உள்ளார். அவர் பவன் கல்யாணின் ரசிகை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கூட, பவன் கல்யாணை பார்த்துவிட்டு வர வேண்டும் என்று தந்தையிடம் கூறியுள்ளார்.

தனது மகளின் ஆசை நிறைவேறாமலேயே போய்விடுமோ என்று கூறி கண்ணீர் விட்ட தந்தையின் குரல், விருப்பங்களை நிறைவேற்றும் அறக்கட்டளையின் காதுக்கு கேட்டது. உடனடியாக அவர்கள் பவன் கல்யாணை தொடர்பு கொண்டு சிறுமி குறித்து கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சுய நினைவை இழந்து படுக்கையில் இருந்த சிறுமியை பார்த்த பவன் கல்யாண், சிறுமியின் காதருகே சென்று நான் தான் பவன் கல்யாண் வந்திருக்கிறேன் என்று கூறினார். தனக்கு மிகவும் பிடித்த பவன் கல்யாண் தன்னருகே அமர்ந்திருந்த போதும், அது பற்றி உணர முடியாத நிலையில் தனது மகள் இருப்பதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சுமார் அரை மணி நேரம், சிறுமியுடன் இருந்த பவன் கல்யாண், மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து, சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கினார்.

மேலும், சிறுமி விரைவில் குணமடையே பிரார்த்திப்பதாகக் கூறி, வெள்ளியால் ஆன விநாயகர் சிலையையும், அவளது தந்தையிடம் பவன் கல்யாண் வழங்கினார்.

ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துகள் உத்தரவாதம்



தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே விட சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உத்தரவாதமாக அளிக்கப்பட்டுள்ளன.ஜெயலலிதா சார்பில் பரத் மற்றும் குணஜோதி என்ற இருவரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முறையே ரூ.5 கோடி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பிணையம் அளித்தனர்.அவற்றை பெற்றுக் கொண்ட நீதிபதி குன்கா, ஜெயலலிதா தப்பியோடிவிட்டால் இந்த சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதம் அளித்ததை அடுத்து, சொத்து உத்தரவாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media