BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 10 June 2014

சோசியல் மீடியாக்களை தடை செய்ய வேண்டும் !!

மஹாரஷ்ட்ரா துணை முதல்வர் அஜித் பவார் பத்திரிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது , " சீனா இரண்டு ஆண்டுகளுக்கு சமூக வலைதளங்களை தடை செய்து உள்ளது . அதைப்போல நாங்களும் மோடி அவர்களை சந்திக்கும் போது இது குறித்து வலியுறுத்த உள்ளோம் . இதற்கு அனைத்து கட்சிகளும் முன் வர வேண்டும் என்று கூறினார் .

சில நிமிடங்கள் கழித்து அப்படியே பல்டி அடித்தார் அஜித் பவார் . அவர் பத்திரிக்கையாளர்களிடம் நான் சமூக வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என்று கூறவில்லை . நான் எப்போதும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவன் அல்ல . சமூக வலைதளங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன் என்று சமாளித்தார் .

கேரளாவில் மோடியைக் கொடூர தலைவர்களின் பட்டியலில் சேர்த்ததால் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு !!



கேரளாவில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் வெளிவந்த ஆண்டு இதழில் , கொடூர தலைவர்கள் வரிசையில் மோடியின் முகம் ஹிட்லர் , ஜார்ஜ் புஷ் , ஒசாமா பின்லேடன் ஆகியோரின் வரிசையில் இடம் பெற்று இருந்தது . மோடியின் படத்தை கொடூர தலைவர்களின் பட்டியலில் சேர்த்ததால் ஏழு பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . அந்த ஏழு பேரில் கல்லூரி முதல்வர் மற்றும் நான்கு மாணவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர் .


சமூக சேவகர் சுபாஷ் அவர்கள் கொடுத்த பூகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது . அந்த ஆண்டு இதழை திரும்பி பெறப் போவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

உள்ளூர் பாஜக தொண்டர்கள் இந்த நிகழ்விற்கு அந்த ஆண்டு இதழை எரித்து  தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் .

ஆனால் அந்த படத்தை உற்று நோக்கினால் அந்தக் கொடூர தலைவர்களின் பட்டியலில் மேதகு பிரபாகரன் அவர்களின் படம் இருப்பது அதிர்ச்சி மற்றும் வருத்தம் அளிக்கிறது .


பாலியல் வன்முறை தடுப்பு மாநாடு !!!

உலகில் தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான மாநாடு இங்கிலாந்தில் நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது . இந்த மாநாட்டின் தொடக்க விழா இன்று நடந்தது . 

இந்த தொடக்க விழாவில் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பங்கேற்றனர் . ஏஞ்சலினா ஜோலி ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவதும் ஏஞ்சலினா ஜோலி  தான் என்பது குறிப்பிடத்தக்கது . 

150 நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் , அரசு அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர் . 

நடாலின் வெற்றி , பெடரரின் தோல்வி ! தொடருமா ? தடைபடுமா ?

பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்று களிமண் தரையில் தான் அசைக்க முடியாத ராஜா என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் நடால். டென்னிஸ் வரலாற்றிலேயே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 9 முறை வென்ற ஆடவர் யாரும் இல்லை. இந்த வெற்றியின் மூலம் சாம்ப்ரசின் 14 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை சமன் செய்து உள்ளார். பெடரர்க்கும் இவருக்கும் வித்தியாசம்  3 தான் , ஆனால் வயது வித்தியாசமோ 5. எனவே சிறந்த டென்னிஸ் வீரர் என்கிற இடத்தை பிடிப்பதற்கு நடாலுகே அதிக  வாய்ப்பு உள்ளதாக கருதுகிறார்கள் .


எனவே பெடரர்  விழித்துக்கொள்ளும் காலம் இது தான் . தான் இளம் வயதில் பெற்ற வெற்றியை தக்கவைக்க வேண்டும். டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக ரசிகர்களை கொண்ட பெடரர் அவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும். நடால் பிரெஞ்சு ஓபெனில் வெற்றி பெற்றாலும் விம்பிள்டன்னில் அது எடுபடாது என்கிறார்கள் . நடால் நேற்று அளித்த பேட்டியில் தங்களின் காலம் முடிவுக்கு வர இருப்பதாக கூறினார். எனவே விம்பிள்டன்னை யார் வெல்லபோவது என நடால் ரசிகர்களும் பெடரர் ரசிகர்களும் இப்போதே  போட்டி போட ஆரம்பித்துவிட்டனர் . டென்னிஸ் ரசிகர்கள் உலக கோப்பையாக கருதும் விம்பிள்டன் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

மேலும் ஒரு பாஜக தலைவர் சுட்டுக் கொலை !!!

ஒம் வீர் சிங் , முன்னாள் ராணுவ வீரர் மற்றும் பாஜக உள்ளூர் தலைவர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் .

மிராப்பூர் என்னும் கிராமம் முஸாபர்நகரில் உள்ளது . இந்தக் கிராமத்தில் ஒம் வீர் சிங் பைக்கில் பயணித்துக் கொண்டு இருந்த போது சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டார் . இவர் தன்னுடைய அனுமதி வாங்கிய துப்பாக்கிக் கொண்டு சுட முயற்சிக்கும் போது , கொலையாளி ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டார் . இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் .

இந்த வாரத்தில் கொல்லப்படும் இரண்டாவது பாஜக தலைவர் ஒம் வீர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது . இதற்கு முன்னர் விஜய் பண்டித் என்பவர் கொல்லப்பட்டார் .

சூப்பர் ஸ்டார் மகள் vs யெங் சூப்பர் ஸ்டார்!



விஜய் டிவியில் நடந்து வரும் நிகழ்ச்சி 'காபி வித் டி.டி. '. இந்த நிகழ்ச்சியே சௌந்தர்யாவுகும் சிம்புவுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோச்சடையான் படம் உருவான விதம் என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இடையே ஒரு விளையாட்டு நடந்தது . டி.டி. ஒவ்வொரு நபரின் புகைப்படமாக காண்பிப்பார் அதற்கு சௌந்தர்யா அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை சொல்ல வேண்டும் . அதில் சிம்புவின் பெயர் வந்த போது , சௌந்தர்யா "பாடதே சிம்பு நிறுத்திடு ப்ளீஸ் " என்றார் . இது தான் பிரச்சனைக்கு காரணம் . இதனால் சிம்பு ரசிகர்கள் கொதித்து எழுந்தனர் . சௌந்தர்யாவை ட்விட்டெரில் திட்டி பதிவுகள் போட்டனர் . இதனால் பெரும் பிரச்சனை ஆனது .


 இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சிம்புவின் பதிவு இருந்தது .சிம்புவின் பதிவு பின்வருமாறு உள்ளது .அனைவருக்குமே மற்றவரின் செய்யலை விமர்சிக்க உரிமை உண்டு . எனது ரசிகர்கள் செய்வது தவறு .என்னை மதிப்பது போல மற்றவரையும் மதிக்கணும் .அவர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்றார் .இது குறித்து கூறிய சௌந்தர்யா 'சிறுவயதில் இருந்தே சிம்பு எனக்கு நண்பர் , நான் விளையாட்டாகத்தான் அப்படி கூறினேன் . எங்களுக்குள் எவ்வித சண்டையும் இல்லை என்றார் '.


தமிழக ரசிகர்களின் செயல் எப்போதும் மோசமானதாகவே உள்ளது . இது நாம் திருத்திக்கொள்ள வேண்டிய  தருணம் .

கராச்சியில் மேலுமொரு தாக்குதல் !!

கராச்சி விமான நிலையத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 30 பேர் பலியாயினர் . நேற்றைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றது . கராச்சியி மிகவும் பிஸியான விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலினால் பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்தது .

 இந்த தாக்குதல் முடிந்து 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இன்னுமொரு தாக்குதல் நடந்தது . இன்று கூட்டமாக மோட்டார் வாகனத்தில் வந்த சில தீவிரவாதிகள் விமான நிலைய பாதுகாப்பு கேம்ப் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர் . தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பின்னர் தப்பித்து சென்றனர் . அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு இருக்கின்றனர் .

இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது . அவர்கள் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " நாங்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான இரண்டாவது தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம் . எங்களின் நோக்கம் நிறைவேறிக் கொண்டே வருகிறது . இன்னும் பல தாக்குதலை நடத்துவோம் என்றார் .

அப்பாவின் அரசியலுக்கு ஓய்வு கொடுத்த நாட்டின் இளம் வயது எம்.பி .



தற்போதைய நாடாளுமன்றத்தின் இளம் வயது உறுப்பினர் என்கிற பெருமையை பெற்று உள்ளார் ஹீனா கேவிட் . இவர் ஓரு பெண் என்பது மேலும் சிறப்பு. இவர் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்க பட்டு உள்ளார். இளம் வயது கொண்டாடங்களுடன் இப்போது தான் தனது மருத்துவ மேல் படிப்பை முடித்தார். இவர் உயிர் காக்கும் மருத்துவர் என்பது இன்னொரு சிறப்பு .

இவர் வென்றது 1967 க்கு பிறகு காங்கிரஸ் தோல்வியே பெறாத நந்தர்பார் தொகுதியில்  இருந்து . இவரிடம் தோற்ற மாணிக் ராவ் காங்கிரஸ் சார்பில் 8 முறை எம்.பி  ஆக இருந்தவர் . இவரது வெற்றியினால் மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சராக இருந்த இவரது தந்தை விஜயகுமார் கேவிட் தனது பதவியை இழக்க நேரிட்டது.

இளம் வயதில் இவர் பெற்ற வெற்றிக்கு நமது வாழ்த்துக்கள். இவரது செயல்பாடுகள் பலருக்கு எடுத்துகாட்டாக அமைய வேண்டும் என வேண்டுகிறோம் .

1 மாணவருக்கு 2 ஆசிரியர்கள் ! மூடப்பட்டது அரசு பள்ளி !



நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 52 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. 5 ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றிவந்தனர். அரசின் வசதிகள் இப்பள்ளிக்கு கிடைத்தாலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்துகொண்டே வந்தது. கடந்த கல்வி ஆண்டில் 5 ஆம் வகுப்பில் 3 மாணவர்களும் , 2 ஆம் வகுப்பில் 1 மாணவரும் படித்து வந்தனர். அவர்களில் 5 ஆம் வகுப்பு  3 மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற்று 6 ஆம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். 2 ஆம் வகுப்பில் இருந்த  மாணவர் வெற்றி பெற்று 3 ஆம் வகுப்பிற்கு  வந்தார் . இதனால் 1  மாணவருக்கு 2 ஆசிரியர் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டது பள்ளி . தனியாக படிக்க விரும்பாத அந்த மாணவரும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார் . இதனால் அந்த பள்ளியை மூடிவிட்டார்கள் . தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின்  நிலை இதுவே !!


இந்த நிலைக்கு என்ன காரணம் என்று ஆராய்வோம். படிக்காதவர்களை பார்த்து படிக்கற காலத்தில் படிக்காமல் விட்டால் இந்த நிலை தான் என்கிறோம் . அது போல பாடம் நடத்தும் காலத்தில்  ஆசிரியர்கள் சரியாக செயல்படாதது தான் காரணம் . அதனால் பெற்றோர்கள் நம்பிகை இழந்து விட்டார்கள் . கடந்த கால   ஆட்சியில் ஆசிரியர்கள் சுகமாக இருந்து விட்டார்கள் , அதன் விளைவு தான் இது . ஆசிரியர்கள் இதனை தவறாக கொள்ள வேண்டாம் , எனது  தாயும் ஒரு ஆசிரியர்  தான் . அவரின் நிலைமை இன்னும் மோசம் , அந்த பள்ளியில்  மாணவர்களை தக்கவைப்பதற்காக  மாணவர்களின் வீட்டுக்கு சென்று கெஞ்சி கொண்டு இருக்கிறார்.

 எனவே அரசும் ஆசிரியர்களும் கடுமையாக உழைத்தால் தான் அரசு பள்ளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்ய முடியும் .

டெல்லி மின்வெட்டு பிரச்சனை !!

டெல்லியில் மின்வெட்டு தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது . இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் மாறி மாறிக் குறைச் சொல்லிக் கொண்டு இருக்கிறது .

இந்நிலையில் மின் துறை அமைச்சர் பியுஷ் கோவல் டில்லியின் லெட்யுனன்ட் கோவர்னருடன் சந்தித்து பேசினார் . இன்னும் 10 நாட்களில் பழுதான 3 மின் லைன்களும் சரி செய்யப்படும் என்றார் . நேற்று மாலை டில்லியில் பாதி இடங்களில் ஆறு மணி நேரமாக மின் வெட்டு இருந்தது .

இந்நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் மணிஷ் சிசோடியா தலைமையில் , பாஜக வின் ஹர்ஷா வர்தன் இல்லத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தினர் . அப்போது அவர் கூறுகையில் , " மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் , ஹர்ஷா வர்தன் இப்போது ஒரு மத்திய அமைச்சராகவும் இருக்கிறார் . டில்லியின் மின்வெட்டு பிரச்சனையைச் சரி செய்வது மத்திய அரசின் கடைமை ஆகும் " என்றார் .

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹர்ஷா வர்தன் கூறுகையில் , " டில்லியில் காங்கிரஸ் 15 வருடங்களாக ஆட்சியில் இருந்தனர் , ஆம் ஆத்மி  49 நாட்களாக ஆட்சியில் இருந்தனர் . அவர்களை தான் குறைக் கூற வேண்டும் . ஆட்சியில் இல்லாத பாஜகவைக் குறைக் கூற முடியாது " என்றார் .

காங்கிர்ஸின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது , எல்லா பிரச்சனைக்கும் தயாராக இருந்தோம் . அதனால் ஆம் ஆத்மியைத் தான் குறைக் கூற வேண்டும் . நாங்கள் இனி ஒரு போதும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றார் .

பீஸ் நதி சோகம் !!


நேற்று பீஸ் நதியில் அந்த சோகமான சம்பவம் நடந்தது . ( http://www.satrumun.net/2014/06/blog-post_926.html )


இதுவரை ஐந்து மாணவர்களின் உடல் கிடைத்துள்ளது . மற்ற மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் . 84 பேர் கொண்டக் குழு இந்த பணியில் இருக்கின்றனர் . தேடுதல் பணிக்காக அணையின் நீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது .

ஹிமாச்சல் பிரதேச உயர் நீதி மன்றம் இதைக் குறித்து ஜுன் 16 ஆம் தேதிக்குள் அறிக்கை ஒன்றை சமர்பிக்கும் படி மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது .

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் ஹிமாச்சல் பிரதேச முதல்வர் விதர்பா சிங் நேற்று விபத்து நடந்த இடத்தை சந்தித்தனர் . இந்த சம்பவத்தில் கவனக் குறைவால் இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிக் கூறினர் .

ஹிமாச்சல் பிரதேச டி.ஜி.பி கூறுகையில் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன் சைரன் ஒலித்தது எனவும் ஆனால் தண்ணீர் இரைச்சல் சத்தத்தால் கேட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார் .

40 மணி நேரம் ஆகியும் இன்னும் மாணவர்கள் கிடைக்காததால் அவர்கள் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது .


தண்ணிப் பழத்தில் சிற்பக் கலை !!

நாம் எல்லாரும் வெயில் காலத்தில் உடம்பைக் குளிர்ச்சியாக வைத்து கொள்ள தண்ணிர்ப் பழம் சாப்பிடுவோம் . ஆனால் கிளைவ் கூப்பர் என்பவர் இந்த பழத்தை வைத்து கண்ணீர்க்கு குளிர்ச்சியாக பல மாடல்கள் செய்துள்ளார் .











மஹாரஷ்ட்ராவில் உள்ள 44 வரி மையங்களை மூட உள்ளது மாநில அரசு


மஹாரஷ்ட்ராவில் உள்ள மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி . அந்த நல்ல செய்தி என்னவென்றால் ரோட்டில் உள்ள 44 வரி வசூலிக்கும் மையங்களை மூட உத்தரவிட்டுள்ளது . இந்த அறிவிப்பை மஹாராஷ்ட்ராவின் துணை முதல்வர் அஜித் பவார் நேற்று அறிவித்தார் .

முதல்வர் பிரித்வி ராஜ் சவுகான் கூறும் போது ," நாங்கள் இதற்கான கொள்கையை மக்களவை தேர்தலுக்கு முன்னே ஆராய்ந்து கொண்டு இருந்தோம் . சில மையங்கள் தங்களின் கடைசிக் கட்ட வசூலில் இருக்கின்றனர் . அவர்களுக்கு இன்னும் ஒரு சிறியத் தொகை மட்டுமே பாக்கி உள்ளது . இந்த சிறிய தொகையை நாங்கள் செலுத்தி அந்த மையங்களை மூட உள்ளோம் . அவர்களுக்கு 309 கோடி செலுத்த உள்ளோம் , ஆனால் இது பொது மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் " என்றார் .

சென்ற வருடம் இந்த வரி மையங்களை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடந்தது . ராஜ் தாக்கரே தலைமை தாங்கி பல போராட்டாங்களை நடத்தினார் .

சட்டமன்ற தேர்தல் அருகில் வர உள்ள நிலையில் சவுகான் அரசு மக்களின் மனதில் இடம் பிடிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது .

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media