BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 19 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் உறவிற்கு பெண்கள் விரும்பும் ஆண்கள் யார்? - சர்வே முடிவுகள்
http://www.satrumun.net/2014/09/women-like-experience-and-men-like-fresh.html

விஜய்யின் கத்தி பட டீசர் கலாய்த்து வந்த ட்ரோல்கள் - சிரித்து வயிறுவலித்தால் கம்பெனி பொறுப்பேற்காது
http://www.satrumun.net/2014/09/kaththi-teaser-gets-trolled.html

பல ஆண்டுகள் ஆகியும் மார்கெட்டை இழக்காத மேகி நூடுல்ஸின் வெற்றி ரகசியம்
http://www.satrumun.net/2014/09/why-maggi-is-best-food.html

தோல்வி அடைந்த ஸ்காட்லாந்து விடுதலை, பிரிட்டனுடன் இணைந்தே இருப்போம் - அதிர்ச்சி முடிவு காரணங்கள் என்ன?
http://www.satrumun.net/2014/09/scotland-rejects-independence-from.html

சீன அதிபர் கண்ணில் குடிசைகள் படக்கூடாது என்று தட்டி கட்டி மறைத்த குஜராத் அரசு
http://www.satrumun.net/2014/09/gujarath-goverment-covered-slum-areas.html

கோமாவில் இருந்த ஷூமேக்கரின் மருத்துவ செலவுகளை கேட்டால் நாம் கோமாவுக்கு சென்று விடுவோம்
http://www.satrumun.net/2014/09/schumachers-medical-bill-leaves-us-in.html

ராஜபக்சே தொடங்கி வைக்கும் கொழும்பு மாநாட்டில் பாஜக தலைவர்கள் பங்கேற்பு
http://www.satrumun.net/2014/09/blog-post_474.html

சுனிதா வில்லியம்ஸ் பிறந்தநாள்
http://www.satrumun.net/2014/09/blog-post_97.html

திராட்சைப்பழத்தின் மருத்துவ குணம்
http://www.satrumun.net/2014/09/blog-post_13.html

தமிழ்நூல்கள் அழிந்தது, மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று
http://www.satrumun.net/2014/09/blog-post_351.html

வங்கி வேலை வாய்ப்பு : தஞ்சாவூர்
http://www.satrumun.net/2014/09/blog-post_396.html

வெள்ளை காக்கா பறக்கிறது, வண்டலூர் போனால் பார்க்கலாம்
http://www.satrumun.net/2014/09/blog-post_608.html

வெள்ளச்சேதம், காஷ்மீரின் இன்றைய நிலை
http://www.satrumun.net/2014/09/blog-post_30.html

மோடி தொடங்க இருக்கும் " மேக் இன் இந்தியா " ( இந்தியாவில் உருவாக்குவோம்) திட்டம் !!
http://www.satrumun.net/2014/09/modi-to-start-his-make-in-india-campaign.html

2007 இல் டைம் அவுட் முறையில் கங்குலி அவுட் என்றாலும் ஏன் அவுட் தரப்படவில்லை, சுவாரசியமான கிரிக்கெட் சிறப்பு நிகழ்வுகள்
http://www.satrumun.net/2014/09/ganguly-was-not-out-though-he-is-out.html

தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் யார்?
http://www.satrumun.net/2014/09/blog-post_926.html

டைப்பிங்கில் சிறிய தவறு ஏற்பட்டதால் ரூ. 25 லட்சத்தை இழந்த கம்பெனி, அந்த பணத்தை ஹாய்யாக செலவு செய்யும் மனிதர்
http://www.satrumun.net/2014/09/wrongly-transfered-money-in-internet.html

ராஜபக்சேவின் நண்பரின் லைக்கா நிறுவனம் சேவை செய்வதாக கூறும் ஞானம் அறக்கட்டளையின் பின்னணி என்ன?
http://www.satrumun.net/2014/09/blog-post_108.html

செக்ஸ் உறவிற்கு பெண்கள் விரும்பும் ஆண்கள் யார்? ஆண்கள் விரும்பும் பெண்கள் யார் - செக்ஸ் சர்வே வெளிப்படுத்திய திடுக் முடிவுகள்

செக்ஸில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்ன மாதிரியானவர்களை பிடிக்கிறது, யாருடன் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்று அறிய ஒரு சர்வே நடத்தியுள்ளனர், அதன் முடிவுகள் பின் வருமாறு.

பெண்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் வேண்டுமாம்

பெண்களுக்கு ஃப்ரெஷ்ஷான செக்ஸில் தடுமாறும் ஆண்களைவிட ஏற்கனவே அனுபவமுள்ள எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் தான் வேண்டுமாம், பெண் உடலளவிலும் மனதளவிலும் நீண்ட நேரம் செக்ஸ் உறவு கொள்ள முடியும், செக்ஸ் உறவுக்கு புது ஆண்கள் அதற்கு ஏற்றபடி செயல்பட முடியாது என்பதால் பெண்கள் எக்ஸ்பீரியன்ஸ் ஆட்களுடன் உறவு கொள்ளவே விரும்புகிறார்களாம்.

ஆண்களுக்கு ஃப்ரெஷ்

ஆண்களைப் பொறுத்தவரை எப்போதுமே கன்னி  பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்களாம்.

இந்த சர்வே வெளிநாட்டில் நடத்தப்பட்டது, அதன்படி  பெண்கள் மத்தியில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மீதுதான் அதிக மோகம் உள்ளதாம். அவருடன் டேட்டிங் போகவும், உறவு கொள்ளவும் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனராம்.

ஆண்களுக்கு மைலீன் கிளாஸ், ஹோலி வில்லாபி ஆகியோர் மீது அதிக மோகம் உள்ளதாம்.

ஆண்களோ பெண்களோ அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் நகைச்சுவையாக, ஜாலியாக பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனராம்.

சீன அதிபர் கண்ணில் குடிசைகள் படக்கூடாது என்று தட்டி கட்டி மறைத்த குஜராத் அரசு


சீன அதிபர் இந்தியாவுக்கு வந்திருந்த நேரத்தில் குஜராத்திற்கும் அரசு முறைப்பயணம் மேற்கொண்டார், குஜராத் இப்படி வளர்ந்திருக்காம், குஜராத்  அப்படி வளர்ந்திருக்காம் என்று போட்டோ ஷாப் செய்து படங்களை போட்டு ஏமாற்றி தற்போது பிரதமர் நாற்காலியையே பிடித்துள்ள நிலையில் போட்டோ ஷாப் செய்ய முடியாது என்பதால் குஜராத் வந்திருந்த சீன அதிபர் ஜீ ஜிங்பிங் காந்தி ஆசிரமம் போகும் வழியில் இருந்த குடிசை பகுதிகளை  திரை கட்டி மறைத்து வைத்திருந்தனர். ஆனால் இதை அப்பகுதி குடிசைவாழ் மக்கள் பிரித்து எரிந்தனர்.

குடிசை இருப்பது கவுரவ குறைச்சல் இல்லையாம், ஆனால் அது சீன அதிபர் கண்ணில் படுவது தான் கெளரவ குறைச்சலாம்? எதற்கு இந்த வெட்டி கெளரவம்?

ராஜபக்சே தொடங்கி வைக்கும் கொழும்பு மாநாட்டில் பாஜக தலைவர்கள் பங்கேற்பு

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், பாஜக வெளிநாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜாலி ஆகியோர் நேற்று இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று முதல் 21-ந் தேதி வரை ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் தொடக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்று உரையாற்றுகிறார். 
 
இந்த மாநாட்டில் பாஜக சார்பில் முரளிதரராவ், விஜய் ஜாலி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக அவர்கள் இருவரும் நேற்று மாலை கொழும்பு புறப்பட்டுச் சென்றனர். இம் மாநாட்டில் பாஜக தலைவர்கள் பங்கேற்கும் தகவலை அவர்கள் கொழும்பு புறப்பட்டுச் சென்ற பிறகே பாஜக வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்நாட்டுடன் நல்லுறவைப் பேணி வருகிறது. டெல்லியில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்றதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பாஜக தலைவர்களின் கொழும்பு பயணம் புதிய சர்ச்சையை

பிறந்தநாள்

வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் என்று. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், விமானப் பொறியாளர் என்ற அந்தஸ்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை இரண்டு நாள் பயணத்துக்குப் பின் அடைந்தார் சுனிதா. அவருடன் பயணம் செய்த 7 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நீல நிறத்தில் விண்ணில் மிதந்து கொண்டிருந்த நம் பூமி பந்தைப் பார்த்து ரசித்தனர்.விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்தது,மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டது, விண்வெளியில் இருந்து போன் செய்து மற்றவர்களுடன் பேசியது, விண்ணில் அதிக நேரம் நடந்தது என்று அடுக்கடுக்கான சாதனைகளைச் செய்து நம் இந்தியாவுக்குப்பெருமை சேர்த்த சுனிதா விரைவில் பூமிக்குத் திரும்பினார்.  19/09/2014  அன்று பிறந்த நாள் காணும் இவருக்கு வாழ்த்துகள் .......

திராட்சைப்பழத்தின் மருத்துவ குணம்


திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம்சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.    அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.   மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும். 

எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட சிறப்பானது
.

தோல்வி அடைந்த ஸ்காட்லாந்து விடுதலை, பிரிட்டனுடன் இணைந்தே இருப்போம் - ஸ்காட்லாந்து அதிர்ச்சி முடிவு, பின்னணி காரணங்கள் என்ன?


ஸ்காட்லாந்து 307 ஆண்டுகாலமாக பிரிட்டனுடன் இணைந்துள்ளது, இப்படி இணைந்து இருப்பது தொடர வேண்டுமா அல்லது ஸ்காட்லாந்து தனி நாடாக பிரியலாமா என்று வாக்குப்பதிவு நடந்தது, இந்த வாக்குப்பதிவை பல்வேறு நாடுகளில் சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களும், போராளி அமைப்புகளும் ஒரு பக்கம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர், மறுபக்கம் இதன் முடிவுகளை அரசுகளும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தன.

வாக்கு என்ணிக்கையில் பிரிட்டனுடன் இணைந்து இருப்பது என 54.2% வாக்குகளும் பிரிந்து தனி நாடாகலாம் என்று 45.7% வாக்களித்திருந்தனர், பிரிட்டனின் 3 பெரிய கட்சிகளும் கடைசி நேரத்தில் ஸ்காட்லாந்துக்கு அதிக அளவிலான உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்குவதாக உறுதியளித்தன.இது தான் ஸ்காட்லாந்து தனியாக பிரியாமல் பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற தரப்பு வெற்றி பெற காரணம் என்கிறனர்?

ஸ்காட்லாந்தில் பிறந்து வேறு ஊர்களில் வசித்து வருபவர்களுக்கு இதில் வாக்களிக்க வாக்குரிமை மறுக்கப்பட்டதும், இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் பிறந்து ஸ்காட்லாந்தில் குடியேறியிருப்பவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதுமே ஸ்காட்லாந்து தனிநாடாகமல் போக முக்கிய காரணம். ஸ்காட்லாந்து 300 ஆண்டுகளாக தனது விடுதலைக்காக பல்வேறு காலங்களில் பல்வேறு முறைகளில் போராடி வந்தது, கத்தியின்றி ரத்தமின்றி விடுதலைக்காக கிடைத்த ஒரு வாய்ப்பு இப்படி குடியேறிய மக்களால் வீணாகியது, இந்த நிலை தமிழ்நாட்டுக்கு வர நீண்ட நாட்கள் ஆகாது!

மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும், இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது. மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும்அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர். இதைக் கொண்டு ஆராய்வோம்..

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்? அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.  மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே...

வேலை வாய்ப்பு : தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கி எழுத்தர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி சனிக்கிழமை (செப்.20) தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கு. கலைச்செல்வன் தெரிவித்திருப்பது. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 19 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் பணியிடங்களுக்கான பொது தேர்வை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் நடத்துகிறது. பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வங்கிகளில் காலியாக உள்ள அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த 2 தேர்வுகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பதால் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டித் தேர்வுகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன் தொடக்கி வைக்கிறார். இந்த வகுப்பு தேர்வு நாள் வரை அனைத்து விடுமுறை நாள்களிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து, இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் 04362 - 237037 என்ற தொலைபேசியில் வெள்ளிக்கிழமை
(19/09/2014) மாலைக்குள் தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

வெள்ளை காகம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வியாழக்கிழமை முதல் வெள்ளைக் காகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்திரமேரூர் அருகில் மற்ற பறவைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வெள்ளை காகம் அண்மையில் மீட்கப்பட்டது. பறக்க முடியாமல் இருந்த அந்த வெள்ளைக் காகம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விலங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டது.  தற்போது வெள்ளைக் காகம் குணமடைந்து, நன்கு பறக்கும் நிலையில் உள்ளது. இதையடுத்து அதை பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முதல் அபூர்வ வரவான வெள்ளைக் காகத்தை வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். வெள்ளை நிறத்தில் காகங்களைப் பார்ப்பது மிகவும் அரிதாகும். சில நேரங்களில் நிறமி குறைபாடுகள் காரணமாக கருப்பு நிற காகம் வெள்ளையாக மாறிவிடுகிறது. வழக்கத்துக்கு மாறாக காணப்படும் வெள்ளை நிறமே காகத்துக்கு உயிர் வாழ்வதற்கான போராட்டமாக மாறிவிடுகிறது.

வாழ்விடத்துக்கு தகுந்தவாறு நிறங்களை பெற்றுள்ள பறவைகள், மாறாக வெள்ளை நிறங்களை பெறும் பொழுது மற்ற உயிரினங்களின் பார்வைக்கு எளிதாக ஆளாகிவிடுகின்றன.
இதனால் சக பறவைகள், விலங்குகளின் தாக்குதலுக்கும், வேட்டைக்கும் இலக்காகி விடுகின்றன. எனவே வெள்ளை நிறத்தில் காணப்படும் உயிரினங்கள் இயற்கையான வாழ்விடங்களில் வசிப்பதற்கு தகுதியற்றதாகிவிடுகின்றன என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் ஆகியும் மார்கெட்டை இழக்காத மேகி நூடுல்ஸின் வெற்றி ரகசியம்





* இதனை சமைப்பது மிகவும் எளிது. இதனை வெறும் 2 நிமிடங்களில் செய்து விடலாம். யாராவது பசியோடு இருந்தால் அவர்கள் பசியை உடனடியாக தீர்க்கலாம்.

* இதனை எப்போது  வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

* இதன் விலையும் குறைவாக உள்ளது. பல ஆண்டுகளாக ஒரே விலையில் இருந்து வருகிறது.

* இதனை சைவ பிரியர்களூம் சாப்பிடலாம், அசைவ பிரியர்களும் சாப்பிடலாம்.

* பல நூடுல்ஸ்கள் உள்ளன, ஆனால் மேகி நூடுல்ஸ் சுவை போல் எதுவும்  இல்லை.

* இது குழந்தைகளை அதிகம் கவரும் வண்ணம் உள்ளது. அவர்கள் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள்.


ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து முற்றிலும் சுதந்திர நாடாகச் செயல்படுவது தொடர்பான வாக்கெடுப்பு வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இரவு 9 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

"ஸ்காட்லாந்து சுதந்திர நாடாக வேண்டுமா?' என்ற கேள்வியுடன் ஆம், இல்லை என இரு கட்டங்கள் தரப்பட்ட வாக்குச் சீட்டில் பேனாவால் குறியிட்டு வாக்களிக்க வேண்டும். ஸ்காட்லாந்து, 1603-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் வந்தது. 1707-ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் கீழ், பிரிட்டனின் ஒரு பகுதியான பிறகு, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் முடிவுக்கு வந்தது.

1997-ஆம் ஆண்டு நடத்தபட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் மீண்டும் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தனி நாடு கோரிக்கையை வலியுறுத்திய ஸ்காட்லாந்து தேசிய கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து முற்றிலும் சுதந்திரம் பெற்ற தனி நாடாக வேண்டுமா என்பதற்கான வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோமாவில் இருந்த ஷூமேக்கரின் மருத்துவ செலவுகளை கேட்டால் நாம் கோமாவுக்கு சென்று விடுவோம்





பார்முலா 1 கார் பந்தயத்தில் பல ஆண்டுகளுக்கு நம்பர் 1 ஆக இருந்தவர் மைக்கேல் ஷூமேக்கர். இவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளாக கார் பந்தயத்தில் ராஜாவாக இருந்தார். அதன் பிறகு இளம் வீரர்கள் வந்ததால் அவரது வெற்றிகள் குறைந்தது. இருந்தால் அவர் தனது ரசிகர்களை இழக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி பனி சறுக்குகளில் சென்று கொண்டு இருக்கும் போது கால் தடுமாறி ஒரு பாறையின் மீது மோதினார், இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவர்களின் கடும் முயற்சிக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

ஆனால் கோமாவில் இருந்தார். அதன் பிறகு ஜூலையில் கோமாவில் இருந்து திரும்பினார். ஆனால் இன்னும் அவரால் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. இதற்காக மருத்துவர்கள் கடும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக அவருடன் 15 மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு இப்போதைக்கு ஒரு வாரத்துக்கு 1 லட்சம் பவுன்ட்ஸ் மருத்துவ செலவு ஆகிறது. அவரின் உடலில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.

காஷ்மீரின் இன்றைய நிலை

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கவில்லை, ஆனால் மக்களின் துயரம் அதிகரித்து விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டனர். பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநிலத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. 

இந்த தேசியப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.

  • 'THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND' என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம்.

  • ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

  • ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND' என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம்.

வங்கிக்கான SWIFT-CODE: IDIBINBBPAD.  / IFSC CODE: IDIB000P001. ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.

நிதியளித்த அனைவரது பெயர்களும், நாளேட்டில் வெளியிடப்படும். இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும்.

காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது. அதற்கு உதவ வேண்டியது நமது கடமை.

விஜய்யின் கத்தி பட டீசர் மற்றும் பாடல்களை கலாய்த்து வந்த ட்ரோல்கள்

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கத்தி. சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தை துப்பாக்கி படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை நேற்று வெளியானது. இதில் படத்தின் டீசரையும் வெளியிட்டு உள்ளார்கள் . இவை பேஸ்புக்கில் உள்ள பக்கங்களால் ட்ரோலாக மாற்றப்பட்டு உள்ளன.













 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media