இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடமும் ஒரு கற்பழிப்பு நடந்து வருவதாக ஒரு சோகமான தகவல் இருக்கிறது . கற்பழிப்பு நடந்த பின் தான் அது அனைவருக்கும் தெரிந்து , பின் நடவடிக்க எடுக்க நீண்ட காலம் ஆகும் . அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த பெண் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் . இதனை தடுப்பதற்கு அந்த கற்பழிப்பு நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டும் .
இவ்வாறு கற்பழிப்பு நடக்காமல் தடுக்க ஒரு ஆடையை வாரணாசியைச் சேர்ந்த தீக்ஷா பதக் 21 மற்றும் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா 23 இருவரும் இணைந்து உருவாக்கி உள்ளனர் .
இந்த ஆடையில் ஒரு சிறிய பட்டன் இருக்கும் . அந்த பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையம் அனைத்திற்கும் தகவல் அனுப்பப்படும் . அந்த ஆடையில் உள்ள இடத்தைக் கண்டறியும் ஜி.பி.எஸ் மூலம் காவல்துறையினர் அந்த பெண்ணின் இடத்தைக் கண்டறிய முடியும் . இப்போதைக்கு அந்த பட்டனின் தகவல் வாரணாசியில் உள்ள 200 காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த பட்டன் முக்கிய உறவினர்களுக்கு எஸ்.ஓ.எஸ் மெசெஜ் அனுப்பும் வகையிலும் வடிவமைத்துள்ளனர் .
மேலும் வாரணாசியை சேர்ந்த இரண்டு மாணவிகள் கற்பழிப்பை தடுக்க செருப்பு ஒன்றை வடிவமைத்துள்ளனர் . இந்த செருப்பு பாலியல் வன்முறை செய்ய நெருங்குபவனுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் , மேலும் உறவினர்களுக்கு தகவலும் கொடுக்கப்படும் .