BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 9 November 2014

உணவே மருந்து : தேங்காய், வாழைப்பழம்


  • காலையில் சுக்குப் பொடி, கருப்பட்டி போட்டு கொதிக்க வைத்த சுக்குவெந்நீர். (வீட்டருகே கிடைக்கும் துளசி, அருகம்புல், புதினா இலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றையும் விருப்பம் போல் போட்டு கொதிக்க வைக்கலாம்)
  • காலை உணவாக தேங்காயுடன் வாழைப் பழங்கள். அரைமூடி தேங்காய் இரண்டு வாழைப் பழங்கள். மூட்டு வலி‍ அல்லது முதுகு வலி உள்ளவர்கள் தேங்காயுடன் பேரிச்சம்பழம் உண்ணலாம்.
  •  பதினோரு மணிக்கு தேன் கலந்த எலுமிச்சைச் சாறு. அல்லது இளநீர்.
  • மதிய உணவாக தேங்காய்ப்பூ, வெல்லம் சேர்த்து ஊறவைத்த அவல். (அவல் இயற்கை உணவு அல்ல என்றாலும் மதிய உணவு சற்று வயிறு நிரம்ப இருந்தால்தான் சிலருக்கு பிடிக்கும்). அல்லது பருவத்திற்கேற்ற பழங்கள். விலை குறைவாகவும் இருக்கும், சத்தானதாகவும் இருக்கும்.
  • மாலை 5 மணிக்கு பீட்ரூட், கேரட், வெள்ளைப் பூசணி, சிறிது புடலங்காய், தேங்காய், இவற்றைத் துருவி மிளகு சேர்த்து (உப்பு வேண்டாம்) உண்ணலாம். அல்லது காய்கறிகளை வேக வைத்து ஒரு சாறு (சூப். இது இயற்கை உணவல்ல என்றாலும் மாலையில் தேனீர் குடித்தே பழக்கப்ப்டட நமது நண்பர்களுக்காக சிறப்புத் தள்ளுபடி)
  • இரவு உணவாக பப்பாளி, மாதுளை, ஆரஞ்சு (இப்பொழுது பருவ காலம் எனவே விலை குறைவு), வாழைப் பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒரே கனியை உண்ணலாம்.

காலை முதல் இரவு வரை, எல்லோருக்கும் பொதுவான உணவு என்பது தேங்காயும் வாழைப் பழங்களும்தான்.

டிசம்பரில் பயங்கர சூரிய புயல் : பூமி இருளில் மூழ்கும்

16-12-2014 - சனி பெயர்ச்சி அன்று நிகழவிருக்கும் நிகழ்வு சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது. டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கடந்த 250 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என்று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல் வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம்பிவிடும். தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்துவிடும். இதன் காரணமாக டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரிய மண்டல புயல் பூமி அருகில் வராது. எனவே உலகம் இருளில் மூழ்கினாலும், பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் சூரிய புயலை நினைத்து மக்கள் பயப்பட வேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய மண்டல புயலால் ஏற்படும் தூசி, துகள்கள் 220 மணி நேரத்துக்கு வானத்தை அடைத்துவிட்டது போல மாற்றிவிடும். அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழரின் இசைக்கருவி : யாழ்


யாழ்’ என்பது மிகப் பழமையான இசைக்கருவி. உலகத்திலேயே பல நாடுகளில் ஆதிகாலத்தில் வழங்கி வந்தது. பழந்தமிழ் நூல்களிலே இக்கருவி பெரிதும் பாராட்டிக் கூறப்படுகிறது. பழந்தமிழர்களால் மிகச் சிறந்த இசைக்கருவியாகப் போற்றப்பட்டது. மிகப் பழைய காலத்தில், உலகம் முழுவதும் இசைக்கருவியாக இருந்தது யாழ்.

வில் என்னும் போர்க்கருவியிலிருந்து யாழ் என்னும் இசைக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.வில்லில் நாணைப் பூட்டி, அதில் அம்பைத் தொடுத்து, நாணைப் பலமாக இழுத்து, அம்பை விசையாக எய்தவுடன், நாணின் அதிர்ச்சியால் ஒரு வித ஓசை உண்டானது. அந்த ஓசை வண்டுகளின் ரீங்காரம் போல இனிய ஓசையாக இருந்தபடியால், அக்காலத்து மனிதர் அந்த ஓசை உண்டான காரணத்தை நுட்பமாக ஆராய்ந்து, அதன் பயனாக ‘வில்யாழ்’ என்னும் இசைக்கருவியை உண்டாக்கினார்கள். கொடிய போர்க்கருவி, மனிதனின் அறிவினாலும் இசை ஆராய்ச்சியினாலும் நல்லதோர் இசைக்கருவியாக மாறியது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வில்யாழ், ஆதிகாலத்தில் உலகம் முழுவதும் இசைக்கருவியாக வழங்கி வந்தது. சங்க காலத்திலே பாணர் என்போர் யாழ் வாசிப்பதிலும் இசைப்பாடுவதிலும் புகழ்பெற்றிருந்தார்கள்.

உருவ அமைப்பிலும் யாழ் வில் போன்றது. வில் வடிவமான யாழை, வீணை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வீணை உண்டான பிறகு யாழ் மறைந்து விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யாழ் நெடுங்காலம் வழங்கி வந்தது. பிறகு கி.பி. 10ம் நூற்றாண்டுக்குப் பின்னர் யாழ் மறைந்து வீணை என்னும் கருவி வழங்கப்பட்டது.

விசாரணையை முடக்க முயற்சி : ஐ.நா. குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு


விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையைக் குலைக்கும் வகையில், பொதுமக்களை இலங்கை அரசு அச்சுறுத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஸயீத் ராத் அல் ஹுûஸன் குற்றம் சாட்டியுள்ளதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸயீத் ராத் ஹுûஸனுக்கு ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆரியசிங்கா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.நா. அமைப்பின் உறுப்பினராக உள்ள, இறையாண்மை பொருந்திய ஒரு நாட்டுக்கு எதிராக, மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளீர்கள். தேசத்தின் கெüரவத்துக்கே இலங்கை அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. முகாந்திரமற்ற ஒரு விசாரணைக்கு மக்கள் உள்படுவது குறித்து அரசு கவலைப்படவில்லை.

எந்தவொரு மனித உரிமை அமைப்பும் ஆதாரங்களை வெளியிடுவதை இலங்கை அரசு தடுக்கவில்லை. எந்தவொரு தனி நபரையும் அச்சுறுத்தவும் இல்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கைக்கு எதிரான மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தும், நடுநிலையான விசாரணைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், தவறான மற்றும் உண்மையை திசை திருப்பும் தகவல்களை வேண்டுமென்றே அந்த நாடு பரப்பி வருவதாகவும் ஸயீத் ராத் அல் ஹுஸன் குற்றம் சாட்டியிருந்தார்.

ரஷிய - அமெரிக்க அதிபர்கள் அடுத்த வாரம் பேச்சு

சீனா, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள வுள்ள ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. அதையடுத்து, ஆஸ்திரேலியாவில், ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இவ்விரு மாநாடுகளிலும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்கின்றனர். இந்த இரு நிகழ்ச்சிகளின்போதும், இரு அதிபர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுகள் அதிகாரபூர்வமற்றவையாக இருக்கும் என புதினின் வெளிநாட்டுத் துறை விவகார ஆலோசகர் யூரி உஷகோவ், மாஸ்கோவில் சனிக்கிழமை கூறினார். இது போன்ற சந்தர்ப்பங்களை புதின் தட்டிக் கழிப்பதில்லை எனவும் அவற்றை வரவேற்கும் குணமுள்ளவர் என்றும் உஷகோவ் மேலும் கூறினார். இந்நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸ், இரு அதிபர்களும் சந்தித்துப் பேசுவது குறித்து முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.

ஆனால் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே, இருவரும் அதிகாரபூர்வமற்ற பேச்சு நடத்தினால் அதில் வியப்பதற்கு எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம், இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத் தாக்குதல் நினைவாக பிரான்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதின், ஒபாமா வந்திருந்தனர். அப்போது இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுடன் நடைபெற்று வந்த போரில் ரஷியாவின் பங்கு குறித்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளான பின்னணியில் புதின்-ஒபாமா சந்திப்பு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. உக்ரைன் பிரச்னைக்கு முற்றிலும் தீர்வு காணப்படாததன் பின்னணியில், புதின் - ஒபாமா பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு: அமெரிக்க உதவிக்கு ரஷியா ஆர்வம்

உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு காணும் விஷயத்தில் அமெரிக்கா ஈடுபட்டால் அதனை வரவேற்போம் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் ùஸர்கேய் லாவ்ரோவ் மாஸ்கோவில் கூறியுள்ளார். மாஸ்கோவில் அரசுத் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் அளித்த பேட்டி சனிக்கிழமை ஒளிபரப்பாயிற்று. அதில் அவர் பேசிய விவரம்: உக்ரைனில் தற்போது நிலவி வரும் பிரச்னைக்கு அமெரிக்கா தீர்வு காண முற்பட்டால், அது சரியான முடிவாக இருக்கும். உக்ரைனின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ரஷியா எடுத்துள்ள நிலைப்பாட்டுடன், அமெரிக்காவின் நிலைப்பாடு வேறுபடுகிறது. எனினும், கிழக்கு உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு அளிக்கும் விஷயத்தில் அமெரிக்கா பங்களிக்குமானால் அது வரவேற்கப்பட வேண்டியதாகும்.

உக்ரைன் அரசுக்கும் கிளர்ச்சியாளர் தலைமைக்கும் இடையே சமாதானப் பேச்சு நடத்தும் சூழல் ஏற்பட அமெரிக்கா முயற்சிக்குமானால் அது சரியான நடவடிக்கையாக இருக்கும். உக்ரைன் அரசில் இடம்பெற்றுள்ள சிலர் ஆவேசமான நிலைப்பாடு கொண்டவர்களாக உள்ளனர். ரஷிய ஆதரவாளர்களான கிளர்ச்சியாளர்களுடன் முழு அளவிலான போரை உக்ரைன் அரசில் இடம் பெற்றுள்ள சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அது போன்ற சிந்தனையுள்ள உக்ரைன் தலைவர்களின் எண்ணத்தை அமெரிக்கா மாற்ற முனைய வேண்டும் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் ùஸர்கேய் லாவ்ரோவ் மாஸ்கோவில் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் : புதிய அமைச்சர்கள் இன்று பிற்பகல் பதவியேற்பார்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 20 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்படும் மத்திய அமைச்சரவையில் கோவா முதவர் பதவியை ராஜினாம செய்துள்ள மனோகர் பரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. நேற்று புதுதில்லியில் நடந்த பா.ஜ.க நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய அமைச்சரவியில் புதிதாக இடம் பெற உள்ள 20 அமைச்சர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, மற்றும் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என தெரிகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்தும் அமைச்சரவையில் இடம்பெறுவார். புதிய அமைச்சர்கள் இன்று பிற்பகல் பதவியேற்பார்கள் எனவும் பதவியேற்புக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு டீ விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை விழிப்புணர்வுப் பிரசாரம் : 9 பேர் குழு அமைப்பு

தனது சொந்தத் தொகுதியான வாராணசியில் கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியை சனிக்கிழமை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு 9 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார். மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது சொந்தத் தொகுதியான வாராணசிக்கு முதன்முறையாக 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வாராணசியின் அஸ்ஸி காட் பகுதியில் கங்கை நதியில் கிடந்த வண்டல் மண்ணை மண்வெட்டியால் அகற்றி தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கிவைத்தார். சுமார் 15 நிமிடங்கள் வரை கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டார். பின்னர் கங்கையை தூய்மைப்படுத்தும் தனது திட்டம் குறித்து மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கங்கை நதியில் மண்டிக்கிடக்கும் குப்பையை அகற்றும் பணியை விரைவுபடுத்த நான் இங்கு வந்துள்ளேன். இங்குள்ள சமூக சேவை அமைப்புகள் ஒரே மாதத்தில் வாராணசியில் ஓடும் கங்கை நதியில் உள்ள குப்பைகளை அகற்றி விடும் என்று உறுதி அளிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு 9 பேர் குழுவை அறிவித்தார். அக்குழுவில், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பாஜக எம்.பி.யும், போஜ்புரி பாடகருமான மனோஜ் திவாரி, சூஃபி பாடகர் கைலாஷ் கெர், நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவாஸ்தவா, கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முகமது கைப், சித்ரகூடத்தில் உள்ள பார்வையிழந்தோருக்கான பல்கலைக்கழக நிறுவனரும், துணை வேந்தருமான சுவாமி ராம்பத்ராசார்யா, சம்ஸ்கிருத அறிஞர் தேவிபிரசாத் துவிவேதி, எழுத்தாளர் மனு சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பின்னர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்தார். இதையடுத்து, அவர் அங்குள்ள ஆன்மிகத் தலைவர்

ஸ்ரீஆனந்தமயி மாவின் ஆசிரமத்துக்குச் சென்று, அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த ஆசிரமம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மருத்துவமனையையும் மோடி பார்வையிட்டார். அதன் பிறகு அவர் தில்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு வாராணசியில் உள்ள அறிஞர்களுடனான விருந்தில் பிரதமர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: லண்டன் நகரம் போன்று வாராணசி நகரம் பாரம்பரியம் மிகுந்த, நவீன நகரமாக விரைவில் மாறும். பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குஜராத்தின் புஜ் நகரை நான் அந்த மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில் தலைசிறந்த நகரமாக மாற்றினேன். அதேபோல் வாராணசியும் மாறும். பேட்டரியால் இயங்கும் கார்கள் இங்கு இயக்கப்படும். வீடுதோறும் சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தில்லியில் இருந்து வாராணசிக்கு, அயோத்தி, அலாகாபாத் வழியாக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் "பேலஸ் ஆன் வீல்ஸ்' ரக சொகுசு ரயில்கள் இயக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media