BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 4 September 2014

இந்தியாவிலேயே மிகப்பெரிய"ரெய்டு"


மும்பையில் வீரார் பகுதியில் பாய் தாகூர் என்பவர் வீட்டிலும்,

அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில்13000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய"ரெய்டு" என்று கூறப்படுகிறது

கோள்கள், நட்சத்திரங்கள் கோள வடிவில் இருப்பது ஏன் ?

பெரும்பாலான கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரிய விண்பொருள்கள் கோள வடிவிலேயே உள்ளன. கோள்களும் நட்சத்திரங்களும் இப்படி இருப்பதற்குக் காரணமாக இருப்பது இரண்டு விசைகள். இந்த இரண்டு விசைகளில் ஒன்றாக இருக்கும் ஈர்ப்புவிசை, மற்றொரு விசையை சமநிலைப்படுத்துகிறது.
நட்சத்திரங்களில் அடங்கியுள்ள பருப்பொருளை வெளிப்புறமாக இழுக்கும் வெப்ப அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் வகையில் ஈர்ப்புவிசை செயல்படுகிறது. அதேநேரம் கோள்களில், ஈர்ப்பு விசைக்கு எதிராக சம்பந்தப்பட்ட பொருளில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தி, பருப்பொருள் ஒடுங்கிப் போகாமல் இருக்கும் வகையில் சமநிலையை உருவாக்குகிறது. கோள்கள், நட்சத்திரங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள இந்த சக்திகள்
எப்போதும் சமநிலையில் இருக்க முயற்சிப்பதால், அந்த இரண்டு விசைகளின் செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வசதியான வடிவத்திலேயே சம்பந்தப்பட்ட பொருள் உருக்கொள்கிறது. வடிவியல் ரீதியில் கோளம் மிகவும் சமநிலையான, உறுதியான வடிவமைப்பு. எனவே, பெரும் கோள்களும் நட்சத்திரங்களும் கோள வடிவத்திலேயே உள்ளன.
பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஐந்து வால்களுடன் தோற்றம் தந்தாலும், உண்மையில் கோள வடிவத்திலேயே உள்ளன. நமது பார்வைக்குத்தான், அவற்றின் வெளிச்சம் நட்சத்திர வடிவில் வால்களுடன் தோற்றம் தருகிறது.

மருத்துவ உலகில் புதிய முயற்சி :அச்சிடப்பட்ட கண் செல்கள்

பார்வை குறைபாட்டை சரி செய்யப் பயன்படும் முக்கிய கண் செல்களை அச்சிட்டு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அச்சிட்டு உருவாக்கப்பட்ட செல்கள் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைவதாகவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் எலியின் ரெட்டினாவில் உள்ள இரண்டு முக்கிய செல்களை இன்க் ஜெட் பிரிண்டர் மூலம் அச்சிட்டு தயாரித்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.
மனிதர்களுக்கு பயன்படும் வகையிலான ஆய்வுகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் என்றும் விஞ்ஞானிகள் குழு குறிப்பிட்டுள்ளது. இந்த செல்களே கண்களில் இருந்து மூளைக்கு செய்திகளை அனுப்புபவை. தற்போதைய ஆய்வுகள் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், வரும் காலத்தில் மேலும் சில ரெட்டினா செல்களை அச்சிட்டு தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


பேஸ்புக்கில் தீயாக பரவி வரும் நீயா நானா கோபினாத்தை கழுவி கழுவி ஊற்றப்பட்ட வீடியோ !!
http://www.satrumun.net/2014/09/video-which-criticizes-gopinath.html

ஆண்கள் இருட்டில் செக்ஸ் வைப்பதை அதிகம் விரும்புவது ஏன்?
http://www.satrumun.net/2014/09/why-man-prefers-to-have-sex-with-lights.html

தன்னுடைய நிர்வாண படத்தை தானே வெளியிட்டு ஹேக்கரை கலாய்த்த நடிகை !!
http://www.satrumun.net/2014/09/blog-post_66.html

மோடியின் 100 நாள் ஆட்சி, மக்கள் போட்ட மார்க் என்ன? பாஸா பெயிலா ??
http://www.satrumun.net/2014/09/5-year-old-girl-trapped-in-washing.html

தீபிகா படுங்கோனையை முந்திய ஆலியா பாட் !!
http://www.satrumun.net/2014/09/aalia-bhat-beats-deepika-padunkonae.html

தொடர்ந்து 4 தோல்விப் படங்கள்... : கார்த்தியின் சினிமா கேரியரை கெடுத்தது யார்?
http://goo.gl/M2Osbz

ரவி சாஸ்திரி - இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்து இருப்பவர் !!
http://www.satrumun.net/2014/09/ravi-shasthri-man-behind-indian-team-victory.html

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்த வழக்கில் புதிய திருப்பம்
http://www.satrumun.net/2014/09/culprit-arrested-in-ajith-house-bomb.html

த்ரிஷாவின் கவர்ச்சி டாட்டூ குத்தி கொள்ளும் போட்டோக்கள் வெளிவந்துள்ளது
http://www.satrumun.net/2014/09/trisha-with-tatoo-for-boologam.html

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மருத்துவமனையில் அனுமதி
http://www.satrumun.net/2014/09/director-kbalachandar-admitted-in.html

விஞ்ஞானிகள் கணித்த பூமியின் இறுதி நாள் எது தெரியுமா?
http://www.satrumun.net/2014/09/2880-16.html

சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைல் வெளிவந்துள்ளது
http://www.satrumun.net/2014/09/samsungs-new-mobile-released.html

பூமியின் எந்த பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது என தெரியுமா?
http://www.satrumun.net/2014/09/blog-post_41.html

மூளை சுறுசுறுப்பாக செயல்பட சில வழிகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_94.html

வாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 5 வயது சிறுமி
http://www.satrumun.net/2014/09/5-year-old-girl-trapped-in-washing.html

ஹேக்கிங் செய், பணத்தை அள்ளு, டிவிட்டர் நிறுவனம் ஹேக்கர்களுக்கு விடுத்துள்ள சவால்
http://www.satrumun.net/2014/09/twitter-announces-contest-for-bounty-hunters.html

இந்தியாவில் தனது கிளையை தொடங்கிய அல் கொய்தா அமைப்பு !!
http://www.satrumun.net/2014/09/al-qaeda-open-its-wing-in-indian-subcontinent.html

ஹேக்கர் வெளியிட்ட நிர்வாண படங்களை பார்த்தவர்களிடம் இருந்து நன்கொடை வாங்க மறுத்த தொண்டு நிறுவனம்
http://www.satrumun.net/2014/09/charity-refuses-fund-from-people-who-saw-the-pictures-leaked-by-hacker.html

மூளையின் வளர்ச்சி
http://www.satrumun.net/2014/09/blog-post_23.html

கேரளாவின் ஆளுநராக முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் செப்டம்பர் 5 ஆம் தேதி பதவியேற்க உள்ளார் !!
http://www.satrumun.net/2014/09/sathasivam-to-be-appointed-as-a-governor-of-kerala.html

மறைந்து வரும் தமிழரின் உணவு பழக்கங்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_18.html

அழிந்து வரும் உயிரினம், சிட்டுக்குருவி
http://www.satrumun.net/2014/09/blog-post_4.html

கங்கையை சுத்தம் செய்ய 200 வருடம் ஆகும் , மோடிக்கு உச்ச நீதிமன்றம் பதில் !!
http://www.satrumun.net/2014/09/sc-asks-modi-plan-to-clean-ganga.html

யுவராஜ் - போல்ட் மோதல் !! கிரிக்கெட்டில் போல்ட் வெற்றி , ஓட்டத்தில் யுவராஜ் வென்றார் ( படங்களுடன் )
http://www.satrumun.net/2014/09/yuvraj-vs-bolt-in-exbhition-match.html

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மருத்துவமனையில் அனுமதி


இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்  உடல் நிலை சரியில்லாத நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் ஒரு மணி நேரம் முன்பு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ட்ரெக்சரில் வைத்து மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்ட இயக்குனர் சிகரத்துக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன் தான் கே.பாலச்சந்தரின் மகன் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்த நிலையில் இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

இயக்குனர் சிகரம் விரைவில் உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து நலமுடன் வருவார் என வேண்டுகிறோம்

2880 - ம் ஆண்டு மார்ச் 16 - ம் தேதி பூமிக்கு இறுதி நாள்

உலகின் மிகச் சிறந்த இளம் இயற்பியல், வானியல் நிபுணர்களில் ஒருவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் நடந்து வரும் ஹிக்ஸ் போஸான் என்ற அணுவின் நுண் துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஹிக்ஸ் போஸான்.. ‘கடவுளை’ 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!, ‘கடவுள்’ இருப்பது உண்மை தான்!! ஈடுபட்டுள்ள முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். பிபிசியுடன் இணைந்து இவர் உருவாக்கிய வானியல் தொடர்பான டாகுமெண்டரிகள் உலகப் புகழ் பெற்றவை. மிகக் கடினமான விண்வெளி ஆராய்ச்சிகளை மிக மிக எளிதாக மக்களுக்குப் புரிய வைப்பதில் கில்லாடி.


இவரது Wonders of Life, Wonders of the Universe, Wonders of the Solar System போன்ற டாகுமெண்டரிகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல்கள் ஒளிபரப்புவது வழக்கம். முடிந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் இந்த சிடிக்களை ஆன்லைனில் வாங்கியாவது பாருங்கள். இவை வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள் என்பதே நிஜம். இந்த பிரையன் காக்ஸ் இப்போது ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அவர் சொல்வது இது தான். பூமியையும் மனித குலத்தையும் எந்த நேரத்திலும் மொத்தமாக காலி செய்யப் போவது ஒரு விண் கல் தான் என்கிறார். சமீபத்தில் பூமியை ஒரு பெரிய விண் கல் மிகச் சமீபத்தில் கடந்து சென்றுள்ளது. இந்தக் கல் பூமியின் மீது மோதியிருந்தால் இப்போது இதை எழுத நானோ, படிக்க நீங்களோ இருந்திருக்க சாத்தியமில்லை. பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும். இதே போன்ற விண் கல் எந்த நேரத்திலும் பூமியைத் தாக்கலாம் என்று கூறும் காக்ஸ், இந்த ஆபத்துகளை எதிர்கொள்வது, தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் மிக மந்தமான வேகத்தில் நடந்து வருவது ஆச்சரியம் தருவதாகவும், இந்த ஆபத்தை உலக நாடுகள் சரியான உணரவில்லை என்றும் எச்சரித்துள்ளார்.

அவர் கூறுகையில், சில மாதங்களுக்கு முன் ஒரு விண்கல் பூமிக்கு மிக அருகே வந்துவிட்டுப் போனது. அது வந்ததே நமக்குத் தெரியாது. அது திரும்பிச் சென்றபோது தான் அதை நாம் கவனித்தோம். அந்தக் கல் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்திருந்தால் பூமியின் வட்டப் பாதையில் நுழைந்திருந்தால் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும். நாம் மீண்டும் தப்பியிருக்கிறோம். ஒரு பெரிய பேருந்தின் சைஸில் உள்ள 2014 EC என்ற விண்கல் கடந்த மார்ச் மாதம் பூமிக்கு 61,637 கி.மீ. தூரமாக, பூமிக்கு மிகப் பக்கமாக வந்து சென்றது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் 6ல் ஒரு பகுதி தான். இந்தக் கல் பாதை மாறி இன்னும் நெருங்கி வந்திருந்தால் பூமி இந்நேரம் பஸ்பமாகியிருக்கும். மனித இனத்தின் பெயரை தாங்கிக் கொண்டு நிச்சயம் ஒரு விண் கல் விண்ணில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. அது எப்போது பூமியைத் தாக்கும் என்பது நமக்குத் தெரியாது.
பூமிக்கு மிக ஆபத்தானவை என்று கிட்டத்தட்ட 1,400 விண் கற்களை நாஸா அடையாளம் கண்டு, அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால், இன்னும் எத்தனை கற்களோ.. யாருக்குத் தெரியும். இது வரை நாம் தப்பிப் பிழைத்திருப்பது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் காரணமாகத்தான். எனக்கு மிகுந்த வருத்தம் தருவது, நம்மிடம் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்தே இந்த ஆபத்துகளை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும் என்று தெரிந்திருந்தும் இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. விண் கற்களை அணு ஆயுதங்களைக் கொண்டு தகர்க்கலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது சாத்தியமாகக் கூட இருக்கலாம். ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடங்கக் கூட இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பகுதியில் ஒரு மாபெரும் விண்கல் வந்து விழுந்து வெடித்தது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப் போல 20, 30 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
அந்தக் கல் பூமியின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது கூட நமக்குத் தெரியாது. அது பூமிக்குள் வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம். ஆனால், நிலைமையே புரியாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வருகின்றன என்கிறார் காக்ஸ்.  இதற்கிடையே நாஸா மிகக் கவலையுடன் கண்காணித்து வரும் விண் கல் 1950 DA தான். கிட்டத்தட்ட 1 கி.மீ. விட்டம் கொண்ட இந்த விண்கல் 1950ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்ல் ஏ. விர்டனென் என்ற அமெரிக்க விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. 17 நாட்கள் மட்டுமே அப்போது இதை கண்காணிக்க முடிந்தது. பின்னர் இது மறைந்துபோனது. ஆனால், 2000ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இது விண்வெளி தொலைநோக்கிகளுக்குப் புலப்பட்டது.
2001ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இந்தக் கல் பூமிக்கு 7,789,950 கி.மீ. அருகே வந்துவிட்டுப் போனது. அப்போது இதை ஆராய்ந்தபோது இந்தக் கல் மிக வேகமாக சுழல்வதும், இரும்பு, நிக்கல் போன்ற ரசாயனங்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது. இந்த அதிவேகமாக சுழற்சி காரணமாக இந்தக் கல் தானாகவே உடைந்து சிதறியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை இது உடையவில்லை. வினாடிக்கு 15 கி.மீ. வேகத்தில் பயணித்து வரும் இந்த எரிகல் பூமியில் 2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி அட்லாண்டிக் கடலுக்குள் மணிக்கு 60,000 கி.மீ. வேகத்தில் வந்து விழ வாய்ப்புண்டு. இது நடந்தால் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு பூமி வெறும் திட சாம்பலாகவே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அடுத்தடுத்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் பூமியை நோக்கிய இந்தக் கல்லின் பயண திசை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை உறுதி செய்கின்றன. இது தான் இப்போதைக்கு நமக்கு உள்ள ஒரே ஆறுதல்!

அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.பொது அறிவு

  • அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.
  • மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
  • முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். 
  • கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
  • மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
  • பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
  • நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.

ஆண்கள் ஏன் இருட்டில் செக்ஸ் வைப்பதை அதிகம் விரும்புகிறார்கள்





ஆண்கள் பெரும்பாலும் இருட்டில் செக்ஸ்  வைத்து கொள்வதையே விரும்புகிறார்கள். இது குறித்து வெளிநாட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் வெளிச்சமாக இருக்கும் போது ஆண்களால் முழுமையாக செயல்பட முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு காரணம் ஆண்கள் தங்கள் உடல் குண்டாக இருப்பதை கண்டு வெட்கப்படுகிறார்கள். அவர்கள் உடம்பில் அவர்களுக்கு பிடிக்காத ஒன்று அவர்களது தொந்தி தான். எனவே அதனை மறைப்பதற்காக இருட்டில் செக்ஸ் வைப்பதையே விரும்புகிறார்கள்.

மூளை சுறுசுறுப்பாக செயல்பட சில வழிகள்

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.
மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?
மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான்.
எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில வழிமுறைகள் ...
* மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும்.
மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

* இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும்.
* உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
* அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.
* ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும். 

* அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம்.
* அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள்.
* நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.

பேஸ்புக்கில் தீயாக பரவி வரும் நீயா நானா கோபினாத்தை கழுவி கழுவி ஊற்றப்பட்ட வீடியோ !!


நீயா நானா நிகழ்ச்சி ஒரு காலத்தில் அனைவராலும் பார்த்து ரசிக்கப்பட்டது .ஆனால் இப்போது அனைவராலும் கழுவி கழுவி ஊற்றப்படுகிறது . அப்படி கழுவி கழுவி ஊற்றப்பட்ட வீடியோக்களில் ஒன்று இதோ !!





பாருங்கள் !! பகிருங்கள் !!!

சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைல் வெளிவந்துள்ளது

சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைல் வெளிவந்துள்ளது. இதன் பெயர் சாம்சங்  நோட் எட்ஜ். இந்த மொபைல் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. இது விலை 50 ஆயிரம் வரை இருக்கலாம் என தெரிகிறது.




வாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 5 வயது சிறுமி




அமெரிக்காவில் உள்ள பாசிடோனா என்னும் நகரில் உள்ள ஒரு துணி துவைக்கும் கடையில் உள்ள வாஷிங் மெஷினில் 5 வயது சிறுமி சிக்கி கொண்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுமி மெஷினில் சிக்கி கொண்டு சுத்தியுள்ளார். இதனை கடைக்கு வந்த ஒருவர் பார்த்து விட்டு மெஷினை நிறுத்த சொல்லியுள்ளார். அதன் பிறகு மெஷினை நிறுத்தி அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த சிறுமி எப்படி மெஷினுக்குள் சிக்கி கொண்டார் என்பது தெரியவில்லை. அது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மோடியின் 100 நாள் ஆட்சி குறித்த மார்க் ஷீட் வெளிவந்தது - மோடி பாஸா பெயிலா ??




செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று மோடி அரசு தனது 100 நாள் ஆட்சியை நிறைவு செய்தது. இந்த ஆட்சி எப்படி இருந்தது, அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களின் கோரிக்கைகளை மோடி நிறைவு செய்தாரா இல்லையா என்பது குறித்து என்.டி.டிவி நிறுவனம் ஒரு வோட்டிங் நடத்தியது. இதன் முடிவுகள் வெளிவந்துள்ளது. இந்த வோட்டிங் 58 ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்டது.

மோடியின் 100 நாள் ஆட்சிக்கு மக்கள் கொடுத்து இருக்கும் ரேட்டிங் 5 க்கு 4.2 ஆகும். வாக்களித்த 58 ஆயிரம் பேரில் 34 ஆயிரம் பேர் மோடியின் ஆட்சி சூப்பர் என்று வாக்களித்து உள்ளார்கள். 3 ஆயிரம் பேர் இது மிக மோசமாக உள்ளது என கூறியுள்ளார்கள். வெளிநாடு உறவுகள் மற்றும் ஆட்சி முறையில் மக்கள் எதிர்ப்பார்த்ததை விட மோடி சிறப்பாக செயல்பட்டு உள்ளார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் மோடி அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

எங்கள் தவறினை கண்டு பிடியுங்கள் , பரிசினை வெல்லுங்கள் !! டிவிட்டர் ஹேக்கர்களுக்கு அறிவித்துள்ள புதிய போட்டி ..



உலகம் எங்கிலும் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று டிவிட்டர் . டிவிட்டர் தனது சேவையின் பாதுகாப்பை அறிவிக்க முடிவு செய்துள்ளது . இதனால் உலகம் எங்கும் உள்ள ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது .

ஹேக்கர் ஒன் என்னும் போர்டலுடன் இணைந்து டிவிட்டர் இந்த போட்டியை தொடங்கியுள்ளது . டிவிட்டரில் உள்ள பாதுகாப்பு குறைகளை கண்டு பிடித்து கூறினால் ஹேக்கர்களுக்கு பணம் வழங்கப்படும் . குறைந்த பட்ச பரிசாக 8,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர் . அதிகப்பட்ச தொகை என்று எதுவும் அறிவிக்கவில்லை .

அவர்கள் கண்டுபிடித்து கூறும் குறைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் . இந்த பணம் குறைவாக இருந்தாலும் , ஒரு பெரிய தவறை சுட்டிக் காட்டினால் ஹேக்கர்கள் பண மழையில் நனையலாம் . இதேப் போன்ற போட்டிகளை இதற்கு முன்னால் பேஸ்புக் மற்றும் கூகுள் அறிவித்து இருந்தது . அதன் மூலம் அவர்கள் தங்கள் பாதுகாப்பை அதிகரித்து கொண்டனர் .

கடந்த வருடம் பேஸ்புக் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இது போன்ற பாதுகாப்பு பிரச்சனையை சுட்டிக் காண்பித்ததற்கு 8 லட்ச ரூபாய் பரிசாக வழங்கியது .

இந்தியாவில் தனது கிளையை தொடங்கிய அல் கொய்தா அமைப்பு !!



அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹரி இன்று வெளியிட்ட 55 நிமிட நீள வீடியோவில் , இந்தியாவில் இஸ்லாமியை விதிகளை பரப்ப அல் கொய்தா அமைப்பின் கிளை ஒன்றை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .

இணையத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் , " எங்களது இந்த புதிய கிளை இந்திய துணைக் கண்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் உரிமையை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உதவும் . இதன் மூலம் ஜிஹாத் என்னும் கொடி இந்திய துணைக்கண்டம் முழுவதும் பறக்க விடப்படும் . மேலும் அசாம் , குஜராத் , பர்மா , வங்கதேசம் , அகமதாபாத் , காஷ்மீர் ஆகிய இடங்களில் உள்ள இஸ்லாமியர்கள் அநீதியில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் " என வீடியோவில் கூறினார் .

இந்த வீடியோவின் நம்பகத் தன்மை குறித்து நடந்த முதல் கட்ட விசாரணையில் அந்த வீடியோ உண்மை தான் என்பது தெரிய வந்துள்ளது . இதனால் அனைத்து மாநிலங்களிலும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை அதிகரித்துள்ளது .

பூலோகம் படத்தில் த்ரிஷா டாட்டூ குத்தி கொள்ளும் கவர்ச்சி போட்டோக்கள் வெளிவந்துள்ளது

ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா தற்போது நடித்து வரும் படம் பூலோகம். இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி  ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இதில் நாயகி த்ரிஷா டாட்டூ குத்தியுள்ளார். அவர் டாட்டூ குத்தி கொள்ளும் போட்டோக்கள் வெளிவந்துள்ளது.



அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்த வழக்கில் புதிய திருப்பம்




தல அஜித்தின் வீடு சென்னையில் உள்ள திருவான்மியூரில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்த ஒருவர் தல அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும் விரைவில் அது வெடிக்க போவதாகவும் சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டார். இது குறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் அஜித் வீட்டுக்கு சென்ற போலீஸார் அங்கு தீவிர சோதனை செய்துள்ளார்கள். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் போன் வந்த அந்த நம்பரை வைத்து போலீஸார் விசாரணை செய்து வந்துள்ளார்கள். அந்த நம்பர் மதுரையை சேர்ந்த வினோத் என்னும் என்னும் 23 வயது வாலிபருடையது என்று தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த போலீஸார் விசாரணை செய்து உள்ளார்கள். அதில் அந்த இளைஞர் தனது செல்போன் தொலைந்து விட்டதாகவும், வேறு யாரோ ஒருவர் அந்த நம்பரை வைத்து கால் செய்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

ரவி சாஸ்திரி - இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்து இருப்பவர் !!



டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி , பல விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டது . இதன் பின்னர் ஒரு நாள் தொடர் தொடங்கியது . இந்திய அணியின் டைரக்டராக ரவி சாஸ்த்ரி நியமிக்கப்பட்டார் . இந்திய அணி டெஸ்ட் தொடர் தோல்வியை பழி தீர்க்கும் விதமாக ஒரு நாள் தொடரை வென்றது . இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் ரவி சாஸ்திரி தான் என இந்திய வீரர்கள் ரெய்னா மற்றும் தவான் கூறினர் .


பல நாட்கள் பார்ம் இன்றி தவித்து வந்த தவான் , நான்காம் போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார் . அவர் கூறுகையில் , " நான் எனக்கு துணையாக இருந்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முக்கியமாக ரவி சாஸ்திரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் . அவர் எங்களுடன் இணைந்ததில் இருந்து எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்து கொண்டே இருந்தார் " என்றார் .

இரண்டாம் ஒரு நாள் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரெய்னா போட்டி முடிந்த பின் ரெய்னா கூறுகையில் , " ரவி சாஸ்த்ரி எங்களுக்கு நிறைய நம்பிக்கை அளித்தார் . அணி கூட்டம் நடக்கும் போது , அவர் வந்து பேசிய சில வார்த்தைகள் எங்களுக்கு எழுச்சி ஊட்டும் விதமாக இருந்தது . பஸ்ஸில் செல்லும் போது என் அருகில் அமர்ந்து என்னை பிடிவாதமான விளையாட்டை விளையாட கூறினார் " என்றார் .


இவ்வாறு இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் அமைதியாக ஒளிந்து கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி .



ஹேக்கர் வெளியிட்ட நிர்வாண படங்களை பார்த்தவர்களிடம் இருந்து நன்கொடை வாங்க மறுத்த தொண்டு நிறுவனம் !!



இணையத்தில் நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிட்டு ஹேக்கர் ஒருவர் இணையம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தினார் . அந்த நடிகைகளுக்கு ஆதரவாக பலர் இணைந்துள்ளனர் . தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் , ஆஸ்திரேலியாவின் கேன்சர் தொண்டு நிறுவனம் ஒன்று , அந்த படங்களை பார்த்தவர்களிடம் இருந்து நன்கொடை வாங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது .

அந்த படங்களை வைத்து ஒருவர் இந்த தொண்டு நிறுவனத்திற்கு உதவ ரெட்டிட் இணையதளத்தில் அழைப்பு விடுத்தார் . இதனால் அந்த படங்களை பார்த்த பலர் அந்த நிறுவனத்திற்கு நன்கொடை அழைத்தனர் . கிட்டத்தட்ட $6,000 நன்கொடையாக சேர்ந்துள்ளது .

இது குறித்து அந்த தொண்டு நிறுவனம் அளித்த பேட்டியில் , " இது எங்கள் பார்வையில் நடக்கவில்லை . நாங்கள் ஒரு போதும் இது போன்ற செயலுக்கு ஒத்துழைக்க மாட்டோம் . எங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப நாங்கள் அந்த போஸ்ட் மூலம் பெற்ற பணத்தை அவர்களிடமே மீண்டும் ஒப்படைத்து விடுவோம் " என்றார் .

மூளையின் வளர்ச்சி

மனித மூளையின் வளர்‌ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6வது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது. 

கேரளாவின் ஆளுநராக முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் செப்டம்பர் 5 ஆம் தேதி பதவியேற்க உள்ளார் !!



முன்னாள் தலைமை நீதிபதியான பி.சதாசிவம் கேரளாவின் அடுத்த ஆளுநராக நேற்று நியமிக்கப்பட்டார் . இதற்கு முன்னால் கேரளாவின் ஆளுநராக இருந்த ஷிலா தீட்சித் பதவியை ராஜினாமா செய்ததால் சதாசிவம் அவர்கள் நியமிக்கப்பட்டார் .


வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி கேரளாவின் தலைமை நீதிபதி தலைமையில் அவர் பொறுப்பேற்று உறுதிமொழி அளிக்க உள்ளார் . இது குறித்து சதாசிவம் கூறுகையில் , " நான் கேரள மக்களுக்காக பணியாற்ற உள்ளேன் . அவர்களின் நலனுக்காக உழைப்பேன் " என்றார் .

இப்போதுள்ள மோடி அரசில் , எந்த ஒரு அரசியல் கட்சிகளிலும் இல்லாத ஒருவரை ஆளுநராக நியமிப்பது இதுவே முதல் முறை . மேலும் தலைமை நீதிபதி ஆக இருந்த ஒருவரை அந்த பணியை விட குறைவான மதிப்பு உள்ள பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை .

மறைந்து வரும் தமிழரின் உணவு பழக்கங்கள்

ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர் தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ் நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

“சமைத்தல்” என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது “அடுதல்” எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்தத் திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென் மேற்கு மூலையில் அமைக்கப்படுகிறது. நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊற வைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.

நகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் தமிழர்களின் உணவு முறை மிகப் பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது. நிகழ்கால உணவுப் பழக்க வழக்கங்களில் உடல் நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது. எனவே இன்னும் சில மிச்சசொச்சங்களோடு இருக்கும் பழைய உணவுப் பழக்கங்களைத் தொகுத்துக் காணுவது நல்லது. கிழங்கு வகைகளில் சிலவும் (பனங்கிழங்கு), புன் செய்த்தானிய வகைகளில் சிலவும், சிறு பறவை இறைச்சியும் ஏழை மக்களால் சுட்டு உண்ணப்படுகின்றன. கடினமான கிழங்குகளும், ஏழிலைக் நீரிலிட்டு அவிக்கப்படுகின்றன. அரைத்து அல்லது இடித்த மாவுப் பொருள்கள் நீராவியில் வேக வைக்கப்படுகின்றன. இடித்த மாவுடன், சூடான இனிப்புப் பாகினைச் சேர்த்துக் கட்டி அரிசி, பொரிவிளங்காய், பாசிப்பயற்று மா உருண்டை செய்யப்படுகின்றன. மாவுப் பொருள்களுடன் இனிப்புப் பாகு கூட்டி மீண்டும் எண்ணெயில் பொரித்து முந்திரிக் கொத்து, அதிரசம் ஆகியன செய்யப்படுகின்றன. மாவுப் பொருள்களுடன் உறைப்புச் சுவையுடைய மசாலா கூட்டி பஜ்ஜி, வடை செய்யப்படுகின்றன. புலவு அல்லது காய்கறிகளுடன் உறைப்பு மசாலா அல்லது தொடுகறியாகவோ ஆக்குகிறார்கள். மாவுப் பொருள்களுடன் காய்கறிகள் சேர்த்து, எண்ணெய் தடவிச் சுடும் உணவு வகைகளில் அடை, தோசை ஆகியன அடங்கும். இலை (அடை) வடிவில் செய்யப்படுவதால் அது அடை எனப் பெயர் பெற்றது. வெந்த தானியத்துடன் வெல்லம், கருப்புக்கட்டி, ஆகியன சேர்த்துத் திரவ வடிவில் ஆக்குவது பாயசம்.

சங்க இலக்கியத்தில் மிளகு, நெய், புளி, கீரை, இறைச்சி, கும்மாயம் பற்றிய உணவுக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு தமிழர் உணவு வகையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. லட்டு(இலட்டுவம்), எள்ளுருண்டை, அப்பம் போன்றவற்றைப் பெரியாழ்வார் தம் பாடலில் குறிப்பிடுகிறார். சோழர் காலக் கல்வெட்டுக்களில் சருக்கரைப் பொங்கல் பணியாரம் ஆகிய உணவு வகைகள் பேசப்படுகின்றன. விசய நகர ஆட்சிக்காலக் கல்வெட்டுக்களில் தான் இட்டளி, தோசை, அதிரசம் போன்ற உணவு வகைக்குறிப்புக்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை கோயிற் பண்பாட்டைப் பிரதிபலிப்பதனால், பெருவாரியான மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களை அறிய இவற்றைப் போதிய சான்றுகளாகக் கொள்ள முடியாது.திடப் பொருள்களையும் இறைச்சிப் பொருள்களையும் அரைத்தும் துவைத்தும் நீர் குறைத்து ஆக்கப்படுவன துவையல் என்ற வகையில் அடங்கும். நீரிலே கரைத்த துவையல் இக்காலத்தில் “சட்டினி” என வழங்கப்படுகிறது. இறைச்சி சேர்த்து துவையல் “கைமா” என்ற உருதுச் சொல் லால் வழங்கப்படுகிறது.

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது கஞ்சியாகும். கஞ்சியினை “நீரடுபுற்கை” என்கிறார் திருவள்ளுவர் கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர். வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உணவாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்தவரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள்.

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்துவந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுறைக்காகக் கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே “கறி” எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெயில் இட்ட பண்டங்கள் அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விசயநகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.

“லாலா மிட்டாய்க் கடை” என்பது புதுவகை உணவுகளைத் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்து வருகிறது. நாயக்க மன்னர்களின் காலத்தில் அவர்களால் தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்தி பேசும் மக்கள் பிரிவினர் புதிய இனிப்பு வகைகளை அறிமுக்கப்படுத்தினர். சர்க்கரை, கோதுமை, நெய், கடலைமா, ஆகியனவே இவற்றின் மூலப் பொருள்கள். சருக்கரைக்குப் பதிலாகக் கருப்புக்கட்டி சேர்த்து நாடார் சாதியினர் சேர்த்து வைக்கும் இனிப்புக் கடையை மிட்டாய்க் கடை என்றே சொல்வார்கள். கிராமப் புறத்து மக்கள் இனிப்புக் கடையை மிட்டாய்க்கடை என்றே சொல்வார்கள். கிராமப் புறத்து மக்கள் இனிப்பு விற்கும் கடைகளை “அந்திக்கடை” என்றே வழங்கி வந்தனர். லாலா மிட்டாய் என்பன முறையே இந்தி, உருதுச் சொற்களாகும்.கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் வீட்டுச் சமையலில் எண்ணெயின் பங்கு பெருமளவு அதிகரித்திருக்கிறது. எண்ணெய்ச் சுவையினை இக்காலத் தமிழர்கள் பெரிதும் விரும்புவதால் அவித்தும், வேகவைத்தும், எண்ணெயைச் சேர்க்காமலும் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் வேகமாக மறைந்து வருகின்றன. பொருளாதாரச் சந்தையில் எண்ணெய் வணிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வல்லரசு நாடுகளின் கருவிகள் பலதரப்பட்டவை. அவற்றின் பொருளியல் ஆயுதங்களாகக் காப்பியும், தேநீரும் அவற்றின் துணைப் பொருளான சருக்கரையும் இன்று எல்லா வீடுகளிலும் நுழைந்துவிட்டன.

உணவு என்பது இன்று ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கமன்று. இனிமை ததும்பும் சருக்கரையானது கியூபா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வாழ்வுக்கான பற்றுக்கோடு. அமெரிக்கா போன்ற நாடுகளால் இச்சிறிய நாடுகள் ஒடுக்கப்படுவதற்கு அதே சருக்கரை ஒரு கொடுமையான பொருளாதார ஆயுதமாகவும் அமைகிறது. இந்த அரசியல் உண்மையை உணராத தமிழர்கள் உணவுப் பழக்கத்தில் உடல் நலத்தைக் கருதாது, நாவின் சுவையினையே சார்ந்து இருப்பது வீழ்ச்சிக்குரிய வழிகளில் ஒன்று.

அழிந்து வரும் உயிரினம்

நவீன மயமாக்கலில் அழிந்து வரும் உயிரினங்களில் 'சிட்டுக்குருவி'யும் ஒன்றுசிட்டுக்குருவிகளை நாம், நமது வாழ்வில் சந்தோஷம் மற்றும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றோம்.

அழியும் குருவிகள்.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்று சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளதுவிவசாயிகளின் நண்பனான சிட்டுக் குருவி சங்க இலக்கியங்களில் பாடப் பெற்ற உயிரினம் ஆகும்  பாரதியார் தனது கவிதைகளில் சிட்டுக் குரு பெருமைகளை பாட மறக்கவில்லை.

காகங்களை போல மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அறிவுத் திறன் கொண்டது சிட்டுக்குருவிகள். சிதறிய தானியங்களை தலையை சாய்த்து சாய்த்து அது தின்னும் அழகே அழகு!.
அழிந்து வரும் சிறு உயிரினங்களில் சிட்டுக் குருவி மட்டுமல்லாமல் பல்வேறு குருவி இனங்களும் அழியும் தருவாயில் இருக்கிறதுஅதுவும் அறுவடை காலம் என்றால் குருவிகளுக்கு கொண்டாட்டம்தான் . எங்கள் ஊரில் வயல் வரப்புகள் ஊடே இரயில் பாதை நீண்டு இருக்கும். ரு புறமும் தந்தி மரங்கள், இரயில் பாதையை தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்கும் . தந்திக் கம்பிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங் குருவிகருவாட்டுவாலி, மீன் கொத்தி, நானத்தான் குருவி மைனா அக்கா குருவி, பச்சைக் கிளி, என்று ரகத்திற்கு ஒன்றாய் குருவிகள் வரிசை கட்டி அமர்ந்து இருக்கும்வயலில் ஆட்கள் நெற்கதிர்களை அறுக்க அறுக்க, அதிலிருந்து பூச்சிகள், வெட்டுக்கிளி, அந்துப் பூச்சி, தட்டான், என்று வித விதமான பூச்சிகள் பறக்கத்தொடங்கும். வரிசை கட்டி காத்திருக்கும் குருவிகள் பறந்து பறந்து பூச்சிகளை வேட்டையாடும். பிறகு தந்தி கம்பங்களில் அமர்ந்து கொள்ளும்.

அத்தகைய கவின் மிகு காட்சிகள் ஆயிரம் இலக்கியத்திற்கு சமம்!.

சில துணிச்சலான சிட்டுக்குருவிகள் மட்டும் ஆட்கள் நெற் கதிர்களை அறுத்து போடும் இடத்திற்கு அருகிலேயே நின்றுக் கொண்டு பூச்சிகளை பிடிக்கும்அரி காடை அறுத்து போட்ட அரிகளில் அமர்ந்து இருக்கும் அதனாலயே அந்த பெயர் கவுதாரி, கானாங் கோழி போன்ற பறக்க இயலா கோழியினங்கள் அறுவடை நடைபெறும் வயல்களில் மனிதர்களிடமிருந்து கூப்பிடும் தூரத்தில் இருந்துக் கொண்டு புச்சிகளை பிடிக்கும். இத்தகைய அரிய குருவியினங்கள் இன்று அழிவின் பிடியில் சிக்கியுள்ளது.

மொபைல்போன்களால்ஆபத்து.

களங்கள், வீட்டு முற்றம், மளிகை கடைகள், தானியத் தோட்டங்கள், உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகள், தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், வீட்டின் கூரை என்று மனிதன் புழங்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிட்டுக்குருவிகள் மொபைல் போன் களின் வருகையால் 90 சதவீதம் அழிந்துவிட்டன என்கின்றன ஆய்வுகள்மொபைல் போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது.  முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது. அதோடு மீதமுள்ள குருவிகளின் கருப்பையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மெல்ல மெல்ல அருகி வரும் சிட்டுக்குருவியை காப்பது நமது கடமை.

குருவிகளை காக்கும்வழி.

1 பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிப்பதை தவிற்போம்.
2 சிறிய வீடானாலும், அபார்ட்மெண்டானாலும் குருவிகளை பாதுகாக்க சிறிய தோட்டங்களை பால்கனியில் அமைக்கலாம்.
3 வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து குருவிகளுக்கு உணவிடலாம்.
4 குருவிகள் குடிக்க சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
5 முக்கியமாக ஜன்னலில் வந்தமரும் குருவிகளை 'அச்சூ' என்று விரட்டாத மன நிலை வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதியென்ற பாரதியின் கனவை புத்துயிர் பெறச் செய்வோம்'.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media