BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 18 September 2014

கத்தி டீசர் வெளியானது !!




இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கத்தி. சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தை துப்பாக்கி படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை இன்று வெளியானது. இதில் படத்தின் டீசரையும் வெளியிட்டு உள்ளார்கள் . ஐ படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஐ போட்டியாக களமிறங்க உள்ள கத்தி டீசர் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் இப்போது வெளியாகி உள்ளது.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news




செக்ஸ் ரகசியங்கள் பற்றி பெண்கள் யாரிடம் அதிகம் பேசுகிறார்கள்? ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/09/women-talk-to-whom-more-about-personal.html

நிர்வாண தெரபி தெரியுமா ?? ஆபாச படங்களுக்கு அடிக்ட் ஆனவர்களுக்கு நிர்வாண தெரபி அளித்து குணமாக்கும் பெண் !!
http://www.satrumun.net/2014/09/a-different-theraphy-for-internet-addicted-people.html 

கத்தி டீசர் வெளியானது !! [வீடியோ இணைக்கப்பட்டுள்ளது]
http://www.satrumun.net/2014/09/kaththi-teaser-released.html

சாம்சங் மொபைல் அதிரடி விலை குறைப்பு, ரூ. 4 ஆயிரம் குறைந்தது
http://www.satrumun.net/2014/09/samsung-galaxy-core-2-price-slashed.html


திண்டுக்கலில் கொடூர கணவனால் 11 வது குழந்தை பிரசவத்தால் இறந்த பெண் !!
http://www.satrumun.net/2014/09/lady-died-in-her-11th-baby-delivery-in.html

இசை வருவதற்கு முன்னரே கத்தி பட பாடல்கள் சூப்பராக இருப்பதாக பாராட்டிய சிம்பு
http://www.satrumun.net/2014/09/simbhu-praises-kaththi-team.html

நடிகர் மம்மூட்டி விஜயை தொடர்ந்து மை ட்ரீ சாலஞ்சை செய்த நடிகர் சூர்யா
http://www.satrumun.net/2014/09/surya-does-tree-planting-challenge.html

மதுரை கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் ஊற்றிய மன்நோயாளி கைது , ஆசிட் வீசியது ஏன் என்று வாக்குமூலம்
http://www.satrumun.net/2014/09/mentally-ill-guy-surrendered-in-police.html

நானே தெய்வப்பிறவி , எனக்கு ஆபாச படம் போட்டு காட்டி சோதனை செய்ய முயன்ற மருத்துவர்கள் என நித்யானந்தா நோட்டிஸ்
http://www.satrumun.net/2014/09/nithayantha-issue-lawyer-notice-to.html

மற்ற மாநில விதவைகள் இனி மதுராவிற்குள் நுழையக் கூடாது - ஹேமமாலினி சர்ச்சைக்குரிய பேச்சு
http://www.satrumun.net/2014/09/controversial-speech-by-hema-malini.html

பட்டேல் இருந்து இருந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து இருக்கும் - அமித் ஷா .
target="_blank" http://www.satrumun.net/2014/09/amit-shah-blames-nehru-for-giving-kashmir-to-pakistan

டில்லியில் ஓடும் வண்டியில் இன்னொரு பாலியல் கொடுமை
http://www.satrumun.net/2014/09/another-gang-rape-indelhi-happens.html

இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி
http://www.satrumun.net/2014/09/blog-post_983.html

லைக்காவின் அறக்கட்டளை பிண்ணனி என்ன ??
http://www.satrumun.net/2014/09/blog-post_108.html

ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு
http://www.satrumun.net/2014/09/blog-post_834.html

செந்தமிழ் வார விழா கொண்டாட வேண்டும்
http://www.satrumun.net/2014/09/blog-post_462.html

உலக தமிழ் இணைய மாநாடு நாளை தொடக்கம்
http://www.satrumun.net/2014/09/blog-post_418.html

உடல் நலம் தேறி கமல் வீடு திரும்பினார்
http://www.satrumun.net/2014/09/kamal-returns-from-hospital.html

ரஜினிகாந்த் படத்துக்கு தடை விதித்தது நீதிமன்றம்
http://www.satrumun.net/2014/09/rajinikanth-movie-gets-ban.html

நல்ல காரியத்திற்காக டிவிட்டரில் இணைந்த நடிகை !!
http://www.satrumun.net/2014/09/kajol-joins-twitter-for-a-cause.html

மோடி தொடங்க இருக்கும் " மேக் இன் இந்தியா " ( இந்தியாவில் உருவாக்குவோம்) திட்டம் !!



இந்தியாவை உலக அளவில் ஒரு சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற இந்திய பிரதமர் மோடி வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி சர்வதேச மற்றும் ஊள்ளூர் தலைமை நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் தன்னுடைய " மேக் இன் இந்தியா " பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார் .

விக்யான் பவானில் நடக்க உள்ள இந்த பிரச்சாரத்தில் 100க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது .

பிரதமர் மோடி தன்னுடைய முதல் சுதந்திர தின விழா உரையின் போது அனைத்து உலக வர்த்தக சமூகத்தினரையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய அழைப்பு விடுத்து இருந்தார் . அவர்களுக்கு " வாருங்கள் , இந்தியாவில் உருவாக்குவோம் " என அழைப்பு விடுத்தார் .

இந்தியாவைப் போன்று நேர வலையம் இருக்கும் மற்ற நாடுகளிலும் இந்த பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர் .

தமிழ் சொற்கள்

2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே
தமிழில் "நற்றிணை" என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில்,தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி "ரைஸ்" எனவும், மயில் தோகை "டோ கை" எனவும், சந்தனம் "சாண்டல்" எனவும், தேக்கு "டீக்கு", எனவும் கட்டுமரம் "கட்டமாரன்" எனவும் , இஞ்சி "ஜிஞ்சர்" எனவும், ஓலை "ஒல்லா" எனவும் கயிறு "காயர்" எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்
 
களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் "தொல்காப்பியம்" ஓன்றே. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கின்றன. இவ்வுண்மையை "தோலென மொழிப தொன்மொழிப் புலவர்" என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.
3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாகப் நம்பப் பெறுகிற நூல்களில்
"அகத்தியம்" எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுவோறும் உண்டு.

2007 இல் டைம் அவுட் முறையில் கங்குலி அவுட் என்றாலும் அவுட் தரப்படவில்லை




டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் அவுட் ஆகி விட்டார் என்றால் , அவர் அவுட் ஆன 3 நிமிடங்களுக்குள் புதிய பேட்ஸ்மேன் உள்ளே வர வேண்டும். இல்லையெனில் அவர் அவுட்டாகி விட்டார் என்று அர்த்தம். இந்தியா தென் ஆப்பிர்க்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2007 இல் நடைபெற்றது. அந்த டெஸ்டின் 4 வது நாளின் போது ஒரு விக்கெட் விழுந்து அடுத்து கங்குலி உள்ளே வருவதற்கு 6 நிமிடங்கள் ஆகியது. இருந்தாலும் அந்த போட்டியில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட வில்லை.

மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது சச்சின் 18 நிமிடங்கள் உள்ளே ஆடவில்லை. கிரிக்கெட் விதிகளின் படி ஒருவர் 8 நிமிடங்களுக்கு மேல் மைதானக்குள் ஆடவில்லை என்றால் அவர் விளையாட நேரம் கழித்து தான் பேட்டிங் இறங்க முடியும். அதனால் 4 வது நாள் ஆட்டத்தின் போது சச்சின் 18 நிமிடங்கள் கழித்து தான் இறங்க முடியும். ஆனால் 13 நிமிடங்களில் 2 விக்கெட் விழுந்து விட்டது. அப்போது சச்சின் இறங்க வேண்டும் , ஆனால் 18 நிமிடங்கள் கழித்து தான் அவர் விளையாட முடியும். இதனை டிரஸிங் ரூமில் யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அதன் பிறகு கங்குலி ரெடியாகி உள்ளே இறங்கினார்.

அதற்கு 6 நிமிடங்கள் ஆகிவிட்டது. அதனை அம்பயரிடம் தெரிவித்தார். அம்பயர் இதனை தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்திடம் விளக்கினார். அவரும் எந்த அப்பிலும் செய்யவில்லை. இதனால் கங்குலி விளையாடினார்.

தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் யார்

தமிழ் எழுத்துக்கள் உருவாக்கியவர் யார் என்பது வரலாறுகளில் இல்லை தொல்காப்பியர்  அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அதனால்தான் கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ் என்று அருளாளர்கள் பாடி உள்ளார்கள்.வள்ளலார் வந்து தமிழ் இறைவனால் தோற்றுவிக்கப் பட்டது.ஆதலால் தமிழ் தந்தை மொழி என்றார்.உலகத்தில் முதன் முதலாக தோன்றிய மொழி தமிழ் மொழி என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.உயிர் உடல் எப்பொழுது உருவாக்கப் பட்டதோ அப்பொழுதே தமிழ் தோன்றியதாகும்.அதனால்தான் ,உயிர் எழுத்து,மெய் எழுத்து,உயிர் மெய் எழுத்து ,அடுத்து ஆயுத எழுத்து என்று சொல்லப்படுகின்றது.அந்த ஆயுத எழுத்தில் அனைத்தும் அடங்கி உள்ளன,அதனால்தான் அதற்கு வரி வடிவம் இல்லாமல் புள்ளி வடிவம் வைத்தது ஆகும் .அந்த புள்ளிதான் உடம்பு ,உயிர் ,கடவுள் என்பதாகும் ,இதை புரிந்து கொண்டால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம் என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்,நாம் எங்கு இருந்து வந்தோம் என்ற விலாசம் தெரியாமல் அலைந்து கொண்டு உள்ளோம் .

உலகில் தோன்றிய ஞானிகள் யாரும் சரியான விலாசம் தரவில்லை கண்களை மூடிக் கொண்டு உளறி விட்டு சென்று விட்டார்கள்,உலக மக்களுக்கு உண்மையை தெரிவிக்க இறைவனால் அனுப்பட்டவர் வள்ளலார் அவர்கள்.அவர் தான் வாழ்ந்து சென்ற உண்மையான வழியையும் உண்மையான விலாசத்தையும் தெளிவாக,திரு அருட்பாவில் எழுதி வைத்து உள்ளார்கள்,அதிலும் நிறைய பேர்களுக்கு குழப்பம் ,அந்த குழப்பம் தீர வேண்டுமானால் எந்த பற்றும் இல்லாமல்,பொது நோக்கம் வேண்டும்,அதை வள்ளலார்

                 பொது உணர்வு உணரும் போது அல்லால் பிரித்தே
                 அது வெனில்தோன்றா அருட்பெரும்ஜோதி!

தனக்கு பதிலாக அழகான மாடலின் போட்டோவை பயன்படுத்தி மாணவ தேர்தலில் வென்ற பெண் !!



டில்லி பல்கலைக்கழகத்தின் மாணவ யுனியன் தேர்தல் நடந்தது . இந்த தேர்தலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓட்டளித்தனர் . அவர்கள் ஓட்டளித்து ஏபிவிபி மாணவி கனிகா ஷேகாவட்டை தேர்ந்தெடுத்தனர் . தேர்ந்தெடுத்த பின் தான் மாணவர்களுக்கு தெரிந்தது , தாங்கள் போட்டோவில் பார்த்த நபரும் தேர்வு செய்த நபரும் வித்தியாசமானவர்கள் என்று .



தேர்தல் நடக்கும் போது வாக்கு கேட்பதற்காக போஸ்டர்கள் நிறைய இடத்தில் ஒட்டப்பட்டது . அப்போது அந்த போஸ்டரில் ஒரு டிவி நடிகையில் போட்டோவை பயன்படுத்தி ஓட்டளியுங்கள் என்று கேட்டு இருந்தனர் . அந்த மாடலின் பெயர் நவுஹித் சைருசி .

கனிகாவிற்கு வாக்களித்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கின்றனர் . இது குறித்து ஒரு மாணவர் கூறுகையில் , " இந்த தலைவர்களை நாங்கள் கல்லூரியில் பார்க்க இயலாது . எனவே போஸ்டரில் பார்த்து தான் நாங்கள் ஓட்டளித்தோம் . " என்றார் .

ஆனால் இது குறித்து கனிகா தெரிவிக்கையில் தனது எதிர் கட்சியான என்.எஸ்.ஐ.யு தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் , ஆனால் அவர்களின் திட்டங்கள் நடக்காமல் நான் வென்றது அவர்களுக்கு ஒரு அறை கொடுப்பது போல இருந்து இருக்கும் என்றார் .

ஆனால் இதை என்.எஸ்.ஐ.யு கட்சியனர் முற்றிலுமாக மறுத்துள்ளனர் .

ஹிந்தி திணிப்புக்கு எதிராக போரில் இறங்க தயாராக இருக்கும் ஜெயலலிதா




மத்திய அரசு மீண்டும் ஹிந்தி மொழியை அனைவர் மீதும் திணிக்க பார்க்கிறது. இந்தியா மூழுவதும் உள்ள பல்கலைகழகளுக்கு உரிய விதிகளை யுனிவர்சிட்டு கிரான்ட்ஸ் கமிஷன் என்பதன் மூலம் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் யுஜிசி புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது எல்லா பல்கலைகழகங்களிளும் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியையும் கற்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளார். இது மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு செயல் என்றும் கூறியுள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள் பின்பற்றாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

டைப்பிங்கில் சிறிய தவறு ஏற்பட்டதால் ரூ. 25 லட்சத்தை இழந்த கம்பெனி




குளோபல் யுனிவர்சல் என்னும் நிறுவனத்தின் மேனஜிங் டைரக்டராக இருப்பவர் மிஸ்டர். சிங். இவர் தனது கம்பனியில் வேலை செய்யும் சுமித் என்பவரிடம் கம்பனி கணக்கில் இருந்து வேறு ஒரு கணக்கிற்கு ரூ.25 லட்சத்தை மாற்ற சொல்லியுள்ளார். அவர் அதனை இன்டெர்னெட் பேங்கிங் மூலம் செய்துள்ளார். அதனை அவர் செய்யும் போது அக்கவுன்ட் நம்பரில் சிறிய தவறு ஏற்பட்டதால் அது பங்கஜ் என்பவரின் கணக்கிற்கு சென்று விட்டது. உடனடியாக அவர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். ஆனால் பங்கஜ்ஜோ இதுவரை அந்த பணத்தில் இருந்து ரூ. 5.8 லட்சத்தை எடுத்து செலவு செய்துள்ளார்கள். இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

எனவே இன்டெர்னெட் பேங்கிங் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்துங்கள். ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்து விட்டு செயல்படுங்கள்.

இசை வெளிவருவதற்கு முன்னே கத்தி பட பாடல்கள் சூப்பராக இருப்பதாக கூறி பாராட்டிய நடிகர் சிம்பு





தமிழ் நடிகர்களில் நல்ல பாட்டு பாடும் திறமை உள்ள நடிகர்கள் என்றால் அது கமல்ஹாசன், விஜய், சிம்பு , தனுஷாகத் தான் இருக்கும். கத்தி படத்தின் பாடல்கள் இன்று வெளிவர உள்ளது. இந்நிலையில் கத்தி படத்தின் இசையமைப்பாளர் அனிருத் , அந்த படத்தின் பாடல்களை தனது நண்பர் சிம்புவிடம் போட்டு காட்டியுள்ளார். அதனை கேட்டு விட்டு அவை மிகவும் சூப்பராக இருப்பதாகவும், அனிருத் எப்போதும் போல் அசத்தியுள்ளார் என்று கூறியுள்ளார். அதோடு கத்தி டீமுக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்,

நடிகர் மம்முட்டி, விஜய்யை தொடர்ந்து மை ட்ரீ சாலஞ்சை செய்த நடிகர் சூர்யா




சமீபத்தில் உலகம்  முழுவதும் பிரபலமான ஒன்று ஐஸ் பக்கெட் சாலஞ். ஏ.எல்.எஸ் என்னும் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அது நடத்தப்பட்டது. இது உலகில் உள்ள பல பிரபலமான நபர்களால் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் ரைஸ் பக்கெட் சாலஞ் என ஒன்றை ஒருவர் தொடங்கினார். அதாவது உணவு இல்லாத ஏழை ஒருவருக்கு உணவு தர வேண்டும் என்பது இதன் நோக்கமாக இருந்தது.

அதன் பிறகு மை ட்ரீ சாலஞ் என ஒன்று உருவானது. அதாவது ஒருவர் தனது வீட்டில் மரங்களை நட்டு அந்த போட்டோக்களை வெளியிட வேண்டும். நடிகர் மம்முட்டி இதனை செய்ததன் மூலம் இது பிரபலமானது. அதன் பிறகு நடிகர் விஜய் இதனை செய்தார். இன்று நடிகர் சூர்யா செய்துள்ளார். சூற்றுசுழலை பாதுகாப்பதற்கு இது தான் சிறந்த வழி என கூறியுள்ளார். தன் சக நடிகர்களான ஆமிர்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, கன்னட நடிகர் சுதீப் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த மரம் நடும் சவாலை விட்டுள்ளார்.

சாம்சங் மொபைல் அதிரடி விலை குறைப்பு, ரூ. 4 ஆயிரம் குறைந்தது




சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி கோர் 2 என்னும் மொபைலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஜூலை மாதம் 11,990 க்கு விற்பனைக்கு வந்தது. ஆனால் இப்போது சாம்சங் நிறுவனத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சியோமி, அசூஸ், மோட்டோ , மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் மொபைல்களை விற்பனை செய்து வருகின்றன. இதனால் சாம்சங் நிறுவனத்தின் மார்கெட் அடி வாங்கியது. இப்போது இருக்கும் போட்டியை சமாளிப்பதற்காக அந்த மொபைலின் விலையை ரூ. 8,007 என அதிரடியாக குறைத்து உள்ளது.

திண்டுக்கல்லில் கொடூர கணவனால் 11வது குழந்தை பிரசவத்தால் இறந்த பெண்

திண்டுக்கல்லில் கொடூர கணவனால் 11வது குழந்தை பிரசவத்தால் இறந்த பெண்

இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ளும் காலத்தில் திண்டுக்கலில் ஒரு கொடூரக் கணவரால் அடுத்தடுத்து 10 குழந்தை பெற்ற பெண் 11-வது பிரசவத்தில் பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்து வடக்கு தெருவை சார்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் இவரது மனைவி சித்ரா, சித்ராவிற்கு 16 வயதில் மணிகண்டனுடன் திருமணம் முடிந்தது. இது வரை 10 குழந்தைகள் பெற்றார் சித்ரா,  இதில் 4 ஆண் குழந்தைகள் 6 பெண் குழந்தைகள்.

சித்ரா குடும்ப கட்டுப்பாடு தயாராக இருந்தும் கூட கணவர் மணிகண்டன் விடவில்லை. இன்று காலை சித்ராவிற்கு வலி ஏற்பட்டு உள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு 11-வது குழந்தையும் சித்ராவும் மரணம் அடைந்தனார்.

இந்த காலத்திலும் இப்படி நடந்து கொண்ட கொடூர கணவராக இருக்கிறார் மணிகண்டன் 

மதுரை கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் உற்றிய மனநோயாளி கைது, ஆசிட் வீசியது ஏன் என்று வாக்குமூலம்

மதுரை மாவட்டம் திருமங்கல‌ம் பகுதியில் கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மீனா, அங்காளஈஸ்வரி மீது மோட்டார் சைக்கிளில் வந்த ‘மர்ம’ நபர் மாணவிகள் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மீனா, அங்காளஈஸ்வரி ஆகியோருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகள் மீது ஆசிட் வீசிய ‘மர்ம’ நபரை பிடிக்க போலிஸ் விசாரணை நடத்தி வந்தனர், ஆனால் இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்நிலையில் திருமங்கலம் விடத்தக்குளம் ரோட்டில் வசித்து வரும் சுதாகர் தனது மகன் சங்கரநாராயணன் (24) என்பவரை நேற்று மாலை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்த  சுதாகர், த‌னது மகன்தான் மாணவிகள் மீது ஆசிட் வீசினான் என்றும் அவன் மனநலன் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதை செய்துள்ளான் என்றும் கூறினார்.

போலிஸ் விசாரணையில் அந்த மனநலன் பாதிக்கப்பட்டவர் கூறியதாவது

கடந்த வாரம் 12–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் குளித்து விட்டு வெளியே கிளம்பி திருமங்கலம் பேருந்து  நிலையத்திற்கு வந்து அங்குள்ள பழைய இரும்பு கடையில் ஒரு ரூபாய் கொடுத்து காலி மதுபாட்டில் வாங்கினேன்.

பின்னர் அருகில் உள்ள உறவினரின் கடைக்கு சென்று சித்தப்பா ஆசிட் கேட்டதாக கூறி அந்த கடையில் ஆசிட் வாங்கினேன். தினமும் நான் ஆசிட் வாங்குவதால் கடைக்காரர் எனக்கு ஆசிட்டை கொடுத்தார். காலி பாட்டிலில் ஆசிட் வாங்கி விட்டு பஸ் நிலையம் பின்பக்க வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது உள்ளுணர்வு தூண்டியதால் அந்த சமயம் அந்த வழியாக வந்த கல்லூரி மாணவிகள் மீது திடீரென்று என் கையில் இருந்த ஆசிட்டை ஊற்றினேன். அவர்கள் வலியால் அலறி துடித்து கீழே விழுந்தனர். இதையடுத்து ஒரு ஆட்டோவில் ஏறி ஓடினேன், அப்போது மிச்சம்  இருந்த ஆசிட் என் கையில் பட்டதால் காயம் ஏற்பட்டது, ஆசிட் ஊற்றியதால் போலீசார் என்னை தீவிரமாக தேடிவந்தது தெரிந்தது. கையில் ஆசிட் பட்டதால் எனது காயமும் நாளுக்கு நாள் அதிகமானது. இதனால் நேற்று இரவு வீட்டுக்கு சென்றேன்.

அப்போது கையில் ஏற்பட்ட காயம் குறித்து சந்தேகம் அடைந்த எனது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், நான்தான் ஆசிட்டை ஊற்றியதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் என்னை போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்த முயன்றதாகவும் சங்கரநாராயணனை ஏற்கனவே போலீசார் கைது செய்தது தெரியவந்துள்ளது.

நானே தெய்வப்பிறவி, எனக்கு ஆபாச படம் போட்டு காட்டி சோதனை செய்ய முயன்ற மருத்துவர்கள் என நித்யானந்தா நோட்டிஸ்

சென்ற வாரம் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெற்றது, அப்போது அதற்கு நித்யானந்தா ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவர்களும் போலிசாரும் தெரிவித்தனர், இந்நிலையில் நான் ஒரு தெய்வப்பிறவி, எனக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்கள், என்னை ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தினர் என்று கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் கூறி  தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

ரத்தப்பரிசோதனையும் சிறுநீர் பரிசோதனையும் மட்டும் தான் நித்யானந்தாவிடம் நடத்தப்பட்டது, ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறிய போலிசார் மீண்டும் நீதிமன்றத்தை நாடி மறுமுறை பரிசோதனை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

மற்ற மாநில விதவைகள் இனி மதுராவிற்குள் நுழையக் கூடாது - ஹேம மாலினி சர்ச்சைக்குரிய பேச்சு !!



பாஜகவின் இன்னொரு தலைவரும் இப்போது தன்னுடைய பேச்சால் சர்ச்சையில் சிக்கி உள்ளார் . இந்த முறை மாட்டிக் கொண்டது , நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த ஹேம மாலினி .

இவர் இந்த முறை மக்களவை தேர்தலில் மதுராவில் நின்று வெற்றி பெற்றார் . இவர் தனது தொகுறியை பார்வையிட நேற்று சென்றார் . அப்போது விரிந்தவன் என்னும் பகுதிக்குச் சென்றார் .

அங்கே அவர் பேட்டி அளிக்கும் போது , " விரிந்தவனில் 40,000 விதவைகள் உள்ளனர் . நிறைய விதவைகள் பெங்காலில் இருந்து வருகின்றனர் . இது சரியல்ல . அவர்களால் ஏன் பெங்காலில் இருக்க முடியவில்லை . பெங்காலிலும் நல்ல கோவில்கள் இருக்க தான் செய்கிறது . இது பீகாரில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும் " என்றார் .

மேலும் இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுடனும் பேச இருப்பதாகவும் தெரிவித்தார் .

படேல் இருந்து இருந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இருந்து இருக்கும் - அமித் ஷா !!



பாஜக தலைவர் அமித் ஷா காஷ்மீர் இந்தியாவில் இருந்து பிரிந்ததற்கு நேரு தான் காரணம் என்றும் வல்லபாய் படேல் பொறுப்பு ஏற்று இருந்தால் இந்த பிரச்சனை இருந்து இருக்காது என்று கூறினார் .

நேற்று அவர் அளித்த பேட்டியில் , " இன்றும் கூட காஷ்மீரின் அதிக பகுதிகள் பாகிஸ்தான் கையில் தான் இருக்கிறது . காஷ்மீர் பிரச்சனையை படேல் எடுத்து இருந்தால்  காஷ்மீர் பாகிஸ்தானிற்கு சென்று இருக்காது . இதை சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை . மேலும் ஆர்டிகல் 370  தேவை இருந்து இருக்காது . ஏனென்றால் காஷ்மீரும் இந்தியாவின் மற்ற இடங்களை போல் இருக்கும் " என்றார் .



இதை அவர் கர்நாடகாவில் ஹைதராபாத் ஜில்லா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட 66 ஆண்டு நினைவு விழாவை கொண்டாடும் போது பேசினார் . மேலும் படேலின் சிலை ஒன்று வைப்பதற்கான அடிக்கல்லையும் நட்டினார் . அங்கே இணைக்கும் போது உயிர் இழந்தவர்களுக்காக நினைவு இல்லமும் அமைக்க உள்ளனர் . 

டில்லியில் ஓடும் வண்டியில் மீண்டும் இன்னொரு பாலியல் கொடுமை !!



23 வயதான பெண் ஒருவர் ஓடும் வண்டியில் அவரது ஆண் நண்பர் மற்றும் இரண்டு வேறு நபர்களால் கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டு , தெற்கு டில்லியின் ரோட்டோரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார் .

இந்த கொடூர சம்பவம் மீண்டும் டில்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஒரு டில்லி பெண் போலிஸ் கான்ஸ்டபிளின் மகள் .

போலிஸ் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் , " அந்த பெண் ஆண் நண்பர்களுடன் வண்டியில் சென்று கொண்டு இருந்தார் . அப்போது அவருக்கு மருந்து கலந்த குடி பானங்கள் கொடுக்கப்பட்டது . அதனை குடித்த அவர் மயக்கம் அடைந்துள்ளார் . பின் அவர் ரோட்டில் தூக்கு வீசப்பட்டுள்ளார் . ஒரு பெண் மயக்க நிலையில் ரோட்டில் இருப்பதை பார்த்து ஆட்டோ டிரைவர் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் " என்றார் .

போலிசார் இதுவரை இருவரை கைது செய்துள்ளனர் .

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி
1987ம் ஆண்டு வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டு  21 பேர் உயிரிழந்தனர், போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது, வட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூணுக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, ஜிகே மணி உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

ஐரோப்பிய நாடுகளில் பல்தேசிய வியாபார நிறுவனங்களில் சொர்க்கபுரிகளில் பிரித்தானியாவும் ஒன்று. சில்லைரை வரிகளுக்காக சாமனிய மக்களின் வீட்டுக்கதவுகளைத் தட்டும் பிரித்தானிய அரசு பல்தேசியப் பெரு வியபார நிறுவனங்கள் வரிப்பணத்தை செலுத்தாமலிருப்பதற்கு பல்வேறு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. வெளி நாட்டு வேலையாட்களிடமிருந்து வரிப் பணம் என்ற தலையங்கத்தில் பகல்கொள்ளை நடத்தப்படும் போது, மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டவர்கள் உறிஞ்சிக் கொழுக்கிறார்கள் என்று நிறவாதிகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

வரிப்பணத்தை சுருட்டிக்கொள்வதற்காக வியாபார முதலைகளுக்கு பிரித்தானிய அரசு ஏற்படுத்திக்கொடுத்த வழிமுறைகளில் ஒன்று தான் கோப்ரட் சமூகப் பொறுப்பு (Corporate social responsibility (CSR) )என்பதாகும். கோப்ரட் நிறுவனங்கள் சில சமூகத் திட்டங்களை மேற்கொண்டால் ஒரு குறித்த பகுதி வரிவிலக்கு வழங்கப்படும் என்பதே இதன் உட்பொருள். ஒரு குறித்த தொகைக்கு மேல் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் சீ,எஸ்,ஆர் சேவையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோப்ரட் வியாபார நிறுவனங்கள் பிரித்தானியா தவிர்ந்த நாடுகளில் சேவை செய்யத் தலைப்படும். சேவை என்ற பெயரில் செலவிடப்படும் பணத்தின் அளவு பல மடங்காக அதிகரித்துக் காட்டப்பட்டு வரிப்பணம் செலுத்துவதிலிருந்து இந்த இலாப வெறியர்கள் விதிவிலக்குப் பெற்றுக்கொள்வார்கள். வறிய நாடுகளில் இவர்கள் சேவை செய்யும் போது அந்த நாடுகளிலுள்ள அரசுகளுடனும் சர்வாதிகாரிகளுடனும் வியாபார ஒப்பந்தங்களையும், திருட்டுப்பணப் பதுக்கல்களிலும் ஈடுபடுவார்கள். பொதுவாக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான இந்த அமைப்புக்கள் போராட்டங்களும், அரச எதிர்ப்புக்களும் தோன்றாமல் பார்த்துக்கொள்வதன் ஊடாக உள் நாட்டு அரசுகளுக்குச் சேவை செய்யும். இவ்வாறான உதவிகள் ஊடாக ஒட்டச்சுரண்டப்பட்டு அழித்துச் சிதைக்கப்பட்ட வளம் மிக்க நாடுகளில் பிரதானமானது பங்களாதேஷ். அறக்கட்டளைகளும், தொண்டு நிறுவனங்களுமே இந்த நாட்டை நடத்திவருகின்றன. அரசியலில் தலையிடமாட்டோம் என்றும், நடுநிலமையாளர்கள் என்றும் கூறும் இந்த அறக்கட்டளைகள் சர்வாதிகார அரசியலுக்குத் துணை செல்கின்றன. மக்களைப் போராடவிடாமல் தடுத்து தாம் போடும் பிச்சையில் தங்கி நிற்கும் மனோபாவத்தை ஏற்படுத்தும் இந்த அமைப்புக்கள் அரசுகளின் சமூகவிரோதச் செயல்களைக் கண்டுகொள்வதில்லை. ஆக, அவர்கள் அரசியலில் தலையிடுகிறார்கள்.

தாம் இலங்கை உட்பட பல நாடுகளில் சேவை செய்து வருவதாக மார்தட்டிக்கொள்ளும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் பின்னால் உள்ள நோக்கம் சேவையல்ல இலாப வெறி! சி,எஸ்,ஆர் இன் அடிப்படையில் ஞானம் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.
லைக்கா மட்டுமல்ல பிரித்தானியாவின் மிகப்பெரும் வங்கியான பார்கிலேஸ் வங்கி சி.எஸ்.ஆர் ஐ நடத்தி வருகிறது. வங்கியின் உதவித் தலைவர் நைஜெல் ரட் இன் தலைமையில் இயங்கும் அறக்கடளை பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஷெல் நிறுவனம் சுற்றுச் சூழல் உயர்கல்விக்கான அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறது. லிபாரா நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது. லைக்கா நிறுவனம் மட்டுமல்ல உலகின் எந்த நிறுவனமும் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் ஊடாக அவர்கள் மக்களுக்கு வழங்குவதை விட அதிகமாக மக்களைச் சுரண்டுகிறார்கள். அமசோன் காட்டுகளை நாசப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராடிய போது அவர்களை சாந்தப்படுத்தி போராட்டத்தைச் சிதைத்து வளங்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அமெரிக்க எண்ணை நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களை நடத்தின.

ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு


ஸ்காட்லாந்து தனியாகப் பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பு நாளை  18.09.2004 நடைபெற்றது.  பிரித்தானியாவில் கூடுகட்டி வாழ்ந்துகொண்டு தமிழ் ஈழம் பிடித்துத் தருவதாகப் படம் காட்டும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது கொல்லைப் புறத்தில் நடைபெறும் பிரிந்து செல்வதற்கான போராட்டம் தொடர்பாக மூச்சுவிடக்கூட இல்லை.

ஸ்காட்லாந்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான எட் மிலிபாண்ட் எடின்பரோ தெருக்களில் வைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார். பல்தேசிய வியாபார ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பாடுள்ளது. பிரித்தானியா முழுவதும் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் பொருளாதார அமைப்பினால் ஸ்கொட்லாந்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட இந்தப் பாதிப்பு பிரித்தானியா முழுவதும் வாழும் மக்களுக்கானது. இதிலிருந்து விடுபட்டுக்கொள்வதற்கு பிரிந்து சென்று தனிநாடு அமைத்தாலே போதுமானது என்று ஸ்காட்லாந்து மக்கள் எண்ணுகிறார்கள். பிரிந்து செல்லும் உரிமையைப் பெற்றுள்ள ஸ்காட்லாந்து மக்கள் தீர்மானித்தால் அவர்கள் தனியாட்சி அமைத்துக்கொள்ளலாம். 

தனிநாடாகப் பிரிந்தாலும் ஸ்கொட்லாந்து பிரித்தானியாவின் பணமான ஸ்டேலிங்கையே பயன்படுத்தும் என்று ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தெரிவிக்கிறது. அவர்கள் முதலாளித்துவத்தினது நெருக்கடிக்குள் தம்மை மேலும் மேலும் அமிழ்த்திக்கொள்வதற்கான அறிகுறியையே தேசியவாதக் கட்சி தெரிவிக்கிறது. கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் 49 வீதமானவர்கள் பிரிவினைக்கு ஆதரவாகவும் 51 வீதமானவர்கள் எதிராகவும் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கருத்துக் கணிப்புக்கள் பிரிவினைக்கு எதிரான ஊடகங்களிடமிருந்தே வெளியாகியுள்ளன. ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாய்ப்பே அதிகமாகக் காணப்படுவதாக ஸ்காட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவான ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால கூட்டாட்சியில் ஆங்கிலேயர்களுக்கும் ஸ்காட்டிஷ்காரர்களுக்கும் நெருங்கிய குடும்ப உறவுகள் ஏற்பட்டுள்ளன. குடும்பங்கள், நண்பர்கள், அயலவர்கள் இடையேயான மோதல் ஸ்காட்லாந்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது
.
ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்புத் தோல்வியில் முடியுமானால் ஸ்காட்லாந்து முழுவதும் வன்முறைகளும் போலிஸ் ஒடுக்குமுறையும் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வன்முறைகளின் வெம்மையில் நவதாராளவாதத்தின் அடியாட்களான ஸ்காட்லாந்து தேசியக் கட்சியும் பிரித்தானிய மையக்கட்சிகளும் குளிர்காய்ந்துகொள்ளும். ஸ்காட்லாந்து பிரிந்து செல்கிறதோ இல்லையோ பிரித்தானியாவின் ஒடுக்குமுறைகளும், மக்களின் எழுச்சியும் பிரிவினையை ஏற்கனவே உருவாக்கிவிட்டது.

செந்தமிழ் வார விழா கொண்டாட வேண்டும்

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் செந்தமிழ் வார விழா கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது: இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சம்ஸ்கிருத வார விழா கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்தியாவில் உள்ள 22 தேசிய மொழிகளில் ஒரு மொழியை மட்டும் மையப்படுத்துவது மற்ற மொழியைச் சேர்ந்த மக்களின் மனதைப் புண்படுத்தும்.

தமிழகத்தில் நீதிமன்றம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய மூன்றிலும் தமிழை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குரு உத்சவ், சம்ஸ்கிருத வார விழா ஆகிய உத்தரவுகளை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியது: இந்தியாவில் வெறும் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக இருக்கும் சம்ஸ்கிருதத்துக்கு வார விழா கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தும்போது, கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கும் வார விழா கொண்டாட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

இதில் திராவிடர் கழக கட்சியின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலர் ராஜ்மோகன், வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உலகத் தமிழ் இணைய மாநாடு புதுவையில் நாளை தொடக்கம்

புதுச்சேரியில் 13ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு வளாகத்தில் மாநாடு நடைபெற உள்ளதாக மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் மு. இளங்கோவன் தெரிவித்துள்ளார.

உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஆராய உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) என்ற அமைப்பு உள்ளது. இது அமெரிக்காவில் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பாகும். இதில் உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அமைப்பு பல்கலைக்கழகங்களுடனும், தமிழக அரசுடனும் இணைந்து இதுவரை உலகின் பல பாகங்களில் 12 மாநாடுகளை நடத்தியுள்ளது. பதின்மூன்றாவது மாநாடு புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குப் புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. முதல்வர் ரங்கசாமி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். உத்தமம் அமைப்பின் தலைவர் வாசு. அரங்கநாதன வரவேற்கிறார். சுவிசர்லாந்து பல்கலை. பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் மாநாட்டின் நோக்கவுரையாற்ற உள்ளார்.

துணைவேந்தர் பேராசிரியர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் உத்தமம் ஆலோசகரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணன் சிறப்புரையாற்ற உள்ளார்.
உலகத் தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. ஆய்வரங்கம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் நடைபெறுகிறது. இந்த ஆய்வரங்கில் ஆய்வாளர்கள் 100 பேர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர்.

அதே நாள்களில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தித்திடல் அருகில் உள்ள கைவினைப் பொருள் கண்காட்சிக் கூடத்தில் கணினித் திருவிழா என்ற பெயரில் மென்பொருள், கணினிக் கண்காட்சியும், மக்கள் அரங்கமும் நடைபெறுகிறது. தமிழகத்தின் முன்னணி கணினி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளன.

மக்கள் அரங்கில் கணினி, இணையத் தன்னார்வலர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கணினி, இணையம் குறித்துப் பொதுமக்கள், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடையளிப்பார்கள். தமிழ்த்தட்டச்சு செய்வது, விக்கிப்பீடியாவில் எழுதுவது, வலைப்பதிவு (பிளாக்) உருவாக்குவது குறித்து, இணையத்தில் உள்ள இலவச மென்பொருள்களை அறிமுகம் செய்வது என்று மக்கள் அரங்கத்தின் பணிகள் இருக்கும்
.
மாநாட்டின் சார்பில் நடைபெறும் வலைப்பதிவு உருவாக்கும் போட்டியும், தமிழ்த் தட்டச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சிக்குப் பாடுபட்ட தன்னார்வலர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளனர். மாநாடு குறித்த செய்திகள் இணையதளத்தில் கிடைக்கும் என உலகத் தமிழ் இணைய மாநாட்டு உள்நாட்டுக்குழுத் தலைவர் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

உடல் நலம் தேறி கமல் வீடு திரும்பினார்





மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் என்னும் படம் தமிழில் பாபநாசம் என்னும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் கவுதமியும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் கமல் நடித்து வருகிறார். இந்நிலையில் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக்காததால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவரது உடல் நிலை சரியானது. நலமான உடலுடன் அவர் நேற்று மாலை வீடு திரும்பினார்.

ரஜினிகாந்த் படத்துக்கு தடை விதித்தது நீதிமன்றம்




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானே நீதிமன்றத்துக்கு சென்று ஒரு படத்துக்கு தடை விதிக்க சொல்லியுள்ளார். அது ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்னும் ஹிந்தி படம் ஆகும். ரஜினிகாந்த் பெண் பித்தர் போலவும், பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பு உள்ளவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இது ரஜினிகாந்தின் நல்ல பெயரை கெடுக்கும் என்று அவர் நினைக்கிறார்.

 சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்று தக்க வைப்பதற்காக அவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தனது திறமையை நிருபித்து உள்ளார். இப்படிபட்ட தனது உழைப்பை இந்த படம் வீணாக்கி விடும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த படத்தை இந்த மாதம் 25 ஆம் தேதி வரை வெளியிட தடை விதிக்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.

நல்ல காரியத்திற்காக டிவிட்டரில் இணைந்த நடிகை !!



நடிகை கஜோல் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நடக்கும் செய்திகளை தனது ரசிகர்களுக்கு தெரிவிக்க சமூக வலைதளமான டிவிட்டரில் சிறிது காலத்திற்காக இணைந்துள்ளார் .

இவர் லைப்பாயின் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செயல்படும் இயக்கத்தில் துதுவராக இருக்கிறார் . இவர் இது தொடர்பாக செமினார் ஒன்றை ஐ.நா சபை கூட்டத்தின் போது பங்கேற்க உள்ளார் . இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது .

இவரது டிவிட்டர் பக்கத்துக்கு 5,312 பின் தொடர்பாளர்கள் இருக்கின்றனர் .

ஐ.நா சபையின் சமாதானத்தின் துதுவராகிறார் டைட்டானிக் கதாநாயகன் !!



பிரபல ஹாலிவுட் நடிகரும் சமூக ஆர்வலருமான லியானர்டோ டி கார்பியோ ஐ.நா சபையின் சமாதானத்தின் துதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் உலகின் நடக்கும் காலநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பார் . இதனை பான் கீ மூன் அவர்கள் செவ்வாய்கிழமை அன்று அறிவித்தார் .

வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று நடக்கும் ஐ.நா வின் காலநிலை மாற்றம் குறித்த கூட்டத்தில் டி கார்பியோ பேச உள்ளார் . இதற்கு அடுத்த நாள் ஐநா சபையின் அனைத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது . இந்த காலநிலை மாற்றம் குறித்த கூட்டத்தில் ஐ.நா சபையில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஐ.நா தலைவர் பான் கீ மூன் கூறுகையில் , " டி கார்பியோ ஒரு முன்னனி நடிகர் மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னுடைய அமைப்பின் மூலம் இயற்கை பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் " என்றார் .

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு வெறும் 40 சதவீதம் மட்டுமே டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது ..



இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற உள்ளது . முந்தி ஒரு முறை தெங்கொரியாவின் சியோலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது , இன்சியான் என்னும் நகரம் ஒரு பெயர் தெரியாத நகரம் . ஆனால் இன்று உலகில் முக்கியமான துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும் . மேலும் அதிக பயணிகளைக் காணும் துறைமுகங்களில் இதுவும் ஒன்று . இப்போது கேலாகலமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயராகிக் கொண்டு இருக்கிறது .

இந்த வார வெள்ளிக்கிழமை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற இருக்கிறது . ஆனால் தொடக்க விழா நடைபெறும் மைதானத்தில் வெறும் 40 சதவீத டிக்கெட்கள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம் . அங்கே இருந்த பயணி ஒருவர் கூறுகையில் , " விளையாட்டுப் போட்டிகள் சியோலில் நடைபெற்று இருந்தால் கூட்டம் அதிகமாக இருந்து இருக்கும் " என்றார் .

மக்களுக்கு பிடித்த விளையாட்டுகள் ஆன ரக்பி , கால்பந்து , ஜிம்னாஸ்டிக்ஸ் , நீச்சல் ஆகிய போட்டிகளுக்கு டிக்கெட்கள் விற்று தீர்ந்தது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media