BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 27 July 2014

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியாவின் புதிய திட்டம்

அடுத்து வரும் 2016, 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதற்கு புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம். “ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான இலக்கை நோக்கிய திட்டம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிய ஒரு குழு அமைக்கப்படுகிறது. அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட், துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா உள்ளிட்டோர் சேர்க்கப்படவுள்ளனர். அவர்களை தேந்தெடுத்த பின் அவர்களுக்கு தீவிர பயிற்சி வழங்கப்படும். அடுத்த முறையாவது ஒன்றிரண்டு பதக்கங்களுக்கு ஏங்கி கொண்டு இருக்காமல் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்கு முயற்சிப்போம்.

டைட்டன் வாட்ச் கம்பெனி தனியார் கம்பெனியா? அதன் பங்குதாரர்கள் யார் யார் தெரியுமா?

வாட்ச் என்றால் நம் அனைவருக்கும் பிடிக்கும் . அதிலுல் டைட்டன் வாட்ச் கட்டினால் ஒரு ரிச் லுக்கே வந்து விடும். நாம் அனைவரும் அது தனியார் நிறுவனம் என்று தானே நினைத்து வந்து உள்ளோம் ,ஆனால் அதில் தமிழக அரசுக்கும் உரிமை உள்ளது. இது டாடா குழுமமும் தமிழக அரசும் சேர்ந்து நடத்தும் நிறுவனம். இதில் தமிழக அரசுக்கு 28 சதவீத பங்குகள் உள்ளன. உலகளவில் வாட்ச் தயாரிக்கும் கம்பெனிகளில் டைட்டன் நிறுவனம் 5 வது இடத்தில் உள்ளது. 32 நாடுகளுக்கு டைட்டன் வாட்ச் அனுப்பபடுகிறது. சோனாடா, பாஸ்ட்டிராக் போன்றவைகளும் இவர்களுடையது தான்.

துணை அதிபரின் மனைவியை கடத்திய போக்கோ ஹாரம் அமைப்பினர் !!

இன்று திடீரென தாக்குதல் நடத்தினர் போக்கோ ஹாரம் அமைப்பினர் . அந்த தாக்குதலில் , பல மக்கள் இறந்தனர் . மேலும் கேமரூன் நாட்டின் துணை அதிபரின் மனைவியையும் கடத்தி உள்ளனர் . போக்கோ ஹாரம் அமைப்பினர் , இதற்கு முன்னால் பள்ளி மாணவிகளை கடத்தி இருந்தனர் . அவர்களின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை . கேமரூன் அரசு போக்கோ ஹாரம் அமைப்பினரின் ஊடுருவலை அழிக்க முயற்சிகள் எடுத்து வந்தனர் . இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அந்த அமைப்பினர் கேமரூன் அரசை எச்சரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

"தலை"க்கு கனம் இருக்க கூடாது, நடிகர் விஜய் பேச்சு, மீண்டும் ஆரம்பமாகும் அஜீத்-விஜய் மோதல்


அஜீத் விஜய் போட்டி என்பது நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது, அஜீத்தும் விஜய்யும் தாங்கள் நடிக்கும் திரைப்படங்களில் மாறி மாறி சவால் விட்டுக்கொள்வதும் அவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வதும் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.

 ரசிகர்களிடையேயான மோதல் போக்கை தடுக்க அஜீத்தும் விஜய்யும் நல்ல நண்பர்களாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன, இருவரின் குடும்பங்களும் பழகும் போட்டோக்கள் வெளியாகின. ஆனாலும் இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து ஃபேஸ்புக் டிவிட்டர்களில் அடித்துக்கொள்கின்றனர், சமீப காலமாக விஜய்யும் அஜீத்தும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வசனங்களை தங்கள் படங்களில் வைப்பதில்லை.

விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்ளவில்லை, ஆனாலும் பலர் பல முறை அஜீத் பெயரை சொல்லி கரகோஷம் எழுப்பினார்கள், விஜய் டிவியும் அஜீத்தை புகழ்ந்து தலையில் வைத்து கொண்டாடினார்கள்.

ஃபேவரிட் ஹீரோ அவார்டை நடிகட் விஜய்க்கு வழங்கினார்கள், அந்த விருதை வாங்கிக்கொண்டு பேசும் போது தலையில் எவ்வளவு கனமான கிரீடம் இருந்தாலும் அந்த கிரீடத்தை தாங்கும் தலைக்கு கனம் இருக்க கூடாது என்றார். இது அஜீத்தை விமர்சிப்பது போல் உள்ளது என்றும் மீண்டும் விஜய் அஜீத் மோதல் வசனங்களுக்கு இது ஆரம்பமாக இருக்குமோ என்றும் பலர் கருதுகின்றனர்.

காஸாவில் ரம்சானுக்கு முன் 24 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் !!

ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , இந்த போர் நிறுத்தம் உலக நாடுகளின் வேண்டுகோளுக்காகவும் ரம்சான் வர இருப்பதாலும் இன்றிலிருந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறை படுத்தப்படும் என்றார் . இதற்கு முன் சனிக்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் போர் நிறுத்தம் கோரி இருந்தது . ஆனால் இதை மறுத்து ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர் . இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தனர் . 20 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில் 1,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . அதில் பாதிக்கும் மேற்பட்டோர் அப்பாவி பொது மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

வீரம் Vs விஜய் அவார்ட்ஸ், விஜய்-அஜித்தை கலாய்த்த வந்த போட்டோக்கள்

இன்று விஜய் டிவியில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. அதற்கு போட்டியாக சன் டிவியில் வீரம் படம் ஒளிபரப்பானது. இந்த இரண்டையும் கலாய்த்து வந்த போட்டோக்கள்.

அடுத்த குழந்தைக்கு அப்பாவாக போகிறார் தல அஜித்

தல அஜித்திற்கு 1999 ஆம் ஆண்டு வந்த "அமர்களம்" படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தார்கள். ஆனால் இதற்கு அவர்கள் வீடுகளில் எதிர்ப்பு இருந்து. ஏனென்றால் அஜித் ஒரு பிராமின் மற்றும் ஷாலின் ஒரு கிறித்துவ பெண். இதனால் அவர்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி 2000 ஆம் ஆண்டில் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து ஷாலினி நடிப்பதை நிறுத்தி விட்டார். 8 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவளின் பெயர் அனோஷ்கா. அவரது பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்திற்கு 50 ஆயிரம் லைக்குகளுக்கு மேல் உள்ளது. இப்போது இந்த தம்பதிகளுக்கு அடுத்த குழந்தை பிறக்க உள்ளது. இது பற்றிய தகவலகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அஜித்திடம் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. எப்படியோ அனோஷ்காவுக்கு கூட விளையாடுவதற்கு இன்னொரு பாப்பாவோ பையனோ வரப்போகிறது.

இனி இந்தியா முழுவதும் சியோமி மொபைல் தான், இதுவரை 1 லட்சம் மொபைல்கள் முன்பதிவு

சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல். இப்போது இந்த மொபைல் நிறுவனம் இந்திய மார்கெட்டை குறிவைத்து அவர்களின் மொபைலை இந்தியாவில் களமிறக்கி உள்ளார்கள். இது கடந்த செவ்வாய்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது. இதன் பெயர் சியோமி எம்.ஐ. 3 ஆகும். இதனை இணைத்தில் மட்டும் தான் வாங்க முடியும் , அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் வாங்க முடியும். இந்த மொபைலின் விலை ரூபாய்.13,999 ஆகும். இதன் விற்பனை அன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட விற்பனைக்கு 5000 மொபைல்கள் வந்து உள்ளன. ஆனால் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன. அனைவரும் ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையத்தை அணுகியதால் அந்த தளம் சிறிது நேரத்திற்கு பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதற்கு முன்பு மோட்டோ ஈ மொபைல் விற்பனைக்கு வந்த போது இது போல் நடந்தது. இன்று வரை அந்த மொபைலுக்காக இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மொபைலை வாங்கியவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை எல்லா கம்பெனிகளின் மொபைல்களை பயன்படுத்தியோரும் இது தான் சிறந்தது என்கிறார்கள். அடுத்து இந்த நிறுவனம் எம்.ஐ.4 என அடுத்த மொபைலை வெளியிட உள்ளது. இது செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது. இதன் விலை 20 ஆயிரமாக இருக்கும். சியோமியின் இந்திய வருகையால் மற்ற மொபைல் கம்பெனிகள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இரூக்கிறார்கள்.

சாய்னா நெஹ்வாலிடம் 50 இலட்சம் கடன் பாக்கி வைத்து இருக்கும் தெலுங்கானா அரசு

2012 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவை சேர்ந்த ஒருவர் பேட்மிண்டன் விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் வெல்வது அது தான் முதல் முறை. அதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குமிந்து கொண்டு இருந்தன. அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி சாய்னா நெஹ்வாலை பாராட்டும் விதமாக அவருக்கு 50 இலட்சம் பரிசு தொகையை அறிவித்தார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்தது. ஆந்திரா என்றும் தெலுங்கானா என்று ம் அழைக்கப்பட்டது. சாய்னா தெலுங்கானா மாநிலத்தின் குடிமகள் ஆனார். தெலுங்கானாவில் இருப்பதற்காக அவர் பெருமைபடுவதாகவும் கூறினார். ஆனால் அவர் ஒலிப்பிக்கில் பதக்கம் வென்றதற்காக தருவதாக கூறிய 50 இலட்சம் மட்டும் இன்னும் எந்த அரசிடமும் இருந்து வரவில்லை. 2 ஆண்டுகள் ஆகியும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அவரை காய்ப்படுத்தி உள்ளதாக கூறினார்.இது குறித்து அரசு எந்த பதிலும் கூறவில்லை என கவலை படுகிறார்.இந்த தகவலை சாய்னா தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்து இருந்தார். தனக்கு உரியதை தான் கேட்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவருக்கு தரவேண்டியதை தர வேண்டும்.

3 வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்டிங், இஷாந்த் சர்மா இல்லை

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்டில் இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி பெற்றது. இப்போது இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்க் செய்கிறது. கடந்த போட்டியின் ஆட்ட நாயகன் இஷாந்த் சர்மா இந்த போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை. அவ்ருக்கு பதில் பங்கஜ் சிங் விளையாடுகிறார்.அவருக்கு இது முதல் போட்டி ஆகும். பின்னிக்கு பதில் ரோகித் சர்மா ஆடவுள்ளார்.இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் மாட் பிரயருக்கு பதில் ஜோஸ் பட்லர் ஆடவுள்ளார்.

ஆடி அமாவாசை அன்று திதி கொடுப்பதால் மட்டும் நன்மை வந்து விடாது

அமாவாசை என்றாலே தமிழகத்தில் நல்ல தினமாக பார்ப்பார்கள். அதிலும் ஆடி அமாவாசை என்றால் அதற்கு கூடுதல் சிறப்பு தான். நல்ல காரியம் எதுவும் தொடங்க வேண்டுமானால் இந்த நாளை தவறாமல் பய்ன்படுத்தி கொள்வார்கள். அது மட்டுமில்லாமல் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக இந்த நாளை பயன்படுத்தி கொள்வார்கள். இந்த நாளில் திதி கொடுத்தால் அந்த முன்னோர்கள் என்றும் நம்முடன் இருந்து நமக்கு நன்மைகளை தருவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. நேற்று தான் ஆடி அமாவாசை, இதனால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் நீர்நிலைகள் என எங்கும் கூட்டமாக இருந்தது. அதிலும் குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் காலை முதலே கூட்டம் இருந்தது. பயணம் செய்ய இயலாதவர்கள் வீட்டில் இருந்தே திதி கொடுத்தார்கள். இந்த திதி என்பது நம் முன்னோருக்கு செய்யும் மரியாதை ஆகும். ஆனால் இதனை செய்யும் பலர் தங்கள் வயதான பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பியவர்கள். வீட்டில் நம்மை ஆளாக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி வரை நம்முடன் வைத்து அவர்களுக்கு தொண்டும் செய்தாலே ஏழு தலைமுறைக்கு அந்த பலன் வந்து சேரும் என்பார்கள். அதை விட்டு விட்டு ஆடி அமாவாசை அன்று பெற்றோர்களை நினைப்பது என்பது வெறும் மூட நம்பிக்கை தான். வீட்டில் உள்ள முதியோர்கள் எல்லாம் ஆடி அமாவாசை அன்று காக்கையாக சாப்பிட வருவார்கள் என்றூ காத்து இருந்தார்கள் , தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பியவர்கள்.

நேரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை


இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெறுமதியை சொல்வார்கள்...! ► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...! >>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை...

மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம் !!

ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர் , இஸ்ரேல் ராணுவம் தன்னுடைய 12 மணி நேர போர் நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது . மனித நேய அடிப்படையில் போடப்பட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் அமைப்பினர் , மீறியதால் , இனி இஸ்ரேல் ராணுவம் தன்னுடைய தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடங்க உள்ளதாக ராணுவ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர் . போர் நிறுத்தம் முடிந்துள்ளதால் , காஸாவில் வெடிப்பு சத்தம் மீண்டும் கேட்க தொடங்கியதாக தகவல் வருகிறது .

ஸ்பைடர்மேனுடன் போட்டோ எடுக்க 20 டாலர் இருந்தால் போது

சிறியவர்களை கவர்ந்த ஒரு படம் என்றால் அதில் ஸ்பைடர்மேனை கூறலாம். இதில் வரும் ஆடை மிகவும் பிரபலமாகும். அதில் வரும் ஸ்பைடர்மேன் மக்களை காப்பாற்றுவதற்காக வருவார். இந்த படம் ஐந்து பாகங்களாக வந்து உள்ளது. இவை அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இத்னை ஒருவர் தவறாக பயன்படுத்தி கொண்டார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியை சேர்ந்த 25 வயது உள்ள பிஷப் என்னும் வாலிபர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு அங்கு உலாவி கொண்டு இருந்தார். அவருக்கு ஸ்பைடர்மேன் ஆக வேண்டும் என்னும் ஆசை வந்ததால் இது போல செய்தார். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் டைம்ஸ் ஸ்கொயர் பகுதிக்கு வந்தார். அங்கு வந்த சுற்றுலா பயணிகளுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். எடுத்த பிறகு 20 டாலர் பணம் தருமாறு தொல்லை செய்தார். இதனை அங்கு இருந்த போலீஸ் ஒருவர் பார்த்தார். அதனை கேட்க வந்தார். ஆனால் அந்த வாலிபர் ஸ்பைடர்மேன் ஸ்டைலில் ஒரு குத்து விட்டார். ஆனால் சுதாரித்து கொண்ட போலீஸ் அவரை கைது செய்தது. நாம் படங்கள் பார்த்து அதற்கு அடிமையானால் இது போல் தான் ஆகும்.

சிகிச்சை முடிந்து சென்னைக்கு திரும்பினார் கேப்டன்





தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. உடல் நலம் சரியான பின்பு அவர் வீடு திருப்பினார். ஆனால் அவரது உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் . இந்த பயணம் ரகசியமாக இருந்து உள்ளது. அவருடன் அவரது மனைவி பிரமேலதா மட்டும் சென்றார்.


இந்நிலையில் சிகிச்சை முடிந்து கேப்டன் இன்று சென்னைக்கு திரும்பி உள்ளார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். கேப்டனுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லை. கேப்டன் சிகிச்சைக்கு பிறகு திரும்பியுள்ளதால் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

சின்ன குயில் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்




தனது குரலின் மூலம் பலரையும் கவர்ந்த சித்ராவுக்கு இன்று 51 வது பிறந்த நாள். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அவரது பிறந்த நாள் அன்று நாம் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்.

* இவர் சின்ன குயில் என்றும், கேரளத்தின் வாணியம்பாடி என்றும் அழைக்கப்படுகிறார்.

* இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, ஒரியா, உருது, துளு, சம்ஸ்கிருதம், பெங்காலி, அசாமீஸ் என பல மொழிகளில் பாடியுள்ளார்.

* 6 தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். ஒரு பெண் பாடகர் வாங்கியுள்ள அதிகப்பட்ச விருதுகள் இவருடையது தான்.

* 6 பிலிம்பேர் விருதுகளும், 31 மாநில விருதுகளும் வாங்கியுள்ளார்.

* தென்னிந்தியாவில் உள்ள 4 மாநிலங்களின் விருதுகளையும் வாங்கியுள்ளார்.

* பிரிட்டன் பாராளுமன்றத்தில் பாட்டு பாடிய முதல் இந்திய பாடகி இவர் தான்.

* லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் லதா மங்கேஷ்கருக்கு அடுத்து பாட்டு பாடிய பெண் பாடகர் இவர் தான்.

* 2005 ஆம் ஆண்டு பதம் ஸ்ரீ விருது பெற்று உள்ளார்.

* இவர் வாங்கிய ஆறு தேசிய விருதுகளில் மூன்று தமிழ் பாடல்களுக்கு வழங்கப்பட்டது.

* தமிழக அரசால் கலைமாமணி விருதும், சத்யபாமா பல்கலைகழகத்தால் கவுரவ டாக்டர் பட்டமும் வழக்கப்பட்டது.



நடிகர் விஜய்யின் பள்ளி சான்றிதழில் மதம் என்னும் இடத்தில் இந்தியன் என்று உள்ளது





ஒரு சாதாரண நடிகனாக சினிமாவில் நுழைந்து இளைய தளபதியாக வளர்ந்து தன்னை இன்று நாளைய சூப்பர் ஸ்டார் என்னும் தரத்திற்கு உயர்த்தி கொண்டவர் நடிகர் விஜய். விஜய் சினிமாவில் அதிரடியாகவும் மாஸாகவும் தெரிந்தாலும், நேரில் பார்க்கும் போது மிகவும் இயல்பாக இருப்பார். அவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த படம் "தலைவா". அதில் விஜய் ஒரு வசனம் பேசுவார். நீ வேர ஜாதி நா வேர ஜாதி இல்ல, ஒரே ஜாதி இந்தியா என்று. இந்த வசனத்திற்கு திரையரங்குகளில் கைதட்டல்கள் குமியும்.


சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் விஜய் அப்படி தான் போல. விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டார். இதில் பேசிய அவர் , விஜய்யை எல்.கே.ஜி.யில் சேர்க்கும் போது அவரது பள்ளி சான்றிதழ் மதம் என்னும் இடத்தில் இந்தியன் என்று கொடுத்ததாக கூறினார். இன்றளவும் விஜய்யின் பள்ளி சான்றிதழில் இந்தியன் என்றே இருப்பதாக கூறினார்.


உன்னை யாரோ பெத்து இருப்பா என்னை யாரோ பெத்து இருப்பா ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா !!

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் புதிய திருப்பம்





சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள ஒரு கட்டிடம் கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 61 பேர் பலியாகினர். இது 11 மாடி கட்டிடம் என்பதால் மீட்பு பணிகள் ஒரு வாரம் நடந்தது. இதில் சுமார் 25 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். இந்த விபத்து நடந்து ஒரு மாத காலம் முடிய போகிறது. இந்த கட்டிடத்தில் வீட்டை வாங்கியோரின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்து வந்தது. இப்போது அதில் புதிய திருப்பம் வந்து உள்ளது,


இத்தனை நாட்கள் அவர்கள் பொறுமையுடன் இருந்து பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை. இங்கு வீடு வாங்கியோர் எல்லாம் பெரிய பணக்காரர்கள் இல்லை . பலரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து, வங்கியில் கடன் வாங்கி இந்த வீட்டை வாங்கி உள்ளார்கள்.


இங்கு இருக்கும் ஒரு வீட்டின் மதிப்பு சுமார் 70 இலட்சம் இருக்கும். கடன் கொடுத்த வங்கிகள் இப்போது வட்டி கட்ட சொல்லி விட்டார்கள். தனக்கு என்று ஒரு வீடு வருகிறது என்றால் அதற்கு வட்டி கட்டலாம். ஆனால் எந்த உபயோகமும் இல்லாமல் எதற்கு வட்டி கட்ட வேண்டும் என நினைகிறார்கள்.  அதனால் வங்கியிடம் அந்த கடனை தள்ளுபடி செய்யுமாறு கேட்டார்கள், ஆனால் வங்கி மறுத்து விட்டது. இதனால் அவர்கள் புது அமைப்பு ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள். அந்த விபத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்தவர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. இப்போது இவர்கள் அரசிடம் அவர்கள் இழந்த பணத்தை கேட்கிறார்கள். மீடியாவின் உதவியையும் நாடி உள்ளார்கள். இதனை சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.


இந்த தகவல்களை அந்த அமைப்பை சேர்ந்த ரத்னா மிஷ்ரா என்பவர் தெரிவித்தார். வீட்டை கட்டியவர்கள் சிறையில் இருப்பதால் யாரிடம் நியாயம் கேட்பது என தெரியாமல் இருக்கிறார்கள்.

சென்னையும் சனிக்கிழமை விபத்துகளும்




சென்னைக்கும் சனிகிழமைக்கு கடந்த சில வாரங்களாக ஒத்து வரவில்லை என்றே கூறலாம். ஏனென்றால் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு விபத்து நடந்து கொண்டு இருக்கிறது.

1.  ஜூன் மாதம் 28–ந்தேதி மவுலிவாக்கத்தில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து . இந்த விபத்தில் 61 பேர் பலியாகினார்கள்.

2.  ஜூலை 5–ந்தேதி நள்ளிரவில் செங்குன்றம் அருகே சுற்றுசுவர் இடந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டார்.

3. ஜூலை 12–ந்தேதி பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் கட்டிடம் முழுவதும் எரிந்தது. அங்கு இருந்த முக்கியமானவைகளும் எரிந்து சாம்பலாகின.

4.  ஜுலை 26 - தேதி, அதாவது நேற்று எழிலகம் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து செயல்பட்டு இந்த தீ அணைக்கப்பட்டது.




ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரம் நடந்தது என்ன ?? மனம் திறந்தார் தோனி





இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தொகையில் பாதியை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது. முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட இடைவேளியின் போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டர்சன் கோபமாகி ஜடேஜாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி ஆண்டர்சன் மீது புகார் அளித்து இருந்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஜடேஜா மீது புகார் அளித்தது. இது விசாரணையில் இருந்தது . இதில் ஜடேஜாவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


இந்த விவகாரத்தில் இந்திய கேப்டன் தோனி தனது மனம் திறந்த பேட்டியை அளித்து உள்ளார். இந்த தீர்ப்பு  எங்களை மிகவும் புண்படுத்தி உள்ளது என்றார். இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. ஜடேஜா எல்லைக்கோட்டு அருகே சென்று கொண்டு இருக்கும் போது ஆண்டர்சன் ஜடேஜாவை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளார். தோனி அவரை சமாதனம் செய்து உள்ளார். எல்லாம் முடிந்து விட்டது என தோனி நினைத்த வேளையில் ஆண்டர்சன் மீண்டும் திட்டி உள்ளார். அது மட்டுமில்லாமல் ஜடேஜாவை தள்ளி விட்டு உள்ளார். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழும் நிலைக்கு சென்று உள்ளார். இருந்தும் அவர் எதுவும் பேசவில்லை. இது எப்படி ஆக்ரோஷமான நடத்தையாகும். ஜடேஜாவின் மீது எந்த தவறும் இல்லை.


ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனை தோனியை மிகவும் காயப்படுத்தி உள்ளதாக கூறி உள்ளார். ஜடேஜா மீது லெவல் 1 தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிபிடத்தக்கது. 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media