BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 6 August 2014

பாகிஸ்தான் , வங்கதேசம் நாட்டு பெண்களை திருமணம் செய்யக் கூடாது - சவூதியில் புது சட்டம் !!



சவூதி அரேபியாவில் உள்ள ஆண்கள் பாகிஸ்தான் , வங்கதேசம் , சாட் , மியான்மர் நாட்டில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக போலிஸ் அதிகாரி தெரிவித்தார் . இந்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்றாலும், சவூதியில் இருக்கும் ஆண்கள் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்யாமல் தடுக்க இந்த் சட்டம் உதவும் என அவர்கள் நம்புகின்றனர் .

இந்த 4 நாடுகளில் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஆண்கள் இங்கே வசிக்கின்றனர் . அப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் , அதற்காக கடுமையான விதிமுறைகளை கொண்டு வர உள்ளனர் .

பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் சிறுவர்களை இனி இளைஞர்களாக கருதி தண்டனை அளிக்கும் மசோதாவுக்கு , மத்திய அமைச்சரவை ஒப்புதல் !!



இன்று கூடிய மத்திய அமைச்சரவை , சிறுவர்கள் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . இனி அந்த மசோதா அனுமதிக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் .

இந்த சட்டத்தின் மூலம் 16 வயது முதல் 18 வயது சிறுவர்களை வாலிபர்களாக வைத்து தண்டிக்கலாமா அல்லது சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பலாமா என்ற முடிவை எடுக்கும் உரிமை இளவயதுக்கோரான நீதி அமைப்புக்கு  வழங்கப்படும் .

2012 முதல் 2013 ஆண்டுக்குள் சிறுவர்களால் செய்யப்படும் தவறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதால் இந்த மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளனர் . அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .


இன்றைய செய்திகள் - Satrumun Special daily News

காதலனுடன் பைக்கில் செல்கையில் விபத்து !! காதலனை கோமாவில் நடுரோட்டில் தவிக்க விட்டு காதலி ஆட்டோ ஏறி ஓட்டம் !!
http://www.satrumun.net/2014/08/jodi-accident-girl-escaped-boy-coma.html

சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? கொதிக்கும் பேஸ்புக் பதிவர்
http://www.satrumun.net/2014/08/soodhu-kavvum-director-nalan-kumarasamy.html

செப்டம்பரில் வருகிறது ஆப்பிள் ஐ-போன் - 6 !!
http://www.satrumun.net/2014/08/6.html

விஸ்வரூபத்தை முந்தியது ஜிகர்தண்டா !!
http://www.satrumun.net/2014/08/blog-post_89.html

குரங்கு எடுத்த 'செல்ஃபி' போட்டோக்கள், உரிமம் கொண்டாட முடியாது என போட்டோக்காரரிடம் முரண்டு பிடிக்கும் விக்கிபீடியா !!
http://www.satrumun.net/2014/08/monkey-selfie-copyright-wikipedia-refuses.html

தலையில் பர்தா அணியாமல் டிவியில் தோன்றிய செய்திவாசிப்பாளரால் சவூதியில் ஏற்பட்ட பரபரப்பு !!
http://www.satrumun.net/2014/08/withiut-farda-news-reader-saudi-outrage.html

'தல 55' சீக்ரெட் : கெளதம்மேனன் ஆசையை நிறைவேற்றிய அஜித்!
http://goo.gl/86Ko2y

கம்மியான செலவுல படமெடுக்க இலங்கைக்கு வாங்க... : 'கூவி கூவி' அழைக்கும் சீமான் நண்பி சிங்கள நடிகை!
http://goo.gl/R5dQnF

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் அணி அறிவிப்பு
http://www.satrumun.net/2014/08/blog-post_35.html

முஸ்லீம்களுக்கு எதிரானவர் மோடி, ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்காததால் மோடி மீது குற்றச்சாட்டு
http://www.satrumun.net/2014/08/blog-post_12.html

தமிழக போலீஸ் இனி 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் ??
http://www.satrumun.net/2014/08/8.html

பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் போர் - பாரத் ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி பரபரப்பு கருத்து
http://www.satrumun.net/2014/08/blog-post_6.html

காமன்வெல்த் போட்டிகளின் போது , கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர் இந்தியர், அவர் யார் தெரியுமா?
http://www.satrumun.net/2014/08/most-searched-player-in-CWG.html

குரங்கு எடுத்த 'செல்ஃபி' போட்டோக்கள், உரிமம் கொண்டாட முடியாது என போட்டோக்காரரிடம் முரண்டு பிடிக்கும் விக்கிபீடியா !!

விக்கிபிடீயா சைட்டை இயக்கும் விக்கிமீடியா என்னும் நிறுவனத்திடம் ஒரு போட்டோக்காரர் தன்னுடைய போட்டோவை இலவசமாக இணையத்தில் பதிவிட்டதால் தனது வாழ்வாதாரத்திற்கு ஊறுவிளைக்கிறது என்றும் அதனால் அந்த போட்டோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என பலமுறை தகவல் அனுப்பியும் , அந்த கோரிக்கையை நிராகரித்தது விக்கிபீடியா . 

இங்கிலாந்தில் உள்ள பிரபல போட்டோக்காரர் டேவிட் ஸ்லேடர் . இவர் ஒரு குரங்கு படம் ஒன்றை எடுக்க இண்டோனெஷியா சென்று இருந்தார் . பல முயற்சியில் ஈடுபட்டு இருந்த அவரால் ஒருமுறை கூட சிறந்த படத்தை எடுக்க முடியவில்லை . அப்படி அவர் எடுத்துக் கொண்டு இருக்கும் போது குரங்கு அவரது கேமரா ஒன்றை எடுத்துச் சென்று ஷட்டர் பட்டனை அமுக்கிக் கொண்டே இருந்தது . அந்த குரங்கு கிட்டத்தட்ட 100 செல்பி எடுத்தது . பல போட்டோக்கள் மோசமாக இருந்தாலும் , சில போட்டோக்கள் நச்சென்று விழுந்தது . இதனை அவர் இணையத்தில் பதிவிட அவர் புகழின் உச்சிக்குச் சென்றார் .

அவர் தனது சொந்த வாழ்வாதாரத்திற்காக இப்போது அந்த போட்டோவிற்கு உரிமம் கொண்டாடி வருகிறார் . ஆனால் விக்கிபீடியா அந்த போட்டோவை குரங்கு தான் எடுத்தது . எனவே இவர் சொந்தம் கொண்டாட முடியாது எனக் கூறி வாதாடுகிறது .

விஸ்வரூபத்தை முந்தியது ஜிகர்தண்டா !!







இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஐ.எம்.டி.பி என்னும்   பிரபலமான இணையதளத்தில் ஒன்பது மதிப்பெண் பெற்று விஸ்வரூபம், 3-இடியட்ஸ் போன்ற படங்களை பின்னுக்குத் தள்ளி இந்திய திரைப்படங்கள் வரிசையில் இதுவரை முதல் இடம் பிடித்துள்ளது .

படங்களின் மதிப்பீடு கீழ் வருமாறு !!


ஜிகர்தண்டா   -  9

விஸ்வரூபம் - 8.9

3-இடியட்ஸ்  - 8.5  

சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? கொதிக்கும் பேஸ்புக் பதிவர்

தற்போது வெளிவந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பவர் இயக்கியுள்ளார், இப்படத்தை ஃபேஸ்புக்கில் சிலர் விமர்சித்துள்ளார்கள், இதில் எரிச்சலான கார்த்திக் சுப்புராஜ்ஜின் நண்பரும் சூதுக்கவ்வும் திரைப்படத்தின் இயக்குனருமான நலன் குமாரசாமி ஜிகர்தண்டாவை விமர்சித்தவர்களை நக்கலடிக்க அதை ஃபேஸ்புக்கில் பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்

நலன் குமாரசாமியின் பதிவிற்கு குழலி என்ற ஃபேஸ்புக் பதிவர் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார், அந்த பதிவு உங்கள் பார்வைக்கு

"சூதுகவ்வும்" என்ற சுமார் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிய சோசியல் மீடியா நண்பர்களை கேவலப்படுத்திய இயக்குனர் நலன்

முன்னாள் குறும்பட இயக்குனரும், இது வரை ஒரு படத்தை இயக்கியவருமான நலன் அவரின் நண்பர் கார்த்திக் சுப்பராஜின் திரைப்படத்தை விமர்சித்தவர்களை இவர் விமர்சித்து ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் இட்டிருந்தார், அந்த பதிவின் அடிப்படை சாரம்சம் ஒரு படத்தை இயக்கி பார்க்க துப்பில்லாதவர்கள் எல்லாம் விமர்சனம் எழுத என்ன தகுதியிருக்கு மூடிக்கிட்டு போடா என்பது தான், அதற்கும் மேலாக ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதி ஒரு படத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று நண்பர்கள் என்ற அல்லக்கைகளுடன் சேர்ந்து நக்கல் வேறு. இதில் என்ன கொடுமை என்றால் நலன் இயக்கிய சூதுகவ்வுமை விளம்பரப்படுத்தியதற்கு ஃபேஸ்புக் தான் முக்கிய காரணமே.

நலன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? நாம சூது கவ்வும் படத்திலிருந்து ஆரம்பிப்போம், சூதுகவ்வும் படம் வணிகரீதியாக ஓடியிருக்கிறது, ஆனால் ஒரு இயக்குனரின் படமாக சூதுகவ்வும் ஒரு சுமார் மொக்கை படம். சூதுகவ்வும் படத்தின் பெரும் வெற்றிக்கு சிலரின் திறமைகளும் பலரின் சென்டிமெண்ட்டும் உள்ளது. 

பொதுமக்களுக்கு இவன் நம்ம ஆளுடா என்று பிடித்துப்போன விஜய் சேதுபதி அண்ட் கோவின் அட்டகாசமான நடிப்பு, டட்டடட்ட டா டட்ட்டடா டட்ட்டடா என்று பிஜிஎம் மோடு அதிரடியான கலக்கலான ப்ரெஷ்ஷான சந்தோஷ் நாராயணனின் அட்டகாசமான இசை, கானா பாலா, ஜிகேபி யின் சூப்பர் டூப்பர் பாடல்கள் என பல திறமைசாலிகள் சுமாராக இயக்கப்பட்ட சூதுகவ்வும் படத்தை தாங்கிபிடித்தனர்.

அட்டைகத்தி படத்தில் அத்தனை பேரையும் இயக்குனர் தாங்கிபிடித்தார், ஆனால் சூதுகவ்வுமில் அத்தனை பேரும் இயக்குனரை தாங்கிபிடித்தார்கள், இன்ஸ்பெக்டர் சூத்தில் சுட்டுக்கொள்வதில் ஆரம்பித்து ஹெலிக்காப்டரில் பணத்தை கோத்துக்கொண்டு வருவதை வரை சூதுகவ்வும்மின் சூரமொக்கை இயக்கத்தை பலரும் விமர்சித்திருந்தால் இயக்குனர் நலனுக்கு இன்று கொம்பு முளைத்திருக்காது. ஆனால் விமர்சகர்கள் இவைகளை எல்லாம் சாய்ஸில் விட்டதன் பின் பெரும் உளவியல் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் சுமார் மொக்கை சூதுகவ்வுமை ப்ளாக் ஹ்யூமர், தமிழ் இண்டஸ்ட்ரியின் போக்கை மாற்றும் படம் என்று ஒன்றிரண்டு பேர் சொல்ல நலனின் கொம்பு மேலும் வளர்ந்துவிட்டது போலும்.

ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதி ஒரு படத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று ஒரு நண்பர் அதில் கமெண்ட் போட்டுள்ளார், ஆக்சுவலா சூதுகவ்வும் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் என்பது அதன் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் அதை யூடியூபில் இலட்சம் பேர் பார்த்தனர் என்பது தான், அது எப்படி ஒரு இலட்சம் வியூ ஒரே நாளில் வந்தது என்று பிறர் வேண்டுமானால் ஆச்சரியப்படலாம், ஆனால் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் பல ஆண்டுகளாக பழம் தின்று கொட்டை போட்ட எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு என்ன மாதிரியான மார்க்கெட்டிங் உத்தி பயன்படுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ள முடியாதா என்ன? (அது என்ன உத்தி என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இன்பாக்ஸுக்கு வரவும், இண்டஸ்ட்ரி ஆட்களுக்கு கன்சல்டிங் சார்ஜ் உண்டு)

கந்தசாமி என்ற ஒரு படம் வெளிவந்தது படம் முதல் ஷோ ஓடும் போதே முதல் டிவிட் விழுந்தது "கந்தசாமி ஒரு நொந்தசாமி" என்று அதையடுத்து நான்கு நாட்கள் கந்தசாமி யை கிழித்த்து நொந்த சாமி ஆக்கினார்கள், டிவியில் அந்த படத்தை பின்னொரு நாள் பார்த்த போது அடடா படம் நல்லா லாஜிக்காக, சூப்பர் ஹிட் பாடல்களுடன், விக்ரமின் நடிப்பு, ஷ்ரேயாவின் கிரேஸ் உடன் படம் ஓகேவா தானே இருக்கு ஏன் கிழித்தெடுத்தார்கள் என்று பார்த்தால் அது இயக்குனரின் வாய்க்கொழுப்பினால் தான் என்பது புரிந்தது, படம் வெளியாகும் முன் நலன் கூறிய அதே வார்த்தைகளை தான் கொட்டியிருந்தார் இயக்குனர். "படம் எடுப்பது எவ்ளோ கஷ்டம் என்று தெரியாமல் ஈஸியாக‌ சோஷியல் மீடியாவில் விமர்சிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். படம் வெளியான உடன் ஸ்ட்ரிக்ட் வேல்யூவேஷன் செய்யும் வாத்தியார்களை போல படத்தின் அத்தனை மைனஸ்களையும் கிழித்து எடுத்து விமர்சித்தார்கள், விளைவு ஊத்தல்.

சூதுகவ்வுமில் இன்ஸ்பெக்டர் சூத்தில் சுட்டுக்கொள்வதில் ஆரம்பித்து ஹெலிக்காப்டரில் பணத்தை கோத்துக்கொண்டு வருவதை வரை இயக்குனரின் சூர மொக்கையை விமர்சிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்த போதும் இதை யாரும் விமர்சிக்கவில்லை, ஏனெனில் விமர்சகர்கள் என்னும் வாத்தியார்கள் அட நம்ம பசங்கய்யா என்று ஸ்ட்ரிக்ட் வேல்யூஷன் செய்யாமல் லிபரல் வேல்யூவேஷன் செய்தனர்.

நலன் எடுத்து காட்டியதை போல சினிமாவில் இம்மி அளவிலும் பயிற்சி பெறாது, தமது குடும்பக் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு இருக்கும் அத்தனை பேருக்கும் சினிமா என்ற உலகத்தில் நுழைய ஆசை உண்டு, தமிழ் சினிமா உலகில் பெரும் பணக்காரர்கள், பழம்பெருச்சாளிகள், வாரிசுகள் தான் வாழ முடியும் என்ற நிலையை கண்டு சாதாரணர் ஒவ்வொருவருக்கும் ஒரு கடுப்பு உண்டு, அப்போது தங்களை போன்ற ஒருவன் சினிமாவில் வெற்றியடையும் போது அவனை நம்ம ஆளுடா என்று போற்றி தூக்கி கொண்டாடுவார்கள், அப்படி தான் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இன்று கொண்டாடப்படுகிறார்கள். சினிமாவில் நேசிப்பவராக திறமையானவர்களை அடையாளம் காட்டும் தயாரிப்பாளராக சிவிகுமார் இருப்பதால் தான் அவரின் வெற்றிகளை இந்த சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள், நலன் கார்த்தி சுப்பாராஜ் போன்றவர்கள் ஃபேஸ்புக்கோடும் யுடியூபோடும் குறும்படங்கள் மூலமாக வளர்ந்தவர்கள், இவர்களின் வெற்றியை தன் வெற்றி போல கருதிய இந்த விமர்சகர்கள் இவர்களின் வெற்றிக்கு இடையூறு ஏற்படாதவாறு விமர்சனங்களை வைத்தார்கள். வில்லா-2 வின் விமர்சனத்தில் இதை நீங்கள் நன்றாக பார்க்கலாம். 

சூதுகவ்வுமில் இந்த உளவியல் தான் எல்லோரும் படம் நல்லா இருக்கு என்று ஸ்டேட்டஸ் போட காரணம், ஸ்பான்சர் வியூ மார்க்கெட்டிங்கை விட பெர்சனல் வியூ மார்க்கெட்டிங் ஒரு பிராடெக்டின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும், சூதுகவ்வும் டீம் செய்த மார்க்கெட்டிங்கை விட அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய சினிமா ரசிகர்கள் கொடுத்த பெர்சனல் வியூ மார்க்கெட்டிங் அதிகம். சூதுகவ்வும் படம் நல்லா இருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டதில் பாதி பேர் வத்திக்குச்சி, தடையற தாக்க போன்ற அட்டகாசமாக இயக்கப்பட்ட நல்ல படங்களுக்கு நல்லா இருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருந்தால் இந்த படங்கள் பெரும் வெற்றிகளை பெற்றிருக்கும், யுடியூபில் போய் பாருங்கள் தடையறதாக்கவும், வத்திக்குச்சியும் எத்தனை லட்சம் பேர் பார்த்திருக்கிறாகள் என்று தெரியும்.

ஒரு வயசில் ஒரு குழந்தை தத்தக்கா பித்தக்கா என்று நடந்து கீழே விழுந்து எழுந்தாலும் அதை கைதட்டி வரவேற்று பாராட்டுவார்கள், ஆனால் 10 வயசிலும் அதே குழந்தை கீழே விழுந்து எழுந்து நடந்தால் அதை கைதட்டி யாரும் பாராட்ட மாட்டார்கள், 10 வயதில் நடக்க தெரியாது விழுந்து எழுந்தால் திட்டத்தான் செய்வார்கள்.

சூதுகவ்வும் படத்தை அதன் தகுதிக்கு அதிகமாக பாராட்டியதன் விளைவு அதை தமிழ்சினிமாவின் ட்ரெண்ட் செட்டிங் என்று எல்லாம் சிலர் எழுதியதன் விளைவு இன்று அதன் இயக்குனர் நலனுக்கு விமர்சனங்களே செய்யக்கூடாது என்ற மனநிலைக்கு கொண்டு போய் உள்ளது. எப்ப சார் இந்த மாதிரி யோசிக்க தோணுது, விஜய் டிவி விருதுகள் அரங்கில் கேலரி சீட்டிலிருந்து ரவுண்ட் டேபிளில் போய் உட்காரும் போதா?

பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்கியராஜ், பார்த்திபன் உட்பட தமிழ்சினிமாவின் வெற்றி படங்கள் தந்த அத்தனை இயக்குனர்களும் அந்தந்த காலகட்டத்தின் ட்ரெண்ட் செட்டர்கள் தான், பாராதிராஜாவும் பாலச்சந்தரும் கடைசி காலங்களில் ஹிட் அடிக்க முட்டியடிக்கின்றனர், ஆனால் முடியவில்லை, இன்னும் சினிமா உலகில் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது, அதற்கு சகிப்புத்தன்மை முக்கியம்.

அவனவன் துணை இயக்குனராக 10 வருசம் 15 வருசம் குருகுல கல்வி மாதிரி திரையுலகில் அடிபட்டு மிதிபட்டு அசிங்கப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு ஒரு புரொட்யூசர் பிடித்து படம் இயக்கி இயக்குனராக வந்து தன் ஒருவனின் திறமையை மட்டுமே நம்பி அமெச்சூர் டீமை வைத்து படம் எடுத்து ரிலீஸ் செய்து அதன் பிறகு அது வெற்றிபெற்று கிடைக்கும் வாய்ப்பும் புகழும் பெயரும் பணமும், குறும்படங்கள் என்றும் முதல்படத்திலேயே பெரும் திறைமைசாலிகளுடன் இணையும் வாய்ப்பு கிடைத்து ஈஸீயாக வெற்றியை சுவைத்தால் இப்படித்தான் கொம்புமுளைக்கும்

https://www.facebook.com/kuzhalipuru

தமிழக போலீஸ் இனி 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் ??




தமிழக போலீஸார் 8 மணி நேரம் தான் பணி என்னும் கோரிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வைக்கப்பட்டது. அது குறித்து தேமுதிக உறுப்பினர் இன்று சட்டசபையில் கேள்வி அனுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக கூறினார். ஏனென்றால் காவல் பணி என்பது நேரம் வரையறுத்து பண்ணும் பணி அல்ல.

ரோந்து பணி, சட்டம் ஒழுங்கு, நீதிமன்ற பணி மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். காவலர்களின் பணி சுமையினை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் நேர ஊதியம், உணவுப் படி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. காவலர்களின் பணி சுமையைக் குறைக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவல் துறையினரின் குறைகளை அறிந்து அதனை தீர்த்து வைக்கலாம், ஆனால் அவர்களின் பணி நேரத்தை நிர்ணயம் செய்வது என்பது இயலாது ஒன்று.

காதலனுடன் பைக்கில் செல்கையில் விபத்து !! காதலனை கோமாவில் விட்டு விட்டு காதலி தப்பி ஓட்டம் !!



இளம் ஜோடி இரண்டு பேர் பைக்கில் அடையாறு மேம்பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் போது விபத்து ஏற்பட்டது . பையனுக்கு பலத்த அடி ஏற்பட்டது . ஆனால் பெண்ணுக்கு அடி லேசாக இருந்ததால் , அந்த பெண் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆட்டோ பிடித்து தப்பி சென்றுவிட்டார் .

மயிலாப்பூரில் இருந்து திருவாண்மியூர் நோக்கி வந்து கொண்டு இருந்த அந்த ஜோடி , பைக்கில் அதிவேகமாக பயணித்தனர் . அப்போது அடையாறு மேம்பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் போது , அதிவேகத்தில் வந்ததால் பைக்கை திருப்ப முடியாமல் சுவற்றில் முட்டினார் . படங்களில் வருவது போல இருவரும் பறந்தனர் . வாலிபருக்கு பயங்கர அடி ஏற்பட்டது . ஆனால் அந்த இளம்பெண் அங்கே நின்று கொண்டு இருந்த ஜிப் மீது விழுந்தார் . இதனால் லேசான காயம் ஏற்பட்டது .

அங்கே இருந்த வாகன ஓட்டிகளும் , பொது மக்களும் இதைக் கண்டு அதிர்ச்சியில் உரைந்தனர் . போலிஸ் அங்கே வந்து அந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் அந்த பெண் யாருக்கும் தெரியாமல் நழுவி , ஆட்டோ பிடித்து ஓடி விட்டார் . அந்த வாலிபருக்கு அடி பயங்கரமாக விழுந்ததால் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .

மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்காததால் மோடி மீது குற்றச்சாட்டு




முஸ்லிம்களுக்கு முக்கிய பண்டிகை என்பது ரம்ஜான்  பண்டிகை ஆகும், அது கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இதற்கு நமது பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை என அவருக்கு புதிய பிரச்சனை வந்து உள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் எல்லா பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது மரபு, வாஜ்பாய் கூட தவறாமல் ரம்ஜான் வாழ்த்து தெரிவிப்பார். மதசார்ப்பற்றவர் என கூறி கொள்ளும் மோடி ஏன் ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் சுதிப் பந்த்யோபாத்யாய் கேள்வி எழுப்பினார். ஆனால் தனி நபரின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் இடம் இல்லை என சுமித்ரா மகாஜன் தெரிவித்துவிட்டார்.


இதற்கு பதில் அளித்த வெங்கய்யா நாயுடு மோடி வாழ்த்து தெரிவித்தார் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் அணி அறிவிப்பு




இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 2015 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணி விவரம்,

தோனி (கேப்டன்),

விராட் கோலி,

 ஷிகர் தவன்,

ரோகித் சர்மா,

 அஜிங்கிய ரஹானே,

 சுரேஷ் ரெய்னா,

 ரவீந்திர ஜடேஜா,

அஸ்வின்,

ஸ்டூவர்ட் பின்னி,

புவனேஷ் குமார்,

 மொகமது ஷமி,

 மோகித் சர்மா,

 அம்பாத்தி ராயுடு,

உமேஷ் யாதவ்,

தவால் குல்கர்னி,

சஞ்சு சாம்சன்,

கரன் சர்மா

செப்டம்பரில் வருகிறது ஆப்பிள் ஐ-போன் - 6 !!



அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் ஐ-போன் 6 மொபைல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை .

முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட மொபைலை வெளியிட உள்ளது . மேலும் நெக்ஸஸ் , ஸியோமி உள்ளீட்ட மொபைல்களுடன் போட்டியிட கேமரா மற்றும் ராம் ஆகியவற்றை உயர்த்த உள்ளது ஆப்பிள் .

செய்தி வாசிப்பாளர் தலையில் பர்தா அணியாமல் டிவியில் தோன்றியதால் சவூதியில் ஏற்பட்ட பரபரப்பு !!



இதற்கு முன்னெப்போதும் இல்லாத நிலையில் , சவூதியில் செய்தி வாசிப்பாளராக பணி செய்யும் பெண் , தலையில் பர்தா இல்லாமல் திரையில் செய்தி வாசித்தார் . இதனால் கடும் விதிமுறைகளை பின்பற்றும் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

சவூதியில் பெண்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் உடை உடுத்த வேண்டும் . பெயர் வெளியிடாத இந்த செய்தி வாசிப்பாளர் லண்டனில் இருந்து , அல் எக்பரியா என்னும் சேனலுக்கு செய்தி வாசித்தார் .

செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் , " அந்த பெண் செய்தி வாசிக்கும் ஸ்டுடியோ லண்டனில் இருந்தது . எங்கள் நாட்டின் மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்துக்கு எதிராக ஏற்படும் எந்த செயலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் . இது போன்ற செயல் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் " என்றார் .

பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் போர் அடிக்கிறது - பாரத் ரத்னா விருது பெற்ற சி.என்.ராவ்



பாரத் ரத்னா விருது பெற்ற மேதை சி.என்.ஆர்.ராவ் கூறுகையில் , " நமது பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் மிகவும் பழைய தொழில்நுட்பம் , அதனை இப்போது யாரும் ஆராய்ச்சி கூடங்களில் பயன்படுத்துவதில்லை . ஆசிரியர்கள் நடத்துவது மாணவர்களுக்கு  போர் அடிக்கிறது . இந்தியாவில் ஆசிரியர்கள் தரம் சரியாக இல்லை . முதலில் நாம் அவர்கள் தரத்தையும் , அவர்கள் சொல்லிக் கொடுக்கும் தரத்தையும் உயர்த்த வேண்டும் " என்றார் .



மேலும் அவர் நமது நாட்டில் அறிவியல் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என சுட்டிக் காட்டினார் . 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media