BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 25 August 2013

போட்டோ டூன்ஸ்



விஜய் ரசிகர்கள் தமிழக அரசு முத்திரையை பயன்படுத்தி போஸ்டர் அடித்து உள்ளார்கள், 

# ரைட்டு, சனியன் சலங்கை கட்டி ஆடுது போல‌

வில்வித்தை உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது



உலகக் கோப்பை வில்வித்தை ரெகர்வ் பிரிவுப் போட்டியில் டாப் சீட் கொரிய அணியை வென்று இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.

சுப.உதயகுமார் மீது இடிந்தகரையில் வெடிகுண்டு வீசியதாக வழக்கு

சுப.உதயகுமார் மீது இடிந்தகரையில்  வெடிகுண்டு வீசியதாக வழக்கு

நேற்று இடிந்தகரையில் இரண்டு இடங்களில் நான்கு பேர் கொண்ட அணு உலை ஆதரவு கும்பல் பைக்கில் வந்து வெடிகுண்டு வீசி சென்றதாக சுப.உதயகுமார் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலை
சுப.உதயகுமார், புஸ்பராயன் , முகிலன் , மைபா.ஜேசுராஜன், மில்டன், ஹெபிச்டன், ராஜலிங்கம் மற்றும் இன்னும் அடையாளம் தெரியாத 35 நபர்கள் என்றும் இவர்கள்தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

# அடுத்த என்னங்க கஞ்சா கேசா? ஹெராயின் கேசா? கேஸ் போடுவதென்று முடிவாகிவிட்டதென்றால் எந்த கேஸ் வேணா போடுவிங்களே!

"வாங்க பழகலாம்" என பழகப்போய் போன மர்டர் ஆன புலி, வண்டலூரில் நடந்த கொடூரம்



வண்டலூர் உயிரியல் பூங்காவில் வங்கப்புலிக்கும் வெள்ளைபுலிக்கும் இடைய பழக்கத்தை உருவாக்கி இனப்பெருக்கம் செய்ய வைக்க முயன்ற போது ஆண் புலிக்கும் பெண் புலிக்கும் ஏற்பட்ட மோதலில் பெண்புலி ஆண் புலியை அடித்து கொன்றது.

ராங் டைமிங்கில் சிக்கிய "தாய்"சிறுத்தை, திருமாவளவன் மீதான புகார் நாடக காதல் பழிவாங்கும் அரசியலா?



நேற்று கோவையில் கவிதா என்ற பெண் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது காவல்துறையில் புகார் அளித்தவுடன் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது,  ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரங்களிலோ இந்த சிக்கல் கடந்த ஆறு மாதகாலமாகவே பேசப்பட்டு வருகின்றது.

கரையும் விஜயகாந்த் கட்சி, மாநில துணைச் செயலர் ஆஸ்டின் கட்சியிலிருந்து அவுட், அதிமுகவிலிருந்து அழைப்பு?

நாகர்கோவிலை சேர்ந்த அதிரடி பார்ட்டியான எஸ்.ஆஸ்டின் அதிமுக கவுன்சிலராக இருந்து நகராட்சி சேர்மனாக உயர்ந்து பின் திருநாவுக்கரசு கட்சியாக இருந்த எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சி சார்பாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், நாகர்கோவில் பகுதியில் குறிப்பிடதகுந்த அளவு

இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!! இடிந்தகரை மீது ஒரு கண் வைத்துக்கொளுங்கள்

இடிந்தகரையில் அணுமின் ஆதரவாளர்கள் நாட்டு வெடிகுண்டு வீச்சு என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளனர், முழு அறிக்கையும் கீழே


கட்டைபஞ்சாயத்து செய்ய மறுத்ததால் கவிதா திருமாவளவன் மீது பொய்புகார் என விடுதலை சிறுத்தைகள் அறிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.

திருமா பேனர் கிழிப்பு -கடையை அடித்து நொறுக்கிய விடுதலை சிறுத்தையினர்



புதுச்சேரி கரியமாணிக்கம் பகுதியில் திருமாவளவன் பிறந்தநாளை ஒட்டி வீதியெங்கும் போஸ்டர் ஒட்டி வைத்திருந்தனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், அப்பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்திருப்பவர் நேற்று மாலை தமது கடைக்கு அருகில் இருந்த போஸ்டரை அப்புறப்படுத்தியிருக்கிறார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media