BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 30 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

வயசுப்பெண்கள் கூடி அரட்டை அடிக்கும் போது எதைப்பற்றி பேசுவார்கள் தெரியுமா?
http://www.satrumun.net/2014/09/ladies-talks-in-parties.html

அதிர்ச்சியளிக்கும் சீனாவின் சொர்க்கவாசல்
http://www.satrumun.net/2014/09/blog-post_178.html

ஜெயலலிதாவுக்கு தண்டனை - கார்ப்பரேட்டுகளின் விளையாட்டு - ஆளும்வர்க்க கூட்டு
http://www.satrumun.net/2014/09/corporate-lobby-behind-jayalitha.html

ஜெயலலிதாவுக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா ??
http://www.satrumun.net/2014/09/will-jayalalitha-get-bail-tomorrow.html

அரசியலுக்கு வர இதுதான் சரியான டைம்! : விஜய்யை உசுப்பேற்றும் ரசிகர்கள்
http://goo.gl/lFfbLu

மோடிக்கு அமெரிக்காவில் நூதனமான முறையில் எதிர்ப்பு
http://www.satrumun.net/2014/09/protest-against-modi-in-manhattan-usa.html

கவர்ச்சி மூலம் சென்சார் போர்டையே அதிர வைத்த காஜல்
http://www.satrumun.net/2014/09/censor-board-shocked-by-seeing-kajal.html

ரஜினி, கமல், விஜய், அஜித் யாருமே வரல… : ஜெ ஆதரவு போராட்டத்துக்கு ஆப்சென்ட் போட்ட முன்னணி நடிகர்கள்!
http://goo.gl/Jcw68S

56 சதவீத இந்தியர்களால் 5 மணி நேரம் கூட இண்டர்நெட் இல்லாமல் இருந்திட முடியாது - ஆய்வில் முடிவு !!
http://www.satrumun.net/2014/09/indians-cannot-live-witthout-internet.html

அரையிறுதியில் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ், சி.எஸ்.கே க்கு ஆதரவாக வந்து கொண்டு இருக்கும் ட்ரோல்கள்
http://www.satrumun.net/2014/09/trolls-in-favour-of-csk.html

ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த திரையுலகினரின் சிறப்பு போட்டோக்கள்
http://www.satrumun.net/2014/09/photos-of-kollywood-in-fasting-for-amma.html

தமிழரின் உணவு முறை மருத்துவம்
http://www.satrumun.net/2014/09/blog-post_614.html

லேப்டாப் பேட்டரியின் சார்ஜை நீட்டிக்கும் எளிய வழிமுறைகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_971.html

தங்களது போட்டோக்கள் மூலம் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த இரு இளைஞர்கள்
http://www.satrumun.net/2014/09/two-fellows-turns-world-towards-them.html

அமெரிக்க பயணத்தின் போது சாப்பிடாமல் இருந்த மோடி !! ஏன் ??
http://www.satrumun.net/2014/09/modi-didnt-taste-food-in-america.html

கழிவறைகளை சுத்தம் செய்ய சொல்லி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ள மோடி
http://www.satrumun.net/2014/09/ministers-to-clean-toilet-on-gandhi.html

RIP ஆர்குட், கூகுளின் முதல் சமூக வலைதளம் ஆர்குட் இனிமேல் கிடையாது
http://www.satrumun.net/2014/09/blog-post_392.html

உணவே மருந்து :பாகற்காய்
http://www.satrumun.net/2014/09/blog-post_320.html

பொருளாதார நோய்களுக்கான மருந்து
http://www.satrumun.net/2014/09/blog-post_383.html

செவ்வாய் கிரகத்தில் நாஸா "ரோவர்' முக்கிய செயல்பாடு தொடக்கம்
http://www.satrumun.net/2014/09/blog-post_224.html

காஷ்மீரை மீண்டும் கட்டமைக்க உதவுங்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_835.html

உடல் தானம் செய்து 5 உயிர்களைக் காப்பாற்றிய 3 வயது சிறுமி !!
http://www.satrumun.net/2014/09/3-year-old-kid-donates-organ-and-save-5-lives.html

போலியோ போன்று அம்மை நோயை ஒழிக்க திட்டமிடும் மத்திய அரசு !!
http://www.satrumun.net/2014/09/central-government-plan-to-stop-measels-like-polio.html

தக்காளியின் பயன்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_700.html

மக்கள் போராட்டத்தை தடுக்க சீனாவில் இன்ஸ்டாகிராம் பிளாக் செய்யப்பட்டது ??
http://www.satrumun.net/2014/09/china-blocks-instagram.html

பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய கபடி அணி !! ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இருவரும் அரையிறுதிக்கு தகுதி !!



கபடியில் ஆறு முறை ஆசிய சாம்பியன்களான இந்திய அணி தங்களின் விளையாட்டு எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியுடன் மோதியது . 23 - 11 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை வென்று இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் போட்டிகள் அனைத்தையும் வென்ற பெருமையைப் பெற்றுள்ளது .

இந்திய அணி ஆசியப் போட்டிகளில் கபடியைச் சேர்த்ததில் இருந்து இந்தியா தான் தங்கம் வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ஆசியப் போட்டிகளில் 1990 ஆம் ஆண்டு கபடி சேர்க்கப்பட்டது .

இதேப் போன்று இந்தியப் பெண்கள் அணியும் தென் கொரியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர் .


உங்கள் பாஸ்வேர்டை பாதுகாக்க சில வழிகள் !!



நமக்கு இன்றைய உலகத்தில் பாஸ்வேர்ட் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது . நாம் எதற்குள் உள்ளே செல்ல வேண்டும் என்றாலும் இந்த பாஸ்வேர்ட் தான் முக்கிய பங்காற்றுகிறது . சிலர் பாஸ்வேர்டை எளிதாக வைத்துக் கொண்டு ஹேக்கர்களின் வலைகளில் எளிதாக சிக்கி விடுகின்றனர் , எனவே அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பலமான பாஸ்வேர்ட் அமைக்க சில வழிகள் :



உங்களின் அனைத்து பாஸ்வேர்ட்களும் 8 கரக்டர்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிடுவர் . ஆனால் 14 வைத்தால் நன்றாக இருக்கும் , 25 வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் .


எழுத்துகள் , எண்கள் என அனைத்தையும் கலந்து பாஸ்வேர்டை அமைக்க வேண்டும் . apple123 என்பதை விட AppLe@12! என்பது பாதுகாப்பாக இருக்கும் .

உங்களுக்கு பிடித்த வார்த்தைகளின் நடுவே சில எண்கள் மற்றும் புள்ளிகளை இணைத்து விடுங்கள் .

உங்களுக்கு தெரிந்த வாக்கியங்களின் முதல் எழுத்துகளையோ , கடைசி எழுத்துக்களையோ எடுத்து ஒன்றாக பாஸ்வேர்ட் ஆக வைத்துக் கொள்ளுங்கள் .


O க்குப் பதிலாக 0 பயன்படுத்தலாம் . S க்குப் பதிலாக $ பயன்படுத்தலாம் .

எளிதாக கெஸ் செய்யும் வார்த்தைகளான LOVE , GOD , MOTHER , FATHER , போன்றவற்றை பாஸ்வேர்ட் ஆக வைக்காதீர்கள் .

1234 என எண்களை தொடர்ந்தோ , அல்லது qwerty என கீ போர்டில் உள்ள எழுத்துக்களை தொடர்ந்தோ வருவதை  பாஸ்வேர்டாக வைக்காதீர்கள் .


ஒரே பாஸ்வேர்டை பல அக்கொண்டிற்கு பயன்படுத்தாதீர்கள் .





அரையிறுதியில் நுழைந்தது சென்னை, சி.எஸ்.கே க்கு ஆதரவாக வந்து கொண்டு இருக்கும் ட்ரோல்கள்





அமெரிக்க பயணத்தின் போது சாப்பிடாமல் இருந்த மோடி !! ஏன் ??



மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . அந்த சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஓபாமாவுடன் தனியாக விருந்து சாப்பிட திட்டம் போடப்பட்டு இருந்தது . ஆனால் மோடியோ நவராத்திரியை முன்னிட்டு நோன்பு இருப்பதால் தனக்கு சுடு தண்ணீர் மட்டும் போதும் என தன்னுடைய உணவைக் கேட்டு வாங்கிக் கொண்டார் .

இந்திய மற்றும் அமெரிக்க அதிபர்கள் இரவு உணவுக்கு அமர்ந்த போது , மோடி அவர்களிடம் " யாரும் கூச்சப்பட வேண்டாம் , நீங்கள் உணவை மகிழ்சியாக உண்ணுங்கள் " என்றார் . மேலும் மோடி அந்த கூட்டத்தின் போது வெறும் தண்ணீர் மட்டும் அருந்திக் கொண்டார் .

ஒன்பது நாட்களாக கொண்டாடப்படும் நவராத்திரியில் மோடி நோன்பு இருப்பது வழக்கம் . இதை அவர் கடந்த 40 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார் . மேலும் இந்த நோன்பு எந்தவொரு பொருளுக்காகவும் இல்லாமல் , தன்னுடைய சுய சுத்தத்திற்காக அவர் அப்படி செய்வதாக முன்பு ஒருமுறை குறிப்பிட்டு இருந்தார் .

இதனால் பிரதமர் மோடி அமெரிக்காவில் உணவு எதுவும் அருந்தாமல் உள்ளார் . இந்த நோன்பு அக்டோபர் 3 ஆம் தேதி முடிய உள்ளது .

வயசுப்பெண்கள் கூடி அரட்டை அடிக்கும் போது எதைப்பற்றி பேசுவார்கள் தெரியுமா?

பெண்கள் அதுவும் வயசுப்பெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்று ஆண்கள் அலுத்துக்கொள்வது உண்டு, வயசுப்பெண்கள் அரட்டை அடிக்கும் போது என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்

சாப்பாட்டில் ஆரம்பித்து செக்ஸ் வரை

எங்கேயாவது விருந்துகளுக்கோ பார்ட்டிகளுக்கோ சென்றால் அவர்கள் கற்றுக்கொண்ட அல்லது சிறப்பாக செய்யக்கூடிய புதுவகை உணவுகள் பற்றி பேசுவார்கள், அது போல இண்டீரியர் டெக்கரேஷன் பற்றியும் விரும்பி பேசுவார்கள்.

நேரம் ஆக ஆக பெண்கள் சாப்பாடு, வீட்டு அலங்காரத்திலிருந்து உடைகள், நகைகள் பற்றி பேசி முடித்த பின் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், இனி தான் கச்சேரி களைகட்டும், அதுவரை உம்மனா மூஞ்சியாக இருந்த பெண்களை கூட வற்புறுத்தி செக்ஸ் பற்றி பேச சொல்லுவார்கள் பிற பெண்கள், கேலியும் கிண்டலும் அதிகரிக்கும்.

செக்ஸ்
ஆண்களை விட பெண்களே செக்ஸ் பற்றி அரட்டைகளில் அதிகமாக பேசுகிறார்கள், பெரும்பாலான பெண்கள் செக்ஸ் பற்றியே பார்ட்டிகளில் பேசவும், விவாதிக்கவும் விரும்புகிறார்கள். பெண்கள் தங்களுடைய பார்ட்னர்களிடம் பேச முடியாத வித்தியாசமான தலைப்புகளை இந்த பார்ட்டிகளில் வெளிப்படையாக பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் வித்தியாசமாக இருப்பவை ஆற்றல், அளவு, பருமன், நிலை போன்றவையே.  மேலும் பல பெண்கள் செக்ஸ் குறித்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் சந்தேகங்களை மூத்த அனுபவசாலில் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் இதை பயன்படுத்துகிறார்கள்.

குழுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறவும் தங்களுடைய பார்ட்னருடன் ஏற்பட்ட சில தனிப்பட்ட நெருக்கமான செயல்பாடுகளை சில பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படுக்கையறையில் ஆண்களின் செயல்படும் ஆற்றல் மற்றும் அளவு ஆகியவை பார்ட்டிகளில் பேசப்படும் மற்றொரு முக்கியமான தலைப்பாக இருக்கின்றன. படுக்கையறைகளில் நடக்கும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த அரட்டைகளில் பகிர்ந்து கொள்வார்கள். புதிய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை எப்படி செய்வது என்றும் கூட பகிர்ந்து கொள்வார்கள்.

ஸ்மார்ட் போன் மற்றும் கேட்ஜட்ஸ்
கெட்ஜெட்ஸ் பற்றி பெரும்பாலான பெண்களுக்கு அதிகம் தெரியாமல் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய கணவர்கள்  சமீபத்தில் வாங்கி வந்த பொருட்கள் பற்றி பெருமை பேசுவார்கள், பரிசாக கிடைத்த ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் போன் பற்றியும் சமீபத்தில் கிடைத்த எலக்ட்ரானிக் சமையலறை பொருட்கள் பற்றியும் பேசுவார்கள்.

பேஷன்
தற்போதைய பேஷன் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் உடைகள், நகைகள், அலங்காரம் பற்றி பேசிக்கொள்வதில் அலாதியான பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள்

ஷாப்பிங்
ஆண்களின் பர்ஸ்க்கு வேட்டு வைப்பதும் வீட்டில் புயலை கிளப்பவும் செய்யும் அரட்டை இது தான், சமீபத்தில் பெண்கள் தாங்கள் செய்த ஷாப்பிங் பற்றியும் என்னென்ன வாங்கினார்கள், என்னென்ன பொருட்களை அவர்கள் கணவர்கள் பரிசாக அளித்தார்கள் என்பதும் அவற்றின் விலைகளும் அக்குவேறு ஆனி வேராக அலசப்படும் இதன் பின் அன்றிரவு அவர்கள் கணவர்களின் நிம்மதியும் பர்ஸ்சும் பறிபோகும்

முன்னணி நடிகர்கள், நடிகைகள் பங்கேற்காத உண்ணாவிரதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை ஜெயலலிதாவை ஆதரித்து இன்று திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் கடைசி வரை முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. முன்னணி நடிகைகள் என்று சொல்லப்படும் ஒருவர் கூட சேப்பாக்கம் உண்ணாவிரதப் பந்தல் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கடைசிவரை வரவே இல்லை ரஜினி, கமல், விஜய், அஜீத்... எல்லா முன்னணி நடிகளும் ஆப்சென்ட்.
 
தமிழ் திரையுலகின் அத்தனை சங்கங்களும் இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்றன. பங்கேற்ற திரையுலக பிரபலங்கள்:  தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, கலைப்புலி தாணு, கேடி குஞ்சுமோன், இயக்குநர் சிராஜ், நடிகர் தியாகு, ராமராஜன், டி அருள்பதி, கே ஆர் செல்வராஜ், குண்டு கல்யாணம், விக்ரமன், காஜா மொய்தீன், ஜேகே ரித்தீஷ், வேல் முருகன், சுரேஷ் காமாட்சி, ஆர் கே செல்வமணி, மனோபாலா, தேவா, சச்சு, சங்கர் கணேஷ், கே பாக்யராஜ், இப்ராகிம் ராவுத்தர் நளினி, கவிதாபாரதி, ஏ எல் அழகப்பன், ராகராஜன் ராஜா, சித்ரா லட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்டன்ட் தவசி, அதியமான், கலைப்புலி சேகரன், ஆர்வி உதயகுமார், பி வாசு, ஸ்ரீகாந்த், சரத்குமார், வெண்ணி்ற ஆடை நிர்மலா, செந்தில், ஆர் கே சண்முகம், கேயார், மன்சூர் அலிகான், எஸ் ஏ சந்திரசேகரன், கலைப்புலி சேகரன், நிழல்கள் ரவி, அஜய் ரத்னம் ரமேஷ் கன்னா, பிரவீன் காந்த், எஸ் ஜே சூர்யா, பெப்சி விஜயன், வையாபுரி, எம்எஸ் பாஸ்கர், சிங்க முத்து, சவிதா, அனு மோகன், அபிராமி ராமநாதன், விவேக், மயில்சாமி, சிஆர் சரஸ்வதி, ஆர்த்தி, சத்யராஜ், சத்யஜோதி தியாகராஜன், பிரபு, விக்ரம் பிரபு சிபிராஜ், ரவிமரியா, பாத்திமா பாபு, ஜாகுவார் தங்கம், நரேன், சினேகன், முக்தா சீனிவாசன், கே முரளிதரன், சவுந்தர்ராஜன், கல்யாண், சக்தி, லியாகத் அலிகான், சேரன், தரணி, குட்டி பத்மினி ரவி கொட்டாரக்கரா, புஷ்பா கந்தசாமி, புனேஸ்வரி, சிங்கம்புலி, விபி கலைராஜன் எம்எல்ஏ, தேமுதிக எம்எல்ஏ சுந்தரராஜன், இயக்குநர் லிங்குசாமி. முன்னணி கலைஞர்கள் என்று பார்த்தால், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, இயக்குநர் பாலா என சிலர் மட்டுமே வந்திருந்தனர். இவர்களில் சிவகார்த்திகேயன் மட்டும் பிற்பகலில் வந்து மாலை வரை அமர்ந்திருந்தார். மற்றவர்கள் பத்துப் பதினைந்து நிமிடம் இருந்துவிட்டு கிளம்பினர். ரஜினி, கமல், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் போன்றவர்களில் யாராவது வரக்கூடும். கமல் உள்ளூரிலேயே இருப்பதால் அவராவது வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மாலை 5 மணி வரை யாரும் வரவில்லை. வந்திருந்த நடிகைகளில் ஒருவர் கூட இப்போது ஃபீல்டில் இல்லை. அல்லது வயதானவர்கள். இப்போது பிரபலமாக, முன்னணியில் உள்ள ஒருவர் கூட இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் உண்ணாவிரதத்துக்கு தலைமையே நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார்தான்!

வெட்கமே இல்லாமல் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற தமிழ் திரையுலகினர்




சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு இன்று (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதில், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கேயார், சத்யராஜ், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரபு, விக்ரம் பிரபு, சிபிராஜ், அபிராமி ராமநாதன், நடிகை சச்சு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டம் தேவையா என்பது தான் நமது முதல் கேள்வியாக இருக்கும். ஜெயலலிதா என்ன ஏதும் செய்யாமல்  அவர் மீது தவறான வழக்கு போட்டு குற்றம்சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளாரா. அது கண்டிப்பாக இல்லை. அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு என்பது உண்மையானது ஆகும். முதல்வராக இருந்த போது ரூ.1 சம்பளமாக பெற்றவரால் எப்படி 66 கோடி சொத்து சேர்க்க முடியும். இந்த வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்துள்ளார். இதுவே ஒரு பெரிய குற்றம் ஆகும்.

இப்படிப்பட்ட ஒரு குற்றவாளிக்கு எதற்காக திரையுலகினர் ஆதரவாக இருக்கிறார்கள். அப்படியெனில் அவர்கள் ஜனநாயகத்துக்கு எதிராகவும் ஊழலுக்கு ஆதரவாகவும் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் எப்படி ஒரு நல்ல ஹீரோவாக எடுத்துக்கொள்ள முடியும். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போது அமைதியாக இருந்து விட்டு வெறும் சம்பிரதாயத்துக்காக கடைசியில் ஒரு போலி உண்ணாவிரதத்தை நடத்துவதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். இப்போது மட்டும் முதல் ஆளாக போராட்டத்தை தொடங்கி இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஜெயலலிதாவுக்கு பயந்து போராட்டம் நடத்துகிறார்களா. போராட்டம் நடத்தாவிட்டால் ஜெயலலிதா படங்களை வெளியிட விடமாட்டார் என்னும் பயமா. இதில் விக்ரம், சூர்யா,கார்த்தி,  சிவகார்த்திகேயன் , சத்யராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டது தான் கேவலமான விஷயம். இதன் மூலம் அவரது ரசிகர்கள் ஊழலுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது. நாம் சந்தோஷப்பட வேண்டிய ஒரு விஷயம் இதில் ரஜினி, கமல், விஜய் , அஜீத் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டும்.



தமிழரின் உணவு முறை மருத்துவம்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல் நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள உணவுவகைகளில் மிகக் கூடியவையாக தமிழர்கள் பாவனைக்கு உள்ளானவை ஆனாலும் எமது ஆதித்தமிழர்கள் அன்றே நன்று கற்றறிந்து  சிறப்பான மூலிகை தாவர மருத்துவ முறைகள் மூலம் எமக்கு கண்டறிந்து தந்துள்ளது எம்தமிழ் இனத்திதை நிமிந்து பெருமிதம் கொள்ளவைக்கிறது அந்த வகையில் இனி தகவல் பார்ப்போம்.

1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.

6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.

7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.

8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.

9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.

10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.

ஜெயலலிதாவுக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா ??




கடந்த சனிக்கிழமை அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதனை எதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை நாளையே விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் தேசாயிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட அவர் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. நாளை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என தெரிந்து விடும்.

லேப்டாப் பேட்டரியின் சார்ஜை நீட்டிக்கும் எளிய வழிமுறைகள்

லேப்டாப் பயன்படுத்துறாங்களா, உங்க லேப்டாப்ல அடிக்கடி சார்ஜ் இறங்கிடுதா, உங்களுக்கு உபயோகமான சில பேட்டரி டிப்ஸை பார்க்கலாமா. புதுசா லேப்டாப் வாங்கியிருக்கீங்களா அதன் பேட்டரியை பராமரிக்கும் சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம் .
 
1. கூல் : உங்க லேப்டாபிற்கு சரியான கூலிங் பேடை பயன்படுத்துங்கள், இது லாப்டாப்பை சூடாகாமல் பாதுகாக்கும்.
 
2. பேட்டரி தூசி : அவ்வப்போது பேட்டரியை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்

3. ரெஸ்ட் :  லேப்டாப்பை எப்பவும் ஏசி அறையில் பயன்படுத்தினால் சரியான இடைவெளியில் பேட்டரியை கழற்றி அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

4. சுத்தம் : உங்க லேப்டாப் மற்றும் அதை பயன்படுத்தும் அறையை எப்பவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

5. ஸ்கிரீன் : உங்க லேப்டாப் ஸ்கிரீன் அதிக பேட்டரியை பயன்படுத்தும் அதனால் டிஸ்ப்ளே ப்ரைட்னெஸ்ஸை குறைவாக வைத்து பயன்படுத்துங்கள்
 
6. ஹார்டுவேர் : இன்டெர்நெட்டை பயன்படுத்தாத சமயத்தில் வைபை ரிசீவரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள்.
 
7. பணி : லேப்டாப்பில் எப்பவும் குறைவான அப்ளிகேஷனை மட்டும் பயன்படுத்துங்கள், இது உங்க லேப்டாப்பின் பேட்டரியை குறைவாகவே பயன்படுத்தும்
 
8. மல்டிமீடியா : மியுசிக் ப்ளேயரை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் அல்லது மியுசிக் சிஸ்டத்தின் சத்தத்தை குறைவாக வைத்து கொள்ளுங்கள்
 
9. பவர் சேவர் : உங்க லேப்டாப்பில் இருக்கும் குறைந்த பவர் யூஸேஜ் ஆப்ஷனை பயன்படுத்துங்கள். இது லேப்டாப்பின் பேக்லைட்டை குறைத்துவிடும்

 இவ்வாறாக பயன்படுத்தி லேப்டாப் பேட்டரியின் சார்ஜை நீட்டிக்கச் செய்யலாம் .

கவர்ச்சி மூலம் சென்சார் போர்டையே அதிர வைத்த காஜல்

காஜல் தற்போது நடித்துள்ள கோவிந்தடு அந்தரிவாடலே என்னும் தெலுங்கு படம் சென்சார் போர்டிடம் சென்றுள்ளது. இதில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினருக்கு கடும் அதிர்ச்சி . ஏனென்றால் இதில் காஜல் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இன்று அதிக அளவு கவர்ச்சியாக நடிப்பது எல்லா நடிகைகளிடமும் பிரபலமாகி விட்டது. போட்டியை சமாளீக்க எல்லா நடிகைகளும் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

ஆனால் சென்சார் குழு இதனை அனுமதிக்கவில்லை. படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கி விட்டார்கள். வெட்டப்பட்ட காட்சிகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். :முதுகு காட்டிக்கொண்டு நிர்வாணமாக காஜல் நிற்பதுபோன்ற காட்சி, அவரது ஜாக்கெட் பட்டனை ராம் சரண் அவிழ்ப்பதுபோன்ற காட்சி (9 நொடி), பாடல் காட்சி ஒன்றில் காஜலின் தொடைப்பகுதி ஆபாசமாக தெரிவதுபோன்ற காட்சி (7 நொடி), மார்பகம் பகுதியை கொண்டு ஹீரோவை காஜல் இடிக்கும் காட்சி ( 6 நொடி, 2 முறை), 2வது நாயகி சித்ராவை வில்லன் மானப்பங்கப்படுத்தும் காட்சி (5 நொடி).  இவையனைத்தையும் எடுத்த பிறகும் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கிடைத்தது.




தங்களது போட்டோக்கள் மூலம் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த இரு இளைஞர்கள்







ஐரோப்பியா கண்டத்தில் உள்ள லிதுவேனியா என்னும் நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் சாலைகள் எதுவும் ஒழுங்காக இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்துள்ளன. இதனை சரி செய்யும் படி ஒரு அமைப்பினர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால் அரசாங்கமோ அது எப்போதும் போல் வரும் கோரிக்கை என அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். ஆனால் அந்த அமைப்பில் இருந்த இரு இளைஞர்கள் அந்த பிரச்சனையை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அந்த சாலைகளை வித்தியாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதலங்களில் ஏற்றினர். இது உலகம் முழுவதும் பிரபலமானது. சாலையில் ஒட்டை விழுந்து தண்ணீர் தேங்கி நிற்பதை பார்த்ததும் இருவர் மீன் பிடிக்க ஒடி வருவது, குளிக்க வருவது போன்ற புதிய கற்பனைகளுடன் போட்டோக்களை எடுத்தனர். இது உலகம் முழுவதும் பிரபலமானதால் தங்கள் நாட்டின் மானம் போவதை உண்ர்ந்த அரசாங்கம் இப்போதும் சாலைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

கழிவறைகளை சுத்தம் செய்ய சொல்லி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ள மோடி




வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நமது தேசத்தந்தை காந்தியின் 150 வது பிறந்தநாள் ஆகும். அதனை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காந்தி தான் வாழ்ந்த காலத்தில் இந்தியாவுக்கு சுதந்திரத்தை விட சுத்தமும் சுகாதாரமும் தான் முக்கியம் என கூறி இருந்தார். சுத்தமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது காந்தியின் கனவாக இருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக காந்தி ஜெயந்தி அன்று சுத்தமான இந்தியா என்னும் திட்டத்தை மோடி அறிமுகப்படுத்த உள்ளார்.

அதன் முதல் காரியமாக அன்றைய தினம் மோடி அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கான துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டு விட்டன. அதோடு சுத்தமான இந்தியாவை உருவாக்குவதற்கான பிரச்சாரத்திலும் ஈடுபட உள்ளார்கள். இதன் மூலம் விரைவில் சுத்தமான இந்தியா உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

கூகுளின் முதல் சமூக வலைதளம் ஆர்குட் இனிமே கிடையாது

ஆர்குட் கூகுளின் முதல் சமூக வலைதளம் இன்று முதல் இயங்காது, ஷாக் ஆகாதீங்க மக்களே இது மூன்று மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டது தான். செப்டம்பர் 30 முதல் மற்ற சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.
 கூகுளின் முதல் சமூக வலைதளம் ஆர்குட் இனிமே கிடையாது ஆர்குட் வலைதளம் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது ஆனால் இது கூகுளின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவில்லை. ஆர்குட்டில் மொத்தம் எத்தனை பயனாளிகள் இருந்தனர் என்ற விவரத்தை கொடுக்க அந்நிறுவனம் மறுத்து விட்டது. கடந்த காலங்களில் யூ ட்யூப், ப்ளாகர் மற்றும் கூகுள்+ வரவை அடுத்து இதன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆர்குட் சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் ஆர்குட் ப்ளாக் மூலம் அறிவித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதே ஆண்டு தான் தற்போது பிரபலமாக இருக்கும் சமூக வலைதளமான பேஸ்புக்கும் ஆ
ரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள்+ தளத்தின் உபயோகத்தை அதிகமாக்கும் முயற்சியாக கூகுள் யூ ட்யூப் வாடிக்கையாளர்கள் கருத்தை வெளிப்படுத்த கூகுள்+ பயன்படுத்த வேண்டும் என்ற முறையை அறிவித்தது.

ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த திரையுலகினரின் சிறப்பு போட்டோக்கள்


















மோடிக்கு அமெரிக்காவில் நூதனமான முறையில் எதிர்ப்பு

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் மோடியினை எதிர்த்து மன்ஹட்டன் பகுதியில் ஒரு வாகனத்தில் இந்த பதாகை வைக்கப்பட்டு வீதிகளில் வலம் வருகின்றது.

1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தையும், 2002ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தையும் குறிப்பிட்டுள்ளது இந்த பதாகை அது போன்று இன்னொரு கலவரம் வேண்டாம் என்று மோடிக்கு தெரிவிக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு தண்டனை - கார்ப்பரேட்டுகளின் விளையாட்டு - ஆளும்வர்க்க கூட்டு

அன்னா ஹசாரேக்களும், அரவிந்த் கெஜிரிவால்களும் ஊழல் எதிர்ப்பியக்கங்கள் நடத்தி தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை. ஜெயலலிதா மக்களால் வெறுக்கப்பட்டு, மக்களின் கோபத்திற்கு ஆளாகி, இக்கட்டான நிலையில், வேறு வழியே இல்லாமல் தண்டிக்கப்படவில்லை. இவ்வகையில் ஆளும்வர்க்கம் தங்களில் ஒருவரை பலிகொடுத்து தங்களின் அதிகார அமைப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது தமிழ்நாட்டில் இல்லை.

2ஜி அலைக்கற்றை வழக்கில் தள்ளாடும் கருணாநிதியின் தி.மு.க குடும்ப ஓடம் ஜெயலலிதாவை வீழ்த்துமளவு லாபி செய்யவில்லை. லாபி செய்ய மத்தியிலோ, மாநிலத்திலோ அதற்கு பலமும் இல்லை. ஜெயலலிதாவின் கதி தனக்கும் நேரும் என்பது புரியாமலிருக்க நியாயமில்லை.

தி.மு.க-வை அண்டி அரசியல் செய்ய பி.ஜே.பி முயற்சிக்கவில்லை. நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா என்ற நேர்மையாளர் இந்த வழக்கின் மூலம் நீதியை நிலைநாட்டியே தீருவேன் என்று போராடி பொறுப்பை பெற்று ஜெயலலிதாவை தண்டிக்கவில்லை.

ஆனால் வளைந்து கொடுக்காதவர் என பேர் பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவிடம் ஜெயலலிதா சிக்க வைக்கப்பட்டுள்ளார். எழுத்தாளரும், வழக்குரைஞருமான தோழர் இரா.முருகவேள் கேட்கிற "... குன்ஹா நல்லவர், வல்லவர், வளைந்து கொடுக்காதவர். எல்லாம் சரிதான். ஆனால் அவர் எப்படி எல்லாச் செல்வாக்கையும் தாண்டி இந்தக் குறிப்பிட்ட நீதிமன்றத்திற்கு வந்தார்?..." கேள்வி முக்கியமானது.

குன்ஹாவை இவ்வழக்கில் தற்போதைய மத்திய பாஜக அரசு நியமிக்கவில்லை. 2013 அக்டோபர் 31-ல் அவர் இவ்வழக்கில் நியமிக்கப்பட்ட போது காங்கிரசு ஆட்சியில் இருந்தது. காங்கிரசு ஜெயலலிதாவை தன்நலத்தாலோ, தனது கூட்டாளியான தி.மு.க-வின் நலத்தாலோ பழிவாங்குவதற்காக குன்ஹாவை நியமித்திருந்தால் ஜெயலலிதா பாஜகவின் தயவால் அவரை மாற்றியிருக்க முடியும். ஜெயலலிதாவை பாஜக மூலம் காப்பாற்றுவதற்கு சோ மாதிரியான வலுவான ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கோரிக்கையைப் புறக்கணித்து அவரை பழி வாங்குவதற்கான அவசியம் எதுவும் பாஜகவுக்கு தற்போது இல்லை. ஆக ஜெயலலிதாவால் சரிகட்ட முடியாத சக்தி ஒன்று இவ்வழக்கை சமீப காலத்தில் பயன்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா - சோ - பாஜக‌ எல்லாவற்றையும் மீறிய அந்த சக்தி ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்பரேட் முதலாளிகளாகத்தான் இருக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் உலகமயமாக்கலுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளும் - கார்ப்பரேட்டுகளின் சிக்கலும்

ஜெயலலிதா உலகமயமாக்கலை தாராளமாக நடைமுறைப்படுத்தவே செய்கிறார். அதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை. காங்கிரசு மட்டும் உலகமயமாக்கத்திற்கு எதிராகவா இருந்தது? அதன் வேகமும், மூர்க்கத்தனமும் போதாமல்தானே கார்ப்பரேட்டுகள் மோடியை தயாரித்து ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆட்சியில் அமர்த்தியுள்ளன‌.

ஜெயலலிதாவிடம் வேகம் குறைவில்லை. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான துறைகளை அவர்களிடம் ஒப்படைக்காமல் இருக்கிறார். தோழர் இரா.முருகவேள் கூறுவதைப்போல் "... அரசு என்பது தண்ணீர், போக்குவரத்து, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றுதான் உலக வங்கியும், IMF- ம், பன்னாட்டு நிறுவனங்களும் சொல்லி வருகின்றன. அரசு சேவைத்துறைகளில் முதலீடு செய்வதை இவர்கள் விரும்புவதில்லை... ஆனால் இவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்பது அம்மாவுக்குத் தெரியும். எனவே அம்மா திட்டமிட்ட ஒரு ரிஸ்க் எடுத்தார். அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் என்று ஓட்டுக்காக தாராளமயம் தனியார் மயத்தை அம்மா பின்னோக்கித் தள்ளுகிறார்... பாசாங்குக்குக் கூட மக்கள் நல அரசை விரும்பாத கார்பரேட் முதலாளிகள் இந்தத் தீர்ப்பின் மூலம் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறார்கள்..." என்பதை மறுப்பதற்கில்லை.

கார்ப்பரேட்டுகளின் நலனோடு பாஜகவின் நலன் இணங்குகிறது

கார்பரேட் முதலாளிகளின் லாபவேட்டைக்கு இந்தியா முழுவதும் ஒற்றை சர்வாதிகார ஆட்சியை விரும்பியே இந்துத்துவ பாசிச அரசியலுக்கு அத்தனை செலவுகள் செய்யப்பட்டது. பாஜகவும் காங்கிரசைப்போல் திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்க விரும்பவில்லை. தனிப்பெரும் சக்தியாக வளரவே துடிக்கிறது. ஆகவே தனது இந்துத்துவ தத்துவமான "ஒரு வீடு நல்லாயிருக்க வீட்டில் ஒருவரை இழக்கலாம்" என்று பார்ப்பனரானாலும் ஜெயலலிதாவை பலி கொடுத்துவிட்டது. அடுத்து அது தி.மு.க-வையும் பலியெடுக்க வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ள‌து.

இந்த விடயத்தில் கர்நாடக அதிகார வர்க்கத்திற்கும் சிறிது பங்கிருக்கவே வாய்ப்புள்ளது. கார்ப்பரேட்டுகளையும், அவர்களின் அந்நிய மூலதனத்தையும் கவர்வதில் கர்நாடகம் தமிழ்நாட்டின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறித்தான் கிடக்கிறது. பல சலுகைகளைக் காட்டி தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களை கர்நாடகம் தட்டிக்கொண்டும் போயுள்ளது. ஆகவே கார்ப்பரேட்டுகளின் மனதை குளிரவைக்க கர்நாடகம் ஆர்வம் காட்டவே செய்திருக்கும். அது நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் வடிவத்திலானதாகவும் இருந்திருக்கும்.

தோழர் பாஸ்கர் கூறும் "ஆளும் வர்க்கமானது போலி மோதல் படுகொலைகளை மேற்கொள்ளத் தயாராக உள்ள குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பொறுக்கியெடுத்து செய்ய வைப்பதைப் போலவே குறிப்பிட்ட தீர்ப்புகளை வழங்குவதற்கு நீதிபதிகளும் பொறுக்கியெடுக்கப்படுகிறார்கள். அத்தீர்ப்புகள் ஒரு பொருளில் ஏற்கத்தக்கவையாக இருக்கலாம். அது கேள்வியல்ல. குறிப்பிட்ட இந்த வழக்கிற்கு குறிப்பிட்ட இந்த நீதிபதியை பொறுக்கியெடுத்தது எதன் அடிப்படையில்? இவ்வழக்கில் இந்த நீதிபதியும் இதற்கு முன்னிருந்த சில நீதிபதிகளும் அரசு வழக்குரைஞர்களும் ஒப்பீட்டளவில் கறாராக இருந்தனர். இவர்களை இப்பொறுப்புகளுக்கு தெரிந்தெடுத்த கர்னாடக அரசாங்கங்களும் உயர் நீதிமன்றமும் randomஆக செய்யவில்லை. ஒப்பீட்டளவில் கறாராக இருக்கத் தயாராக இருந்தோரே அப்பொறுப்புகளுக்கு பொறுக்கியெடுக்கப்பட்டனர். ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான உள் முரண்பாடே இதற்கு அடிப்படை." இந்த கருத்தை மறுப்பதற்கில்லை.

ஆக ஜெயலலிதா மீதான நடவடிக்கையை ஒரு நீதிபதியின் தனிப்பட்ட நேர்மையென்றோ அல்லது நீதிமன்றம் தமது புனிதத்தை காக்கும் நடவடிக்கையென்றோ அல்லது பொத்தம்பொதுவான ஆளும்வர்க்க முரண்பாடென்றோ காலம் கடந்தேனும் நீதி வென்றதென்றோ கூறிவிட முடியாது. இது கார்ப்பரேட்டுகளின் அதிகார விளையாட்டு. அவர்கள் அரைகுறையான ஆட்டங்களை விரும்புவதில்லை.

- திருப்பூர் குணா
https://www.facebook.com/guna.tiruppur
நன்றி கீற்று.காம்

56 சதவீத இந்தியர்களால் 5 மணி நேரம் கூட இண்டர்நெட் இல்லாமல் இருந்திட முடியாது - ஆய்வில் முடிவு !!



இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து கொண்டு இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே . ஆனால் இந்த அளவுக்கு இண்டர்நெட் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் அழுத்தம் கொடுத்து இருக்குமா என்பதை இந்த ஆய்வின் முடிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

46 சதவீத இந்திய பயனாளர்கள் தினமும் 6 மணி நேரமோ அதற்கு மேலாக  இண்டர்நெட் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர் . இன்னும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 82 சதவீதம் பயன்படுத்துபவர்கள் இண்டர்நெட் கட் செய்யப்பட்டு விட்டால் தாங்கள் தனியாக இருப்பது போன்றும் ஒரு விதமான பதற்றமும் ஏற்படுவதாக தெரிவித்தனர் .

இந்தியா , பிரான்ஸ் , ஜெர்மணி , சிங்கப்பூர் , அமெரிக்கா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 9,417 மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது . இந்த ஆய்வில் கலந்து கொண்ட பாதிக்கு மேற்பட்ட இந்தியர்கள் தங்களால் இண்டர்நெட் இல்லாமல் 5 மணி நேரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என தெரிவித்துள்ளனர் .

அதிலும் பெண்கள் தான் ஆண்களை விட அதிக அளவில் பதற்றம் அடைவதாக தெரிவிக்கிறது ஆய்வு . மேலும் டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் டிவிக்களின் இடத்தைப் பிடித்து வருவதாக கூறினர் . இந்தியாவில் 43 சதவீதம் பேர் இண்டர்நெட்டிற்காக டிவியை விட்டுக் கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

உணவே மருந்து :பாகற்காய்

அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, உடலுக்கு நன்கு. இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மீதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயி ன் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.சித்த மருத்துவ வழக்கில் காலங்காலமாக நீரிழிவு நோய்க்கு பாகற்க்காய் பயன்படுத்தி வந்தது அனைவரும் அறிந்த ஒன்று இன்று ஆராய்ச்சி மூலம் அதை விஞ்ஞானிகளோ நிரூபித்துள்ளனர். Jawaharlal Institute of Postgraduate Medical Education andResearch, India நடத்த பட்ட ஆய்வில் பாகற்க்காய், insulin செய்கையினைத் தூண்டுவதாக கண்டறியப்படுள்ளது.

மேலும்,இதில் 4 வகையான உயிரியல் கலவைகள்- bioactive compound உள்ளதாக கூறுகிறது the Philippine Department of Health.இவை ஒரு வகையான புரதம் AMPK தூண்டிவிடுகிறதாக கண்டறியப்படுள்ளது. இப்புரதம், நீரிழிவு நோயில பாதிக்கபடுகிற glucose பயன்படுத்தல்,  fuel metabolism இவை முதலியவைகளை தூண்டிவிடுகிறது. மேலும், இதில் உள்ள lectin, இன்சுலினை போல் செயல்பட்டு, உடல் திசுக்களில் குளுகோஸ்பயன்படுத்துவதை அதிகபடுத்துவத மட்டுமின்றி, மூளையை மட்டுபடுத்தி, பசியை குறைக்கிறது.

பொருளாதார நோய்களுக்கான மருந்து




அமெரிக்கப் பொருளாதாரத்தின் தொடர் சரிவைத் தடுத்து நிறுத்த ஃபெடரல் ரிசர்வ் வங்கியால் (Fed) கையாளப்பட்ட அசாதாரணமான ஆயுதம் குவான்டிடேடிவ் ஈஸிங் (Quantitative Easing). இதன்படி, 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மாதத்திற்கு 85 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் சந்தையிலிருந்து வாங்கப்பட்டு, பணப்புழக்கம் அதிகரிக்கப்பட்டது.பெரிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, கடனுக்கான வட்டி விகிதம் 0-25 என்ற அளவிலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் அமைந்தது எனலாம்.

இந்தத் திடீர் பணப்புழக்கம், அமெரிக்கா மட்டுமல்லாது, அதிக வருவாயுடன் கூடிய முதலீடுகளுக்கு வாய்ப்பளித்த இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் சென்றடைந்தது.  ஆனால், இம்மாதிரி முதலீடுகள் நிரந்தரமானது அல்ல என்பதை அனைவரும் விரைவில் உணர ஆரம்பித்தனர்.
அதற்குக் காரணம், அமெரிக்கப் பொருளாதாரம் மேம்பட ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் வெளிப்படத் துவங்கியதும், "ஃபெட்' பணப்புழக்கத்தை படிப்படியாக குறைத்துவிடும் என்பதுதான்.ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும், அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றிய ஆய்வுகள் "ஃபெட்' இயக்குநர் குழுவால் விவாதிக்கப்படுகின்றன. பொருளாதார காயத்துக்கு செலுத்திய மருந்து சரிவர வேலை செய்கிறதா என்பது ஆராயப்படுகிறது. காயம் குணமானதன் அளவீட்டைப் பொருத்து, பணப்புழக்க டோசேஜ் மாற்றப்பட்டு, சிகிச்சை நீடிப்பு அல்லது நிறுத்தல் முடிவு செய்யப்படும்.இந்தக்குழுவின் முடிவுகள் வெளியாவதற்கு சில நாள்களுக்கு முன்பே, உலகப் பொருளாதார சந்தைகள் சற்று ஆட்டம் காண ஆரம்பித்து விடுவது வழக்கமாகிவிட்டது எனலாம். 

கடந்த செப்டம்பர் மூன்றாவது வாரத்தில், "ஃபெட்' வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையை டிசம்பர் மாத அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்த்து சந்தை கிலியுடன் காத்திருந்தது.அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்தால், வளரும் நாடுகளிலிருந்து மூலதனங்கள் பெருமளவில் வெளியேறிவிடும் என்பதுதான் அந்தப் பயத்திற்கு காரணமாகும். வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான காலம் முற்றிலும் கனியவில்லை என்பதால் அந்த முடிவை "ஃபெட்' அடுத்த வருடம் முதல் பகுதிக்கு தள்ளிப்போட்டதற்கான அறிவிப்பு கடந்த 17ம் தேதி வெளிவந்தது.இந்த அறிவிப்பு, இந்தியா போன்ற நாடுகளுக்கு சற்று இதம் அளிக்கும் வகையில் அமைந்தது. கூடுதல் பணப்புழக்கத்தை உடனடியாக நிறுத்தாமல், சந்தையிலிருந்து வாங்கப்படும் அரசு சார்ந்த கடன் பத்திரங்களின் மதிப்பு, மாதம் 15 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டிக்கிறது. அமெரிக்கப் பொருளாதார முன்னேற்ற அறிகுறிகளால், உலக நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு கூடி வருகிறது. இதன் உடனடி எதிரொலியாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 18-ஆம் தேதியன்று 61.11 வரை சரிந்தது. சர்வ தேச தங்கம் விலை ஒரு அவுன்ஸூக்கு அதன் சப்போர்ட் லெவலான 1240 டாலரை உடைத்து 1216 டாலர் வரை சென்றது. இது மேலும் 1180 டாலர் வரை கீழ்நோக்கிச் செல்லலாம். இந்திய ரூபாயின் மதிப்பைப் பொருத்து, இந்தியாவில் தங்கம் விலை ரூ.24,500-ஐ இவ்வாண்டு இறுதிக்குள் தொட்டு விடும் என்றே தோன்றுகிறது.சமீபத்தில், ஐரோப்பிய மத்திய வங்கி, பொருளாதார ஊக்குவிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக வட்டி விகிதங்களை அதிரடியாக குறைத்து, 700 பில்லியன் ஈரோ (சுமார் 901 பில்லியன் டாலர்) அளவில், சந்தையில் கடன் பத்திரங்களை வாங்கி, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை அறிவித்திருக்கிறது.
அமெரிக்க முதலீடுகள் குறைந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் பணப்புழக்கத்தினால் விளையும் தாற்காலிக முதலீடுகள் இந்தியாவுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 4.8 சதவீதத்திலிருந்து (21.8 பில்லியன்) 1.7 சதவீதமாக (7.8 பில்லியன் டாலர்) குறைந்திருப்பது நல்ல செய்தியாகும். எதிர்பாராத உலகப் பொருளாதார எதிர்மறை நிகழ்வுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக, அந்நியச் செலாவணி கையிருப்பை கவனமாகக் கையாள்வதன் அவசியத்தை உணர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.   கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஏற்றுமதி 2.35 சதவீதம் (26.95 பில்லியன் டாலர்) குறைந்திருப்பது சற்று கவலையளிக்கும் செய்தியாகும். டீ, காபி, அரிசி, புகையிலை, மசாலா பொருள்கள், எண்ணெய் வகைகள், இரும்புத் தாது, பெட்ரோலியம் பொருள்களின் ஏற்றுமதி அளவு வெகுவாக குறைந்திருப்பது இதற்கு முக்கியக் காரணம். ஏற்றுமதியில் இறங்குமுகத்திற்கு ஐரோப்பிய பொருளாதாரத்தின் மந்த நிலைமை  ஒரு முக்கிய காரணமாகும். அரசாங்கத்தின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை எதிர்பார்த்து ஏற்றுமதி வர்த்தகத் துறையினர் காத்திருக்கின்றனர்.

உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தியப் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை அமையும் என்று எதிர்ப்பார்ப்பதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார். உலகச் சந்தைகளின் ஒரு பகுதியில் சரிவு ஏற்படும்போது, மற்ற பகுதிகளை விரிவடையச் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். வட்டி விகிதத்தில் சலுகை மற்றும் ஊக்குவிப்பு தொகைகள் (Infrastructure facilities) மூலம் மட்டும் ஏற்றுமதியை மேம்படுத்தி விடமுடியாது. ஏற்றுமதி தொழில் திட்டங்களுக்கான அங்கீகார நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், தடையில்லாத மின்சாரம், தொழிலாளர் கொள்கைகளில் தற்கால நடைமுறைக்கேற்ற சீர்திருத்தங்கள், உற்பத்திப் பொருள்கள் குறைந்த நேரத்திலும், செலவிலும் துறைமுகங்களைச் சென்றடைவதற்கான சாலை கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி வர்த்தக கழங்களின் (Export promotion councils) நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் மேற்கொள்வதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வாகும். 40  சதவீதத்திற்கு மேற்பட்ட  சிறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதித் துறையை சார்ந்திருக்கின்றன. ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியால், சிறு தொழில் வளர்ந்து, அந்த வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டத்தைக்  குறைக்கும். ஏற்றுமதித் துறைக்கு தேவையான தனித்திறமைகளை அறியாமல் பலர் ஒதுங்கி நிற்கின்றனர்.

ஏற்றுமதியின் அவசியத்தை உணர்த்தி, ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் பாடத்திட்டங்கள், கல்வி நிலையங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தக் குறையை களையலாம்.பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெற்ற "மேக் இன் இன்டியா' அறைகூவல் செயல் வடிவம் பெற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அமெரிக்கா, ஜப்பான், கொரியா, ல்வீடன், போலந்து, ஆஸ்திரேலியா, சீனா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு, இந்தியா தனது உற்பத்தி பொருள்களை தயாரித்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்படி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால்,  உள்நாட்டுத் துணைத் தொழில்கள் வளர்ச்சி அடைந்து, இந்திய ஜி.டி.பி. உயர்வதற்கு அது பெரும் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலே குறிப்பிட்டது போல், தடையற்ற வர்த்தகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  (Infrastructure facilities) விரைவில் மேம்படுத்தப்பட்டால்தான், இந்த முயற்சிகள் வெற்றியடையும்.உள்நாட்டுத் தொழில் உற்பத்தி வளர்ச்சிக்கு உதவும் விதமாக, கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த எ-20 மாநாட்டில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வட்டி விகிதங்களை  இந்திய ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்த வேண்டும் என்று சர்வதேச பொருளாதார நிதியகம் (I.M.F) வலியுறுத்தி உள்ளது.சமீபத்திய புள்ளிவிவரப்படி (IIP data) நாட்டின் தொழில் உற்பத்தி 0.5 சதவீத அளவில் குறைந்துள்ளது. பணவீக்கத்தின் அளவு ஏற்ற இறக்கத்துடன் நிலையற்று காணப்படுகிறது.
நாட்டின் தொழில் வளர்ச்சி,  பணவீக்கக் கட்டுப்பாடு ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களுக்கும் பாதகம் விளைவிக்காமல், வட்டி விகிதக் கொள்கைகளை வகுப்பது கூர்மையான கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு சாதுர்யமான நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.  

பொருளாதார நோய்களுக்கான மருந்தின் ஒரு பகுதிதான் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் போன்ற வீரியம் மிகுந்த மருந்துகளை அரசாங்கத்தால்தான் செலுத்த முடியும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும், இந்திய நலனை மையமாகக் கொண்டு ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால், எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி என்பது தொட்டு விடும் தூரத்தில்தான் என்பதில் சந்தேகமில்லை

செவ்வாய் கிரகத்தில் நாஸா "ரோவர்' முக்கிய செயல்பாடு தொடக்கம்

வாஷிங்டன், செப். 29: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள கியூரியாசிட்டி ரோவர் தனது முக்கிய செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

நாஸாவின் கியூரியாசிட்டி திட்டத் துணை ஆய்வாளர் அஸ்வின் வாஸவடா இது குறித்து தெரிவித்தது: ஷார்ப் எனப் பெயரிடப்பட்டுள்ள ஐயாயிரம் மீட்டர் உயரமுள்ள மலை குறித்து ஆராய்வதே ரோவரின் பிரதான பணியாக இருக்கும். அதன் முதல் கட்டமாக, அந்த மலை அடிவாரத்தில் 2.6 அங்குல அளவுக்கு நிலப் பகுதி தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் மலையின் பிற பகுதிகள் ஆராயப்படும். பிற பகுதிகளை ஒப்பிடும்போது, மலையின் மேல் பகுதி காலத்தில் பிந்தையதாகும். எனவே மலைகளின் பல்வேறு பகுதிகளை ஆராய்வதன் மூலம் அந்த நிலப்பகுதி குறித்து பல விஷயங்களை அறிய முடியும் என்று கூறினார்.
"ரோவர்' 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. ஷார்ப் மலைப்பகுதியில் தனது ஆராய்ச்சியைத் தொடங்கும் முன்னர், ஆய்வுக்கலன் தரையிறங்கிய நிலப்பகுதியில் முதல் ஆய்வுகளை மேற்கொண்டது.

அங்கிருந்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ஏரி ஒன்று இருந்துள்ளது தெரிய வந்தது. மேலும் நுண்ணுயிர்கள் இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அந்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, பிரதான இலக்கான ஷார்ப் மலையை நோக்கி, ரோவர் ஆய்வுக்கலன் நகரத் தொடங்கியது.
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இடத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த மலையை அடைய "கியூரியாசிட்டி ரோவருக்கு' சுமார் பதினைந்து மாதங்கள் ஆயிற்று. இடையே பல்வேறு பகுதிகளில் பாறை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

காஷ்மீரை மீண்டும் கட்டமைக்க உதவுங்கள்

காஷ்மீருக்கு உங்களது பங்களிப்பை அளித்து வீட்டீர்களா? வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடிய இயற்கைப் பேரழிவில் இருந்து தப்பியவர்கள் மீண்டும் வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகள் மாயமாகிவிட்ட, தெருக்கள் சகதி, குளங்களாகக் காட்சியளிக்கும், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒழுங்கற்று இருக்கும் மாநிலத்தில், இது எளிது கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில், நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்தப் பணியில் பங்கேற்று நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டியது அனைவரின் கடமையாகும்.

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழும பத்திரிகைகளின் வாசகர்கள், தொடர்ந்து சீரான அளவில் உதவி செய்து வருகின்றனர். இந்தப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை நீங்களும் வழங்கலாம்.

'THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND' என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம். ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், 'THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND'என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம். வங்கிக்கான SWIFT-CODE: IDIBINBBPAD. IFSC CODE: IDIB000P001. ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.

நிதியளித்தோர் குறித்த முதல் பட்டியல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளியிடப்பட்டது. அடுத்தப் பட்டியல், இன்னும் சில நாள்களில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும். காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது. அதற்கு உதவ வேண்டியது நமது கடமை. மனோஜ் குமார் சொந்தாலியா, தலைவர் & நிர்வாக இயக்குநர்

மான் வேட்டை



ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.29: ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடிய 5 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்  விதிக்கப்பட்டது.

  விருதுநகர் மண்டல உதவி வனப் பாதுகாவலர் ஏ.பழனிராஜுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக தகவல் கிடைத்தது. இவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு செண்பகத்தோப்பு சாலையில் உள்ள காளியப்பன் மகன் வீரையா என்பவரது செங்கல் சூளையில் சோதனை நடத்தினர். அப்போது கோட்டைப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (42),  சங்கிலிராஜ் (33) உள்ளிட்ட சிலர் வேட்டையாடிய மான் இறைச்சியைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து வெள்ளைச்சாமியையும் சங்கிலிராஜையும் வனத் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குட்டதட்டி அருகே மானை வேட்டையாடியது தெரியவந்தது. மேலும், குலாலர் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம், வீரையா,  கொன்றையாண்டி ஆகியோரும் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களையும் வனத்துறையினர் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வன பாதுகாப்பாளர் பி.கே.அசோக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 5 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்து அவர் தீர்ப்பு அளித்தார்.

தமிழ்த் திரையுலகினர் இன்று மௌன உண்ணாவிரதம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களது வேதனையை வெளிப்படுத்தும் விதமாகவும்  தமிழ்த் திரையுலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை (செப்.30) மௌன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்த் திரையுலக அமைப்பு நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் டி.சிவா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சி.கல்யாண், தமிழ்த்  திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர்கள் கேயார், தாணு, இப்ராஹிம் ராவுத்தர், ஆர்.வி.உதயகுமார், அபிராமி ராமநாதன், பிரமிட் நடராஜன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர், தமிழ்த் திரையுலக அமைப்புகளின் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து தமிழ்த் திரையுலகின் சார்பில் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வேதனையை வெளிப்படுத்தும் வகையில் மௌன உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் வளாகத்தின் முன்பு நடைபெற உள்ள இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

 இந்தப் போராட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் பல்வேறு அமைப்புகள் கலந்து கொள்கின்றன. எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டம், ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகத்தின் அன்பின் வெளிப்பாடு, நன்றி உணர்வின் வெளிப்பாடு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் ரத்து: திரையரங்குகள் செயல்படாது

மௌன உண்ணாவிரதப் போராட்டத்தில் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்வதால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடைபெறவுள்ள படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துத் திரைப்படப் பணிகளும் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் திரையரங்குகளின் காட்சிகள் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன என்று தமிழ்த் திரை அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உடல் தானம் செய்து 5 உயிர்களைக் காப்பாற்றிய 3 வயது சிறுமி !!



சீனாவின் 3 வயது சிறுமி ஒருவரின் உடல் பாகங்களை தானம் செய்து 5 உயிர்களை காப்பாற்றியுள்ளார் .

அந்த சிறுமியின் பெயர் லியு ஜிங்கயோ . இவர் மூளைக் கட்டியினால் பாதிக்கப்பட்டு இருந்தார் . இவரது பெற்றோர்கள் பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர் . ஆனால் மருத்துவர்கள் சிறுமி என்பதால் கஷ்டம் என்று விட்டார்கள் .

இந்த சிறுமிக்கு கட்டி இருப்பதை அவள் ஒரு மாதிரி நடப்பதன் மூலம் கண்டுபிடித்தனர் . பின்னர் தலை வீங்கியது , அவள் பேசுவதற்கே கஷ்டம் ஆனது . இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .

பின்னர் அவரது தந்தை அந்த சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து யோசித்தார் . அந்த சிறுமிக்கு உடல் உறுப்பு தானம் என்பதை புரிய வைக்க முடியவில்லை . பின்னர் முயன்று புரிய வைத்தார் . அந்த சிறுமியும் ஒத்துக் கொண்டார் .

இதனால் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது .

போலியோ போன்று அம்மை நோயை ஒழிக்க திட்டமிடும் மத்திய அரசு !!



போலியோ நோயை ஒழித்தது போன்று பல இலட்ச மக்களின் உயிர்களை வாங்கும் அம்மை போன்ற நோய்களை ஒழிக்க ஒரு இலட்சிய இயக்கம் தொடங்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷா வர்தன் தெரிவித்தார் .

மத்திய அரசு அம்மை நோயை வருகிற 2015க்குள் நீக்கவும் , ஜெர்மானிய அம்மை என்றழைக்கப்படும் ருபெல்லா நோயை மற்றும் கலா அசார் என்று அழைக்கப்படும் கருப்பு காய்ச்சல் ஆகிய நோயை 2015 க்குள் தடுத்து நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார் .

சின்ன அம்மையை 1977 ஆம் ஆண்டிலும் , போலியோவை 2014 ஆம் ஆண்டிலும் முற்றிலுமாக ஒழித்தோம் . அது போல அனைத்து நோய்களும் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அவர் பேட்டியில் தெரிவித்தார் .

ஆயுர்வேதா மற்றும் யோகா இணைந்து ஆயுஷ் என்றழைக்கப்படும் மாற்று முறை மருத்துவம் இந்த அரசின் கீழ் நன்றாக வலுப்படுத்தப்படும் என தெரிகிறது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media