BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 4 June 2014

பால் தாக்கரேயை பேஸ்புக்கில் கிண்டல்: முஸ்லிம் IT மேனேஜர் கொடூரமாய் அடித்துக்கொலை



புனேயில் மோஷின் சாதிக் சேக் என்ற 24 வயது இளைஞர் இரவுத் தொழுகை முடிந்து வீட்டிற்கு தன் நன்பருடன் திரும்பும் போது இந்து ராஷ்ட்ர சேனா என்ற இந்துத்துவ தீவர அமைப்பைச்சேர்ந்த 7 பேரால் கொடூரமாய் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

சாதிக் சேக் புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் IT மேனேஜராக வேலை பார்த்துவந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த ரியாஸ் தெரிவித்தாவது..சாதிக் சேக் இஸ்லாமியர் என்பதற்கு அடையாளமான தொப்பி அணிந்திருந்ததாலும், தாடி வைத்திருந்தாலும் வன்முறை கும்பல் அவரை தாக்கக்துவங்கியதாகவும், தான் உடனடியாய் ஓடிச்சென்று உதவிக்கு ஆட்களை கூட்டிவந்த போது சாதிக் சேக் காப்பாற்ற முடியாத அளவுக்கு கொடுமாய் தாக்கப்பட்டு கிடந்தார் எனவும் கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு போலிஸ் வருவதற்குள் அந்த இந்துத்துவ கொலைக்கும்பல் தங்களது மோட்டார் சைக்கள், கட்டைகளை போட்டு விட்டு ஓடிவிட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து ராஷ்ட்ரிய சேனாவைச் சேர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் தலைவரையும் விசாரணைக்கு அழைத்த காவல் துறை அவரை இதற்கு முன்பு போடப்பட்ட வேறொரு கேசுக்காக கைது செய்துள்ளது.

தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்பது உள்பட நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.தேசிய ஜனநாயகக் கூட்டணியை தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக உருவாக்கிய தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றி.

2.நரேந்திரமோடிக்கும், அவருடன் சக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்.

3.இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண புதியதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.தமிழகத்தில் மட்டும் எவ்வித தேவையும் இன்றி வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 144 தடை உத்தரவை பிறப்பித்ததன் மூலம், ஆளும் கட்சியினர் அராஜகத்திலும், முறைகேட்டிலும் ஈடுபட்டு, பணநாயகத்தை வெற்றி பெற வைத்தனர். இதற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கண்டும், காணாமல் இருந்து, ஆளும் கட்சிக்கு துணை நின்றது. தமிழக தேர்தல் அதிகாரி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை தடுக்க இயலாததற்கு கடும் கண்டனம்.

5.10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா காணும் வகையில் தமிழக மக்களுக்காக தேமுதிக என்றும் பாடுபடும்.

6.தமிழகத்திலுள்ள நீர் ஆதாரங்களான ஆறுகள், குளம், குட்டை, ஏரி, கால்வாய் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் மூலம் வறட்சி என்ற சொல்லே தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.வறுமையில் உள்ளவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கிட அல்லது சுயதொழில் செய்திட தேவையான உதவிகளை வழங்கிட தமிழக அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி, தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முன் வர வேண்டும்.

8.தமிழக மீனவர்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி மீன்பிடித் தொழில் செய்ய ஆவன செய்ய வேண்டும்.

9.கடற்கரை மணல் என்று சொல்லக் கூடிய தாது மணல் கொள்ளையை மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்,

10.தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சீர்படுத்தி, நிலத்தடி நீர் உயர தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்

மேற்கண்ட தீர்மானங்கள் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன‌.

வயலில் சிறுநீர் கழித்ததற்காக 5 வயது சிறுவனின் உறுப்பு வெட்டப்பட்டது


உத்தர பிரதேசத்தில், ரிதேஷ் என்ற 5 வயது சிறுவன், வ‌யலில் சிறுநீர் கழித்ததாகவும், அதை நேரில் பார்த்த வயலுக்குச் சொந்தக்காரர் சிறுவன் ரிதேஷைப் பிடித்து அடித்ததோடு அவனது உறுப்பையும் வெட்டியுள்ளார்.

ரத்தம் பீறிட அலறியபடியே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த ரிதேஷ் நடந்ததைக் கூறியுள்ளார். உடனே அலகாபாத் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சிறுவனின் தந்தை துர்கேஷ் மௌரியா என்பவர் மீது போலீசில் புகார் அளித்தார். மௌரியாவின் மகனும் சேர்ந்து இந்தக் கொடுமையை சிறுவனுக்குச் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உறுப்பை அறுத்த மௌரியாவும் அவரது மகனும் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சிஜாம், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

முகமது சிஜாம் கிராமத்து இளம்பெண்களை,  தான் ரெயில்வேயில் வேலை பார்ப்பதால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். அதன் மூலம் உல்லாச வாழ்க்கை வாழலாம் என ஆசைவார்த்தை கூறி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பார். நிறைய வரதட்சணை மற்றும் சீர் வரிசைகளுடன் திருமணம் முடிந்ததும் அவர்களுடன் சிறிது நாட்கள் குடும்பம் நடத்துவார். பின்னர் அவர்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை அபகரித்துக் கொள்வார்.

அதன் பிறகு, தனக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றலாகி விட்டது. எனவே சிறிது நாட்கள் கழித்து அழைத்து செல்கிறேன் என கூறி அப்பெண்களை நிர்கதியாக விட்டு விட்டு அங்கிருந்து தப்பி விடுவார். இதுபோன்று தான் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இவர் திருமணம் செய்யும்போது இந்து பெண்களை திருமணம் செய்ய இந்துவாகவும், முஸ்லிம் பெண்களை திருமணம் செய்ய முஸ்லிம் ஆகவும் மாறி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இனி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் பேஸ்புக்கில் கணக்கு துவங்கலாம்


13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், பேஸ்புக் கணக்கை தங்களது பெற்றோரின் ஒப்புதலுடன் துவங்கலாம்.

இதற்காக ஃபேஸ்புக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. 13 வயதுக்கு உட்பட்ட பயனர்கள் தனது கணக்கை துவக்க முயற்சித்தால், அந்தப் பயனரிடம் அவர்களது பெற்றோர் வைத்திருக்கும் கணக்கு குறித்த தகவல்களை ஃபேஸ்புக் கேட்கும்.

அதன்பின், பெற்றோரின் கணக்கின் மூலம் ஒப்புதல் அளிக்கும்படியாக மின்னஞ்சல் அனுப்பப்படும். பயனருடைய வயது, பெற்றோர் விவரம் ஆகிய விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின், பேஸ்புக் கணக்கை துவங்கிவிடலாம். பெற்றோரின் கணக்கு மூலம் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்.

பின்னர், இளம் பயனருடைய கணக்கு, அவரது பெற்றோரின் கணக்குடன் இணைக்கப்படும். இதன்மூலம் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் ஃபேஸ்புக் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் பதிவேற்றம் செய்யும் தகவல்களும் வந்து சேரும்.

இதன் மூலம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

மக்களவை கூட்டத்தொடரில் கடைசி வரிசையில் அமர்ந்த ராகுல், மக்கள் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறிய மோடி



16-வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக கோயிலான நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.", என உறுதியளித்துள்ளார். 

தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து மக்களவை எதிர்கட்சித் தலைவராக இருக்க மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதியில் கடைசி வரிசையில் உள்ள இருக்கையிலேயே அமர்ந்தார்.

20 ரூபாய் தேவைப் பட்டதால், சிறுமியை கொலை செய்த கொடூரன்


மும்பை பகுதியைச் சேர்ந்த சர்கார் (வயது 7) என்ற சிறுமி வீட்டில் தனது தந்தையுடன் இருந்தார். அவரது தந்தை வெளியே சென்றதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான பிரோகாஷ் ஹஜ்ரா (வயது 30) சர்கார் வீட்டிற்குள் நுழைந்தார். போனில் சார்ஜ் இல்லை. ஆகையால் சார்ஜர் கொடு என்று கேட்டார். தனது பக்கத்து வீட்டுக்காரர்தானே என்று அவளும் சார்ஜர் எடுத்து கொடுத்தார். அந்த வேளையில் அங்கிருந்த 20 ரூபாயை திருடினார்.

இதை பார்த்த சர்கார், வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த தனது அண்ணன் சாஹரை கூச்சலிட்டு அழைக்க முயன்றார். சாஹர் வந்து விட்டால் தான் திருடியது தெரிந்து விடும் என்பதால் சர்காரை பிடித்து பக்கத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார்.

பின்னர், ஹஜ்ரா கதவை மூடி விட்டு சென்றுவிட்டார். அந்த வேளையில் வெளியில் சென்றிருந்த சர்காரின் அம்மா வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் கதவு பூட்டியிருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் கதவை திறந்து உள்ளே வேகமாகச் சென்றார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் சுயநினைவில்லாமல் சர்கார் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே சிறுமியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறினர்.

இதுகுறித்து சர்காரின் பெற்றோர் போலீசல் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஹஜ்ராவை கைது செய்தனர். குடிப்பதற்கு பணம் இல்லாததால் 20 ரூபாயை திருடியதாகவும், சிறுமி பார்த்துவிட்டதால் அவளை கொன்றதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளான்.

சீட் பெல்ட் அணிந்திருந்தால் மத்திய அமைச்சர் முண்டே உயிர் பிழைத்திருப்பார்


டெல்லியில் கார் விபத்தில் மரணமடைந்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல், அவரது சொந்த ஊரில் இன்று அரசு மரியாதயுடன் தகனம் செய்யப்பட்டது.

கோபிநாத் முண்டே உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, டெல்லியில் இருந்து மகாராஷ்டிரம் புறப்பட்ட மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், செய்தியாளர்களிடம் கூறியது:

"சீட் பெல்ட் அணிந்திருந்தால், முண்டே உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். சீட் பெல்ட்டை பலர் அலங்கார பொருளாகவே நினைக்கின்றனர். சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் அறியாமல் மக்கள் உள்ளனர். இதுபோன்ற அலட்சிய செயலால், என் நண்பனையே நான் இப்போது இழந்துவிட்டேன்.

நாம் செய்து வருவதை பார்த்து, நமது பிள்ளைகளும் தவறான நடைமுறைகளையே பின்பற்றுகின்றனர். வேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, ஒழுங்காக வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும்.

என் நண்பர் முண்டே, விபத்து நடந்த சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய கார், சிகனலில் நிற்காமல் போனதே விபத்துக்கு காரணமாக உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான விஷயம். மக்களின் மனதில் எளிதில் சென்று சேரக்கூடிய அளவில் பல்வேறு ஊடகங்கள் மூலம் இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

முண்டேவின் மறைவு நம் அனைவருக்கு விழிப்புணர்வு எற்படுத்துவதாக இருக்க வேண்டும். அவரது இழப்பை அடுத்து, ஒரு திருப்புமுனையாக நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

விபத்தால் அவர் சென்ற காருக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படவில்லை. ஆனால், வேகத்தின்போது காரின் உள்ளேயே, முண்டே தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பல உள்காயங்கள் ஏற்பட்டன. அவரது கழுத்து பகுதியில் உள்ள மூட்டில்தான் முக்கியமாக பலத்த காயம் ஏற்பட்டது. அவரது முதுகுத் தண்டும் பாதிப்புக்குள்ளாக்கியது. மேலும், அதனால் மூளைக்கு செல்லும் ரத்தநாள குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.

இந்த தேசம், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் பெருந்தலைரை இழந்துவிட்டது. விபத்தால் சிக்கி உயிரிழந்தவர்களுடைய உறவினர்களின் மனநிலையை இப்போதுதான் உணர்கிறேன். பெரும்பாலும் சீட் பெல்ட் அணியாததே கார் விபத்தில் சிக்குபவர்கள் இறப்பதற்கு காரணமாக உள்ளது"

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மேகலாயாவில் , தன்னுடைய குழந்தைகள் முன் தீவிரவாதிகளால் பெண் ஒருவர் சுட்டுக் கொலை !!!

மேகலாயாவின் தெற்குகரொ மலை பகுதியில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் .

கரொ தேசிய விடுதலை முன்னணியைச் சார்ந்த தீவிரவாதிகள் , வீட்டிற்குள் அந்த பெண்ணின் கணவருடன் அந்த பெண்மணியின் ஐந்து குழந்தைகளை வைத்து பூட்டிவிட்டு , அந்த பெண்ணை பாலியல் வண்புணர்வு செய்ய முயன்றனர் . அவர் உடன்பட மறுக்கவே அவரை கொடுரமான முறையில் சுட்டுக்கொலை செய்துள்ளனர் .

 கரொ தேசிய விடுதலை முன்னணி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கடந்த சில மாதங்களாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

"கெப்லர் 10c" இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கிறது !!!!



சிலி நாட்டில் கேனரி தீவில் ஹார்ப்ஸ் என்னும் கருவியை உபயோகித்து விஞ்ஞணிகள் இந்த பூமியைப் போன்று பிரம்மாண்ட கிரகத்தைக் கண்டு பிடித்து உள்ளனர் . இதற்கு கெப்லர் 10சி என்று பெயரிட்டுள்ளனர் .

இந்த கிரகம் ட்ரகோ என்னும் நட்சத்திரக் குவியலில் உள்ளது . இந்த நட்சத்திரக் குவியல் பூமியில் இருந்து 564 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ளது . இந்த ட்ரகோ குவியலில் தான் ஏற்கனவே கண்டுபிடித்த கெப்லர் 10பி என்ற கிரகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

இந்த கிரகம் 29,000கிமீ விட்டம் கொண்டது , அதாவது பூமியை விட 2.3 மடங்கு பெரியது . இது நம் பூமியை விட 17 மடங்கு கனமானது . இந்த கிரகம் 45 நாளுக்கு ஒரு முறை சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது .
 இந்த கிரகத்திற்கு 11 பில்லியன் வயது அதாவது  பெரிய வெடிப்பு நடந்து 3 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் உருவானது . 

இந்த கிரகத்தை 2011 ஆம் ஆண்டிலே கண்டுபிடித்து இருந்தாலும் , இன்னும் சில ஆய்வுகளினால் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது . நம் பூமியை விட மிக கனமாக இருக்கிற காரணத்தால் இந்த கிரகம் அடர்ந்த அமைப்புகள் கொண்ட பாறையினால் உருவாகி இருக்கும் என வல்லுணர்கள் கருதுகின்றனர் . மற்ற பெரிய கிரகங்கள் என நாம் கருதும் வியாழன் அடர்ந்த ஹட்ரஜன் வாயுவினால் மிக கனமானதாக இருக்கிறது . 

பிரபல வல்லுநர் ஒருவர் கூறுகையில்  , " நம்மால் பாறைகளை உருவாக்க முடிந்தால் , உயிர்களை உருவாக்கலாம் " என்றார் . இதன்மூலம் அந்த கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு இருப்பதை நம்மால் ஊகிக்க முடியும் .   

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பு !!!!


லோக்சபா தேர்தலுக்கு முன் தான் கேட்ட பார்மர் தொகுதி வழங்கப்படாததால் தணித்து நிற்க முயன்றதற்காக பாஜக கட்சியில் இருந்து நீக்க்ப்பட்டவர் ஜஸ்வந்த் சிங் . இவர் மீண்டும் கட்சியில் இணைவதற்கான் முயற்சியில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .

பாஜகவும் அவரை இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிகிறது . இதனால் தான் அவரது மகன் மான்வேந்தரா கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தாலும் , கட்சி தரப்பில் இருந்து எந்தவொரு கடினமான தண்டனையும் இதுவரை இல்லை .


இந்நிலையில் 15 மாநிலங்களுக்கான ஆளுநரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது . இதனால் தமிழ் நாட்டின் ஆளுநராக ஜஸ்வந்த் சிங்கை நியமிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றனர் .

இதற்கு முன்னர் பிரதமர் மோடி அவர்களும் ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார் . அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் என்ற தகவல் வெளிவரவில்லை . 

இந்தியாவின் அறிவு ஜீவி மோடியுடன் வேலை செய்வதற்காக தன் கனவு வேலையை விடவும் தயார் !!!




இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலன்பூரில் பிறந்தவர் பிரனவ் மிஸ்ட்ரி . இவர் ஒரு கணினி விஞ்ஞானி மற்றும் அறிவியல் மேதை . இவர் தற்போது சாம்சங் நிறுவனத்தின் பரிசோதனை துறையில் துணைத் தலைவராக பணிபுரிகிறார் . இவர் தனது கண்டுபிடிப்புகளான சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி கியர் ஆகியவற்றால் பிரபலமடைந்தார் . 


இந்தியாவின் அறிவுஜீவி அளித்த பேட்டியில் , நான் மோடி அவர்களின் அழைப்புக்காக காத்து இருக்கிறேன் , அவர் அழைத்தால் என் கனவு வேலையை விட்டு வெளிவர தயாராக இருக்கிறேன் என்றார் . மேலும் மோடியின் புதிய தொழில்நுட்பத்திற்கு ஆதரவு அளிக்கும் தன்மையைக் கண்டு வியந்த மிஸ்ட்ரி , நான் அவருடன் இணைந்து இன்னும் சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன் . அவருக்கு எல்லா விதத்திலும் உதவ நான் தயாராக இருக்கிறேன் . நான் தனியாக ஒரு நிறுவனம் அமைத்து இருந்தால் எனக்கு மட்டும் லாபம் வந்து என்னுடைய கனவுகள் மட்டுமே நிறைவேறும் . ஆனால் நான் இந்தியாவிற்காக பணி செய்தால் அது பல பேரின் வாழ்க்கையை மாற்ற உதவியாக இருக்கும் . மற்ற அனைத்தையும் விட அதுவே எனக்கு மன நிம்மதியை கொடுக்கும் என்றார் .

மோடியும் மிஸ்ட்ரியும் 2011 ஆம் ஆண்டு சந்தித்து உள்ளார்கள் . அப்போது மோடி அவரை தனது அமைச்சரவைக்கு சிறப்பு பேட்டி அளிக்க அழைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

மோடியுடன் இவர் இணைந்தால் , தொழில் தொடர்பு துறையில் புரட்சி நடத்திய ராஜிவ் காந்தி , சாம் பிட்டோர்டா போன்ற கூட்டணியைக் காணலாம் என பலர் நம்புகின்றனர் . 


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media