BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 7 September 2014

அப்துல் கலாமின் பதில்

பிறந்தநாள் என்றால் என்ன ?
இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள பெரிய மனிதர்கள்(VIP) எல்லோரிடமும்  கேட்டனர்.அதில் மிக சிறந்த பதிலாக தேர்வு செய்ய பட்டது யாருடைய பதில் தெரியுமா? அப்துல் கலாம் அவர்களின் பதில் தான்.அது என்ன தெரியுமா!!?

"வாழ்கையில் அந்த ஒரே ஒரு நாள் உன்னுடைய அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது"

ராஜா ராணி 'அட்லி' திருமணம் செய்யப்போகும் டிவி நடிகை, நிச்சயதார்த்தம் முடிந்தது



ராஜா ராணி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அட்லி கனா கானும் காலங்கள் நாடகத்தில் நடித்தவரும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தவருமான ப்ரியாவை திருமணம் செய்கிறார். இன்று அட்லி, பிரியா நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ராஜா ராணியாக வாழ வாழ்த்துகள் அட்லி, ப்ரியா

மலாலாவுக்கு கிடைத்தது , நபீலாவுக்கு கிடைக்காதது ஏன்



பாக்கிஸ்தானின் சுவத் பள்ளத்தாக்கு இந்த பகுதியை சேர்ந்த மலாலா என்ற சிறுமி தாலிபான்களால் அவரது பெண்கல்விக்கு ஆதரவானநிலைப்பாட்டினால் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி மேற்குலகு முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்புது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதே சுவத் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்தான் நபீலா என்ற சிறுமி. அவரது தந்தை அப்துர்ரஹ்மான். சுவத் பள்ளத்தாக்கின் மலைப்பாங்கான ஒரு இடத்தில் நபீலா தன பாட்டி, தந்தையுடன் வசித்து வந்தாள். அவள் தங்கள் வீட்டிற்கான காய் கனிகளை பறித்துக்கொண்டிருக்கும்போது கமல்ஹாசனின் அப்பாவி குழந்தைகளையும் பெண்களையும் கொல்லாத அமெரிக்க போர் விமானங்கள் குறிப்பார்த்து குடியிருப்புகளின் மேல் குண்டு மழைகளை பொழிந்தனர். பல அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர் . இது அந்த பகுதிகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் என்றாகிவிட்டன. அந்த  குண்டு மழையில் நபீலாவும் படுகாயம் அடைந்தாள்.
அந்த குண்டுமழைகளுக்கு பிறகு உயிருடன் இருந்தவர்கள் உயிரை இழந்தவர்களை தேடினார்கள். நபீலா மயக்கமுற்று கிடந்தாள் . அவளை எடுத்துசென்று மருத்துவமனியில் சேர்த்தார்கள். இரத்தம் பெருமளவில் வெளியேறி இருந்தது. இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை. அந்த அமெரிக்க வீசிய குண்டு மழையில் வீடுகள் துகள்களாகி போயிருந்தன. அவள் பாட்டி அதாவது கமலஹாசனின் பார்வையில் பயங்கரவாதி கொல்லப்பட்டாள் . 

மருத்துவர்கள் நபீலாவிற்கு இன்னும் நுணுக்கமான மருத்துவம் தேவை என்றார்கள். அதனால் அவளை பாக்கிஸ்தானின் தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினார்கள். இஸ்லாமிய அமைப்புகள் அவரது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டன. அவள் வேகமாக குணமடைந்தாள். ஆனால் அனாதையானாள். டான் என்ற பத்திரிக்கைக்கு இது தெரிய வருகிறது. டான் பத்திரிகை மலாலாவை உலகின் ஒப்பற்ற கல்வி கதாநாயகி ஆக்கிய மீடியாக்கள் ,அதற்கு பணமும் உற்சாகமும் தந்த மேலை நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ஆகியவை என்ன சொல்கின்றன. நபீலா விவகாரத்திற்கு எனக்கேட்டு கட்டுரைகளை எழுதின.

நபீலா என் அநாதை ஆனாள் என்ற வினாவை அமெரிக்காவை நோக்கி வைத்தது . நபீலா அமெரிக்காவால் அநாதை ஆக்கப்படும் மழழைகளின் அடையாளந்தான். மலாலா காயமடையாமலேயே லண்டனில் சிகிச்சை பெற்றாள். ஆனால் நபீலாக்கள் காயம்பட்டு உயிருக்கு போராடியபோது உலக அரங்கில் குறிப்பாக மலாலாவை கல்வியில் கதாநாயகி ஆக்கியவர்கள் கனைத்துக்கூட காட்டிடவில்லை. இந்த அனாதைகளுக்கு என்ன பதில் எனக்கேள்விகள் வைக்கப்பட்டன. அமெரிக்க பயணம் இன்னும் ஒரு படி மேலே போய் டான் பத்திரிக்கையின் வாசகர்கள் அமெரிக்காவிற்கு நபீலாவை அழைத்துச்சென்று அமெரிக்காவின் செனட் பெருஞ்சபையின் ஒரு நிமிடம் பேசிட அனுமதி கேட்டார்கள். மலாலா இந்த செனட் பெருஞ்சபையில் 40 நிமிடங்கள் பேசினாள் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் நபீலா விவகாரத்தில் அவள் உரையாற்றிட செனட் பெருஞ்சபை ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் நபீலா ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பாள் அதற்கு அனுமதி தாருங்கள் விரும்பினால் பதிலும் தாருங்கள் என்றொரு விண்ணப்பத்தை வைத்தார்கள். ஆனால் செனட் சபையோ அதன் உறுப்பினர்களோ இதற்கு தயாராக இல்லை. ஆனால் டான் பத்திரிக்கையின் அமெரிக்க வாசகர்கள். அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து மலாலவைப் போல் நபீலாவும் நடத்தப்பட வேண்டும். மலாலாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம் நபீலாவுக்கும் தரப்பட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்கள்.

 இந்நிலையில் ஊடகங்களும் அரசல் புரசலாக செய்திகளை வெளியிட்டன. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிறு சலனம். நபீல என்ன சொல்கிறாள் என்பதை கேட்டுதொலைவோம் என்றொரு முடிவுக்கு வந்தார்கள். நபீலா ஒரு அறிக்கையோடு சென்றாள். ஆனால் அமெரிக்காவின் நாடாளுமன்ற 435 உறுப்பினர்களில் 5 பேர்கள் மட்டுமே வந்தார்கள். இந்த சந்திப்பு நபீலா போல அநாதை ஆக்கப்பட்டவர்களின் அவலங்களை அறிந்திட பெரிதும் உதவியது. ஊடகங்களால் இந்த செய்தியை ஒரேடியாக மறைத்திட முடியவில்லை என்பதும் முக்கிய காரணம். அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்து , நபீலாவுக்குப் பின்னால் நின்ற டான் பத்திரிகை வாசகர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள். 

அமெரிக்க அதிபர் ஒபாமா மலாலாவை தன்னுடைய அதிபர் மாளிகையில் சந்தித்தார். அதுபோல் நபீலாவுக்கும் ஒரு வாய்ப்பு அதிபர் மாளிகையில் தந்திட வேண்டும் என விண்ணப்பித்து இருந்தார்கள். ஆனால்  ஒபாமா மறுத்துவிட்டார். லண்டன் என்ற ஆங்கில ஏகாதிபத்தியத்தின் தலை நகர் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள். மலாலாவை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மகாராணி எலிசபத் தன்னுடைய அரியணை வீற்றிருக்கும் அபார மாளிகையிலேயே சந்தித்தார். பாவம் ! மகாராணி நபீலாவை சந்திக்க முடியாது என மறுத்துவிட்டார். எத்துனை போலியானவர்கள் இந்த ஏகாதிபத்தியவாதிகள். இவர்கள் எதை சாதிக்கின்றார்களோ இல்லையோ நித்தமும் நபீலாக்கலை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். 16 வயதில் 26 பரிசுகளை பெற்றுவிட்டாள் மலாலா. லண்டனை வசிப்பிடமாக ஆக்கிகொண்டாள். இது ஒன்றே போதும் மலாலா அமெரிக்க உளவுத்துறையின் உருவாக்கம் என்பதை அறிந்துக்கொள்ள. 

மலாலாவுக்கு கிடைத்தது , நபீலாவுக்கு ஏன் கிடைக்கவில்லை . இதற்கு பன்னாட்டு சமூகத்தின் பதில் தான் என்ன ?.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

'பலானா' படம் பப்ளிக்காக ஒளிபரப்பு, படத்தின் இசை வெளியீட்டு விழாவில்
http://www.satrumun.net/2014/09/desi-kattey-movies-audio-launch-turned.html

செக்ஸ் விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு நாலெட்ஜ் அதிகமாம்!
http://www.satrumun.net/2014/09/women-know-better-than-man-about-facts.html

இளைஞர்களை கவர்ந்த டாப் 3 அப்ளிகேஷன்கள் நாட் ரீச்சபிள், கிரேட் எஸ்கேப், 143 அப்ளிகேஷன்கள்,
http://www.satrumun.net/2014/09/3-apps-which-inspired-youngsters-lot.html

மோடி வைத்த விருந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் கில்கிறிஸ்ட், பிரட் லீக்கு விருந்து வைத்தார்
http://www.satrumun.net/2014/09/brett-lee-gilchrist-with-modi.html

கத்தி படத்துக்கு சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து ஆதரவு
http://www.satrumun.net/2014/09/kaththi-gets-support-from-soundarya.html

ஒரு முத்தத்தின் விலை 39 லட்சம், மாடலின் முத்ததுக்காக  செலவு செய்த பில்லியனர் மகன்
http://www.satrumun.net/2014/09/elizabeth-hurley-auctioned-her-kiss-for-charity.html

சிகரெட் பிடிக்கும் இந்தியாவின் டாப் நடிகைகள், நிஜ வாழ்க்கையிலும் குப் குப் புகைவண்டி
http://www.satrumun.net/2014/09/bollywood-actress-who-smoke-in-real-life.html

பாகிஸ்தானில் இருந்து வந்து பாலிவுட்டில் கலக்கிய நடிகைகள் !!
http://www.satrumun.net/2014/09/bwood-actress-who-came-from-Pakistan.html

ஆப்பிளின் ஐ போன் 6 யை பார்த்து சாம்சங் பயப்படுவதற்கான 5 காரணங்கள்
http://www.satrumun.net/2014/09/why-samsung-should-fear-about-apple.html

ஆரியர் திருடிய தமிழர் பண்பாடு
http://www.satrumun.net/2014/09/blog-post_78.html

மத்திய அரசை திணற வைத்த சிறுமி? அப்படி என்ன கேள்வி கேட்டார் இந்த சிறுமி?
http://www.satrumun.net/2014/09/blog-post_44.html

ஆஷ் துரை சுட்டுக்கொல்லப்ப‌ட்டது ஏன்? மறைக்கப்பட்ட வரலாறு
http://www.satrumun.net/2014/09/blog-post_91.html

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண் மாடல்கள்
http://www.satrumun.net/2014/09/highest-paid-models.html

உலக அதிசயம் தொங்கும் தோட்டம்
http://www.satrumun.net/2014/09/blog-post_99.html

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், பொது அறிவு
http://www.satrumun.net/2014/09/blog-post_68.html

கண் சிமிட்டுவது ஏன்?
http://www.satrumun.net/2014/09/blog-post_7.html

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து, உண்மை தான் என்ன?
http://www.satrumun.net/2014/09/blog-post_84.html

கூகுள் தனது வாடிக்கையாளர்களுக்கு 19 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக திருப்பி கொடுக்க உள்ளது !!
http://www.satrumun.net/2014/09/google-to-pay-its-customers-for-problem-regarding-playstore.html

இந்தியன் இரயில்வே குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ருசிகர தகவல்கள் !!
http://www.satrumun.net/2014/09/facts-about-indian-railways.html

பரோட்டா சாப்பிடுபவரா நீங்கள்? எச்சரிக்கை ரிப்போர்ட்
http://www.satrumun.net/2014/09/blog-post_71.html

கசகசாவின் மருத்துவக் குணங்கள்



கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.   ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

'பலானா' படம் பப்ளிக்காக ஒளிபரப்பு, படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

பலான படங்களை ரகசியமாக பார்த்து ரசிப்பார்கள், ஆனால் பல நூறு பேர் கூடியிருக்கும் ஒரு இசை வெளியீட்டு விழாவில் திடீரென பலான படம் ஒளிபரப்பினால் எப்படியிருக்கும், அப்படியொரு நிலை  மும்பையில் நடந்தது.

தேசி கட்டாய் ‘Desi Kattey’ என்ற இந்தி படத்தை ஆனந்த் குமார் தயாரித்து இயக்கியிருக்கிறார். இதில் சுனில் ஷெட்டி, ராணா, தியா பாஜ்பாய், சாஸா ஆஹா, அக்கில் கபூர் ஆகியோர் நடித்துள்ளானர்,

நேற்று முன் தினம் இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நடுவில் பலான காட்சிகளும் ஓடியது. விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த பலான வீடியோ அங்கு செய்தி சேகரிக்க வந்திருந்த அனைத்து தொலைக்காட்சி கேமிராக்களிலும் பதிவாகியிருக்கிறதாம்.

இது எப்படி நடந்தது என்றால் பாடல்களையும், டிரெயிலரையும் டிவிடியில் காப்பி செய்த டெக்னீசியன் தவறுதலாக பலான வீடியோவையும் அதில் இணைத்துவிட்டார் என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பு கூறினார்கள். அதே சமயம் இது அந்த படத்திற்கு எதிராக செய்யும் சதியாக இருக்கும் என்றும் தயாரிப்பு தரப்பு சந்தேகிக்கின்றது.

ஆரியர் திருடிய தமிழர் பண்பாடு

நாம் இப்போது பயன்படுத்தும் வட(ஆரிய) மொழி கலப்பு வார்த்தைகள் எப்படி தமிழ் மொழியை அசிங்கம் செய்கின்றனவோ, அதே போல நமது பல்வேறு கலாச்சாரங்களும் பண்பாடுகளும் ஆரிய கலப்பால் கேளிக்கூத்தாகின்றது. ஆதியில் நாம் பின்பற்றிய பழக்கங்கள் அனைத்துக்குமே ஒவ்வொரு காரண காரியம் உண்டு. மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்ததில் இருந்து ஆடை அணியும் முறை வரை அனைத்துமே நமது தட்ப வேட்ப நிலையை கருத்தில் கொண்டும் நாம் வாழும் பகுதிக்கு ஏற்றார்ப்போல் வாழ்க்கை முறையை வகுத்து வாழ்ந்துள்ளோம். நாம் பின்பற்றிய வாழ்வியல் முறைகளை ஆரியன் அவனது கவர்ச்சியை புகுத்தி அதன் மயக்கத்தில் நம்மை கிடத்தி பின் நமக்குள் பயத்தினை உண்டுபண்ணி நமக்கான வாழ்வியல் முறையையே அவனுடைய பிழைப்புக்கான சூத்திரத்தினையும் சேர்த்து நம்மிடமே கொண்டுவந்து மூடனாக்கிவிட்டான். ஒரு சில விடயங்களை பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கு எழுதியுள்ளேன்.

குலதெய்வ வழிபாட்டில் ஆரியன் :

          குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட கடல்கோளுக்கு தப்பி பிழைக்க சிறு சிறு குழுவாக தெற்கில் இருந்து இடம் பெயர்ந்த பழந்தமிழர்கள், வருகிற வழிகளில் ஆங்காங்கே ஆற்று படுகைகளில் வாழ்ந்த காலகட்டத்தில் தான் இந்த குல தெய்வ வழிபாட்டு முறை தோன்றி இருக்க வேண்டும். ஒவ்வொரு சிறு குழுவிற்கும் தலைமை ஏற்று நடத்திய அந்த குழுத்தலைவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நடுகல் நட்டு அங்கேயே சிறுது காலமா தங்கியும் உள்ளனர். பின் வறட்சி காலங்களில் மீண்டும் அவர்களின் பயணம் நீர் நிலைகளையும், வெள்ளெமை நிலங்களையும் நொக்கி நகர்ந்துள்ளது. அப்போது ஒரு சில குழுக்கள் அவர்களுக்கு வாழ்வளித்த பழைய மண்ணின் உள்ள பற்றாளும் இறந்த தலைவர்களின் நினைவுகளுக்காகவும் அவர்கள் வாழ்ந்த மண்ணை எடுத்து வந்து தாங்கள் இடம் பெயர்ந்த இடத்தில் அதனை பத்திரபடுத்தி வாழ்ந்து வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த பிடி மண்ணுக்கு மரியாதை செய்ய துவங்கியவர்கள் ஆரிய கலாச்சாரம் புகுந்த பின் அவர்கள் அந்த பிடி மண்ணினையும் தெற்கில் உள்ள முன்னோர்களின் நடுகல்லையும் கடவுளாக்கி வழிபடத்துவங்கியுள்ளனர். ஆரிய ஆக்கிரமிப்பினால் அவன் உண்டு பண்ணிய சிவராத்திரி அன்று தமிழர்கள் தெற்கு நோக்கி பயணித்து அங்கு குலதெய்வ வழிபாடு செய்கின்றனர். இன்னும்
ஒரு சில தமிழ் குடி குல தெய்வ வழிபாடுகளை நடத்திட ஆரியனை அழைப்பது சிந்தித்தால் கேவலமானதே..

உயிர் உறுப்பினை கடவுளாக்கியது :

          ஆதியில் தமிழன் உயிர் வாழவைக்கும் காற்றினையும் நீரையும் நீரை பொழியக்கூடிய வானையும் அந்நீரை சேகரிக்கும் மண்ணையும் மிருகங்களிடம் இருந்து உயிர் காக்கும் நெருப்பினையும் எப்படி மதிப்பளித்து வாழ்ந்து வந்தானோ, அதே போலவே அந்த உயிர் உருவாக காரணமான ஆண் பெண் உயிர் உறுப்பு இணையும் அந்த செயலுக்கும் மதிப்பளித்துள்ளனர். அந்த இணையும் செயலை வடிமைத்தும் உள்ளனர். எதிர்கால சந்ததிகளுக்கு இதன் முக்கியத்துவத்தினை உணர்த்தவும் சந்ததிகளை பெருக்கவும் அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் ஆரியன் இதனை நாம் மதிப்பதை கண்டு அந்த அமைப்பை வணங்க நமக்கு கற்றுக்கொடுத்து அதற்கு அவனே முன்னின்று பணிவிடை செய்ய வேண்டும் என்ற தோற்றத்தினை ஏற்படுத்தி நம்மை ஏமாற்றி பிழைத்துக்கொண்டுள்ளனர்

பூகோள அறிவினை மழுங்கடிக்கும் ஜாதகம் :

           சூரிய குடும் பத்தில் நீள் வட்ட பாதையில் சுற்றி வரக்கூடிய கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் பற்றிய பூகோள அறிவு பெற்றவர்களாக விளங்கியுள்ளனர் பழந்தமிழர்கள். கோள்கள் சுற்றிக்கொண்டே பூமியின் அருகாமையில் வருகையில் அதன் அதிர்வுகள் பூமியிலும் இங்கு வாழும் மனிதர்களிடமும் எப்படிபட்ட மாற்றங்களை உண்டுபண்ணும் என்பது போன்ற இந்த பூகோள அறிவியலையே ஆரியர்கள் அவர்களுடைய பிழைப்புக்காக அவர்களுக்கு சாதகமாக அதை ஜாதகமாக்கி தமிழர்களை ஏமாற்ற துவங்கினர்.

பழக்கங்கள் சடங்குகள் ஆனது :

          ஆரிய மொழியில் ஆடி மாதம் தமிழ் மொழியில் கடகம், இந்த மாதத்தில் பயிர் விதைப்பதன் காரணம் அடுத்து வரக்கூடிய மாதங்களில் கிடைக்கக்கூடிய மழையை பயன்படுத்தி விதை நல்ல முறையில் விளையும் என்ற விவசாய அறிவாகும் ஆனால் இதையும் ஆடி பதினெட்டாம் பெருக்கு என சொல்லி கோவில்களில் சிறப்பு வழிபாடு என்று சொல்லி பிழைப்பு நடத்துவதும் இதே ஆரியர்களே.

     இந்த விளைச்சளில் ஒரு பங்கு தன் குடும்பத்திற்கு எடுத்து வைத்துவிட்டு மற்றொரு பங்கினை வியபாரமும் செய்துள்ளனர். இதில் ஒரு முக்கியமான பங்கினை அடுத்த விளைச்சளுக்கு சேமித்தும் வைத்துள்ளனர். இந்த விதைகளின் விளையும் தன்மையை கண்டறிய கடகம் மாதத்திற்கு(ஆரிய மொழியில் ஆடி) முன் விடை மாதத்தில் (ஆரிய மொழியில் வைகாசி)  அந்த விதைகளை நீரிலும் இருளிலும் இட்டு விளைய வைத்து பரிசோதித்துள்ளனர். இதனை முளைப்பாரித் திருவிழா என சடங்காக மாற்றியவர்களும் இதே ஆரியர்கள்தான்.

          இதே போல ஒவ்வொரு செயல்களையும் ஏன் எதற்கு என ஆராய துவங்கினால் ஆரியன் நமக்கு செய்து கொண்டு இருக்கும் துரோகம் புரியும். எந்த ஒரு செயலையும் ஏன் என கேள்வி கேட்டு பழகுவோம், நம் பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை மீட்டெடுப்போம்.

மத்திய அரசை திணற வைத்த சிறுமி

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .

இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம். 

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது. 

இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலியா வீரர்கள் கில்கிறிஸ்ட், பிரட் லீக்கு விருந்து வைத்த மோடி





ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இந்தியா வந்து இருந்தார். அவருக்கு நேற்று விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பிரட் லீயும், ஆடம் கில்கிறிஸ்டும் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்த பின் இவர்கள் இருவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் புகைப்பட்ம எடுத்து கொண்டனர். லீக்கு எப்போதுமே இந்தியாவில் ஆதரவு அதிகம். அவர் அடுத்து இந்தியாவில் ஒரு ரொமாண்டிக் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 

கத்தி படத்துக்கு சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து ஆதரவு





இளைய தளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் கத்தி. இதனை துப்பாக்கி படத்தின் வெற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். சமந்தா நாயகியாக நடித்துள்ளார். கொலைவெறி நாயகன் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசைக்கான உரிமையை எராஸ் மியூசிக் நிறுவனம் வாங்கி உள்ளது. 5 நாட்களுக்கு முன் தான் இந்த நிறுவனத்துக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின் வாங்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தின் இசை செப்டம்பர் 18 ஆம் தேதி வெளிவர வாய்ப்பு உள்ளது.

அனிருத் இந்த படத்தில் புதுமையான இசையை தந்துள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்த் நடிகர் விஜய்  மீதும், அனிருத் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளார். எனவே படம் கட்டாயம் வெற்றி பெறும் என்று நம்புகிறார்.

நிஜ வாழ்க்கையிலும் சிகரெட் பிடிக்கும் 5 பாலிவுட் நடிகைகள்

* சுஷ்மிதா சென்


* ராணி முகர்ஜி



* கங்கனா ரனாவத்



* கோன்கனா



* மணிஷா கொய்ராலா


ஆஷ் துரை சுட்டுக்கொல்லப்ப‌ட்டது ஏன்? மறைக்கப்பட்ட வரலாறு


அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது, 

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” – அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும், வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள், சுற்றிலும் நான்கைந்து பெண்களும், தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று?  

பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான்,

அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும், வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும், ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம்.

ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன்,என்று சொல்லி சொன்னது போல் செய்தான்,அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டாள் என்கிற  செய்தி,பரவியது. வாஞ்சிநாதன் ஒரு உயர் சாதித் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு சாதியக் குலக் கொழுந்து.

அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி மனியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து, வாஞ்சினாதன் என்கிற பிராமணன் ஆஷ் துரையைத் தன் துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையாக்கிய போது அவனுக்கே தெரியாது, நமக்கு இப்படி ஒரு நாட்டுப் பற்று விருது கிடைக்கும் என்று.மனிதம் காப்பாற்றிய ஆஷ் துரை வரலாற்றினை எப்படி மறைத்திருக்கிறது இந்த மேலாதிக்க  சமூகம்.

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண் மாடல்கள்

* ஜிசெல் பட்சன்





* டவுட்சன் க்ரூஸ்



* அட்ரியானா லிமா



* கேட் மாஸ்



* கேட் அப்டன்


உலக அதிசயம் தொங்கும் தோட்டம்

பண்டைக்கால நகரங்களுள் பாபிலோன் மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக ஹமுராபி மன்னர் இருந்தார். இவருக்குப்பின், இவரது தளபதி நெபோபலாசர் மன்னரானார். பின்பு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவரே தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர். காசர் குன்றுப் பகுதியில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்பெற்ற அழ-கு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தார். பாபிலோன் நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் அமிடிசிடம், ராணி எப்போதும் சோகமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார்.

அதற்கு அமிடிஸ், அரசரே மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது என்றார்.

இதனைக் கேட்ட மன்னன், கவலைப்பட வேண்டாம் ராணி, உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார். அரசவையினைக் கூட்டி, பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ஏதேனும் வழி உள்ளதா என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.

அதில் வயதான ஒருவர், மன்னரே, பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும். மாளிகையினருகில் ஏராளமான மரங்களும் வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும். அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார் என்றார். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின் விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார் மன்னர்.


ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது.



அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்-பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்-பட்டன. வானத்தைத் தொடுவதற்குப் போட்டி-யிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன.

படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின.

உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடி-களிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறை-யில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது.

யூப்ரடீஸ் நதியிலிருந்து ஹைட்ராலிக் என்ஜின்மூலம் நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநரகளின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ்-பெற்றதாகும்.

பாபிலோனின் தொங்கும் தோட்டம் எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 400 இல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதினார். பாக்தாத்துக்குப் பக்கத்தில் கி.மு. 600 ஆம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், பொது அறிவு

                                                               பொது அறிவு 

                                                   இந்திய முதல் பெண் மணிகள்..!

இந்தியாவின் முதல் பெண் பிரதமர்?
இந்திரா காந்தி.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி?
பிரதீபா பாடேல்.

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்?
சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம் ).


இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்?
சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம் ).


இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி?

பாத்திமா பீவி.

இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலர்?
லட்சுமி பிரானேஷ்.


இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்?
விஜயலட்சுமி பண்டிட் 
(ரஷ்யா 1947-49).

இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்?
ராஜ்குமாரி அம்ரித்கௌர்
(சுகாதாரத்துறை 1957 வரை).


இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்?

ரெஜினா குகா (1922).

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்?

ஆனந்தபாய்ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).

இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்?

லலிதா (சிவில் 1950).

இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி?

அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950).

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி?

கிரண்பேடி.

இந்தியாவின் முதல் பெண் நீதிபதி?
அன்னா சாண்டி.


இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்?
சுவர்ணகுமாரி தேவி 


இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டுநர்?

காப்டன் துர்கா பானர்ஜி.

இந்தியாவின் முதல் பெண் மேயர்?
தாரா செரியன்.


இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்?
அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்)


இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்?

வசந்த குமாரி (தமிழ்நாடு).

இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி?
கல்பனா சாவ்லா.


இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்?

சுரோகா யாதவ்.

இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)?

இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா.

இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்?

புனிதா அரோரா.

இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்?

பத்மாவதி பந்தோபாத்யாயா.

கண் சிமிட்டுவது ஏன்

கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க ஈரம் தேவைப்படுகிறது .கண் இமைகள் தான் கண்கள் உலர்ந்து போவதில் இருந்து தவிர்க்கின்றன.இமைகளின் விளிம்பில் 20-30 வரை சுரப்பிகள் உள்ளன . கண் சிமிட்டும் போதெல்லாம் கண் விழியை இவை அலம்புகின்றன. கண்ணில் தூசு படியும் போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது.கண்ணீர் விடும் போது கண் விழியின் மேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வருகிறது.இவைகளை நீக்கவும் கண் சிமிட்டல் தேவைப்படுகிறது.


வேறு காரணங்களும் முன்வைக்கபட்டிருக்கின்றன .ஆனால் அவை இன்னும் விவாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன . இந்த காரணங்களில் ஒன்று கண் அசையும் போது இமைகள் சிமிட்டுவது தொடர்பானது . கூடுதலாக கண் பார்வையின் கவனம் மாறுபடும் போதே அதிகமாக கண் சிமிட்டபடுவதாக கூறப்படுகிறது .அதாவது ஒரு பார்வையில் இருந்து இன்னொரு பக்கம் உங்கள் கவனத்தை திருப்பும் போது . தொடர்ச்சியாக ஒரு திசையில் பார்த்துக்கொண்டே கவனத்தை அப்படியே இன்னொரு திசையில் திருப்புவதை விட புதிதாக ஒரு இடத்தில் கவனம் செலுத்தும் போது கண்களுக்கு இலகுவாக இருக்கலாம் .அதனால் இமைகள் மூடி திறக்கலாம் என்கின்றனர். மூளையில் பார்வையை உள்ளெடுக்கும் பகுதியை மூளை சில மைக்ரோ செக்கன்கள் தடை செய்வதை University College London விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர் .அதாவது இது கண் சிமிட்டல் ஏற்பட எடுக்கும் நேரத்துக்கு சமனான நேரமாகும் .


மேலதிக தகவல்:- ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 10,000 தடவைகள் கண்களை சிமிட்டுகிறார்.சராசரியாக 5 செக்கனுக்கு ஒரு முறை இமைகள் சிமிட்டுகின்றன .ஒரு நிமிடத்துக்கு 5-30 தடவைகள் கண் சிமிட்டப்படுகிறது
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media