BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 July 2013

சாதி கூட்டங்களின் பேரணிகளுக்கு தடை - கருத்து சுதந்திரத்துக்கான தடையா?

சாதி அடிப்படையிலான பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு உத்திரபிரதேச நீதி மன்றத்தின் தடை விதித்த‌து - கருத்து சுதந்திரத்துக்கான தடையா? அல்லது தடை சரியா?

சாதி அடிப்படையிலான பேரணிகள் மற்றும் கூட்டங்க மாநிலத்தில் சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்துகிறது அதனால் அதற்கு தடைவிதிக்க வேண்டும்  என்று கோரி உத்திரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, இதை விசாரித்த நீதிபதிகள் சாதி அடிப்படையிலான பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து இதே போன்ற தடை தமிழகத்திலும் விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாதி என்பது இந்திய சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில் சாதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த சமுதாயத்தில் தங்களுக்கான உரிமைகள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும் உள்ள ஒரு அடிப்படையான கருத்து சுதந்திரத்தை இது பாதிக்கின்றது, மேலும் பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் செய்து தான் இதை மாற்ற வேண்டுமேயொழிய நீதிமன்றம் இம்மாதிரியான ஒற்றை தீர்ப்புகளில் அரசியல் அமைப்பு சட்டத்தினை திருத்துவதற்கான இணையானவை என்றும் இது நீதிமன்றத்தின் அதிகார எல்லையை மீறும் செயல் என்றும் சிலர் கூறுகின்றனர், அதே சமயம் இம்மாதிரியான சாதி ரீதியான கூடல்கள் வன்முறையாக வெடிப்பதால் இது சரியே என்கிறார்கள்.

இதில் எது சரி? இந்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதா? அல்லது தடை சரிதானா? உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் தெரிவியுங்கள்

செய்திகள்!

மலாலாவுக்கு இன்று பிறந்தநாள்

பாகிஸ்தானை சேர்ந்த மலாலா என்ற சிறுமி பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும் என போராடி வந்தார்.

அவரை அல்-கொய்தா அடிப்படைவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் குண்டுபாய்ந்து உயிருக்கு போராடும் நிலையில் லண்டன் மருத்துவமனை அளித்த சிகிச்சை பலனளித்து சுகமடைந்தார்

இன்று அவருக்கு 16 ஆவது பிறந்தநாள்

 ***

மீண்டும் ஒரு நிறுவன பங்கு விற்பனைக்கு!

ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவன பங்களை 5% விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது, அதை தொடர்ந்து தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் இன்னும் முடிவடையாத நிலையில் மத்திய அரசு மேலும் ஒரு அரசு நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பதாக அறிவித்திருக்கிறது.

இந்திய சுற்றுலாதுறை வளர்ச்சி நிறுவன பங்குகளே அது.

# அஞ்சு, அஞ்சு சதவிகதமா இந்தியாவை விற்பாங்களோ?

இந்தியா மீண்டும் சாம்பியன்.

மினி உலக கோப்பை போட்டிக்கு பின் நடந்த செல்கான் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் இந்தியா கலந்து கொண்டது

மினி உலககோப்பை போட்டியில் ஒரு லீக் ஆட்டத்தில் கூட தோற்காத இந்தியா, இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டில் மேற்கிந்திய தீவுகளிடம் தோற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

ஆனாலும் இந்திய வீரர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்துள்ளது.

202 ஓட்டங்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஒரு பக்கம் விக்கெட் இழப்பை நிறுத்த முடியாமல் இறுதிநிலையில் வெற்றி இலங்கைக்கு சென்றுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது.

தோனியின் அதரடி சிக்ஸர்களால் கடைசியா இரண்டு பந்துகள் இருக்க, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது

ஆட்ட நாயகனாக தோனியும், தொடர் நாயகனாக பந்து வீச்சாளர் புவனேஷ்குமாரும் தேர்தெடுக்கப்பட்டார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media