BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 September 2013

எல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு

சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மூத்த கலைஞர்கள் பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். மேலும் விழா குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் உடன் கூட்டணி ஓகே தான் - திருமாவளவன் அறிவிப்பு



ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது தமிழகமெங்கும் காங்கிரஸ்சை ஒழிப்பதே என் முதல்பணி என்று சுற்றி சுற்றி பேசி வந்த திருமாவளவன்

சோனியா கும்பலுக்காக பாவமூட்டை சுமந்து அவமானப்படுத்தப்பட்ட மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் - வைகோ

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும், 9½ ஆண்டுகளாக சோனியா காந்தியும், அவரது கூட்டமும் செய்த பாவங்களை சுமந்ததற்கு தான் இந்த அவமானமா - வைகோ குமுறல்

இன்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டதாவது

செம்மொழி மாநாட்டில் ஊழல்? அதிகாரிகளை போட்டுக்கொடுக்கும் திமுக தலைவர் கருணாநிதி


தனக்கு தானே கேள்வி-பதில் திட்டத்தில் இன்று செம்மொழி மாநாட்டு ஊழல் பற்றி குறிப்பிட்ட திமுக தலைவர் கருணாநிதி


கேள்வி:- கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டுக்காக செய்யப்பட்ட செலவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, யாரோ ஒருவர் தாக்கல் செய்த வழக்கின் மீது உங்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது என்று இரண்டொரு ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

என்ற தன் கேள்விக்கு

இதுபோல அரசு நடத்தும் மாநாட்டிற்கான செலவினை முதலமைச்சரோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ கையிலே வைத்துக்கொண்டு செலவு செய்வதில்லை.

அதிகாரிகள்தான் செலவு செய்வார்கள். மாநாடு நடைபெற்ற நேரத்தில் நிதித்துறை செயலாளராக யார் இருந்தாரோ அவர்தான் தற்போதும் செயலாளராக இருக் கிறார். மாநாடு நடைபெற்றபோது கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து செயல் பட்டவர் தற்போது நிதித்துறையிலேதான் பணியாற்றுகிறார். இந்த செம்மொழி மாநாட்டிற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனி அதிகாரி யாகவே நியமிக்கப்பட்டார். இந்த மாநாட்டிற்காக செலவு செய்யப்பட்ட தொகை குறித்து அப்போது மாநாட்டை நடத்தும் பொறுப்பை மேற் கொண்டவர்களுக்கு எந்தத் தொடர்பாவது இருந்ததா என்பதை இந்த மூத்த அதிகாரிகள் இடத்திலும், அவர்கள் கையாண்ட கோப்புகளை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

என்று அதிகாரிகளை போட்டுக்கொடுத்துள்ளார்.

காதலன் குடிப்பழக்கத்தை கைவிட வைக்க உயிரை விட்ட காதலி

காதல் இவர்களை மெண்டல் ஆக்குகிறதா? மெண்டல்கள் காதலிக்கிறார்களா? என்றே தெரியவில்லை.

பாஜக கூட்டணியில் இணைகிறதா மதிமுக? வைகோவை காவி துண்டு போட்டுக்கொள்ள சொல்லும் அ.மார்க்ஸ்

பாஜக கூட்டணியில் இணைகிறதா மதிமுக? வைகோவை காவி துண்டு போட்டுக்கொள்ள சொல்லும் அ.மார்க்ஸ்

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! - மீண்டும் சவுண்ட் விட்ட பாரதிராஜா



 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media