BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 8 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைப்பது எது? அதிர்ச்சி தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/what-screw-your-life.html

ராஜா ராணி 'அட்லி' திருமணம் செய்யப்போகும் டிவி நடிகை, நிச்சயதார்த்தம் முடிந்தது
http://www.satrumun.net/2014/08/best-10-places-for-honeymoon-in-india.html

நித்யானந்தாவுக்கு 'எழுச்சி' பரிசோதனை, காலை முதல் மாலை வரை நடந்த பரிசோதனை
http://www.satrumun.net/2014/09/nithyananda-undergoes-medical.html

தினமலர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மானநட்ட வழக்கு தொடர்ந்தார்
http://www.satrumun.net/2014/09/jayalalithaa-files-defamation-case.html

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கண்டறிந்த மின்சாரம்
http://www.satrumun.net/2014/09/blog-post_79.html

பாஜக வேட்பாளர்கள் பலர் அதிமுகவுக்கு தாவல், தமிழிசை செளந்தர்ராஜன் கண்டனம்
http://www.satrumun.net/2014/09/many-bjp-local-body-election-candidates.html

குழந்தைகளின் அறிவு வளர (பகுதி - 1)
http://www.satrumun.net/2014/09/1_8.html

சென்னை பற்றி சில சுவராசிய செய்திகள், சையிது ஷா பேட்டை, வேதஸ்ரேணி எந்த இடம் தெரியுமா?
http://www.satrumun.net/2014/09/blog-post_52.html

தமிழர் ரகசிய தொழில்நுட்பம், கல்லணை கட்டப்பட்ட ரகசியம்
http://www.satrumun.net/2014/09/blog-post_79.html

லேப்டாப்பை அடிக்கடி கவனியுங்கள்,  லேப்டாப்பை எளிதாக பராமரிக்கும் வழி முறைகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_83.html

ஹனிமூன் செல்வதற்கு இந்தியாவின் சிறந்த 10 இடங்கள்
http://www.satrumun.net/2014/08/best-10-places-for-honeymoon-in-india.html

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம், தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு .
http://www.satrumun.net/2014/09/blog-post_48.html

தமிழரின் வானியல் அறிவு ..!
http://www.satrumun.net/2014/09/blog-post_2.html

நித்யானந்தாவுக்கு 'எழுச்சி' பரிசோதனை, காலை முதல் மாலை வரை நடந்த பரிசோதனை


நித்யானந்தா மீது ஏற்கனவே கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது, இதை நிரூபிக்க நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது, இன்று நடைபெற்ற ஆண்மை பரிசோதனை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்ட நித்யானந்தா தனக்கு குழந்தை போன்ற உடல்தான் இருப்பதாகவும் தன்னால் 'எழுச்சி'யுடன் செயல்பட முடியாது என்றும் கூறினார், இதையடுத்து கோர்ட்டு நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது, ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், நித்தியானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம்தேதி, ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடை கோரி, நித்தியானந்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமும் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இன்று பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனைக்கு ஆண்மை பரிசோதனைக்கு வந்த நித்யானந்தா சிஷ்யர்கள் புடைசூழ வந்திருந்தார், வழக்கம் போல பெண் சிஷ்யர்கள் வெள்ளை சேலையும், ஆண் சிஷ்யர்கள் காவி உடையும் அணிந்திருந்தனர். நித்தியானந்தாவும் காவி உடையுடனே மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தியது.  காலை 7.45 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நித்தியானந்தாவுக்கு மாலை வரையில் தொடர்ந்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

நாடே டிவியில் பார்த்த விஷயத்துக்கு பரிசோதனையா?

தினமலர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மானநட்ட வழக்கு தொடர்ந்தார்



தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யபப்டுவது குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்ததற்காக சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார், சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை வெளியிட்டதற்காக தினமலர் பத்திரிக்கையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர்கள் பலர் அதிமுகவுக்கு தாவல், தமிழிசை செளந்தர்ராஜன் கண்டனம்


காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன, தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியான திமுக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் பாஜக தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்ந்தலில் கூட்டணி கட்சிகளுடன் கடுமையாக போராடி பெற்ற நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட முடியாதவாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர்கள் இருவரும் குழப்படி செய்தனர்.

தற்போது பாஜக சார்பாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் பலரும் அதிமுகவுக்கு கட்சி தாவியுள்ளனர், பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி வாபஸ் பெற்றனர்.

திருநெல்வேலி மேயர் வேட்பாளர் பாஜகவின் வெள்ளையம்மாள் முதலில் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றார் மேலும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைய அவர் சென்னை விரைந்துள்ளார்.

ஆவடி பாஜக வேட்பாளர் தாரிணியும் போட்டியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்,

ஆலந்தூரில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீதி சேவியரும் அதிமுகவுக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ்பெற்றுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன் அதிமுக மிரட்டல் காரணமாக நெல்லை பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றார் என்றும் பிற வேட்பாளர்களையும் அதிமுக மிரட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் அதிமுக பாஜகவை கண்டு பயப்படுகிறது என்று கருத்து தெரிவித்திருந்தார் தமிழிசை செளந்தராஜன்

குழந்தைகளின் அறிவு வளர (பகுதி - 1)

போட்டிகள் மிகுந்து வரும் அவசரமான உலகில் போராடி முன்னேறும் வழிகளை தங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடே சிறு குழந்தைகள் கூட மூட்டையை தூக்கிச் செல்வதை போல புத்தக சுமையை தூக்குகின்ற நிலை. முன்பு ஐந்தாம் வயதில் தான் பள்ளிக்கல்வி தொடங்கியது. அதுவரை பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பில் இருந்துகொண்டு அம்மா, அப்பா என சொற்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. தாய் தான் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக இருந்தார். இன்று பிறந்த சில மாதங்களிலே கல்வி நிலையங்களில் முன்பதிவு. மூன்றாம் வயதில் பாலர் பள்ளி வகுப்பு. நான்காம் வயதில் எல்.கே.ஜி எனப்படும் மழலையர் கீழ்வகுப்பு. ஐந்தாம் வயதில் யு.கே.ஜி எனப்படும் மழலையர் மேல்வகுப்பு. இவற்றிலிருந்து பயிற்சி பெறாவிட்டால், ஒன்றாம் வகுப்பில் இடமில்லை என்று சொல்லுமளவுக்கு இன்றைய காலம் மாறிவிட்டது. தொட்டிலில் தாலாட்டப்பட்டு தாய் வழிக்கல்வி ஊட்டப்பட வேண்டிய வயதில், நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாமல், பத்தோடு பதினொன்றாய் வெளிநாட்டு மொழி கற்பிக்கப்படும் நிலை தொடர்கிறது.

பாலர் பள்ளி வகுப்புக்கு செல்லும்போதே தனது குழந்தை படிப்பில் முதல் இடம் பெற வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அடையும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பேசி பழகுவதற்கு முன்னரே வண்ணப்படங்கள், அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கின்றனர். இதுபோல தங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் கையாளும் முறைகளில் ஒன்று தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க பழக்கப்படுத்துவது. அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகள் பேச பழகுவதோடு, அறிவுக்கூர்மையும் பெறுவர் என்று பலர் எண்ணுகின்றனர். புற்றீசல்போல் புதிதாக முளைத்துவரும் தொலைக்காட்சிகள் குழந்தைகளுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவருவது ஒருபுறம். அதிலும் குறிப்பாக கல்வி தொலைக்காட்சியையோ, கல்வித் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ குழந்தைகள் பார்ப்பதால் அறிவுக்கூர்மை அடைவர் என்ற அசையாத நம்பிக்கை பெற்றோர் பலரிடம் உள்ளது. இதற்காக குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதி செய்துகொடுக்கின்றனர். ஆனால் கல்வி தொலைக்காட்சியை குழந்தைகள் குறிப்பாக பிறந்த முதல் இரண்டு ஆண்டுககால மழலைப் பருவத்தில் பார்ப்பதால் நன்மை கிடைக்குமா என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. தொலைக்காட்சி பார்ப்பதால் அறிவு வளரும் என்ற பெற்றோரின் நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரின் மூளை வளர்ச்சிக்கு கல்வி தொலைக்காட்சிகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ உதவவில்லை என்று இவ்வாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
                                                                                                                   தொடரும் ..............

சென்னை பற்றி சில செய்திகள்


தமிழகத்தின் இதயமாக  சென்னை விளங்கிறது , முற்காலத்தில் சிறு சிறு கிராமங்களாக இருந்ததெல்லாம் இணைந்து உருவானது தான் சென்னை. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதன் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

( Armoured Vehicles And Depot of India) என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI).

17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்).

புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.


தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.

தமிழர் ரகசிய தொழில்நுட்பம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.


ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி.

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கண்டறிந்த மின்சாரம்

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். 

முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலைனா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி. இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்" மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?
Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.
அகத்தியர் தமிழன் என்கிறீர்கள் ஆனால் அவர் ஏன் சமஸ்கிருதத்தில் எழுதினார் என்பது இங்கு பலரது கேள்வி! உங்களுக்கும் கூட இது எழலாம். அதை முழுவதுமாய் இங்கு விலக்க முடியாது ஆனால் சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழிலிருந்து தான் சமசுகிருதம் உருவானது என்பதை அறியலாம், இதற்கு சான்று  உலக மொழிகளில் முதன்மையானது தமிழே என்ற பல ஆய்வுகளை எடுத்துக்காட்டாக கூறலாம்.

அதேநேரம் படத்தில் இருப்பது அகத்தியர் தயாரித்த மின்கலம் என்று இந்த பதிவின் எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. இந்த பதிவில் உள்ள ஸ்லோகம் மட்டுமே அவருக்கு சொந்தமானது. இருந்தாலும் இந்த அறிவியல் உண்மையாய் இல்லாவிட்டால் ஒரு வெளிநாட்டு தனியார் தொலைகாட்சி நிறுவனம் அங்கீகரித்து இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும்! 



பொங்கலா ? தீபாவளியா ?

யிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.
என்ன காரணம்?
முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம்.
உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படி காரணம்?
தீபாவளி கொண்டாடப்படுதற்கு காரணமாக சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.
பார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியை தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாக  கொண்டாடுவதற்கு, மத ரீதியாக பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.

சரி. இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு?
பார்ப்பனியம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்கு தரமால், தீபாவளிக்கு தரப்படுகிறது. தீபாவளி விசேஷமாக கொண்டாப்படுவதின் 100 சதவீத காரணம் இதுதான். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனசை’ குறிவைத்து தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளி கொண்டாட்டத்திற்கு’ மக்களை தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சரி. அதுக்கு என்ன செய்யிறது?

தீபாவளிக்கு இருக்கிற மவுசை குறைத்து அதை பொங்கலுக்கு கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்கு தருகிற ‘போனசை’ நிறுத்தி, அதை பொங்கலுக்கு  மாற்றவேண்டும்.
மாற்றினால்?
“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்” என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சை தமிழனாக மாறி பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளை கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.
அப்புறம் என்ன ஆகும்?
வழக்கம் போல தாழ்த்தப்பட்ட மக்களை தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாக கொண்டாடப்படும்.
என்னங்க இது புது கதையா இருக்கு? தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா? எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.
நீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா? தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிகட்டில் – மாட்டை அடக்குற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா?
‘மாட்டுபொங்கல்’ என்று ஒரு நாளை தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா?

பார்பபனர்களை திட்டுன சந்தோஷபடுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பாப்பனரா மாறிடிறீங்க? என்னங்க நியாயம் இது?

லேப்டாப் எனப்படும் மடிக்கணினியைப் பராமரிக்கும் வழி முறைகள்

• குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating Systemத்தை புதுப்பிக்கவும்.

•மடிக்கணினிக்கு பேட்டரி மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். உதாரணமாக, வெளியூர் செல்லும் நாட்களில்.

•மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்தலாம். மடிக்கணினிக்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger) பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High Power Flow) காரணமாக உங்களுடைய மடிக்கணினி செயலிழந்து போகலாம்.

•மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low Battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லோ பேட்டரி சிக்னல் கிடைத்த பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும்.

•மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.

•மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அதை நாமாகவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

•ஒரு மடிக்கணினியில் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்தக் கூடாது. ஒரு மடிக்கணினிக்கான பேட்டரியை அதே மடிக்கணினியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்...
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media