BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 10 January 2014

தற்கொலை படை தீவிரவாதியை தடுக்கும் போது, உயிரை இழந்த பள்ளி மாணவன்

பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில், பள்ளியை குண்டு வைத்து தகர்க்க வந்த ஒரு தற்கொலை படை தீவிரவாதியினை தன்னுயிரை கொடுத்து நிறுத்தி, பள்ளியில் இருந்த பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறார், 14 வயது பள்ளி மாணவன் ஐட்ஜாஸ் ஹஸன்.

கடந்த திங்கட்கிழமையன்று, பள்ளிக்கு தாமதமாக வந்ததால், தண்டனையாக பள்ளி வாசலிலே நிறுத்தி வைக்கப்பட்டார், ஐட்ஜாஸ் ஹஸன். அப்போது அவர் நின்று கொண்டிருக்கும் போது, சந்தேகத்திற்குரிய ஒரு நபர் பள்ளிக்குள் நுழையும் போது, ஒரு கல்லை தூக்கி அவர் மீது எறிந்தார். அந்த கல் அந்த நபர் மீது படவில்லை என்றதும், அவனருகே சென்று கட்டிப்பிடித்து, பள்ளிக்குள் அவனை நுழைய விடாமல் அந்த மாணவன் தடுத்தார். உடனே, அந்த நபர், தான் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தபோது, இருவருமே உயிர் இழந்தனர்.

ஐட்ஜாஸ் ஹஸன், அந்த தற்கொலை படை தீவிரவாதியை தடுக்காவிட்டால், பள்ளியின் உள் இருந்த பல நூறு உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும். அப்படி ஒரு சம்பவம் நடக்கவிடாமல், தன்னுயிரை கொடுத்து தடுத்த, ஐட்ஜாஸ் ஹஸன், உண்மையில் ஒரு ஹீரோ!

எங்க அப்பா யார பாத்து விரல் நீட்டுராரோ அவர் தான் அடுத்த பிரதமர்

ஐ.கே.குஜ்ரால், தேவ கௌடா, வாஜ்பாய் போன்றோர் இந்திய நாட்டு பிரதமராக வருவதற்கு, தி.மு.க கட்சிகாரணமாக இருந்து இருக்கிறது. 2009லும் கூட மன்மோகன் சிங் ஆட்சி அமைய உறுதுணையாக தி,மு.க இருந்தது. அதே போல், 2014 ஆம் ஆண்டிலும், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், கருணாநிதி யாரைப் பார்த்து விரல் நீட்டுகிறாரோ அவரே, நாட்டின் பிரதமராக வருவார் எனவும், அது போல் ஒரு சூழ்நிலை விரைவில் ஏற்படும் என மு.க. ஸ்டாலின், ஹெட்லைன்ஸ் டுடேவிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

உதய் கிரணுக்காக தற்கொலை செய்து கொண்ட ரசிகன்

ஜனவரி மாதம் 5ம் தேதி, நடிகர் உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த அவரின் ரசிகர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநிலத்தில், சதீஷ் என்ற 19 வயது வாலிபர், நடிகர் உதய் கிரண் இறந்த செய்தியை கேட்டு,  மனம் உடைந்து போய், மரத்தில் தூக்கிலிட்டு கொண்டார். அவர் சட்டை பாக்கெட்டில், தன் அபிமான நடிகர் உதய் கிரண் இறந்ததால், தானும் இறப்பதாக கூறும் ஒரு கடிதமும் இருந்தது.

தேவயாணி கோப்ரகேட்காக வேலை செய்யம் போது கடும்துயர் ஏற்பட்டது



தேவயாணிக்காக வேலை செய்ய அமெரிக்கா சென்ற போது, அங்கு கடும் துயர் அனுபவித்ததாக கூறியிருக்கிறார் அவரின் பணியாள், சங்கீதா ரிச்சர்ட். தன் குடும்பத்திற்கு பண உதவி செய்வதற்காக, அமெரிக்காவிற்கு, தேவயாணியின் பணியாளாக அவருடன் சென்றதாகவும், ஆனால், உண்ணவோ, உறங்கவோ கூட நேரமில்லாமல், எந்நேரமும் அவதி பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

தாள முடியாத அளவிற்கு கடினமாக வேலை செய்ய முடியாமல், இந்தியாவிற்கு தான் திரும்ப போவதாக கூறியிருந்த போதும், தேவயாணி அவரை போக விடாமல், தொடந்து அவருக்காக வேலை செய்ய சொல்லி துன்புறுத்தியிருக்கிறார் என்று, சங்கீதா குமுறலுடன் கூறியுள்ளார்.

கேரளாவில் ‘ஜில்லா’ வாஷ் அவுட்? : அப்செட்டில் நடிகர் மோகன்லால்!!! (எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்)

கேரளாவில் ‘ஜில்லா’ வாஷ் அவுட்? : அப்செட்டில் நடிகர் மோகன்லால்!!! (எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்)

பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசான விஜய்யின் ‘ஜில்லா’ படம் கேரளாவில் பலத்தை அடியை வாங்கியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘தலைவா’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று ரிலீசாகியுள்ள படம் தான் ‘ஜில்லா’. விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார்.

ஜெயம் ராஜாவின் உதவியாளர் நேசன் டைரக்ட் செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லால் நடித்துள்ள தமிழ்ப்படம் என்பதால் படத்தைப் பார்க்காமலேயே சிலாகித்த மோகன்லால் இதில் நடிக்க சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை. மாறாக கேரள வினியோக உரிமையை மட்டும் வாங்கிக் கொண்டார்.

தனது ஆசீர்வாத் சினிமாஸ் புரொடக்‌ஷன் கம்பெனி மூலம் கேரளாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘ஜில்லா’வை ரிலீஸ் செய்துள்ளார் மோகன்லால். விஜய் படம் என்பதையும் தாண்டி மோகன்லால் நடித்த படம் என்பதால் கேரள ரசிகர்கள் மத்தியில் ‘ஜில்லா’ நல்லாவே கல்லா கட்டும் என்று கணக்குப் போட்டார் மோகன்லால்.

ஆனால் அவரது எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் விதமாக ‘ஜில்லா’ படத்தைப் பற்றிய நெகடீவ் ரிப்போர்ட்டுகள் வர ஆரம்பித்துள்ளன.

ஆமாம், ‘ஜில்லா’ படத்துக்கு கேரள ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லையாம். ஜில்லாவின் தொடக்கம் அசத்தலாக இருந்தாலும் விஜய் இன்ஸ்பெக்டர் கெட்டப்பில் வர ஆரம்பித்தவுடன் படம் போரடிக்க ஆரம்பித்து விடுகிறதாம்.

கடந்த டிசம்பர் மாதம் தான் மோகன்லால் சொந்தமாக தயாரித்த ‘த்ரிஷ்யம்’ என்ற மலையாளப்படம் மெகா ஹிட்டாகி அவருக்கு கேரள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கை பெற்றுத் தந்தது.

அந்த செல்வாக்கை தவிடு பொடியாக்கும் விதமாக ‘ஜில்லா’வின் ரிசல்ட் நெகட்டீவ்வாக வந்திருப்பதில் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் நடிகர் மோகன்லால்.

News Courtesy by SoundCameraAction.com

ஆம் ஆத்மி கட்சியில் இணைய சுப.உதயக்குமார் விதிக்கும் நிபந்தனைகள்

ஆம் ஆத்மி கட்சியில் இணைய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமாரை அர்விந்த் கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷனும் கேட்டிருந்தார்கள், அதற்கு தற்போது பதிலளித்துள்ள சுப.உதயக்குமார் 5 நிபந்தனைகளை ஆம் ஆத்மி கட்சிக்கு விதித்துள்ளார்.

நர்சரி மாணவி பலாத்காரம்

பெங்களூரில் மூன்று வயது நர்சரி மாணவி, பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏழாம் தேதி அன்று, பள்ளியில் இருந்து திரும்பி வந்த விமலா என்ற மூன்று வயது நர்சரி மாணவி, மிகவும், சோர்வாக, உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டார். அவரின் பெற்றோர், உடனே மருத்தவரிடம் அழைத்து சென்றனர். பரிசோதித்து பார்த்த போது, சிறுமி, பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறை விசாரணை நடத்திய போது, சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் ஓட்டுநர் இக்காரியத்தை செய்து இருப்பது தெரிய வந்தது. காவல் துறையினர் அவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

நவம்பர் 26ம் தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்கள் தமிழகத்தில் சேர்க்க கேஜ்ரிவால் திட்டம்

டெல்லியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல வரவேற்பு தமிழகத்திலும் கிடைத்துள்ளது. கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தினமும் உறுப்பினரகள் வந்து சேர்ந்தவாறு உள்ளனர். இதுவரை 45,000  பேருக்கு மேல் ஆம் ஆத்மியில் உறுப்பினர்களாகி உள்ளனர். இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் முடிவடைவதற்குள்,  ஒரு கோடி உறுப்பினர்களை தமிழகத்தில் பெற அக்கட்சி திட்டமுட்டள்ளது.

ஆம் ஆத்மிக்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும், நாளை முதல் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடக்கும் என்றும்  அக்கட்சியினர் தெரிவித்தனர்.

ஐ.பி.எல் 7லும் சென்னை சூப்பர் சிங்க்ஸ்க்கு தான் எம்.எஸ்.டி



இந்த வருடம் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் 7 கலந்து கொள்ளும் அணிகள் ஒவ்வொன்றும், அணியில் உள்ள ஐந்து ஆட்டக்காரர்களை, தக்க வைத்து கொள்ளலாம். அம்முறையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திரா ஜடேஜா, அஷ்வின், ப்ராவோ ஆகியோரை தக்க வைத்து கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக, ஏழாவது முறையாக சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருப்பார்.

மற்ற வீரர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் ஏலம், அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறும்.

4 மணி நேரத்திற்குள், 7000 கால்கள் வந்தது

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என நினைக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, டெல்லியில் அமைக்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு ஹெல்ப்லைன் எண்னுக்கு 7 மணி நேரத்திற்குள், 4000 அழைப்புகள் வந்தது.

 (011) 27357169 என்ற அந்த ஹெல்ப்லைன் எண் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.  அழைப்புகள் ஏராளமாக வந்து குவிந்ததால், அங்கு பணி புரியும் ஊழியர்களும் அதிகரிக்கப் பட்டுள்ளனர்.  அழைப்பு விடுக்கும் மக்களுக்கு, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எப்படி கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப் படும். இதற்காகவே 15 நிபுணர்கள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். 

நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகள் மூலம், மக்கள் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி, லஞ்சம் வாங்குவோரை ஆதாரத்துடன், சிக்க வைக்கலாம்.

கேஜ்ரிவாலின் இந்த அதிரடி திட்டதிற்கு பலத்த வரவேற்பு வந்த வண்ணம் இருக்கின்றது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media