BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 9 October 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் உறவில் உடல்நலத்தின் முக்கியம், பலான இணையதளங்கள் பார்த்தால் அவுட்
http://www.satrumun.net/2014/07/health-tips-for-life.html

ஜெயலலிதா படத்தை ஏன் அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற முடியாது, அதிகாரிகள் விளக்கம்
http://www.satrumun.net/2014/10/why-jayalalitha-photo-can-not-be.html

பெண்கள் தங்கள் கணவரிடம் சொல்லக்கூடாத ரகசியங்கள் என்னென்ன?
http://www.satrumun.net/2014/10/women-should-not-tell-these-secrets-to.html

தல படத்தின் புதிய ஸ்டில்கள் வந்துள்ளது
http://www.satrumun.net/2014/10/new-stills-of-thala-55.html

ஜாமீன் கேட்டு கடைசி வாய்ப்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ள ஜெயலலிதா
http://www.satrumun.net/2014/10/jayalalitha-appeals-for-bail-in-supreme.html

சூர்யா ஜோதிகாவின் குழந்தை தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார்
http://www.satrumun.net/2014/10/child-artist-changes-to-actress.html

ஐபோன்-6 க்கு வந்த அடுத்த பிரச்சனை !! முதலில் வளைந்தது இப்போது முடியை இழுக்கிறது ..
http://www.satrumun.net/2014/10/apple-iphone-faces-new-problem.html

சேனல் ரைட்ஸ் விவகாரம் : 'கத்தி' படத்துக்கு வந்த புது சிக்கல்?
http://goo.gl/Ced72K

தனது மனைவியைக் கொன்று சமைத்து சாப்பிட்ட கணவன் !!
http://www.satrumun.net/2014/10/chef-who-kills-her-wife-and-cooks.html

"செல் போன்"லுக்கு பதில் கல் வந்தது, ஃப்ளிப்கார்ட்டின் பிக் டே டீல் ஏமாற்றம்
http://www.satrumun.net/2014/10/customer-gets-stone-instead-of-moto-g.html

அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே வீரர் - தோனி !!
http://www.satrumun.net/2014/10/dhoni-only-player-to-feauture-in-fobres-list.html

கத்தி படத்தின் புதிய ஸ்டில்கள் வெளிவந்துள்ளது
http://www.satrumun.net/2014/10/kaththi-new-stills-released.html

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேலினால் வந்த தலைவலி !! கேரண்டி கொடுக்க மாட்டோம் என பின் வாங்கும் நிறுவனங்கள் ..
http://www.satrumun.net/2014/10/another-headache-for-flipkart-due-to-big-billion-day-sale.html

உலக வெப்பமயமாதலுக்கு காடு வளர்ப்பு பயனளிக்குமா ?
http://www.satrumun.net/2014/10/apple-iphone-faces-new-problem.html

இளநீரினால் ஏற்படும் பயன்கள்
http://www.satrumun.net/2014/10/blog-post_45.html

பண்டைய தமிழரின் உணவு
http://www.satrumun.net/2014/10/blog-post_9.html

பெண்கள் தங்கள் ஆணிடம் சொல்லக்கூடாத ரகசியங்கள் என்னென்ன?

பெண்கள் தங்கள் ஆணிடம் சொல்லக்கூடாத ரகசியங்கள் என்னென்ன?

தோழிகளின் ரகசியம்

பெண்கள் தங்கள் தோழிகளின் ரகசியங்களை எக்காரணம் கொண்டும் தன் கணவரிடமோ காதலரிடமோ சொல்லவே கூடாது, உங்கள் தோழி உங்களை நம்பி சொல்லியிருப்பார், அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும், மேலும் பெண்கள் பேசிக் கொள்ளும் விஷயங்களும் விதமும் ஆண்களுக்கு புரிவதில்லை, அதனால் உங்கள் கணவர் தோழியை பற்றி தவறாக நினைக்க வாய்ப்புண்டு.

குறிப்பாக தோழிகள் செக்ஸ் விஷயத்தில் திருப்தியாக இல்லை என்ற ரகசியத்தை பெண்கள் தன்னுடைய ஆணிடம் சொன்னால் அந்த ஆண் உங்களின் தோழியை முயற்சித்து பார்க்கவும் விரும்புவார்களாம்.


உங்கள் பாஸ்வேர்ட்

நீங்கள் உங்கள் கணவரை காதலரை எவ்வளவு நம்பினாலும் சரி கண்டிப்பாக உங்கள் பெர்சனல் மெயில் பாஸ்வேர்டை மட்டும் சொல்லவே சொல்லாதீர்கள், உங்கள் நடவடிக்கைகளை அடிக்கடி செக் செய்வது மட்டுமின்றி உங்கள் தோழிகளின் அந்தரங்க விஷயங்களை தெரிந்து கொள்ள முயல்வார்களாம்

மாமியார் நாத்தனார் மீதான வெறுப்பு

உங்கள் கணவரின் தாயின் மீதும் தங்கயின் மீதும் உள்ள வெறுப்பை உங்கள் கணவரிடமோ காதலரிடமோ வெளிப்படையாக சொல்வது உங்களின் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உங்கள் கணவருக்கு வெறுப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அது குடும்ப உறவையே குலைக்கும் அளவுக்கு செல்லும்

உங்களின் பழைய காதல்

உங்களின் கடந்த காலத்தில் நீங்கள் காதலித்திருந்தாலோ அல்லது யாரையாவது விரும்பியிருந்தாலோ அதை எக்காரணம் கொண்டும் உங்கள் கணவரிடம் சொல்ல வேண்டாம், இதற்காக நீங்கள் அவரை ஏமாற்றுகிறீர்கள் என்று பொருள் அல்ல, தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க நிச்சயம் இது பற்றி சொல்ல வேண்டாம், எவ்வளவு முற்போக்கு கணவராக இருந்தாலும் தன் மனைவிக்கு பழைய காதல் இருந்தது என்று தெரிந்தால் அது அந்த கணவரின் நிம்மதியை குலைப்பது மட்டுமின்றி  குடும்பத்தின் நிம்மதியையும் பறித்துவிடும்.

செக்ஸ் விருப்பம்

உங்களின் செக்ஸ் விருப்பங்களை வெளிப்படையாக சொல்லாமல் குறிப்பாக உணர்த்தலாம், திருமணம் ஆன புதிதில் செக்ஸ் விருப்பங்களை வெளிப்படையாக சொல்வதும், இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்பதும் கணவருக்கு தேவையில்லாத சந்தேகத்தை ஏற்படுத்தும்

தனது மனைவியைக் கொன்று சமைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் !!

ஆஸ்திரேலியாவில் சமையல் வேலை செய்யும் ஒருவன் தனது மனைவியைக் கொன்று மனைவியின் உடலை பாகங்களாக கூறு போட்டு சமைத்த சம்பவம் நடந்துள்ளது .

மார்கஸ் வோல்கே என்னும் 28 வயது ஆனவர் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார் . வீட்டின் அருகே இருப்பவர்கள் வோல்கேவின் வீட்டில் இருந்து ஒரு விதமான நாற்றம் வருவதாக காவல்துறையினரிடம் பூகார் கொடுத்தனர் . அவர்கள் விசாரணைக்கு வரும் போது வோல்கே தற்கொலை செய்து கொண்டார் .

அவரது மனைவியின் பெயர் மயாங்க் பிரசிடேயோ ( 27 ) . வோல்கே ஏன் தனது மனைவியை அவ்வாறு கொன்றார் என்பதற்கான காரணம் தெரியவில்லை .



சில நாளிதழ்கள் இந்த பெண்ணை திருநங்கை என்று குறிப்பிட்டுள்ளனர் . இந்த சம்பவம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது .

சூர்யா ஜோதிகாவின் குழந்தை தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார்

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சூர்யா , ஜோதிகா, பூமிகாவை கூட நாம் மறந்து விடுவோம். ஆனால் சூர்யா ஜோதிகா ஜோடியின் குழந்தையாக நடித்த ஷ்ரியா ஷர்மாவை மறந்து விட முடியாது. அந்தளவுக்கு தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். அதன் பிறகு எந்திரன் படத்தில் நடித்தார். அந்த படத்தில்  நடித்த போது அவளுக்கு வயது 13 ஆகும். சென்னை சில்க்ஸ், ரஸ்னா , காம்பிளான் உள்ளிட்ட பல விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுக ஆக உள்ளார். காயக்கடு என்னும் படத்தில் நடித்து வருகிறார்.




ஜெயலலிதா படத்தை ஏன் அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற முடியாது, அதிகாரிகள் விளக்கம்

ஊழல் வழக்கில் தண்டைனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பதவி பறிபோன பிறகும் அவர் படம் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்படவில்லை, இது குறித்து டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்,

புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றும் இன்னும் முன்னாள் முதல்வர் படமே அரசு அலுவலகங்களில் உள்ளது, அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றாமல் இருப்பதற்கான காரணத்தை அதிகாரிகள் அளித்த விளக்கம் என்னவெனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை நீக்கவும் புதிய முதல்வர் படத்தை வைக்கவும்  தலைமை செயலகத்தில் இருந்து இதற்காக முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை நீக்கி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் வைக்க இன்னும் தலைமை செயலகத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை . தலைமை செயலகத்திலிருந்து உத்தரவு வராமல் படங்களை நீக்க முடியாது என்றும் கூறினார்கள்

மோட்டோ ஜி ஆர்டர் செய்த ஒருவருக்கு போனுக்கு பதில் கல் வந்துள்ளது


பிக் பில்லியன் டே சேலினால் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு தலைவலி கூடிக் கொண்டே இருக்கிறது . சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருள் கொடுக்க முடிந்தது . மற்றவர்களுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது . இப்போது இந்த கடிதம் மட்டும் போதாது என்ற நிலையில் அவர்கள் இருக்கின்றனர் . பொருள்களை பெற்றவர்களுக்கும் புதிய பிரச்சனை வந்துள்ளது.

மோடோ ஜி மொபைல் ஆர்டர் செய்த ஒருவருக்கு மொபைலுக்கு பதில் கல் வந்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் அந்த கஸ்டமர் செய்தி வெளியிட்டுள்ளார். பிளிப்கார்ட் மீது புகார்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவர்கள் மீது இருந்த நம்பிக்கை குறைந்த கொண்டே செல்கிறது.



தல படத்தின் புதிய ஸ்டில்கள் வந்துள்ளது








அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே வீரர் - தோனி !!




போபர்ஸ் நாளிதழ் உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டது . இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே வீரர் , இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மட்டுமே . இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பது பிரபல கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் .

தோனி இந்த பட்டியலில் 20 மில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது . ஆனால் இது சென்ற வருடத்தின் 21 மில்லியன் டாலரை விட குறைவு .

போபர்ஸ் நாளிதழ் கணக்கின் படி தோனி பேட் ஸ்பான்சர்ஷிப் ஆக ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகத்துடன் 4 மில்லியன் டாலர் ஒப்பந்தம் போட்டுள்ளது . ரீபோக்கிடம் 1 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளார் .

போபர்ஸ் நாளிதழ் வெளியிட்ட பட்டியல் !!


லெப்ரான் ஜேம்ஸ்   -  37 மில்லியன் டாலர்
டைகர் வுட்ஸ்            - 36 மில்லியன் டாலர்
பெடரர்                           - 32 மில்லியன் டாலர்

கத்தி படத்தின் புதிய ஸ்டில்கள் வெளிவந்துள்ளது










பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேலினால் வந்த தலைவலி !! கேரண்டி கொடுக்க மாட்டோம் என பின் வாங்கும் நிறுவனங்கள் ..



பிக் பில்லியன் டே சேலினால் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு தலைவலி கூடிக் கொண்டே இருக்கிறது . சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருள் கொடுக்க முடிந்தது . மற்றவர்களுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது . இப்போது இந்த கடிதம் மட்டும் போதாது என்ற நிலையில் அவர்கள் இருக்கின்றனர் . அவர்களுக்கு புதிய பிரச்சனையாக  சாம்சங் , சோனி . எல்.ஜி போன்ற முன்னனி நிறுவனங்கள் ப்ளிப்கார்ட்டின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .

சில நிறுவனங்கள் தங்களின் பொருட்களை இந்த தளம் மூலம் விற்பதையும் நிறுத்தியுள்ளனர் . மேலும் சிலர் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் யோசனை செய்து வருகின்றனர் .

இது குறித்து முன்னனி நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் எங்களால் நியமிக்கப்படாத டீலர்கள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் . அந்த பொருட்களுக்கு நாங்கள் எப்படி வாரண்டி தர முடியும் " என்றார் . இன்னொருவர் , " இந்த அதிரடி தள்ளுபடி பல வியாபாரிகளின் வியாபாரத்தை பாதித்துள்ளது . எனவே இது போன்று இனி நடக்காது என பிளிப்கார்ட் நிறுவனம் உறுதியளிக்கும் வரை அந்த நிறுவனத்துக்கு பொருட்கள் தரப்பட மாட்டாது என நிறுவனங்கள் கூறியுள்ளனர் " என்றார் .

பிளிப்கார்ட் இதற்கு என்ன செய்யப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ..

ஜாமீன் கேட்டு கடைசி வாய்ப்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ள ஜெயலலிதா




சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கவில்லை என தீர்ப்பு வந்தது. இதனால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். கடைசி வாய்ப்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளார்கள். அதிலும் ஜாமீன் கிடைக்கவில்லை இல்லையென்றால் மேல்முறையீடு செய்து விட்டு காத்து இருக்க வேண்டியது தான்.

இன்று மாலை 5.30 மணி போல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். மனு எப்போது விசாரணைக்கு வருகிறது என்று நாளை தெரிய வரும். அடுத்து 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தீபாவளி விடுமுறை வருகிறது. அதனால் அதற்கு முன்பாக ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க வேண்டும் அதிமுக வழக்கறிஞர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

பார்ப்போம் அம்மாவுக்கு தீபாவளி ஜெயிலிலா அல்லது வெளியிலா என்று ??

ஆப்பிளுக்கு வந்த அடுத்த பிரச்சனை !! முதலில் வளைந்தது இப்போது முடியை இழுக்கிறது ..



ஆப்பிளின் ஐபோன் - 6 சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது . வெளிவந்தவுடனே மொபைல்கள் வளைந்து விடுவதாக பலர் குற்ற்ஞ்சாட்டினர் . இப்போது ஆப்பிளுக்கு புதிய பிரச்சனை வந்துள்ளது . மொபைல் பேசும் போது தலை முடியினை பிடித்து இழுப்பதாக வாடிக்கையாளர்கள் குறை கூறி வருகின்றனர் .

ஆப்பிளுக்கு பிரச்சனை என்றால் முதலில் அது வெளிவருவது டிவிட்டரில் தான் . ஆப்பிள் வளைந்த போது #bendgate  என்ற ஹேஷ்டேக் பிரபலமானது . இப்போது #hairgate என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது .

ஒரு பயனாளர் கூறுகையில் , " நான் ஒவ்வொரு முறை கால் பேசும் போதும் என் முடியை பிடித்து இழுக்கிறது " என்றார் .

முந்தைய வளையும் பிரச்சனையின் போது நார்மலாக மொபைலை பயன்படுத்தினால் , வளைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு , புதிதாக வர இருக்கும் மொபைல்களில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்றனர் .

இப்போது இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் கூற இருக்கின்றனர் என தெரியவில்லை

உலக வெப்பமயமாதலுக்கு காடு வளர்ப்பு பயனளிக்குமா ?

காலம் காலமாக வரை முறையின்றி இயற்கை வளத்தை அழித்ததன் காரனமாக, சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதற்கான பலனை தற்போது அன்பவிக்கத் தொடங்கியிருக்கிறோம். உலகத்தின் வெப்பநிலை உயரத் தொடங்கியிருப்பதன் விளைவை இனிமேல் இன்னும் கடுமையாகச் சந்திக்கப்போகிறோம்.
   
இப்பிரச்சினையில் இப்போதுதான் விழித்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள், பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றில் ஒன்று, வீணான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் மரங்களை வளர்த்துக் காடுகளை உருவாக்குவது. இதற்கு, கியோட்டோ பருவ நிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐ.நா.வும் ஆதரவு அளிக்கிறது. மரங்கள், 'ஒளிச்சேர்க்கை' மூலம் காற்றில் உள்ல கார்பன்-டை-ஆக்சைடை பெருமலவில் உறிஞ்சிக் கொள்ளும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதைவிட இன்னும் தீவிரமாக அதிகப் பரப்பில் காடுகளை உருவாக்கினாலும் அதனால் பசுமைக்கூட வாயுக்களுக்கு எதிராக பெரிதாகப் பயனிருக்காது என்று கண்டுபிடித்துக் கூறுகிறார்கள், சுர்றுச்சூழல் ஆய்வாளர்கள்.

 மரங்களை வளர்ப்பது இப்பிரச்சினையில் ஓரளவுதான் கை கொடுக்கும். காரணம், செடிகள் மரமாக வளரப் பல ஆண்டுகள் ஆகின்றன. கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளோ நீடித்திருக்கக்கூடியவை. எனவே பல நூற்றாண்டுகளுக்கு அவற்றின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள், ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வில், பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவேக் அரோரா, நோவா ஸ்காட்டியா பல்கலைக்கழகத்தின் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்கள் கூறும் போது, "உலகின் 50 சதவீத நிலப்பகுதியைக் காடுகளாக மாற்றினால்கூட, உலக வெப்பமயமாதலுக்கு அது பெரிதாகத் தடை போடாது. அப்படியை செய்வதாக இருந்தாலும், விளைநிலங்களை எல்லாம் காடுகளாக மாற்றுவது சாத்தியமில்லை. காரணம், அதிகரித்து வரும் மக்கள் தொகைதான்" என்கிறார்.

 காடு வளர்ப்பால் பொதுவாக நன்மைதான். என்றாலும், அது மட்டுமே உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பது இதில் இருந்து தெரிகிறது. இருந்தாலும் நாம் மரம் வளர்த்து காடுகள் அமைப்போம்.

இளநீரினால் ஏற்படும் பயன்கள்


இயற்கையன்னை நமக்கு கொடுத்த சிறந்த குடி நீர் இளநீர். இது நமக்கு இயற்க்கையின் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். இளநீரை சுவைக்காக உபயோகப்படுத்தும் பானம் என்று சொல்லமுடியாது. உலகில் சிறந்த இயற்கை மூலிகை பானமாக கூறப்படுகிறது.
இளநீரின் பலன்களைப்பற்றி சில குறிப்புகள்.
 இளநீர் நம் உடலை குளுமையாகவும், சரியான தட்பவெப்ப நிலையிலும் வைக்கிறது. இளநீர் ஒரு நோய் தடுப்பாற்றல் பானமாகும் இளநீரில் "மோனோலாரின்" என்னும் நோய் தடுக்கும் மருந்து உள்ளது. இதனால் நோய்தடுக்கும்சக்தி இதை குடித்தவுடன் நம் உடலில் பரவுகிறது. மேலும் ஒரு செல் உயிரினங்களினால் ஏற்படும் நோய்கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் கொடுமையான நோயாகிய ஹெச்ஐவி, ப்ளு போன்ற நோய்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி இளநீரில் உள்ளது. சிறு நீரகத்தில் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்து இளநீர் நம்மை பாதுகாக்கிறது. சிறு நீரகத்தில் உண்டாகும் கற்களை கரைப்பதற்கு இது சிறந்த மருந்து.
 குழந்தை பருவத்தில் அதாவது 1முதல் 3வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான வயிறு சம்பந்தப்பட்ட நோய், புழுக்கள் பரவுதல் ஆகியவற்றைத் தடுக்கிறது. சிறு நீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை உட்கொள்வதால் சிறந்த பயன் அடையலாம்.மலேரியா, டைபாய்டு, வாந்தி போன்றவற்றை கட்டுப்படுத்தும். உடம்பு எடை அதிகாமா உள்ளவர்கள் இளநீரை உட்கொள்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இளநீரில் ஆக்கசக்கிகள் அதிகம்க உள்ளது.

இளநீரில் உள்ள வேதிப் பொருட்களின் அளவு

மொத்த திடப்பொருள் கி  % 6.5
குளுக்கோஸ், பிராக்டோஸ் மி.கி % 4.4
தாதுப்பொருட்கள் மி.கி  % 0.6
புரதச்சத்து  மி.கி % 0.01
கொழுப்புச்சத்து மி.கி % 0.01
அமிலத்தன்மை மி.கி 4.5
பொட்டாசியம் மி.கி % 290.0
சோடியம் மி.கி % 42.0
கால்சியம் மி.கி % 44.0
மக்னீசியம் மி.கி % 10.0
பாஸ்பரஸ் மி.கி % 9.2
இரும்புச்சத்து மி.கி % 106.0
காப்பர் மி.கி % 26.0

100 கிராம் இளநீரில் கொடுக்கும் கலோரி  அளவு 17.4
இளநீரின் இயல்புகள்
· இனிப்புச் சுவை நிறைந்தது.
· குளுமை தரக்கூடியது.
· எளிதில் ஜீரணமாகக்கூடியது.
· பித்த வாதத்தை குணப்படுத்தும் தன்மையுடையது.
· பசியைத் தூண்டக்கூடியது
· நீர்ப்பெருக்கியாக செயல்படக்கூடியது.
· புத்துணர்வு தரக்கூடியது.
· உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.
· உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறையைப் போக்கும் தன்மை கொண்டது

பண்டைய தமிழரின் உணவு



அக்காலத் தமிழர்கள் உணவு என்பதனைக் குறிக்க உணா, உணவு, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆசாரம், உறை, ஊட்டம், புகா, மிசை போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் 623ஆவது நூற்பா, “எண்வகை உணவு“ பற்றிக் குறித்துள்ளது. அவை எவை என்பது பற்றித் தொல்காப்பியர் விளக்கவில்லை. ஆனால், உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர். ஆனால் அவ்விளக்கம் ஏற்புடையதாக இல்லை. தமிழர் உணவுகள் எட்டுவகை என்றால், அவை சமைக்கப்படும் முறையிலா அல்லது உண்ணப்படும் முறையிலா என்ற வினா எழுகின்றது. சங்க இலக்கிய அடிகள், தமிழர்கள் உணவுவகை எண்பதுக்கும் மேற்பட்டது என்று காட்டுகின்றன.

சைவ உணவு (மரக்கறி

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில்தொல்தமிழர்கள் அரிசியைப் பயன்படுத்தியதற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன. நெல்லிலிருந்து அவர்கள் அரிசியைக் கைக்குற்றல் - கைக்குத்தல் (உலக்கை கொண்டு இடித்தல்) முறையில் இடித்துப் பிரித்துப் பயன்படுத்திய செய்தியினைப் புறநானூற்றின் 399ஆம் பாடல் தெரிவித்துள்ளது. பெரும்பாணாற்றுப்படையின் 98ஆவது அடியிலும் சிறுபாணாற்றுப்படையின் 193ஆவது அடியிலும் இச்செய்தியினைக் காணமுடிகின்றது. அகநானூற்றின் 37ஆவது பாடலில் காணப்பயிறுடன் (கொள்) பாலினைக் கலந்து வைத்த கஞ்சி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாமின் 434 ஆவது அடியில் அவரை விதையை அரிசியுடன் கலந்து செய்த கஞ்சி பற்றிய செய்தி காணப்படுகின்றது. பட்டினப்பாலையின் 44, 45ஆவது அடிகளில் சோறுவடித்த கஞ்சி ஆறுபோல ஓடியதாகக் குறிப்புள்ளது. பழந்தமிழர்கள் சோறு என்பதற்கு அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். பச்சரிசியால் உருவாக்கப்பட் சோறினைப் “பொங்கல்“ என்றும் வேகவைத்த அரிசியால் உருவாக்கப்பட்ட சோற்றினைப் “புழுங்கல்“ என்றும் அழைத்தனர். சோறினைச் சிறுசோறு, பெருஞ்சோறு என்றும் வகைப்படுத்தியிருந்தனர். மேலும், சோறில் கலக்கும் அல்லது சோறின் தன்மைக்கு ஏற்ப அதனை ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு, உளுந்தஞ்சோறு, பாற்சோறு, வெண்சோறு எனப் பலவகைப்படுத்தியிருந்தனர்.

உழவர்கள் வரகரிசிச்சோற்றுடன் புழுக்கிய அவரைப் பருப்பினைக் கலந்து உண்ட செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின் 195ஆம் அடி குறிப்பிட்டுள்ளது.
அகநானூற்றின் 250ஆவது பாடல் மற்றும் நற்றிணையின் 344ஆவது பாடலின் வழியாக அக்காலத் தமிழர்கள் தானியங்களை வெயிலில் காய வைத்தபின் சமைத்த செய்தியினை அறியமுடிகின்றது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media