இந்து ரக்ஷா தல் என்ற கட்சியை சேர்ந்த நபர்கள், காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை கற்கள் வீசி, அங்கிருந்த பூத்தொட்டிகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதைப் பற்றி கேட்ட போது, "பிரஷாந்த் பூஷன் கஷ்மீர் விவகாரத்தில் தெரிவித்த கருத்துகள் இந்துக்கள் மனதை காயப்படுத்தியுள்ளது, அதனாலே இந்த ஆர்ப்பாட்டம்." என்று இந்து ரக்ஷா தல் கட்சியை சேர்ந்த பிங்கி சௌத்ரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆம் ஆத்மி அலுவலகத்திலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, கேஜ்ரிவாலின் இல்லம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது என்பதால், அங்கும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிய கேஜ்ரிவாலை, அந்த முடிவை மாற்றி கொள்ளும் படி கூறப்போகதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரஷாந்த் பூஷன் கஷ்மீர் விவகாரத்தில் தெரிவித்த கருத்துகள், அவருடைய சொந்த கருத்துகள், ஆம் ஆத்மியின் கருத்துகள் இல்லை என்றும், இந்து ரக்ஷா தல் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தன் கண்டனத்தை தெரிவிப்பதாகவும், கேஜ்ரிவால் கூறியுள்ளார்.