BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 October 2013

இந்தியன் கிராண்ட் ஃபிரிக்ஸ்க்கு தடை இல்லை-நீதிமன்றம் அறிவிப்பு...!!!

இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள, இந்திய கார் ரேஸ் பிரியர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கிராண்ட் ஃபிரிக்ஸ்க்கு தடை இல்லை என அறிவித்து,ஸ்பான்ஸர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது நீதிமன்றம்.ஏற்கனவே அடுத்த ஆண்டு கிராண்ட் ஃபிரிக்ஸ் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் நடக்காதோ என்ற ரசிகர்களின் பயம் முடிவுக்கு வந்துள்ளது.பந்தயத்தை நடத்துபவர்கள் சென்ற ஆண்டுக்கான கேளிக்கை வரியை கட்டாததால் இந்த ஆண்டு போட்டியை தடை செய்யவெண்டும் என்று அமித்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.
மேலும் இந்த மனுவை அடுத்த வாரம் மீண்டும் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

#சின்ராசு..அடிச்சு ஓட்ரா வண்டிய..!

சாம்சங்கின் கண்ணாடி வடிவிலான ஸ்மார்ட்ஃபோன்..! தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டம்..!!

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், சமீபத்தில் கண்ணாடி வடிவிலான ஒரு புதிய ஸ்மார்ட்ஃபோனுக்கு காப்புரிமையைப் பதிவு செய்துள்ளது. கைக்கடிகார வடிவிலான "கியர்" எனும் ஸ்மார்ட்வாட்சை சந்தையில் அறிமுகப்படுத்திய சிறிதுகாலத்திற்குள்ளாகவே, இந்த அடுத்தகட்ட முயற்சியை செய்திருப்பது, சந்தையில் சாம்சங்கிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
கூகுள் நிறுவனம் வடிவமைத்துக்கொண்டிருக்கும் "கூகுள்கிளாஸ்" போன்றே இது இருந்தாலும் இதன் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!

#எல்லாம் சரிதான்.. விலை??

உலகத்திலேயே அதிக காசநேயாளிகள் வாழும் நாடு இந்தியா..

உலகத்திலேயே அதிக காசநேயாளிகள் வாழும் நாடு இந்தியா..! உலக சுகாதார மையம் அதிர்ச்சித்தகவல்..!!

உலக சுகாதார மையமான W.H.O வெளியிட்டுள்ள உலக காசநோய் அறிக்கையின்படி உலகின் மொத்த காசநோயாளிகளில் 2.5மில்லியன் பேர் இந்தியர்கள் என அறிவித்துள்ளது..! மேலும் இவர்களில் 33% பேர் இன்னும் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இவர்களால் வருடத்திற்கு சராசரியாக 14பேருக்கு இந்த கொடிய நோய் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..!
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் நோய்தடுப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத ஒரு கொடியவகை காசநோயும் பரவி வருவதாகவும் W.H.O தெரிவித்துள்ளது..!!

# இந்திய அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்குமா..?

கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை தீவிரவாதிகள் ஆக்க பாக்கிஸ்தான் முயற்சி - ராகுல் காந்தி போட்ட குண்டு

முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த பாக்கிஸ்தான் ஏஜென்சிகள் முயற்சித்தன - ராகுல் காந்தி அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம்-ஷாருக்கான்!

இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம்-ஷாருக்கான்!! அமிதாப், சல்மானை பின்னுக்குத்தள்ளினார்..!

ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி எனும் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான்..!

மன்மோகன் சிங் இந்திய பிரதமர் மட்டுமல்ல... உலக அளவில் பெரிய தலைவர் - இலங்கை பஞ்ச் டயலாக்

மன்மோகன் சிங் இந்திய பிரதமர் மட்டுமல்ல... உலக அளவில் பெரிய தலைவர். இதனை கருத்தில் கொண்டு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தவேண்டும் என்பது அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து எடுத்த ஒருமித்த முடிவு.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து உள்ள நிலையில், இந்தியாவும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்திய தனிமைப்படுத்தப்படும் என இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்து உள்ளார்.


# ........ எல்லாம் பஞ்ச் டையலாக் பேசுதே

அமைச்சரகம் உட்பட மாஃபியாக்கள் எங்கும் உள்ளார்கள் - பிரதமரை எச்சரித்த முன்னாள் நிலக்கரி துறை செயலாளர்

அமைச்சரகம் உட்பட மாஃபியாக்கள் எங்கும் உள்ளார்கள் - பிரதமரை எச்சரித்த முன்னாள் நிலக்கரி துறை செயலாளர்

பெண் போலிஸ்க்கு போன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த லாரி கிளீனர் கைது

மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் லாரி கிளீனராக வேலை செய்கிறார், இவருக்கு போர் அடிக்கும் போது போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து பெண் போலீசாரிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி வந்துள்ளார்

பாடலாசிரியர் தாமரை தெரிவித்த வேதனை, தியாகுவின் "பெண்" லீலைகள் காரணமா?

பாடலாசிரியர் தாமரை தெரிவித்த வேதனை, தியாகுவின் "பெண்" லீலைகள் காரணமா?

பாடலாசிரியர் தாமரை நேர்மையான தமிழ் ஆர்வலர், தன் வாழ்வை தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் அற்பனித்து கொண்டவர், தமிழ் உணர்வின் காரணமாகவே நக்சல் போராட்டங்களில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின் சிறையிலிருந்து வெளிவந்த தமிழ் போராளியாக இருந்த தியாகுவை திருமணம் செய்து கொண்டார்.

பெப்சி கோக் போன்ற கார்பனைஸ்ட் குளிர்பானங்களை ஆய்வு செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI), அனைத்து வகையான கார்பன் டை ஆக்சைடு வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவில் வெள்ளம்-அகதிகளாய் மக்கள்....!!!!


ஒடிசாவில் கடந்த நான்கு நாட்களாகவே கன மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சிக்கிடி,பத்ராபூர்,அஸ்கா,மொஹானா உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தினால் பத்து பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

50000-க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

உலகத்திலேயே அதிக காசநேயாளிகள் வாழும் நாடு இந்தியா..! உலக சுகாதார மையம் அதிர்ச்சித்தகவல்..!!



உலக சுகாதார மையமான W.H.O வெளியிட்டுள்ள உலக காசநோய் அறிக்கையின்படி உலகின் மொத்த காசநோயாளிகளில் 2.5மில்லியன் பேர் இந்தியர்கள் என அறிவித்துள்ளது..! மேலும் இவர்களில் 33% பேர் இன்னும் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இவர்களால் வருடத்திற்கு சராசரியாக 14பேருக்கு இந்த கொடிய நோய் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..!
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் நோய்தடுப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத ஒரு கொடியவகை காசநோயும் பரவி வருவதாகவும் W.H.O தெரிவித்துள்ளது..!!

# இந்திய அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்குமா..?

ராம்கோபால்வர்மாவுக்கு போலீஸ் பாதுகாப்பு..!


பிரபல இயக்குனரான ராம்கோபால்வர்மாவுக்கு சில தினங்கள் முன்பு வந்த வந்த மிரட்டலை அடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது வழக்கமான படங்கள் போலவே சமீபத்திய படமான "சத்யா-2"வும் நிழல்உலக தாதா பற்றிய படமாகும். இதன் காரணமாகவே அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என வெளிவந்த கருத்தை மறுத்துள்ள அவர், இதை பற்றி எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

#என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..!

இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம்-ஷாருக்கான்!! அமிதாப், சல்மானை பின்னுக்குத்தள்ளினார்..!



ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி எனும் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் வசீகரிக்கும் ஆளுமைகளின் பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான்..!
16 நகரங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், முதலிடம் பிடித்துள்ள ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக அமிதாப்பச்சனும். தோனியும், அமிர்கானும் உள்ளார்கள்.
பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்கள்,கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் இருக்கும், ஒரு ஆச்சர்யமான மற்றும் பெருமைமிகு விஷயம்,
தேசியகீதத்தை எழுதிய ரபீந்த்ரநாத் தாகூருக்கு முக்கிய இடம் கிடத்துள்ளதுதான்..!

#ஜெய் ஹோ..!

பணக்கார இந்தியர்கள்-ஒரு 'கிறுகிறு' லிஸ்ட்.....


ஹுருண் நிறுவனம் டாப் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 18.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டு முகேஷ் அம்பானி முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.இவருக்கு அடுத்த இடத்தை லண்டன் வாழ் இந்தியர் மிட்டல்(15.9 பில்லியன் டாலர்) பெற்றுள்ளார்.மூன்றாமிடம் சன் ஃபார்மாஸூட்டிக்கல்ஸ் நிறுவன அதிபர் திலிப் சங்விக்கு.இந்த பட்டியலில் பெண்கள் நான்கு பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

இந்த 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 250 பில்லியன் டாலராம்.

#கண்ண கட்டுது,யாரவது ஜூஸ் சொல்லுங்கப்பா....................
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media