உலகம் முழுவதும் இன்று அதிக நபர்களால் பார்க்கப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். நம் இந்தியர்கள் அனைவரும் கிரிக்கெட்டுக்கு அடிமை, ஆனால் இந்த உலகமே கால்பந்துக்கு அடிமை. கிரிக்கெட் இன்று ஜெண்டில்மென்ஸ் கேம் என்பதில் இருந்து சற்றி மாறி வருகிறது. கால்பந்தின் நிலையோ படுமோசம்.
ஒரு கால்பந்து போட்டி நடந்தால் அதில் சண்டைகள் இல்லாமல் இருப்பது இல்லை. கால்பந்து வீரர்கள் தங்களுக்குள்ளே அடித்து கொள்கிறார்கள். ஒரே நாட்டுக்காக விளையாடுபவர்கள் கூட கிளப் என்று வரும் போது மாறி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கால்பந்தில் விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. ஒரு பந்தை கார்னரில் இருந்து ஒரு வீரர் அடிக்கிறார் என்றால் அந்த பந்தை தொட விடாமல் அந்த அணியின் வீரர்களை எதிர் அணி வீரர்கள் பிடித்து கொள்கிறார்கள். ஆனால் இதனை போட்டிகளின் போது நடுவர் கண்டிப்பது இல்லை. பந்தை எடுத்து வரும் போது வேண்டும் என்றே தடுக்கி விடுகிறார்கல். சில முறை மட்டுமே நடுவரால் தண்டிக்கப்படுகிறார்கள்.
எனவே கால்பந்தின் விதிகளில் சில அதிரடி மாற்றங்கள் இருக்க வேண்டும். அனைவரும் நேர்மையாக விளையாட வேண்டும். சில வீரர்கள் மோசமாக எதிர் அணி வீரர்களை கடித்து வைக்கிறார். அவரை போன்ற வீரர்களை விளையாடுவதற்கே அனுமதிக்க கூடாது.